இதோ பூ பூத்து விட்டது, காய் கனிந்து விட்டது, பழம் பாலில் விழப்போகிறது என ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்த கருணாநிதியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண் என காட்டியிருக்கிறது இன்று விஜயகாந்த் எடுத்த முடிவு.
அதிமுக, தேமுதிக கட்சியை உடைத்தது. தனித்து நின்றால் 10 சீட்டு கூட ஜெயிக்க முடியாது. மேலும் தனித்து நிற்பது தற்கொலைக்கு சமம் ஆகவே தேமுதிக, திமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் என பல திமுக உறுப்பினர்களும், அனுதாபிகளும், நடுநிலைவாதிகளும் நேற்று வரை கூறி வந்தார்கள். அதில் சில திமுக உறுப்பினர்களுக்கு கருணாநிதி இன்னும் விஜயகாந்தை தொக்கி கொண்டிருப்பது பிடிக்காமல் கருணாநிதியை கலாய்த்த போட்ட மீம்ஸை கூட ஸ்மைலியுடன் ஷேர் செய்து தன் அதிருப்தியை காட்டினார்கள்.
மக்களின் தேசிய குணம் மறதியாக இருக்கலாம். கட்சிகளும் தன் தேவைக்கு சந்தர்பவாத கூட்டணி அமைக்கலாம். ஆனால் தேமுதிக நிலை வேறு. திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சி என தமிழகத்தில் உருவெடுத்து தனித்து நின்ற தேமுதிகவை அப்படியே விட்டிருந்தால் இன்று இவ்வளவு அசுர வளர்ச்சி அடைத்திருக்காது. சும்மா இருந்த தேமுதிகவை விஜயாகாந்தின் கல்யாண மண்டபத்தை இடித்து அதிமுகவுடன் கூட்டணி அமைய வைத்ததே திமுக தான்.
தேமுதிகவை குத்திய அம்பு அதிமுக என்றால். அதை எய்தது திமுக. அதனால் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே தேமுதிக, மக்கள் நல கூட்டணி அல்லது பாஜகவுடன் தான் கூட்டணி அமைக்கும் என கூறி வந்தேன். தமிழகம் வந்த மோடியும், அமித்ஷாவுன் ஜெயலலிதாவை மட்டும் பார்த்து சென்றது பாஜக மேல் விஜயகாந்துக்கு அதிருப்தியை உருவாக்கியது.
தற்சமயம் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக ஏற்றுகொண்டு மக்கள் நல கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. தேமுதிக 124, மக்கள் நல கூட்டணி 110 தொகுதிகள் என தற்சமயம் முடிவாகியுள்ளது. தொகுதிகள் மாறுலாம் ஒழிய கூட்டணி கலைய வாய்ப்புள்ளதாக தெரியவில்லை. ஒரு வாரத்தில் கலையும், ஒரு மாதத்தில் கலையும் என ஆருடம் பாஜக பிரமுகர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது மக்கள் நல கூட்டணி.
பாஜகவின் தமிழக எதிர்காலம் அதிமுகவின் கூட்டணி அமைத்தால் மட்டுமே. பாமகவின் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளாராக ஏற்றுக்கொண்டாலும் பாமக வலுவாய் உள்ள தொகுதிகளை பாமக எடுத்துக்கொண்டு மீதியை பாஜகவுக்கு கொடுக்கும். அங்கே டெபாசிட் கூட வாங்க முடியாது என்பது இரண்டு கட்சிகளுக்கும் தெரியும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிகபட்சமாக 20 தொகுதிகள் நிற்க கிடைக்கலாம். ஆனால் ஊழல் வழக்கு பாஜகவுக்கு ஒரு தடையாக உள்ளது.
வாசன் தனது குழந்தையை நடைபயில வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். திமுகவுடன் காங்கிரஸ் உள்ளதால் அங்கே போக வாய்ப்பில்லை. அதிமுகவிடன் போனால் வாசனும் யோகா செய்ய வேண்டியிருக்கும் ஆக வாசனுக்கு உள்ள சாத்தியகூறுகளும் இரண்டு தான். ஒன்று மக்கள் நல கூட்டணி. இன்னொன்று பாமக கூட்டணி. இல்ல நான் அடிமையா தான் போவேன்னு சொன்னா வேல்முருகன், செ.கு.தமிழரசன் மாதிரியான அடிமைகள் வரிசைகள் வாசனையும் உட்கார வைக்கனும்.
ஒரு வருடத்திற்கு முன்பு வரை நான் எடுத்த சர்வேபடி மக்கள் அதிமுக மேல் அதிருப்தியில் இருந்தாலும் திமுக மேல் கோவத்தில் இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தேன். இப்போது திமுகவுக்கு சமமான கூட்டணி ஒன்று மக்களுக்கு அடுத்த வாய்ப்பாக கையில் கிடைத்துள்ளது. அதிமுக அதிருப்தி ஓட்டுகள் பாமக, பாஜக என பிரியாமல் மக்கள் நல கூட்டணிக்கு கிடைத்தால் இந்த கூட்டணிக்கு 80திலிருந்து 90 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புண்டு.
திமுக ஆதரவிலோ, அதிமுக ஆதரவிலோ வெற்றி பெற்ற உதரி கட்சிகள் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவளிக்கும். அவ்ளோ ஏன் திமுகவே வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும். அவர்களை பொறுத்தவரை மீண்டும் ஒரு முறை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் திமுக கண்டிப்பாக உடையும். ஆதரவு அளிக்காவிட்டால் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று மீண்டும் தேர்தல் நடக்கலாம்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி மாதிரியான ஒரு கேவலமான செயல் எதுவும் இருக்கமுடியாது. இது இயற்கை கூட்டணி என சப்பை கட்டு கட்டுவது மக்களை எல்லாம் மடையர்கள் என சொல்லுவதற்கு சமம். திமுக கூட்டணிக்கு ஆளில்லாமல் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டது. அதிமுகவின் பல ஊழல்கள் அம்பலபட்டும், நமக்கு நாமே என நாடகம் நடத்தியும் பெரும்பான்மை மக்களிடம் திமுக மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.
திமுக, அதிமுக மட்டுமல்ல. தன்னை திருத்திக்கொள்ள தயாராக இல்லாத எவரும் பிறர் நம்பிக்கையை பெற முடியாது. இது தனி நபருக்கும் பொருந்தும்..

2 வாங்கிகட்டி கொண்டது:
கல்லு நழுவி காலில் விழுந்துடுச்சாம்
(y) சூப்பர் தல. நான் அப்படியே ஆமோதிக்கிரளன்ரேன்.
Post a Comment