ஃபார்வேர்ட் பைத்தியங்கள்

உதவும் குரங்குகள்:
1994 ல் செங்கல்பட்டில் நடந்த ஒரு ஸ்கூல் பஸ் விபத்தை இன்னும் அனுப்புறானுங்க. ரத்தம் கேட்டு வர்றது எல்லாமே ஃபார்வேர்ட் மெசேஜ் தான்.
அவனுங்க அனுப்புற நம்புறக்கு போன் பண்ணா ஒன்னு நாட் இன் யூஸ்னு வரும் அல்லது அய்யோ அப்படி நான் சொல்லவேயில்லையேன்னு சொல்லுவாங்க.
இவனுங்களுக்கு உதவி செய்யுறதா நினைப்பு. எனக்கு ஓ பாஸிடிவ் தான். என் தம்பி வால்தம்பிக்கு ஏபி நெகடிவ் மூணு மாசத்துக்கு ஒருக்கா ரத்தம் தர்றான். இவனுங்க அனுப்புற மெசேஜ் பார்த்து கடுப்பாகி எல்லாமே வசந்தி புருசன்னு முடிவு பண்ணி நான் விட்டுட்டு போய்ட்டா ஒரு உயிர் காப்பாத படாம போயிரலாம்.

நானும் மூணு தடவை ரத்தம் வேணும்னு போஸ்ட் போட்ருக்கேன். என் சொந்தகாரங்க. வெளிநண்பர்கள், இணைய நண்பர்கள் என்னை நேரடியா தொடர்புகொண்ட பொழுது. ரத்தம் கிடைத்ததும் நன்றி ரத்தம் கிடைத்துவிட்டதுன்னு எடிட் பண்ணி போட்ருவேன்.

நீங்க அனுப்புற பத்து மெசேஜில் போன் பண்ணி பல்பு வாங்கி உண்மையில் சேர வேண்டியவர்களுக்கு ரத்தம் கிடைக்க பெறமால் செய்கிறீர்கள் உதவும் குரங்குகளே

சமூக ஆர்வகோளாறுகள்:
படத்தில் இருக்கும் சிறுமிக்கு இதய ஆப்ரேசன் நடக்கப்போகின்றது, பத்து லட்சம் செலவு ஆகுமாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஃபார்வேடுக்கும் பத்து பைசா தருவதாக வோடாஃபோன் ஒத்துக்கொண்டுள்ளது.

இதை பார்த்தவுடன் இவுனுங்க உண்மையில ஸ்கூல் காலேஜ் போய் படிச்சவங்க தானானு தோணும்.

நான் மட்டும் கொஞ்சம் கோக்கு மாக்கு ஆளா இருந்தால்
இந்த நம்பரை எல்லாம் கலைக்ட் பண்ணி, சார் எங்கிட்ட ரைஸ் புல்லிங், நாகமாணிக்ககல், தங்க புஷ்பம்
(எதோ ஒன்னு) இருக்குன்னு சொல்லி. அது யார்கிட்ட இருக்கோ அவர்கள் நாட்டை ஆளுவார்கள். சசிகலாட்ட இருந்ததை நான் சுட்டுட்டு வந்துட்டேன். எனக்கு அதிகாரமெல்லாம் வேணாம். கொஞ்சம் பணம் இருந்தால் போதும் அதிர்ஷ்டகாரருக்கு போகட்டும்னு கண்ணை மூடி நம்பரை அழுத்தினேன் உங்களுக்கு வந்துருச்சுன்னு சொல்லி ஏமாத்தலாம்

ஏன்னா இதுக எவ்ளோ சொன்னாலும் புரியாத‌
சுட்டு போட்டாலும் திருந்தாத ஞானசூனியங்கள்
இருக்குற குரூப்பில் எல்லாம் இவனுங்க கிட்ட‌
கத்தி கதறி, நொந்து, நூடுல்ஸ் ஆகி தான் வாட்ஸ் அப்பை அன் இன்ஸ்டால் பண்ணேன்

பக்தி புளிங்கொட்டைகள்:
மோகத்தில் தெரியும் இந்த சாய்பாபா படத்தை பகிர்ந்தால் ஏழு நாளில் உங்களுக்கு நல்லது நடக்கும் இல்லையென்றால் கெடுதல் நடக்கும்னும் மெசேஜ். ஏங்க நீங்க படிச்சவர் தானே இதை போய் ஃபார்வேர்ட் பண்றிங்கன்னு கேட்டா என்னாப்பா பண்றது, போனா மசுறு வந்தா மலைன்னு சொல்றாங்க. காமெடி என்னான்னா இவங்க எல்லாருமே நல்லா படிச்ச பயபுள்ளைங்க‌

1990களில் பிரஸ்காரன் பண்ண ப்ளான் இது.
இந்த நோட்டீஸை பார்த்ததை 500 காப்பி அடித்து அனைவருக்கும் கொடுக்கவும்.
அப்படி கொடுத்த வெங்கடேஸ்க்கு லாட்டரியில் ஒரு லட்சம் விழுந்தது. மகேஸ்க்கு வெளிநாட்டு வேலை கிடைத்தது,
அலட்சியம் செய்ய வாசுவுக்கு வாய் கோணி போனது. ஜெகதீஸ்க்கு வால் முளைத்ததுன்னு இருக்கும் நோட்டீஸை நூத்துல ஒருத்தன் அடித்து இப்பவும் கொடுத்துட்டு தான் இருக்கான்

மேலே சொன்ன ஆர்வ கோளாறுகளுக்கும். இந்த புளியங்கொட்டைகளுக்கும் பெருசா வித்தியாசமில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்

***
ஊருக்கு உருப்படியா எதும் செய்யாத, உதவாக்கரை அதிமுக எப்படி மறுபடி ஆட்சிக்கு வந்ததுன்னு யோசிச்சேன்
அப்புறம் தான் புரிந்தது
இந்த மாதிரி அதிமேதாவிகள் இருக்கும் நாட்டில் அதிமுக மட்டுமல்ல, பாஜக கூட ஆட்சி அமைக்கும்னு

இதை ஃபேஸ்புக்கில்/வாட்ஸப்பில் பகிர்ந்தாலும் பகிரா விட்டாலும் நீங்கள் தமிழர்களே
படிச்சிட்டு சிரிச்சாலும் வெட்கபட்டாலும் நீங்க தமிழர்களே

என்னமோ பண்ணிட்டு போங்க. என் கடமைக்கு பொங்கிட்டு போறேன்

#வால்பையன்

1 வாங்கிகட்டி கொண்டது:

sharfudeen said...

ஒளரளவுக்கு ( ??!) விபரம் அறிந்த என்னை /உங்களை போன்ற நபர்களிடம் இருக்கும் வியாக்கியானங்கள் / தெளிவான (?!) சிந்தனைகள் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கிறது? நாம பண்ற விஷயங்களுக்கு நியாயம் கற்பிக்கின்ற திறமையை மற்றவர்களுக்கு உபயோக படுற மாதிரி மாத்திக்கிறோமா என்ன? நம்மை போன்றவர்களிடம் இருப்பது விவரமான அடாவடித்தனம்...அவர்களிடம் இருப்பது வெகுளித்தனமான முட்டாள்தனம். ஆனால் அவர்களை மேய்க்க ஒரு நல்லவன் கிடைச்சா போதும். நம்மை போன்றவர்கள் தான் மிக டேஞ்சர். மேய்க்க ஆளே வரமுடியாது.

-sharfudeen
kodaikanal

!

Blog Widget by LinkWithin