கலாம் மரணமும், வாட்ஸ் அப் வதந்திகளும்..

எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல உண்மையான தமிழன் இதை அனைவருக்கும் ஷேர் செய்வான்னு ஒரு வார்த்தையைப் போட்டு ஆர்வ கோளாறுகளை தூண்டி விட்டு அவர்களும் ஒரு நம்பர் விடாமல் ஃபார்வேர்டு செய்த வதந்திச் செய்திகள் இவை.

கடந்த நாட்களில் கொமாருகள் தீயா வேலை செஞ்சு கிளப்பிய புரளிகள்.

1. கலாம் இறந்த தினத்தை ஐ.நா மாணவர் தினமாக அறிவித்தது.

2. அமெரிக்க அதிபர் ஒபாமா கலாமுக்கு அஞ்சலி செலுத்த மதுரை வருகிறார்.

3. கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

4. அணு விஞ்ஞானி அப்துல்கலாம்.

5. இத்தாலி நாட்டு சோனியா இந்திய பிரதமர் ஆகக்கூடாது என கலாம் ஒற்றைகாலில் நின்றார்.

6. காமராஜர் ஆட்சியில் தெருகுழாய் போட்டார்

7. மேகத்தின் வாயிலாக வானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

8. கலாம் ஒரு அய்யர் பெண்ணை காதலித்தார்.

9. கலாம் அண்ணின் பணத்தை பிக் பாக்கெட் அடித்து லாரி பிடித்து வரசெய்த்தது இந்த தேசம்.

10. கல்கி அவதாரம் தான் கலாம்!(செமல smile emoticon )

11. இயற்கை மரணமா, அரசியல் சதியா. 

12. கடவுள் துகள் ஆராய்ச்சி தடைப்பட்ட போது அப்துல் கலாம் அங்கே சிவன் சிலையை நிறுவினார். அந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு கிடைத்தது. 

13. 2007 - ல் அவர் தடுமாறி விழுந்த போட்டோவை கடைசி போட்டோ என ஷேர் செய்தது.

14. கலாமுக்காக இளையராஜா இசையமைத்த பாடல் என்று காமராஜர் படப்பாடலை ஷேர் செய்தது.

15.“இளவயது அப்துல்கலாம்” என பிஹார் பப்ளிக் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவனின் போட்டோ.

16. அதைவிட இளைய போட்டோ என்று ஏ.ஆர்.ரஹ்மானின் குழந்தைப் படம் பகிரப்பட்டது.

இன்னும் முடியல, நாளுக்கு நாள் புதுசு புதுசா திரைகதை எழுதிட்டு தான் இருக்கானுங்க.
இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ, டல்லரசாக பார்த்துக்கொள்ளுவதில் இந்த பொய்யர்கள் குழுக்கு பங்கு அதிகம்!


#தொகுப்பு உதவி:சேலம் எஸ்கா.

யாகூப் மேமன்!

மும்பையில் 1993 ஆம் ஆண்டு  மார்ச் 12 ஆம் தேதி 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் 257 பேர் கொல்லப்பட்டனர், 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தார் என சஞ்சத் தத் அதே வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சஞ்சத் தத் உட்பட மொத்தம் 189 பேர் இந்த குற்ற செயலில் சம்பந்தபட்டிருப்பதாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது காவல்துறை. அவ்வருடமே வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.




கிட்டதட்ட பத்து வருடங்கள் விசாரனைக்கு மட்டுமே எடுத்துக்கொண்ட வழக்கில் இறுதி குற்றவாளிகளாக 35 பேர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 2006 செப்டம்பர் 12 ஆம் தேதி தீர்ப்பு வழக்கப்பட்டது.

யாகூப் மேனன் உட்பட 12 பேருக்கு மரணதண்டனையும். 20 பேரு ஆயுள் தண்டனையும் 3 பேர் குற்றங்களில் சம்பந்தபடாதவர்கள் என விடுதலையும் செய்யப்பட்டனர்.

