அப்துல் கலாம் நல்ல மனிதர்.

மிகவும் எளிமையானவர், மத வேறுபாடின்றி நடந்து கொண்டவர். அவரை ஜனாதிபதி ஆக்கியது பாஜக என்பதற்காக ஆர்.எஸ்.எஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்குறார் என்ற குற்ற சாட்டு எழுந்தது. ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் பள்ளி குழந்தைகளை குழந்தைகளாக தான் பார்த்தார்.

சில இஸ்லாமியர்களுக்கு கலாம் இந்தியாவை ஆப்கானிஸ்தான் ஆக்கவில்லை என்ற வருத்தம் போலும். இஸ்லாமியர்களுக்கு ஒன்னுமே செய்யலன்னு அவர்கள் வருத்தத்தை வெளிபடுத்தியிருக்காங்க.

அப்துல்கலாம் நல்ல விஞ்ஞானி.

ஆக்கப்பூர்வமான விஞ்ஞானமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரம். இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆர்யபட்டாவில் இருந்து கலாமின் பக்களிப்பு இந்திய விஞ்ஞான துறையில் இருக்குறது.
எழுத்தாளர் சுஜாதாவும், கலாமும் ஒன்றாக படித்தவர்கள் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.

மருத்துவதுறையில் முக்கியமாக போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கைகால் செய்ய கலாம் முக்கிய காரணியாக இருந்தார்.

ஆனால் நல்ல ஜனாதிபதியா என்றால் இல்லை என்று தான் சொல்லுவேன். இந்தியாவில் ஜனாதிபதி பதவியை பொம்மை அல்லது ரப்பர் ஸ்டாம்ப் என்பார்கள். எனக்கு விபரம் தெரிந்து எந்த ஜனாதிபதியும் சுயமாக பெரிய முடிவுகளை எடுத்து நான் பார்க்கவில்லை.

பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரப் ராணுவ தளபதியாக இருந்து அதிபராக தம்மை அறிவித்துக்கொண்டார். ஒரு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம், நினைத்தால் மத்தியில் கூட ஆட்சியை கலைக்க முடியும். ஆனால் பாஜக,காங்கிரஸ் இரண்டு ஆட்சியிலும் ஜனாதிபதியாக இருந்த கலாம் நீட்டும் இடத்தில் கையெழுத்து போட மட்டுமே ஜனாதிபதியாக இருந்தார்.


கூடங்குளம் அணுமின்நிலையம், நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு ஒரு விஞ்ஞானியாக கூட இல்லாமல் அரசின் பிரதிநிதியாக செயல்பட்டார். இன்றும் கூடங்குள்ம் அணுக்ழிவுகளை எப்படி அழிப்பீர்கள் என்ற கேள்விக்கு அரசிடம் இருந்து பதில் இல்லை.

இதுகாக அவரையும் குறை சொல்ல முடியாது. அவருக்கு அறிவியல் தான் முதன்மை. இந்த சோதனையில் உயிர்சேதம் ஆகுதா என்பதல்ல. அறிவியல் உரை, எழுச்சி உரை என்று இளைஞர்களை உற்சாக படுத்துவதில் அவரது கடைசி காலம் பயனுள்ளதாக இருந்தது மொத்த இந்தியாவும் கொண்டாட காரணம்.


சிலவை குறைகளாக தெரிந்தாலும், இந்தியாவின் அரசியல் சாபம் அது. மற்றபடி இந்தியாவிற்காக அவரது பங்களிப்பு அளவிட முடியாதது. மாண்வர்கள் தான் எதிர்கால இந்தியாவை வல்லரசாக்க முடியும் என நம்பியவர். அவரது பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவித்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்!

1 வாங்கிகட்டி கொண்டது:

Adirai anbudhasan said...

முஸ்லிம்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தமில்லை, முஸ்லிமாய் இல்லை என்று தான் வருத்தம். " அக்கினிசிறகை " ஊன்றி படித்தால் அவர் விஞ்ஞானியல்ல என்று அவரே சொல்வது புரியும். இவர்தான் முதல் முஸ்லிம் ஜனாதிபதி என்பதும் இல்லை. அரசியல் வாதிகள் தமக்கு எதையாவது சொல்லி தருமசங்கடத்தை உருவாக்கி விடுவார்களோ என்று சந்தேகபடுகிற, பெரும் பதவியில் இருந்தவர்களுக்கு, வாயில் வைக்கும் கொழுக்கட்டை தான் இந்த பதவி.

!

Blog Widget by LinkWithin