மதமும் - பாலியல் தேர்வும்!

சமீபத்தில் அமெரிக்காவில் குடும்ப சம்மத்துடன் ஓரினைசேர்க்கை விருப்ப ஆண்கள் இருவர் வைதீக!? முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர்.
சில வீரதீர புஜபல பராக்கிரம ஆண்மகன்கள் அவர்கள் புகைபடத்தை வெளியிட்டுனர் கேவலமான சில வசனத்துடன். சில மத அடைப்படைவாதிகள் அவர்கள் சமூகவீரோதிகள் எனவும் வாழ தகுதியற்றவர்கள் என்றும் பதிவிட்டு இருந்தனர்.

ஒரு மனிதனுக்கு யாரை பிடிக்கவேண்டும் என்பது அவனது உரிமை. ஆனால் ஓரிணைச்சேர்க்கை விருப்பம் ஒரு குறைபாடாகவே சமூகம் பார்க்கிறது. தன்பால் ஈர்ப்பு ஆணுக்கு- ஆண் குறைபாடகவும். எதிர்பால் ஈர்ப்பு ஆணுக்கு-பெண் சரியானதாகவும் சமூகம் நினைக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒன்றின் மேல் ஈர்ப்பு இல்லையென்றால் அதை குறைபாடாக நினைக்க வேண்டியதில்லை. எனக்கு கூடத்தான் உலகின் பெரும்பாலோர்க்கு பிடித்த காபி,டீ பிடிக்காது. அதையும் குறைபாடு என்பீர்களா?

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் ஓரினைசேர்க்கைக்கு இருக்கும் தடையை  நீக்ககோரி ஒரு பொதுநல வழக்கு போடப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி இவ்வாறு கூறுகிறார்.

உலகின் எந்த மதமும் ஓரினைசேர்க்கையை ஆதரிக்கவில்லை அதனால் தடையை நீக்க்முடியாது.

பாலியல் தேர்வுக்கு ஏன் மதம் தலைப்பில் வந்தது என்பதற்கான அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். ஒருதனி மனிதனின் உரிமைகள் மதத்தின் பேரால் மறுக்கப்படுகிறது. ஆம் அனைத்து மதத்திலும் ஓரினைசேர்க்கை மறுக்கப்பட்டுளது தான். அப்படியானால் அந்த மதம் உருவான காலத்திலும் ஓரினைசேர்க்கை இருந்தது என்பது உண்மையாகிறது தானே. ஆனால் வரலாறு பெரும்பான்மை மத தொடக்கத்தின் முன்னரே ஓரினைசேர்க்கை ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்று என்கிறது.

கிரேக்க நாகரீகத்தில் பெண், குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே, அவனது சந்தோசங்களை மற்றொரு ஆணுடன் பகிர்ந்து கொள்வதை பெருமையாக கருதினான். மாவீரன் என்று அழைக்கப்படும் அலக்ஸாண்டர் மற்றும் அவரது குரு அரிஸ்டாட்டில் முதற்கொண்டு ஓரினைசேர்க்கை பிரியர்கள் தான்.

ஓரினைசேர்க்கைக்கும் பரிணாமத்தின் இயற்கை தேர்வுக்கும் தொடர்பு இருக்கின்றது. ஆனால் பரிமாணம் என்று வந்துவிட்டாலே மதவாதிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. இப்பொழுது இருப்பது போல் உள்ளது உள்ளபடியே.
நாம் பரிணாமனத்தின் பல சான்றுகளை எடுத்து வைத்தாலும் இப்போது இருக்கும் குரங்கு ஏன் குட்டைபாவாடை போடல என்பார்கள்.

என்னிடம் தொடர்சியாக வாதிடும் சில நண்பர்களிடம் மாற்றங்களை உணர்கிறேன். இந்துமத நண்பர்கள் “இது தான் கடவுள்னு ஏன் சொல்ற, நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு” என ஒதுக்கி கொள்கிறனர். எனது கிறிஸ்துவ நண்பன் ஒருபடி மேலே போய், உலகம் கடவுளால் தான் படைக்கப்பட்டது. பைபிளில் இருக்கும் ஆதாம், ஏவாள் தான் நீ சொல்லும் ஆரம்ப நுண்ணுயிர்கள். அவை தான் பரிணமிச்சு நம்மை மாதிரி ஆனது, இப்போதான் யாரோ அதை மனிதர்கள்னு மாத்திட்டாங்க என்கிறான் :) . இந்த பதிவுக்கு வரும் பெரும்பான்மை எதிர்ப்பில் இருந்து தெரியும். யார் என்னும் பழமைவாதத்தை பிடித்து தொங்குகிறார்கள் என்று :)