மேல்முறையீட்டின் போது பத்து பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. யாகூப் மேனனுக்கு மரணதண்டனை உறுதிபடுத்தப்பட்டது,

மேல்முறையீட்டு மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு என யாகூப் மேனன் தரப்பு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து 30.07.2015 அன்று அதிகாலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஹிட்லர் - அறியாத தகவல்கள்!

1889 ல் ஜெர்மனிக்கு அருகில் ஆஸ்திரா என்ற நாட்டில் ஹிட்லர் பிறந்தார். அவருடைய நான்கு சகோதர்கள் இறந்து விட்டனர், ஹிட்லர் மட்டுமே பிழைத்தார்.

நான்கு வயது இருக்கும்பொழுது கிணற்றில் தவறி விழுந்த ஹிட்லரை காப்பாற்றியது ஒரு கத்தோலிக்க பாதிரியார். முதலாம் உலக போரில் சாவின் எல்லையை தொட்ட ஹிட்லரை காப்பாற்றியது ஒரு பிரிட்டீஷ் சிப்பாய். ஆட்சி காலத்தில் கூடவே இருந்த ஒருவன் வைத்த சூட்கேஸ் வெடிகுண்டில் கேட்கும் திறனை இழந்தார்.(மூன்று முறை உயிர் தப்பியவர்)

சிறுவயதில் பாதிரியாராக விரும்பினார், பின் நடிகராக ஆசைப்பட்டார். வியான்னா அகடாமி ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் இருமுறை நுழைவுதேர்வில் தோற்று பின் அந்த ஆசையை கை விட்டார்.

1933 ஜனவரியில் ஆட்சியை பிடித்த ஹிட்லர், அவ்வருடமே மிருகவதை தடுப்பு சட்டம் கொண்டு வந்தார். பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர்  சைவ உணவு பழக்கம் கொண்டவர்.


Eduard Bloch என்ற யூதர் ஹிட்லரின் குடும்ப டாக்டராக இருந்தார். மற்ற யூதர்களோடு அவரை கொடுமை படுத்தவில்லை ஹிட்லர். அவரை புனிதயூதர் என்று அழைத்தார்.

1930-1940ல் ஹிட்லர்(அரசு) தான் முதல் முதல் புகை பழக்கத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தார்

ஹிட்லரின் கார் ஓட்டியும், அவரது நெருங்கிய நண்பரும் யூதர்கள் என பின்னாளில் தெரியவந்தது. அவர்களை நேர்மையான ஆரியர்கள் தான் என அறிவித்தார்.

1939ல் ஹிட்லர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னாளில் ஹிட்லர் நோபல் பரிசையே தடை செய்தார். பதிலாக ஜெர்மன் அறிவியல் பரிசு என ஒன்றை ஆரம்பித்து அறிவியலாளர்களை ஊக்குவித்தார். அவரது காலத்தில் தான் முதல் ஹைபிரிட் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது(ஃபோக்ஸ்வேகன் - Volkswagen )

1938 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை ஹிட்லருக்கு மேன் ஆஃப் த இயர் பட்டம் வழங்கியது. ஆனால் அமெரிக்கன் சீக்ரெட் சர்வீஸ் ஹிட்லரின் உணவில் பெண் தன்மையை தூண்டும் ராசாயனத்தை கலந்தது.

முதலாம் உலகப்போரின் போது தொடையில் பலத்த காயம் பட்டதில் அவரது ஒரு விதைகொட்டை நீக்கப்பட்டது.

ஹிட்லருக்கு பூனையை கண்டால் அலர்ஜி(Ailurophobia) பயம் என்று கூட சொல்லலாம்.

ஹிட்லரின் மாமா பையன் அமெரிக்க ராணுவத்தில் சேர்த்து ஹிட்லருக்கு எதிராக போர் புரிந்தார், why i hate hitler என்ற புத்தகமும் எழுதியுள்ளார்.

ஹிட்லர் எழுதிய Mein kampf என்ற புத்தகத்தில் கிடைத்த வருமானம் எல்லாம் தொண்டு நிறுவனத்திற்கு தரப்பட்டது, மக்களால் அது ரத்தபணம் என அழைக்கபப்ட்டது.

