நான் யார்?

பெரியார், சேகுவேரா, மார்க்ஸ், லெனின், ரஜினி, கமல் அவ்ளோ ஏன் என்னையையே நீ குடிகாரன், பொம்பளபொறுக்கின்னு சொல்லுங்க. ஹாஹாஹான்னு சிரிச்சிட்டு உங்களுக்கும் தெரிஞ்சிருச்சான்னு போவேன்.
எனக்கு எந்த தனிநபர் மீதும் எந்த பிம்பமும் இல்லை. எனக்கென்று ஒரு பிம்ப வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ஆர்வமும் இல்லை. நான் எப்படி என்று ஆராயும் சுய பரிசோதனை தான் எப்போதும்
நம் மனிதர்களிடம் இந்த சிக்கல் உண்டு. தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவோ. கருத்துகள் மீது அகம் சார்ந்த கூர் நோக்கோ இல்லை. அவர்கள் நம்பிக்கை சார்ந்த பிம்பங்களை கட்டுடப்பததை அவர்களையே நிர்வாணம் ஆக்குவது போல் உணர்கிறார்கள். கேள்வி கேட்பவன் முட்டாள் என்றும் பதில் சொல்பவன் புத்திசாலி என்று பொதுபுத்தியுடன் அணுகுகிறார்கள். கேள்வி கேட்பதை அவமானமாக கருதுகிறார்கள். பதில் தெரியாத கேள்விகளை முட்டாள்தனம் என்றும். மேம்போக்கானவை கேள்விகள் கேட்டவன் நுனிபுல் மேய்கிறவன் என்று புறம்தள்ளுகிறார்கள்.
ஒரு நபர் அல்லது ஒரு கருத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சார்ந்த புனிதபிம்பம் நீங்களாக வளர்த்துக்கொண்டதல்ல. அது உங்களிடன் திணிக்கப்பட்டது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.
தவறான நம்பிக்கை கொண்டதற்கு நீங்க தான் வெட்கபடனும் சென்ட்ராயன்னு காமெடியா சொன்னா உங்களுடம் நட்பு கொண்டதற்கு வெட்க படுறேன்னு ஒருத்தர் சொல்றார். கிறிஸ்தவனா இருந்துட்டு இதை கூட எழுதலைனா எப்படின்னு இன்னொருத்தர் சொல்றார். பச்சையை கேள்வி கேட்டா அவன் காவி, காவியை கேள்வி கேட்டா அவன் வெள்ளை. இந்த முக்கோனத்தை தவிர மனிதனை மனிதனாக பார்க்க யாருக்கும் இயலவில்லை. திணிக்கபட்ட கருத்துருக்கள் மாயக்கண்ணாடி போல் உண்மையை மறைத்து நின்கின்றது.
ராமகிருஷ்ணனும், விவேக்கும் கஞ்சா அடிச்சாங்கன்னு எழுதினேன். அது தப்புன்னு எழுதினேனா? தியானம் கைவசபடாத விவேக்கின் நடுநெற்றியில் அறிவாளால் கீறி அதை மையபடுத்தி தியானம் செய்னு ராமகிருஷ்ணர் சொன்னது எனக்கு எப்படி தெரியும். உங்கள் புனிதபிம்பம் கேள்விக்குள்ளாக்க படுவதை சகிக்கமுடியாத உங்களில் எத்தனை பேர் விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு படித்துள்ளீர்கள், ராமகிருஷ்ணர் அவரது மனைவி சாரதா அம்மையார், விவேக்கின் முதல் குரு ராஜாராம் மோகன் ராய் பத்தி படுத்துள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள் நுனிபுல் மேய்வது யார்.
இப்போதும் நாலு பக்கம் எழுத நாப்பது பக்கம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அதில் இருக்கும் சாத்தியகூறுகளை ஆராய்கிறேன். பதில் தெரியா கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி படிக்கிறேன். தவறு இருப்பின் அதை ஒத்துக்கொள்ளவோ, புதியாக ஒன்றை தெரிந்துக்கொண்டோம் என்பதில் பெருமிதம் கொள்ளவோ எனக்கு வெட்கமோ அவமானமோ இல்லை. என்றும் மாணவன் தான். வித்தியாச"மாணவனாக" தெரிவது என் தவறல்ல.
பெரும்பான்மையும், பொதுபுத்தியும் கட்டமைத்து வைத்திருக்கும் எதையும் நான் கேள்வி கேட்கிறேன். நான் விமர்சிக்காத ஏரியாவே இல்லை என்பது போல் தேடி தேடி படிக்கிறேன்.
திருகுறளில் கடவுள் பத்தி சொல்லவேயில்லை. முதல் குறளில் வரும் ஆதி, பகவன் கூட வள்ளுவர் அப்பா, அம்மா என்றவரிடம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு.
இதில் உள்ள பற்றற்றான் யாருன்னு கேட்டேன். அவர் ஒரு பெரியாரிஷ்டும் கூட.
எந்த முன் முடிவுகளும் இல்லாமல் எதையும் அணுகுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாளர ஓர இருக்கை கிடைத்த குழந்தையை போல் உலகை ரசிக்கமுடிகிறது. நான் சுதந்திரமானவனாக இருக்க விருப்புகிறேன். காற்றை போல் மலரையும், மலத்தையும் எந்ததொரு சுழிப்புமின்றி அதை இருப்பை கடந்து செல்ல நினைகிறேன். எதிர்பார்ப்புகளின்றி இருத்தலில் இருக்கிறேன்
நாளையே ஒரு கஸ்டமர் உங்களால் சம்பாரிச்சேன், இந்தாங்க பத்து லட்சம் என கொடுக்கலாம். அல்லது 5 வருடங்களுக்கு முன் கொடுத்த காசோலையை வைத்து செக் மோசடி வழக்கில் என்னை உள்ளே தள்ளலாம்.
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நாம் இன்பத்தையும், துக்கத்தையும் மாறி மாறி கொடுப்பதகாகவே சமூக சூழல் அமைகிறது. நான் எதையும் எதிர்கொள்ள தயாராய் இருக்கின்றேன். மரணத்தையும் பயமின்றி பார்க்கின்றேன்
ஒஷோ சொல்லுவார். பயம் இல்லையென்றால் ஒரு குழந்தையை போல் நீங்கள் உலகம் ரசிக்கலாம் என்று. ஒஷோ தத்துவயில் படித்தவர். சூஃபி, ஜென் தத்துவ கதைகள் அவருக்கு கூட்டம் சேர்த்து தந்தது. ஆன்மீகத்தை கார்ப்ரேட்மயமாக்கினார். ஆனால் ஓஷோவை விட ஜே.கே என அழைக்கப்பட்ட ஜிட்டு கிருஷ்ணமீர்த்தி தான் உண்மையை போட்டு உடைத்தவர் என்றார் ஒஷோ ஆதரவாளர்களுக்கு கோவம் வரும். வழக்கம் போல் அவர்களும் என்னை நுனிபுல் மேய்பவன் என்பார்கள்.
நான் அப்படி தான். கையில் சிக்காத காற்று. உலகின் மூலை முடுக்கெல்லாம் போவேன்

