இந்தியாவை எரிக்கும் சாதிய தீ!

கீழே விழுந்த செல்போனை குனிந்து எடுக்க வக்கில்லாத உயர்சாதி எருமைகள், எடுத்து தராமல் சென்றதற்காக தலித் குழந்தைகள் இருவரை எரித்து கொன்றுள்ளனர்.

பேசக்கூட தெரியாத அந்த குழந்தைகளை மனிதனால் கொல்லனும்னு நினைச்சு பார்க்க முடியுமா என்பதே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மிருகத்திலும் கொடியவாக மனிதம் தன் முகத்தை காட்டிக்கொண்டிருக்கிறது. சுதந்திரம் வாங்கி 68 வருடங்கள் ஆகிறது. அந்த சுதந்திரம் யாருக்காக வாங்கப்பட்டது என நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது.

சக மனிதனை மனிதனாக பார்க்காமல் அவனுக்கு சாதி அடையாளமிட்டு, கீழ் சாதி, உயர் சாதி என பிரிவினைகளை உண்டாக்கி, அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படாமல் 68 வருடங்களாக இன்றைய டிஜிட்டல் இந்தியா பயணித்து வந்துருக்கிறது.

டெல்லியில் நிர்பயாவிற்கு நடந்த கொடுமைகாக களத்தில் இறங்கி போராடிய மொத்த இந்தியாவும் இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கு மெளனம் சாதிக்கிறது. தலித்துகளின் உயிர் என்றால் அவ்வளவு மலிவா?

இந்த சாதி சங்களுக்கும், சாதி கட்சிகளும் தங்களை முன்னேற்றிக்கொள்ளவா? அல்லது தாழ்த்தபட்ட சமூகத்தை கொன்றழிக்கவா? சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது.

தாழ்த்தபட்ட பட்ட சமூத்தை கோகுல்ராஜை கொன்ற யுவராஜ் இன்று தலைவனாக கொண்டாடப்படுகிறான். மனபிறழ்வு அடைந்தவன் கூட சக உயிர்களுக்கு மதிப்பளிப்பான். இந்த சாதி வெறியர்கள் மனிதன் என்று சொல்லவே தகுதியிழந்து நிக்கிறார்களே?

தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் முன்விரோதம் காரணமாக குற்றம் நடந்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த முன் விரோதம் ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் புரையோடி போயிருக்கிறது என்பதை சிபிஐ தாக்கல் செய்யுமா?

தெருவுக்கு ஒன்றாக இருக்கும் சாதி சங்கங்களினாலும், சாதி கட்சிகளினாலும் மொத்த மனித குலத்துக்கே ஆபத்து என்பதை சிபிஐ பதிவு செய்யுமா?

சாதியம் மட்டுமே சமூகம் என்றால் மொத்த சமூகமும் எரிந்து நாசமாய் போகட்டும்..

2 வாங்கிகட்டி கொண்டது:

யாஸிர் அசனப்பா. said...

///டெல்லியில் நிர்பயாவிற்கு நடந்த கொடுமைகாக களத்தில் இறங்கி போராடிய மொத்த இந்தியாவும் இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கு மெளனம் சாதிக்கிறது///

இது டிஜிட்டெல் இந்தியா.

Swathi said...

சரியா சொன்னீங்க

!

Blog Widget by LinkWithin