பாரிஸ் ஈஃபில் டவரில் 1500 படிக்கட்டுகள் ஏறினார். காரணம் ஹிட்லர் அதில் ஏறக்கூடாது என எலிவேட்டரின் கம்பிகள் அறுக்கபட்டு இருந்தன.

1939 ஜூலை 23 மற்றும் 1940 டிசம்பர் 24 தேதிகளில் காந்தி ஹிட்லருக்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். கடிதத்தின் ஆரம்பம் “டியர் ஃப்ரெண்ட்”

சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களை ஹிட்லர் ஆரியர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரிய நாகரீகம் அவர்களுக்கு முந்தையது என நம்பினார்.

ஹிட்லரின் முதல் காதலி ஒரு யூதர் ஆனால் அவரிடம் ஹிட்லர் பேசியதே இல்லை. ஈவா பிரானை 1945 ஏப்ரல் 29 ஆம் தேதி மணந்தார். 1945 ஏப்ரல் 30 இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

அப்துல் கலாம் நல்ல மனிதர்.

மிகவும் எளிமையானவர், மத வேறுபாடின்றி நடந்து கொண்டவர். அவரை ஜனாதிபதி ஆக்கியது பாஜக என்பதற்காக ஆர்.எஸ்.எஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்குறார் என்ற குற்ற சாட்டு எழுந்தது. ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் பள்ளி குழந்தைகளை குழந்தைகளாக தான் பார்த்தார்.

சில இஸ்லாமியர்களுக்கு கலாம் இந்தியாவை ஆப்கானிஸ்தான் ஆக்கவில்லை என்ற வருத்தம் போலும். இஸ்லாமியர்களுக்கு ஒன்னுமே செய்யலன்னு அவர்கள் வருத்தத்தை வெளிபடுத்தியிருக்காங்க.

அப்துல்கலாம் நல்ல விஞ்ஞானி.

ஆக்கப்பூர்வமான விஞ்ஞானமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரம். இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆர்யபட்டாவில் இருந்து கலாமின் பக்களிப்பு இந்திய விஞ்ஞான துறையில் இருக்குறது.
எழுத்தாளர் சுஜாதாவும், கலாமும் ஒன்றாக படித்தவர்கள் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.

மருத்துவதுறையில் முக்கியமாக போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கைகால் செய்ய கலாம் முக்கிய காரணியாக இருந்தார்.

ஆனால் நல்ல ஜனாதிபதியா என்றால் இல்லை என்று தான் சொல்லுவேன். இந்தியாவில் ஜனாதிபதி பதவியை பொம்மை அல்லது ரப்பர் ஸ்டாம்ப் என்பார்கள். எனக்கு விபரம் தெரிந்து எந்த ஜனாதிபதியும் சுயமாக பெரிய முடிவுகளை எடுத்து நான் பார்க்கவில்லை.

பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரப் ராணுவ தளபதியாக இருந்து அதிபராக தம்மை அறிவித்துக்கொண்டார். ஒரு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம், நினைத்தால் மத்தியில் கூட ஆட்சியை கலைக்க முடியும். ஆனால் பாஜக,காங்கிரஸ் இரண்டு ஆட்சியிலும் ஜனாதிபதியாக இருந்த கலாம் நீட்டும் இடத்தில் கையெழுத்து போட மட்டுமே ஜனாதிபதியாக இருந்தார்.


கூடங்குளம் அணுமின்நிலையம், நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு ஒரு விஞ்ஞானியாக கூட இல்லாமல் அரசின் பிரதிநிதியாக செயல்பட்டார். இன்றும் கூடங்குள்ம் அணுக்ழிவுகளை எப்படி அழிப்பீர்கள் என்ற கேள்விக்கு அரசிடம் இருந்து பதில் இல்லை.

