அதிமுக(வில் இருந்து ஆரம்பிப்போம்)

2010 லயே தெரி்ந்து விட்டது அதிமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று. திமுக தவிர்த்து வலுவான எதிர்கட்சியாக எதுவும் இல்லை. தேமுதிகவுக்கு வாழ்வு கிடைத்தது

உண்மையில் அது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியல்ல, திமுகவுக்கு கிடைத்த தோல்வி. திமுக எதிராக 2ஜியோ, வேறு காரணிகளோ இல்லை. ஒரே வில்லன் மின்சாரம் மட்டுமே

மின்மிகை மாநிலம் ஆக்குவேன் என ஆட்சிக்கு வந்த அதிமுக வந்த ஓராண்டில் 6 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 12 மணி நேரமாக கூடியது. பேய்க்கு பயந்து பிசாசிடன் மாட்டிய கதையானது மக்களுக்கு.

வந்த சிறிது நாளில் வழக்கம் போல் கஜானா காலி, எனக்கு உங்களை விட்டா யார் இருக்கான்னு பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. அந்த வலி மறக்கும் முன்னே பால் விலையும், மின்சார கட்டணமும் உயர்த்தபட்டது. மக்கள் எதோ கனா கண்ட மாதிரி பேந்த பேந்த முழித்தார்கள்

மின்மிகை மாநிலம் ஆக்கிட்டோம்னு மார்தட்டிக்கொண்டிருக்கும் அதிமுக அரசு, அரசு சார்ப்பில் சொந்தமாக ஒரு மின் திட்டமும் கொண்டு வரவில்லை, ஒரு யூனிட் மின்சாரம் கூட நாங்கள் உருவாக்கினோம் என சொல்லிக்கொள்ள முடியவில்லை.

எப்படி ஆனது மின்மிகை மாநிலம்? கிட்டதட்ட யூனிட் 16 ரூபாய் என்ற விலைக்கு வாங்கி மக்களுக்கு மானியத்தில் கொடுத்தது, மின்சார வாரியத்தின் கடன்சுமை இனிமே உனக்கு கடன் தர மாட்டோம்னு வங்கிகள் சொல்லும் அளவுக்கு போனது. அதனால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. நன்றாக இயங்கிகொண்டிருந்த அனலாக் மீட்டரை முற்றிலுமாக டிஜிட்டலாக மாற்றினர். அதிகவிலைக்கு மின்சாரம் வாங்கியது, டிஜிட்டல் மீட்டர் வாங்கியது இரண்டிலும் ஊழல் நடந்துள்ளது என மின்சார வாரிய ஊழியர்களே பேட்டி கொடுத்தனர்

ரமணா படத்தில் காட்டப்படுவது போல் டாப்10 ஊழல் பொறியாளர்கள் என பேனர் வைக்கப்பட்ட பெருமை அதிமுகவுக்கே. எல்லா துறையிலும் 40% கமிசன் கேக்குறாங்க, நாங்க எப்படிங்க தொழில் பண்றது என எல்லா காண்ட்ராய்ட் ஆள்களும் புலம்பினர்.

4 வயது சிறுவன் மது குடித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது, அதிமுக மற்றும் அதன் சார்ப்பு தவிர அனைவரும் மதுவிலக்கை கொண்டு வர கேட்டனர். அரசின் காசி செவிடானது. நம் மக்கள் தான் மறதிக்கு பிறந்தவர்கள் ஆச்சே, இயற்கையே பொறுக்காமல் பெரு மழையை அனுப்பி அதிமுக அரசின் செயலற்ற தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

மற்ற கட்சிகள் மக்களுக்கு கோவம் என்றால் இப்பொழுது மக்கள் அதிமுக மேல் வெறுப்பில் இருக்கின்றார்கள்.(ஆங்காங்கே உதார்விடும் அடிமைகள் விதிவிலக்கு) கிராமத்துமக்கள் சிலர் எம்.ஜி.ஆருக்காக சின்னத்தில் குத்தலாம் ஆனால் நகர்புற மக்கள் களமிறங்கி அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது

(கள நிலவரம்)

1 வாங்கிகட்டி கொண்டது:

Jayadev Das said...

super

!

Blog Widget by LinkWithin