ஜுராஸிக்பார்க் படத்தில் வயதான விஞ்ஞானி-ரிச்சர்ட் அண்டன்ப்ரோ(ஸ்பீல்பெர்க்கின் ET படத்திற்கு கிடைக்கவேண்டிய ஆஸ்கார்களை தான் இயக்கிய காந்தி படத்திற்கு அள்ளியவர்) சொல்லுவார். இங்கே எந்த பிரச்சனையும் வராது ஏனென்றால் இங்கே இருக்கும் டைனோசர்கள் அனைத்தும் பெண்பாலாகவே படைத்திருக்கிறோம் என்று. ஆனால் காட்டிற்குள் முட்டை கண்டுபிடிப்பார்கள். ஆப்பிரிக்க தவளை இனம் ஒன்று தேவையான பொழுது பால் மாறும் என்று நாயகன் கூறுவான்.

ஆப்பிரிக்க தவளை மட்டுமல்ல, அம்மாதிரியான இருபால் உயிரிகள் உலகில் நிறைய உண்டு. ஒரே உடம்பில் ஆண், பெண் இரண்டு உறுப்புகளையும் கொண்ட மனிதர்கள் பிறந்ததுண்டு. ஆண்ட்ரோஜோன், ஈஸ்ரோஜோன் சுரப்பு குறைப்பாட்டால் பெண்களுக்கு மீசை முளைப்பதையும், ஆண்களுக்கு மார்பகங்கள் பெரியாவதையும் பார்த்திருக்கிறோம்.

கடவுள் அனைத்தும் ஜோடி ஜோடியாக படைத்தான் என்ற மதவாதத்தின் அடிபடை கூற்றை உடைக்கக்கூடியது இருபால் உயிர்கள். இந்தோசினியாவில் வாழும் கொமோடோ டிராகன் என்ற பல்லியினம் ஆண் துணை இல்லாமலேயே முட்டையிடும். ஆணின் குரோம்சோம்களுக்கு பதில் பெண் முட்டையே தனது குரோம்சோம்களை இரட்டிப்பாக்கி விடும். ஆகவே முட்டையில் இருந்து வரும் குட்டிகள் அனைத்தும் ஆண்களாகவே இருக்கும்.

மனித இனத்திலும் ஆண் துணையில்லாமல் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவள் உடலில் இருக்கும் அணுவை கொண்டே குளோனிங் மூலம் மற்றொரு உயிரை படைக்கமுடியும். இதுவல்லாது ஆப்பிரிக்க தவளையை போல் தன் தேவையின் தன் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் மீன் இனம் ஒன்று உண்டு. Finding Nimo படத்தில் வரும் மீன் தான் அது. அதை பார்த்ததில்லை என்றால் trisha Brest tatto என கூகுளிட்டு பார்க்கனும்.

மண்புழு ஒரு இருபாலின உயிரி. தன் உடம்பிலேயே விந்தையும், கருமுட்டையும் கொண்டுள்ளது. இருபாலின உயிர்களில் விநோதமானது கடல் நத்தைகளில் ஒருவகை. அவற்றின் உடலில் முன்னும் பின்னும் பாலின உறுப்புகள் இருக்கின்றன. சுமார் பத்து நத்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோர்த்து பின் வட்டமாக இணைந்து உடலுறது கொள்ளும்.

இதுபோல் இன்னும் கண்டுபிடிக்காத இருபாலின உயிரிகள் நிறைய இருக்கலாம். ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போல் பல விஞ்ஞானிகள் சொல்வது கூட வேற்றுகிரகத்தில் ஆண்,பெண் தேவையற்ற உயிரினங்கள் இருக்கலாம் என்று தான். தன் தேவையின் போது அவை இனப்பெருக்கம் செய்துக்கொள்ளும்.

கடவுள் என்ற பதத்தின் மாபெரும் தோல்விக்கு முக்கிய சான்று இருபாலின உயிரிகள்!

2 வாங்கிகட்டி கொண்டது:

tamilan said...

கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!” இந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது.

இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.

இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.

கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? பாகம் 1.


கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? பாகம் 2.

கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? பாகம் 3.


.

தியாகு திருப்பூர் said...

பாலியல் தேர்வு என்பது மதம் மட்டுமல்ல சமூகம் மரபு சாதி அனைத்தின் அடிப்படையிலும் ஆனது

!

Blog Widget by LinkWithin