இதுகாக அவரையும் குறை சொல்ல முடியாது. அவருக்கு அறிவியல் தான் முதன்மை. இந்த சோதனையில் உயிர்சேதம் ஆகுதா என்பதல்ல. அறிவியல் உரை, எழுச்சி உரை என்று இளைஞர்களை உற்சாக படுத்துவதில் அவரது கடைசி காலம் பயனுள்ளதாக இருந்தது மொத்த இந்தியாவும் கொண்டாட காரணம்.


சிலவை குறைகளாக தெரிந்தாலும், இந்தியாவின் அரசியல் சாபம் அது. மற்றபடி இந்தியாவிற்காக அவரது பங்களிப்பு அளவிட முடியாதது. மாண்வர்கள் தான் எதிர்கால இந்தியாவை வல்லரசாக்க முடியும் என நம்பியவர். அவரது பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவித்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்!

வியாபம்!

‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது. ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள்.

மத்தியப் பிரதேச அரசுப்பணி நியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய ஆஷிஷ் சதுர்வேதி என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம்! ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல்களில் தப்பி, நம்பிக்கை மனிதராக நடமாடிக் கொண்டிருக்கிறார்.

இஸ்திரி செய்யாத தொள தொள பேன்ட் - சட்டை அணிந்தபடி ஒரு பழைய சைக்கிளில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் குவாலியரில் வலம் வரும் 26 வயது இளைஞர் ஆஷிஷ் சதுர்வேதியைப் பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் எழும், ‘இவரா இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்?’ என! ஆனால் அவரது பாதுகாப்புக்காக உடன் வரும் போலீஸ்காரரைப் பார்த்தால் நம்பிக்கை வரும்.

‘‘என் அம்மாவின் மரணம்தான் இந்த ஊழலை எனக்கு உணர்த்தியது’’ என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் சதுர்வேதி. கடந்த 2009ம் ஆண்டில் புற்றுநோய் தாக்கிய தன் அம்மாவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார் அவர். அங்கிருந்த மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவ அறிவுகூட இல்லாதது கண்டு அதிர்ந்தார் சதுர்வேதி. பலருக்கும் குத்துமதிப்பாகவே சிகிச்சை நடந்திருக்கிறது.

‘‘சிகிச்சை பலனளிக்காமல் என் அம்மா சில நாட்களிலேயே இறந்துவிட்டார். எனக்குக் கோபம் பொங்கி வந்தது. சாதாரண மருந்துக்கடை விற்பனையாளருக்கு மருந்துகள் பற்றித் தெரியும் விஷயங்கள்கூட அறியாமல் இவர்கள் எப்படி எம்.பி.பி.எஸ் முடித்து வந்திருப்பார்கள் என கேள்வி எழுந்தது.

எத்தனை அப்பாவிகள் இந்த அரைகுறைகளால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள்! இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என விசாரணையை ஆரம்பித்தேன்’’ என்கிறார் சதுர்வேதி.

அங்கு பழக்கமான ஒரு மருத்துவ மாணவரோடு நெருங்கிப் பழகியதில் உண்மைகள் தெரிந்தன. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மத்தியப் பிரதேசத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

உண்மையான மாணவர்களுக்கு பதிலாக வேறு யாரோ தேர்வு எழுதுவார்கள். இப்படி ஆள் மாறாட்டம் செய்வதில் எல்லோருக்கும் பங்கு! தேர்வு நடக்கும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் இருக்க, அந்த மாணவர் எங்காவது சினிமா பார்த்துக் கொண்டிருப்பார். ‘‘ஒரு சினிமா பார்த்தால் எம்.பி.பி.எஸ் அட்மிஷன் கிடைப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான்’’ என சொல்லி சிரிக்கிறார் சதுர்வேதி.

இது ஊழலின் ஒரு துளிதான். மாணவர்கள் போய் விடைத்தாளை வாங்கி, எதுவுமே எழுதாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க, வேறு இடத்தில் வைத்து அதை யாரோ ஒரு பேராசிரியர் எழுதி முடிப்பார். ஒன்றுமே தெரியாத ஒரு நபர், முதல் மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சீட் பெறுவார். இப்படி மோசடி நடந்தது வெறுமனே மருத்துவக் கல்லூரி அட்மிஷனுக்கு மட்டுமில்லை. எஞ்சினியரிங் அட்மிஷன், அரசு வேலைகளுக்கான தேர்வுகள் என சகல மட்டத்திலும் இதே ஆள்மாறாட்டம், தகிடுதத்தம்.

