தேர்தல்-2014

டிஸ்கி: இவை முழுக்க முழுக்க என்னுயட சொந்தக்கருத்துகளே

இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் சில முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிட்டது சிறப்பம்சம். அவர்களுடய வாக்கு வங்கி சதவிகத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஆனாலும் முடிவுகள் பலருக்கு பெருத்த ஏமாற்றமே!

காங்கிரஸ்:-
           தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இக்கட்சி மண்ணைக்கவ்வியது சிலருக்கு அதிர்ச்சி, பலருக்கு ஆனந்தம். இக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒவ்வொரு முறையும் விலைவாசி ஏற்றத்திற்கு மக்களின் வாங்கும் சக்தி அதிகமானதே காரணம் என்றாரே தவிர தங்களது ”கை”யாலாகதனத்தை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசாவின் வாக்குமூலம் வரும் வரை ராசா மட்டுமே குற்றவாளியாக பார்க்கக்பட்டார், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் நன்கு தெரியும் என்ன நடந்தது என அவரளித்த வாக்குமூலம் காங்கிரஸின் எந்த பிரச்சாரத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நிலக்கரி ஊழல் மற்றும் அதன் கோப்புகள் காணாமல் போனது, காமென்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்த ஊழல் என இவர்கள் மேல் குற்றசாட்டுகள் இருந்தாலும் நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை என்ற இவர்களது பிரச்சாரத்திற்கு மக்கள் கொடுத்த பரிசே படுதோல்வி எனச்சொல்லலாம்.

திமுக:-
          இவர்கள் தோல்விக்கு முதல் காரணம் உட்கட்சி பூசல் தான் என்றால் பாவம் அவர்களாலே ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியே தெரியாதேயொழிய காங்கிரஸிற்கு சமமாக திமுகவிலும் கோஷ்டிகள் இருக்கின்றன. பல வேட்பாளர்களுக்கு அவர்கள் ஆதரவாளர்களை தவிர பிறர் பிரச்சாரம் செய்யவில்லை என்பதும் இவர்கள் தோற்க காரணம்.

எதிர்கட்சியான அதிமுக மீது குற்றசாட்டுகள் வைக்க பல காரணிகள் இருந்தன, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மற்றும் சொத்துகுவிப்பு வழக்கில் தொடர் வாய்தா என, ஆகினும் திமுகவின் பிரச்சாரம் எடுபடாமல் போன காரணம். ஈழதமிழர்கள் விசயத்திலும், தமிழக மீனவர்கள் விசயத்திலும் திமுக செய்த துரோகம் மற்றும் நாடகம்.

பாஜக:-
           அகில இந்திய அளவில் தனித்து ஆட்சியமைக்க இவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடம் மட்டுமே வெற்றியடைய காரணம் தமிழகத்தில் இவர்கள் வைத்திருந்த கோமாளி கூட்டணியே காரணம்.

தேர்தலின் போது கேப்டன் டீவியின் டீ.ஆர்.பி. ரேட்டிங் எகிறியது. அனைத்தும் கேப்டனின் கோமாளித்தனங்களை பார்க்கவேயன்றி வேறொன்றுமில்லை. தேமுதிகவிற்கும், பாமகவிற்கும் தொகுதி பங்கீட்டில் இருந்த கசப்புணர்ச்சி தேர்தலிலும் தெரிந்தது. இருவரும் பரஸ்பரம் கூட்டணிக்காக போனாபோகுதுன்னு ஓட்டுக்கேட்டார்களேயொழிய யாரிடமும் அர்பணிப்பு இல்லை. மேலும் மோடி அலை என்பது தமிழகத்தில் எடுபடப்போவதில்லை என்பது காரணம். அதற்கு முற்போக்கு சிந்தனைவாதிகளின் சீரிய பிரச்சாரம் பயன்பட்டது

பாமக:-
           கூட்டணி வைத்தே அவர்களால் ஒரு சீட் தான் வர முடிந்தது. அதுவும் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி மட்டுமே. மேலும் சாதி அரசியல் செய்ய சாதகமாக இருந்த தர்மபுரி தொகுதியில் மட்டும். மேலும் அவர்கள் சாதி அரசியல் மட்டுமே செய்வோம் என சொல்லிக்கொண்டிருந்தால் இனி வரும் தேர்தலிலும் அவர்கள் நிலமை மோசமடைய வாய்ப்புள்ளது.