1 வாங்கிகட்டி கொண்டது:

said...

மிக முக்கியமான யோசனைகள் / தீர்வுகள் எல்லாம் ஒருவனது / ஒருத்தியின் வயது, வாழ்ந்து வரும் சூழல், சமகால நிலை,அறிவு, கல்வி, பொருளாதார பலம்,அந்த முடிவின் மூலம் வரும் சுகம்/துக்கம்,அப்போதைய சூழல் இப்படி பலவும் கலந்தே அதனை தீர்மானிக்கிறது .

சில ஆண்டுகளுக்கு ( 2012 ல் ) முன் மிக முக்கியமான சூழலில் ஒரு (வருங்கால)வாழ்வியல் கட்டமைப்பு தேவைப்பட்டது...சுதந்திரத்தை நாமே கட்டுக்குள் வைத்து அனுபவிக்கும் ஒரு சிஸ்டம் உருவாக்க யோசித்தேன். எனக்கு எது தேவை... என் குடும்பத்துக்கு எது தேவை..எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது...என்னிடம் மற்றவர்களுக்கு பிடித்தது என்ன ? பிடிக்காதது என்ன..?எனது வாழ்வின் பொது அர்த்தம் என்ன...எது என்னை கையாளுகிறது? நான் இதனையெல்லாம் விரும்புகிறேன்/வெறுக்கிறேன் ,அவைகளை எப்படி வரையறுத்து கொள்வது என்று பல்வேறு யோசனைகளை பின் ஒரு சிஸ்டம் எனக்கு சரியாக பட்டது. அந்த சிஸ்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன். மிக அற்புதமாக போகிறது வாழ்க்கையின் கணங்கள். LIfe is Beautiful..!

- Sharfudeen, Kodaikanal

!

Blog Widget by LinkWithin