நுழைவுத் தேர்வு மையங்கள், கவுன்சிலிங் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஆதாரங்களைத் திரட்டி, 2013ம் ஆண்டில் ஒரு உயர் அதிகாரியிடம் புகார் கொடுக்கப் போனார் சதுர்வேதி. அவரோ, ‘இந்த நெட்வொர்க்கில் நீயும் சேர்ந்தால் நல்ல பங்கு சம்பாதிக்கலாம்’ என பேரம் பேசினார். அங்கிருந்து விலகி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை அணுகினார் சதுர்வேதி.

இதேபோல வேறு மூன்று பேர் பல்வேறு தகவல்களைத் திரட்டிக் கொடுத்த புகார்களும் அந்த அதிகாரி கையில் இருந்தது. ‘இவ்வளவு அப்பட்டமாக மோசடி செய்ய முடியுமா?’ என்ற அவநம்பிக்கை மனதில் சூழ, அரைமனதோடு ஒரு நுழைவுத் தேர்வு மையத்துக்கு திடீர் சோதனை நடத்தச் சென்றார் அந்த அதிகாரி. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பலர் சிக்கினர். அதன்பின் ஒவ்வொன்றாக முழு பூதமும் வெளியில் வந்தது.

இது எவ்வளவு மெகா சைஸ் ஊழல் என்பது சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் புரியும். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது 1930 பேர். இன்னும் 500 குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவிக்கு இதில் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மாநில கல்வி அமைச்சர் சிறையில் இருக்கிறார்.

மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவின் மகன் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் இறந்துவிட்டார். இப்படி இதுவரை மர்ம மரணம் அடைந்தது 36 பேர். கவர்னருக்கே இதில் தொடர்பு இருப்பதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

‘‘இப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை நடக்கிறது. இதுவரை இந்த ஊழலின் சூத்திரதாரிகளை போலீஸ் நெருங்கவில்லை. உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டுமின்றி பல நீதிபதிகளின் வாரிசுகளும் உறவினர்களும்கூட இதில் பலன் அடைந்திருக்கிறார்கள்.

அதனால் விசாரணை எப்படிப் போகும் என்பது தெரியவில்லை. இதில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பலருக்குத் தொடர்பு இருக்கிறது. மர்ம மரணங்களுக்குப் பின்னணியை போலீஸ் ஆராயவில்லை’’ என்கிறார் சதுர்வேதி.

இந்த ஊழலை அம்பலப்படுத்திய தினத்திலிருந்து இவருக்குக் கொலை மிரட்டல் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு கேட்டபோது, ‘மாதம் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் பாதுகாப்பு தருவோம். இல்லாவிட்டால் எங்கும் வெளியில் வராமல் வீட்டில் இரு’ என பதில் தந்தது போலீஸ்.

பிறகு கோர்ட் உத்தரவிட்டதும் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. சதுர்வேதி ஒரு சைக்கிளில் போக, அவருக்கு பாதுகாப்பாக ஒரு கான்ஸ்டபிள் இன்னொரு சைக்கிளில் வருவார். அந்த கான்ஸ்டபிள் கண்ணெதிரிலேயே ஆறு முறை சதுர்வேதி மீது தாக்குதல் நடந்தது. அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

‘‘இப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை எனக்கு வாழ்நாள் முழுவதும் தரச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம்கூட என்னை கண்டம் துண்டமாக வெட்டிப் போடப் போவதாக, என் பாதுகாப்புக்கு வரும் கான்ஸ்டபிளிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள் சிலர். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. 14 முறை பிழைத்துவிட்டேன்.

