நான் ஏன் சாதியத்தை எதிர்க்கிறேன்!

எவ்வளவோ காரணம் இருந்தாலும் இது ஒரு உதாரணத்திற்காக.

 நான் பிறந்தது மதுரையாக இருந்தாலும் அப்பாவின் சொந்த ஊர் தேனிக்கும், உசிலம்பட்டிக்கும் நடுவில் இருக்கும் கன்னியம்பட்டி. சின்ன வயசுல மூணுசாமின்னு குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோட கூட்டிட்டு போவாரு, வளந்தபிறகு நான் போறதில்ல.

அங்கே தேவர் சாதியினர் தான் ஆதிக்கம், வேறு எந்த சாதிக்கும் இல்லாத அளவு ஆதிக்கதிமிர் நிறைந்தவர்கள் அவர்கள். என் கண்ணால் பார்த்திருக்கிறேன். தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பணிந்து வர அனுமதியில்லை. தற்பொழுது கொஞ்சம் மாறியிருந்தாலும் தமிழகத்தில் நடந்த சாதி மோதலில் முதலிடத்தில் இருப்பவர்கள் தேவர் சாதியினராகத்தான் இருக்கும்.

இப்ப நான் எடுத்துக்கப்போற விசயம் வேற. காங்கிரஸ் தமிழ் இனத்திற்கு எவ்வளவு துரோகம் செய்துள்ளது என காங்கிரஸ் கட்சிக்காரங்க மனசாட்சிக்கே தெரியும். அதுவல்லாது 2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த், நிலக்கரி என அவர்கள் ஊழல் செய்து நாட்டை குட்டிச்சுவராக்கியதும் நாம் அறிவோம்.



இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி பகுதியில் திமுக, அதிமுக, மதிமுக என அனைவரும் தேவர் சாதியை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் இஸ்லாமியர்.

அப்பகுதியில் தாழ்த்தபட்டவர்கள் 15% அவர்கள் ஓட்டு நிச்சயம் தேவர் சாதியினருக்கு போகாது. இஸ்லாமியர் 10% அவர்கள் வாக்கும் மதவாத சக்திக்கு எதிராக என்று காங்கிரஸிற்கே வாய்ப்பு, ஒண்றையனா பெறாத இந்த புண்ணாக்கு சாதியால தமிழகத்தில் இருந்து ஒரு காங்கிரஸ் எம் பி போனா எவ்ளோ கடுப்பா இருக்கும்.

இப்படி சாதி வேட்பாளர்களா பார்த்து ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்தி சாதியத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டிய கட்சிகளே அதை வைத்து அரசியல் செய்யும் பொழுது எப்படி நாடு உருப்படும். தமிழகம் சாதிய ரீதியாக பிரிந்து கிடக்காமல் ஒன்றாக இருந்தால் முல்லை பெரியார் அணையில் நம் உரிமை மறுக்கப்பட்டிருக்குமா?. காவிரி நீரில் நம் பங்கு மறுக்கப்பட்டிருக்குமா?

சக மனிதனின் உயிரை பறித்ததை விட இந்த சாதி உங்களுக்கு என்ன தான் செய்திருக்கிறது. தயவுசெய்து சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்

11 வாங்கிகட்டி கொண்டது:

வரவனையான் said...

அருமை ஃப்ரோ !

வரவனையான் said...

அருமை ஃப்ரோ !

SANKAR said...

அப்போ தனி தொகுதிகளில் தலித் அல்லாத வாக்காளர்கள் யாருக்கு ஒட்டு போடுகிறார்கள்?

SANKAR said...

அப்போ தனி தொகுதிகளில் தலித் அல்லாத வாக்காளர்கள் யாருக்கு ஒட்டு போடுகிறார்கள்? சங்கர் திருநெல்வேலி

SANKAR said...

அப்போ தனி தொகுதிகளில் தலித் அல்லாத வாக்காளர்கள் யாருக்கு ஒட்டு போடுகிறார்கள்? சங்கர் திருநெல்வேலி

SANKAR said...

அப்போ தனி தொகுதிகளில் தலித் அல்லாத வாக்காளர்கள் யாருக்கு ஒட்டு போடுகிறார்கள்?

வால்பையன் said...

@ சங்கர்

பல்லாண்டுகாலமாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த சமூகம் சமநிலைக்கு வர வேண்டும் என்று தான் அவர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் நான் உயர்ந்த சாதி என்னும் திமிர் உள்ளவர்கள் வாழும் வரையிலும் அவர்களுக்கான இடஒதுக்கீடு நிச்சயம் அவசியம்

Gokul said...

//அங்கே தேவர் சாதியினர் தான் ஆதிக்கம் //
இங்கே தேவர் சாதியினர் எண்ணிக்கை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. அவர்கள் எண்ணிக்கையிலும் அதிகம் என்ற புரிதலில் இந்த கேள்வி
அப்போ தேவர் சாதி ஓட்டு இஸ்லாமிய வேட்பாளராக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு போகுமா? அப்படி போகாவிட்டால் , காங்கிரஸ் ஜெயிக்க முடியுமா?

Gokul said...

//அங்கே தேவர் சாதியினர் தான் ஆதிக்கம் //
இங்கே தேவர் சாதியினர் எண்ணிக்கை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. அவர்கள் எண்ணிக்கையிலும் அதிகம் என்ற புரிதலில் இந்த கேள்வி
அப்போ தேவர் சாதி ஓட்டு இஸ்லாமிய வேட்பாளராக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு போகுமா? அப்படி போகாவிட்டால் , காங்கிரஸ் ஜெயிக்க முடியுமா?

Unknown said...

காலம் காலமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் வேதனையை அவர்கள் மனத்திலிருந்துதான் பார்க்கமுடியும். கிடைத்துள்ள வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி முன்னேறவிடாமல் அவர்களுக்குள்ளேயே உள்ள சிலர் அதைத் தடை செய்ய முயல்கிறார்கள். ஒருவர் நான் தாழ்த்தப்பட்டவன் என்றால் நீ தாழ்த்தப்பட்டவன் என்றுதானே மற்றவர்களும் கூறுவார்கள். அரசியலை உள்ளே நுழைய விடாமல் அமைதியாக தங்களுக்குள்ளே ஒற்றுமையை வளர்த்துக்கொண்டு தங்களது அறிவாலும் கல்வியாலும் நேர்மையாலும் முன்னேற முயலலாமே.

கோபாலன்

ராவணன் said...

தாழ்த்தப்பட்டவர் 15%, இஸ்லாமியர் 10% மீதி இருக்கும் 75% யார்? அங்கேதான் தேர்தல் கணக்கு இருக்கு. எண்ணிக்கையின் அடிப்படையில் நட க்கும் தேர்தல்.

…இந்தியன்...தமிழன் என்ற அடையாளம் சரியா?

…சாதீய அடையாளம் மட்டும் தவறா?
…இந்தியாவில் சாதியை ஒழிக்கவேண்டுமென்றால் இந்தியாவையே அழிக்கவேண்டும்.

!

Blog Widget by LinkWithin