எது தியாகம்!

எது தியாகம்?

உன்னை ஏற்றுக்கொள்வதா?
நிராகரிப்பதா?
எது தியாகம்?
விளைவுக்கு நானே பொறுப்பு என்பதா?
தண்டனையை ஒருவர் மட்டும் பெற்றுக்கொள்வதா?
எது தியாகம்?
உன் மகிழ்வில் நான் மகிழ்வதா?
உன் தேவைக்கு உன்னை தொலைப்பதா?
எது தியாகம்?
நினைவுகளுடன் மட்டும் வாழ்வதா?
நினைத்தவுடன் மறப்பதா?
எது தியாகம்?
தொடர்புகளை அறுப்புதா?
மணிகட்டை அறுப்பதா?
தியாகத்திற்கான உன் வரையறை என்ன
உன் வலி உனக்கு...
என் வழி எனக்கு...
தன் வழியை தேடி விலங்குகளை கூட
அதன் பெற்றோர் தடுப்பதில்லை
இதில் தியாகம் என்ன தேவையிருக்கு
பாதைகள் கற்களும், முற்களும் நிறைந்தவை
பார்த்து நட!

1 வாங்கிகட்டி கொண்டது:

HariShankar said...

:( :'(

!

Blog Widget by LinkWithin