அடுத்த மர்ம மரணம் எனக்கு நிகழலாம். ஆனால் அதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்த வேண்டும், முதல்வர் உட்பட! இல்லாவிட்டால் என் ஐந்து ஆண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்!’’நீண்ட பெருமூச்சோடு சொல்லி விட்டு சைக்கிளை மிதிக்கிறார் ஆஷிஷ் சதுர்வேதி.

கிரேக்கமும் தமிழகமும்!

சமீபமா செய்திகளில் கீரீஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி கேள்விபட்டிருக்கலாம். பிரச்சனை என்னான்னு சுருக்கமா.

கீரிஸ்நாடு ஜெர்மன்,அமெரிக்கா மற்றும் யூகே நாட்டிடம் இருந்து வளர்ச்சிகாக கடன் வாங்கியுள்ளது. தேதியில் வட்டியும் கட்டவில்லை, அசலும் கட்டவில்லை. வங்கி பணம் இல்லாம திவாலிகிருச்சுன்னு சொல்வாங்களே அதாவது டெபாசிட் கம்மி கடன் மட்டும் அதிகமா கொடுத்து திரும்ப வராமல் போண்டி ஆகுறது, அந்த நிலை தான் கிரீஸுக்கு. காரணம் என்னவா இருக்கும், கேவலமான பொருளாதார கொள்கை தான்.

சரி இங்க ஏன் தமிழகம் வந்தது?

அதிமுக அரசு ஆட்சிக்கு வரும் போது தமிழகதின் கடன் ஒரு லட்சம் கோடி. தற்போதைய அதிமுக சாதனை கடனை ரெண்டு லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அவர்கள் சொல்லும் சாக்கு உள்நாட்டு உற்பத்தில் 20% கடன் வாங்கலாம் என்று. ஆனால் இவர்கள் கொடுக்கும் புள்ளிவிபரம் நம்பக்கூடியதா?

உற்பத்தியை மட்டுமே கணக்கில் காட்டும் அதிமுக அரசு மனிதவள மேம்பாட்டை கோட்டைவிட்டு விட்டதே. மக்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் இவர்கள் சொல்லும் உற்பத்தி கணக்கை எதிர்கட்சிகள் கூட கேள்வி கேட்காமல் இருக்கே ஏன்?

50 வருடங்களுக்கு முன்னால் ஒரு மணி நேரத்தில் 100 மீட்டர் துணி நெய்ய 50 ஆட்கள் உழைப்பு இருக்கும். அது ஒரு உதாரண கணக்கு அதே போல் மற்ற உற்பத்திக்கும் ஆனால் இயந்திரமான உலகில் அனைத்திற்கும் இயந்திரம் தான் பிரதானம், மனிதம் வெறும் கண்காணிப்பாளம் மட்டுமே. அதுக்கு எத்தனை ஆட்கள் உழைப்பு தேவைப்படும்? அப்படியானல் நம் மனிதவளம் எந்த லட்சணத்தில் இருக்கிறது?

வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் தகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வேலையில். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சம்பளத்தில் ஆனால் அரசு சொல்லும் தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது என்று. அந்த புள்ளிவிபரம் அரசு பணியாளர்களின் சம்பள சதவிதம் கொண்டும், நுகர்வோர் பயன்பாடு கொண்டும் அளக்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவனையும் ஆயிரம் சம்பளம் வாங்குபவனையும் ஒரே மாதிரே பார்க்கும் அரசு.

நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக் என்ற விசத்தை மட்டுமே அரசு நம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இப்படியே குடிச்சிட்டு போனா எல்லாரும் செத்துபோய் குடிக்க ஆள் இருக்காதே. அப்போ தமிழக அரசு அண்டை மாநிலங்களில் சரக்கு விற்குமோ? ஒரு அரசு நிதி நெருக்கடியை சமாளிக்கும் லட்சணமா இது. சாப்பிடுவதற்கு மக்களுக்கு ரொட்டி இல்லை மன்னா என சொன்னதுக்கு ரொட்டி இல்லாட்டி என்ன கேக் சாப்பிட சொல்லுங்கன்னு சொன்னாமாம் ஒரு முட்டாள் மன்னன். அந்த லட்ணத்தில் இயங்கிறது அரசு.