மதிமுக:-
          பேச்சுதிறன் இருந்தாலும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பவர் என்ற முத்திரை இவர் மீது குத்தப்பட்டுள்ளது, இவர் கட்சியை பலப்படுத்தாமல் யார் தோளிலாவது யாரிக்கொண்டு சவாரி செய்து கொண்டிருப்பது இவரது கட்சிக்கு தான் ஆபத்து.

தேமுதிக:-
    ஜோக்கர் பாய்ஸ்

ஆம் ஆத்மி:-
          பரவலாக மக்களிடயே எங்கள் கட்சி போய் சேரவில்லை என்ற ஞாநியின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிதாக பிரச்சாரத்தில் இடம்பெறாத நோட்டா அளவு கூட ஆம் ஆத்மிக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. இவர்களது அனுபவமின்மை ஒரு காரணம். என்ன தான் இவர்களது கொள்கை என அவர்களுக்கே தெரியாதது இன்னொரு காரணம்.

அதிமுக:-
    தெரியாத தேவதையை விட தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ மேல் என்பதற்கான சான்று அதிமுகவின் 37 இடங்கள். கட்டண உயர்வு வந்த அளவு நலத்திட்டங்கள் வரவில்லை. இன்னும் இரண்டு வருட ஆட்சி அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் வாய்ப்பு, பயன்படுத்தப்படவில்லை என்றால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பரிசளிப்பார்கள்.

***

மத/கடவுள் மறுப்பாளனாகிய நான் ஆச்சர்யப்பட்ட விசயம் ஜம்மு-காஷ்மீரில் பாஜக 3 இடம், ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக அனைத்து இடங்களும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இந்த்துதுவாவை முன்னிறுத்தினால் அடுத்த தேர்தலிலேயே பாஜக மூன்றாமிடம் செல்லக்கூடும். மக்கள் விரும்புவது அமைதியை தான். நாங்க தான் பெருசு என்ற கர்வத்தை அல்ல!

உங்களுக்கு தெரிந்த காரணங்களை கமெண்ட்டில் சொல்லலாம்

      

5 வாங்கிகட்டி கொண்டது:

RAVI said...

காரணம்னு என்னத்தச் சொல்ல.பக்கிக நான் கணிச்ச கணிப்பெல்லாம் பொய்யாக்கிடுச்சுக :)

குட்டிபிசாசு said...

சரியாத்தான் சொல்லி இருக்கிங்க.

போகப்போகத்தான் தெரியும். எனக்குத் தெரிந்து பாஜக எதிர்கட்சியாக இருக்கும்போது இந்துத்வா போக்கைக் கடைபிடிக்கும். ஆளும்கட்சியாக இருந்தால், முடிந்தவரை அடக்கி வாசிப்பார்கள். மற்றபடி பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளில் காங்கிரஸ் போலவே நடந்துகொள்ளும். எதுவும் பொறுத்திருந்துதான் சொல்ல இயலும்.

ராவணன் said...

பாஜக தங்கள் தலைவரை இத்தனை நாள் சந்தைப்படுத்தவில்லை. இப்போது மோடியை முன்னிறுத்தினார்கள்.

…தமிழ் நாட்டில் திமுகவிற்கு கருணாநிதி மட்டுமே தலைவர். இசுடாலின் அந்த இடத்திற்குப் பொருத்தமானவர் இல்லை என்பதே தமிழக தீர்ப்பு.

…தமிழக பாஜக கூட்டணியில் சரியான தலைமை இல்லை.

nellai அண்ணாச்சி said...

மக்கள் விரும்புவது அமைதியை தான். நாங்க தான் பெருசு என்ற கர்வத்தை அல்ல!

சீனு said...

கிருஸ்துவர்கள் மெஜாரிட்டியாக உள்ள வடகிழக்கில் பாஜக வென்றது கூட பங்களாதேஷ் ஊடுருவல் எந்த அளவுக்கு வீரியம் உள்ள பிரச்சினை என்றே காட்டுகிறது.

அப்ப, இதைப்பற்றி எந்த அளவு மற்ற கட்சிகள் பொய் சொல்லியிருக்கின்றன என்று கணிக்கலாம்...

!

Blog Widget by LinkWithin