மனசிதைவு நோய்

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் பத்தில் ஆறு பேர் ஹிஷோபெரினியா என்ற மனசிதைவு பிரச்சனையில் இருப்பவர்கள். உலகெங்கும் அதிகமான மனநோய் பிரச்சனை இதுதான்.
மூளையில் ஏற்படும் ரசாயனமாற்றம் காரணம் எங்கிறார்கள். ஆனாலும் பிறப்பிலே மூளை வளர்ச்சி குறைபாட்டை தவிர மற்ற அனைத்து மன பிரச்சனைகளும் இது வரை சர்ச்சையுடன் கூடிய காரணமா தான் இருக்கு.
அதிகமான போதை பழக்கம், முக்கியமா நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கஞ்சா போன்ற வஸ்துகள். அதிக மன அழுத்தத்தில் தனிமையில் விடப்படுதல் மேலும் உங்கள் பரம்பரையில் இருந்தால் உங்களுக்கும் வர 30% வாய்ப்பு உள்ளது.
இவர்களிடன் காணப்படும் அறிகுறிகள். அதீத தாழ்வு மனப்பான்மை. தன் மனதில் தாமே எண்ணுவதை பிறர் நமக்கு கட்டளையிடுவதாக எண்ணிக்கொள்வது. இன்ஸோமேனியா என்ற தூக்கமின்மை.
அதில் பாராநாய்டு ஹிரோபெர்னியா என்பது அனைவரையும் சந்தேகிக்கும். அவர்கள் நம்மை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை அடிக்கவோ, கொல்லவோ திட்டம் இடுகிறார்கள். சாப்பாட்டில் விசம் கலந்துள்ளார்கள் என்று.
இவர்களுது கற்பனையை உண்மை என்று நம்புவார்கள். சாதாரணமாக இருப்பவர்கள் சினிமா நடிகர்களையும், அரசியல் பிரபலங்களையும் பார்த்ததாக சொல்லுவார்கள். இதுவே ஆன்மீகத்தில் இருப்பவர்கள் கடவுளை கண்டதாக சொல்லுவார்கள். கோர்வையற்ற பேச்சை புதிதாய் பார்ப்பவர்களுக்கு சித்தர் போல தோற்றம் அளிக்கலாம். ஆனால் ராமகிருஷ்ணபரமஹம்சர் முதற்கொண்டு கடவுளை பார்த்தது இப்படி தான்.
உண்மையில் சொல்லவேண்டுமென்றால் மனிதர்கள் அனைவருமே மன சிதைவில் விழிம்பில் இருப்பவர்கள் தான். தன்னம்பிக்கையும், அவசர காலத்தில் எடுக்கும் தெளிவான முடியுமே அவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. தனிமையை தவிர்த்தல். நடக்குமா நடக்காதா என தெரியாமல் நெகடிவ்வாகவே சிந்தித்தல் போன்றவனை தவிர்க்கப்பட வேண்டும்.
நம் உடலுக்கு எதாவது பிரச்சனை வந்தால் அதை நம்மாலே உணர முடியும்., ஆனால் மன பிரச்சனைகளை நம்மை சுற்றி இருப்பவர்கள் மட்டுமே உணர முடியும். நம் செயல் நமக்கு இயல்பாக தெரியலாம். ஆனால் காலம் கடந்த சிகிச்சை மனநோயை குணப்படுத்தாது. மனபிரச்சனைகள் எல்லாருக்கும் உண்டு. தயக்கமின்றி சிகிச்சை எடுத்து கொள்வதே நல்லது

2 வாங்கிகட்டி கொண்டது:

Eswari said...

// ராமகிருஷ்ணபரமஹம்சர் முதற்கொண்டு கடவுளை பார்த்தது இப்படி தான்//
1000 2000 varusatukku mun 9 golkalaiyum anthan thakkathaiyum kandupidithadu, oru kal thoonai thattinal 10 adi thalli irukkum innoru thunil oli ketpadu (thirupattur), kovil pragarathil oru kuripita idathil mattum ethirolikka seidadu (srirangam), tday scientist idai innum aaraaichi seigirarkal, avarkallal idai parkka, kanndu pidika mudiyadadal idu mananal pirachanai agguma.

வால்பையன் said...

1000/2000 வருடங்களுக்கு முன் இவ்வளவு பிரச்சனைகளும் இல்லை. அதனால் இவ்வளவு மனநோயும் இல்லை.
நீங்க சொல்ற கோவில் மட்டுமல்லாது எல்லோரா. அஜந்தா குகை கோவில் மேலும் வெளிநாட்டில் இருக்கும் பல குறியீடுகள் வேற்று கிரகத்தவர்கள் இங்கு வந்து சென்றதாகவே குறிப்புகள் சொல்லுது. எங்கேயும் கடவுள் என குறிப்பிடபடவில்லை.

அப்படி இருந்தால் இப்போ எங்கே என்ற கேள்விக்கு பல நூறு ஆண்டுகளாக பதில் இல்லை

!

Blog Widget by LinkWithin