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சமமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? ஒவ்வொரு சாமான்யனும் பெரும் கடனில் தான் இருக்கின்றான். அவனை சமாதானம் செய்ய இலவச தொலைகாட்சி, இலவச மின் விசிறி, இலவச மிக்ஸி கொடுத்து பின்னாடியே மின்சார கட்டணத்தை நாலு மடங்கு உயர்த்தி வயிற்றில் அடிக்கிறது அரசு. மின்சாரத்தில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல்(அல்லது இழப்பு. இப்படி தானே 2ஜி அலைகற்றையில் ஜல்லிடக்கிறானுங்க).

பெரும் முதலாளிகள் தன் சொந்த வருமானத்தில் மட்டுமே வருமான வரியாக அரசுக்கு வரி செலுத்துகிறான் ஆனால் ஒவ்வொரு ஒவ்வொரு சாமான்யனும் உன்னை போல என்னை போல ஒவ்வொருவனும் உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி, கல்வி கூட நம் காசு தான் வரியாக போகின்றது. சராசரியாக ஒவ்வொரு பொருளுக்கும் 40%க்கும் அதிகமான அளவு உற்பத்தி விலையை விட வரியாக நாம் கொடுக்குறோம்.

நாம் வரி கட்ட மாட்டோம்னு சொல்லலையே, அப்படி மக்களை காக்க வேண்டிய அரசு தன் நிதி நெருக்கடியை சமாளிக்க மக்களுக்கு விசம் விற்பதை எப்படி அனுமதிப்பது. அரசு மருத்துவமனையில் மது அடிமைகள் நாய் போல் பார்க்க படுகிறார். திருந்தலாம்னு போறவன் கூட ரெண்டு நாளில் இதுக்கு குடிச்சே சாவலாம்னு ஓடியாறான்.

டாஸ்மாக்கை மூடினால் கள்ளசாரயம் வருமாம். இப்ப மட்டும் என்ன நொள்ளசாராயம் விக்குதாம். சட்டபஞ்சாயத்து அமைப்பு மதுவின் தரத்தை சோதிடவேண்டும் என கேட்டத்தற்கு அரசு மறுத்துவிட்டது பின் அவர்கள் கோர்ட் அனுமதியுடன் சோதித்து பார்த்ததில் நிர்ணயிக்கபட்ட அளவை விட ஆல்ஹகால் அதிகமாக இருந்தது. அதற்கு அவர்கள் தடை கோரியும் அதே சரக்கு வித்துகிட்டு தான் இருக்கு.

இங்கே பெரும் பணமுதலைகள் மேலும் பண டைனோசர்கள் ஆகவும் ஏழைகளும், சாமானயர்களும் நசுங்கி நாசமாக போகவும் தான் அரசு இயங்கி கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கை ஒரேடியாக மூட முடியாது தான். கடைகளை குறைக்கலாமே. நேரத்தை குறைக்கலாமே. எதோ ஒரு நல்ல மனுசன் ஈரோட்டுக்கு எஸ்.பியா வந்ததால் விடியகாலையில் சரக்கு கிடைப்பதில்லை. முன்னெல்லாம் காலை ஆறுமணிக்கே பார் திறந்து கிடக்கும். இப்படியான போதை அடிமைகளை உருவாக்கி என்ன செய்ய கனவு கண்டுகொண்டிருக்கிறது. இதுதான் சிறப்பு பொருளாதாரமா?

நிச்சயம் இந்த பதிவு அதிமுக அடிமைகளுக்கு ..த்துல சூட்டுகோல் சொருகுன மாதிரி தான் இருக்கும். நீங்களெல்லாம் நேர்த்து விட்ட எருமைகள், கண்ணை கட்டிய கழுதைகள். இது உங்களாக எழுதப்பட்டதல்ல. சமூகம்பால் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாமான்யனுக்காகவும் எழுதப்பட்டது!

!

Blog Widget by LinkWithin