விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று கல்கத்தாவில் பிறந்தார். இயற்பெயர் நரேந்தரநாத் தத்தா (லாரா தத்தா சொந்தகாரரா இருப்பாரோ).
ஐரோப்பிய சார்பு கல்லூரியில் படிந்த பொழுது தான் அவருக்கு சமய வேறுபாடு புரிந்தது. இவர் பிறப்பால் இந்து. நாட்டில் நிலவுவதோ கிறிஸ்துவம். அதையும் தெரிந்துகொண்ட பொழுது அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. கடவுளுக்கு உருவம் இருக்கா இல்லையா என்று.
அக்காலத்தில் புகழ் பெற்று இருந்த பிரம்ம சமாஜத்தில் தன்னை இணைத்துகொண்டார். பிரம்ம சமாஜத்தை உருவாக்கியது ராஜாராம் மோகன்ராய்(ஐஸ்வர்யாராய்!). பெரும்பாலான குறிப்புகளில் விவேக் இவரிடன் சீடராக இருந்தது குறிப்பிடபடவில்லை. ராஜாராம் அத்வைத கொள்கை உடையவர். கடவுளுக்கு உருவம் இல்லை அதே நேரம் நாமும் கடவுளும் வேறு வேறு இல்லை என்று. இவர் தான் அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த கொடிய பழக்கமான உடன்கட்டை ஏறுதல் முறையை ஒழித்தார்.
விவேக்கிற்கு குழப்பம். குழப்பத்திற்கு காரணம் விவேக் கடவுள் இருக்கா இல்லையா என ஆராயவில்லை. கடவுளுக்கு உருவம் இருக்கா இல்லையா என்பதே அவரது சந்தேகமாக இருந்தது. ஆச்சர்யபடஒன்றுமில்லை. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியின் பின்னரும் கடவுள் இல்லாம எப்படி உலகம் என மதவாதிகள் கேட்பது போல் அப்பொழுதும் கேட்டிருப்பார்கள் தானே.
அந்த சமயத்தில் தான் ராமகிருஷ்ண(பரமஹம்சரை) பற்றி கேள்வி பட்டார். ராமகிருஷ்ணர் தாம் காளியை பார்த்ததாக அக்காலத்தில் உளரிக்கொண்டிருந்தார். அதை ராமகிருஷ்ணபரமஹம்சர் வரலாற்றிலும் அவரது மனைவி சாரதா அம்மையார் வரலாற்றிலும் காணலாம்(அதெல்லாமாடா படிச்சன்னு கேட்குற உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்) ராமகிருஷ்ணர் பணத்தை தொடமாட்டார். தொட்டால் கை கோணிக்கும் என்ற கதையெல்லாம் அக்காலத்தில் உண்டு.
கடவுளை பார்த்த ஒருவரால் தான் நமக்கு கடவுளை காட்ட முடியும் என நம்பிய விவேக். ராமகிருஷ்ணரை பார்த்தார். ஆனாலும் ராமகிருஷ்ணரின் விளக்கங்கள் விவேக்கிற்கு திருப்தி அளிக்கவில்லை. சும்மா தியானம் பண்ணு காளி வருவான்னு சொன்னா எப்படி வருவா?
அந்த சமயத்தில் விவேக்கிற்கு ஹுட்கா(கஞ்சா) பழக்கத்தை கற்று தந்தார் ராமகிருஷ்ணர். பின் நெற்றியில் அறிவாளால் ஒரு கீறலிட்டு அதை மையபடுத்தி தியானம் செய்ய சொன்னார். அப்பொழுது விவேக் காளியை பார்த்ததாக வரலாறு சொல்கிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த காளியும் அக்காலத்தில் போட்டோவில் இருக்கும் காளி மாதிரி தான் இருந்தா.(படம் வரைபவன் ஏற்கனவே காளியை பார்த்திருப்பானோ)
அந்த காலகட்டத்தில் இந்தியா ஆங்கிலேயர்களிடன் அடிமை பட்டு கிடந்தது. விவேக் இந்திய விடுதலைக்காக ஒரு இலையை கூட கிள்ளிபோடவில்லை.(விவேக் அண்ணன் விடுதலை போராட்டவீரர்) அது தனது வேலையில்லை என்றும். சமயம் பரப்புதலே தனது பணி என வாழ்ந்தார். கன்னியாகுமரியில் மூன்றுநாட்கள் தியானம் செய்த விவேக் இந்தியாவின் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக கூறினார்.
விவேக்கை போலயே இந்தியவிடுதலையில் அக்கறை காட்டாத இந்த்துவா வாதிகள் விவேக்கை சிகாகோவில் நடந்த உலக மதங்களில் மாநாட்டில் பேச அழைத்தனர். அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேச இந்து மதத்தில் வேறு யாரும் இல்லை என்பது வேறு கதை.(படிச்சா தானே)
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று பேச்சை ஆரம்பித்தது.
உங்களை போல் எனக்கு குழந்தை வேண்டும் என கேட்ட பெண்ணிடம் ஏன் என்னை போல், என்னையே குழந்தையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என சொன்னது போன்றவை இவரது புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்குகள்.
ஜூலை 4 1902 தனது 39 வது வயதில் காலமானார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்து இருந்தது. சுயமைதுனம் செய்து கொள்ளாததால் விரைப்பை கேன்சர் இருந்தது என கூட பரவலாக கருந்து உண்டு. அதையெல்லாம் விவேக்கை விவேக்காக பார்த்தால் மட்டுமே ஆராய முடியும். முன்னாடி சுவாமி போட்டு அழைப்பதும் கண்ணை கட்டிகிட்டு மணலில் ஊசி தேடுபதும் ஒன்னு தான்.
2 வாங்கிகட்டி கொண்டது:
அருமையான பதிவு, கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து உங்கள் அனைத்து பதிவுகளையும் வாசித்து உள்ளேன். வாழ்த்துக்கள்.
விவேக்கை பத்தி கொஞ்சம் அதிகமா படிச்சி இந்த பதிவை எழுதி இருக்காலாம். வரலாற்று குறிப்பிலிருந்து நிறைய மாறுது. அத்வைதம் சொல்லி கொடுத்த குரு, சிகாகோ அழைப்பு அவருக்கு வரல ஒரு மன்னனனுக்கு வந்துச்சு அவரு இவரை போவ சொன்னாரு. விவேக்கோட நிறைய பொன்மொழி நல்ல இருக்கும்...... நான் விவேக் பேன் கிடையாது :)
Post a Comment