தயாராகுங்கள், அடுத்த சுதந்திர போராட்டத்திற்கு!

நரேந்திரமோடி என்ற பசுதோல் போர்த்திய நரி இன்று பிரதமர் என்ற அதிகாரம் கொண்டு நாடு நாடாக சுற்றிக்கொண்டிருப்பதற்கு காரணமாக சமூக ஊடகங்களின் பங்கும் பெருமளவு உள்ளது. காங்கிரஸ் மீதான வெறுப்பின் காரணமாக பாஜக மதவாத கட்சி என தெரிந்தும் பலர் பாஜகவால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும் என நம்பினார். அவர்களது பக்கங்களில் பாஜகவுக்கு ஆதரவு பிரச்சாரமும் செய்தனர்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையும் மிக முக்கியமானது. அதற்கு முன் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என உளரிகொண்டிருந்த பாஜகவினர் தேர்தலின் போது நாட்டின் வளர்ச்சியே எங்களின் குறிக்கோள் என்றனர். கருப்பு பணத்தை கொண்டு வந்து தலைக்கு 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் போடுவோம் என்றனர். பிரிவினைவாதம் எங்கள் நோக்கமல்ல என்றனர்.

கவர்ச்சிக்கு ஆசைப்பட்டு அழகிகளிடம் ஏமாந்த சோனகிரியாக இன்று பாஜகவிற்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் ஒன்று கூட பாஜகவிடம் இல்லை. தமிழகத்தில் பாஜகவின் சாயம் முன்னரே வெளுத்துப்போனாலும் இப்பொழுது தான் மொத்த இந்தியாவும் பாஜகவின் உண்மை முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் என் இந்தியாவை நாசமாக்கிவிட்டனர் என உலக நாடுகளிடம் போய் நீலிகண்ணிர் வடித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மதிப்பை சம்பாரிக்க நினைத்தார் மோடி ஆனால் நடந்து கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியாதா என்ன?

உத்திரபிரதேசத்தில் மாட்டுகறி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் பேசாத நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இருந்து கண்டன அறிக்கை வருகிறது. இங்கிருந்து யாரும் போன் பண்ணி சொன்னார்களா என்ன? அதான் சமூக ஊடகத்தின் சக்தி.

பகுத்தறிவு எழுத்தாளர் கொலைக்கு எந்த ஒரு நடிவடிக்கையும் எடுக்காத நிலையில் வரிசையாக நான்கு எழுத்தாளர்கள் தமக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதை வேண்டாம் என திரும்ப கொடுத்துள்ளனர்.

இன்று மொத்த உலகமும் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்றும் பல பிற்போக்கு நாடுகளின் நடந்து வரும் உள்நாட்டு கலவரங்களை நான் அன்றாடம் பார்த்து வருகிறோம். மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு செல்லும் பொழுது இறந்த குழந்தைக்காக உலகமே கண்ணீர் விட்டது.

இதே நிலை இப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு வரலாம். மாட்டுகறி தின்பவன் பாகிஸ்தான் போ என்பது. யோகா வேண்டாம் என்றால் கடலில் விழு என்பது. மாட்டை வெட்டினால் உன்னை வெட்டுவேன் என்பது என வன்முறை தூண்டுவதும், மக்களிடயே பிரிவினையும் தூண்டுவதுமாக பாஜக தனது உண்மையான முகத்தை ரத்தம் வழியும்  கோரை பற்களுடன் காட்டிக்கொண்டிருக்கிறது.

மனசாட்சியும் மனிதநேயமும்  உள்ள எந்த மனிதமும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டான். நமது பிறப்பு சரித்திரம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் நம் இறப்பை சரித்திரம் பேச வைக்க முடியும். நம் எதிர்ப்பை நாம் அரசுக்கு காட்டியே ஆக வேண்டும்.

இப்பொழுது இந்தியாவிற்கு தேவை அரசியல் கட்சிகளல்ல. சுதந்திர இயக்கம்.

ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக், டம்ப்ளர் போன்ற அனைத்து சமூக ஊடகங்களிலும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். பாஜக ஆதரவு மதவாதிகளை புறம்தள்ளுங்கள். இந்தியாவிற்கு தேவை சமநீதி. சம உரிமை.

என் கருத்துடன் உங்கள் கருத்தையும் எழுதி இதை பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin