அரசும் ஜோக்கரும்!

//"இங்க பாக்க முடியாது. அப்பல்லோல தான் பாக்கனும்னா ஓட்டு ஏன் கெவர்மென்டுக்கு போடனும்.
அப்போல்லோவுக்கோ போட்ரலாமே"//

இது ஜோக்கர் படத்தில் வரும் ஒரு வசனம். ஆனால் ஒரு வரியில் முடிவதில்லை இதன் வலி.



ஆஞ்சியோ செய்த பிறகு அப்பாவுக்கு தொடர்ச்சியான விக்கல், மருத்துவ நண்பர்கள் சிலர் இது சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்னு சொல்லவும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஒரு வாரம் கழித்து சொல்கிறார்கள் உங்கப்பாவுக்கு மூளை காய்ச்சல், இங்கே அதற்கு பார்க்க டாக்டர் இல்லையென்று. முன்னாடியே சொல்லியிருந்தா கூட சேலத்தில் அல்லி மேடம் உதவியுடன் அப்பாவை காப்பாத்தியிருக்கலாம்.

எனக்கு தலையில் அடிபட்டி, முகவாதம் வந்து பேச்சு வராமல் முதலில் அங்கே தான் போனோம். அதென்ன சாபகெடு என்று தெரியவில்லை. எல்லா வியாதிக்கும் பாராசெட்டாமால் தான் மருந்தாக இருக்கிறது அரசு மருத்துவமனைகளில். கடன் வாங்கியாவது பார்த்துக்கொள்ளலாம் என சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டேன்

ஒரு கட்டுரைக்காக போதைபழக்கத்தில் இருந்து மீள நினைப்போற்கான வார்ட்டில் நோயாளிகளிடம் பேசினேன். ரெண்டாவது நாளிலே டாக்டர் சொல்கிறாராம். இங்கே தேவையான மருந்துகள் இல்லை. எனது கிளினிக் எதிரில் தான் இருக்கு. அங்கே வாங்க என்று.

இருக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவர்கள் இல்லை, படுக்கை வசதி இல்லை, மருந்துகள் இல்லை.
அந்த துறை மட்டுமல்ல.
காவலர்கள் இல்லை, நீதிபதிகள் இல்லை, பேருந்துகள் இல்லை.

இப்படி இல்லை இல்லை என்பது கடைசில் கஜானாவில் பணம் இல்லை என்பதாக போய் நிற்கிறது!

நாம் யாருக்கு ஓட்டு போட்டோம், எதற்காக ஓட்டு போட்டோம்?

3 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

பணம் வாங்கிட்டுத்தானே ஓட்டுப் போட்டோம்....
யாருக்கு ஓட்டுப் போட்டோம்... எதற்காக போட்டோம்ன்னு எல்லாருக்கும் தெரியுமே... :)

அருள்மொழிவர்மன் said...

இங்கு ஓட்டுப்போடுவது ஜனநாயக் கடமை அவ்வளவுதான், நல்லது நடக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான் கிட்டும்.

வேற எல்லா நாட்டிலயும் வரி (tax), கட்டினா மருத்துவம், சுகாதாரம், குழந்தைகள் கல்வின்னு இலவசமா கிடைக்கும், இங்க எல்லாத்துக்கும் காசு. இலவசமா நோய்களும் வியாதிகளும் கிடைக்கும்.

என்ன எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டீங்க - லஞ்சம் இருக்கு, நோய்கள் இருக்கு, குற்றங்கள் இருக்கு, கொலைகள் இருக்கு, ஊழல் இருக்கு, பெண்களுக்கெதிரான வன்முறை இருக்கு, சுகாதாரம் சீரழிஞ்சு இருக்கு இதெல்லாம் உங்க கண்களுக்குத் தெரியலையா??

இங்க தப்பானதெல்லாம் தப்பாத் தெரியரதில்ல!! எல்லாம் பழகிப் போச்சுங்க!

Unknown said...

ஆம் பணத்துக்கு ஓட்டுப்போட்டதின் சாபக்கேடு..

!

Blog Widget by LinkWithin