யாருக்கு உங்கள் ஓட்டு?

பொதுவா கட்சிகளோட கூட்டணி அந்த கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி அடிப்படையிலயே இருக்கும். கொள்கை கருப்பட்டியெல்லாம் சில நேரம் ரெண்டாம் பட்சம் தான், இந்த தேர்தல் அதுக்கு நல்லதொரு உதாரணம்.

தமிழகத்தின் ஆளுமை கட்சிகள்னா அது திமுக, அதிமுகன்னு ரெண்டும் தான் இது வரைக்கும் இருக்குது. அதுல உள்நோக்கி பார்த்தோம்னா 35 வயசுக்கு மேல இருக்குறவங்க தான் அந்த கட்சியோட உண்மையான வாக்கு வங்கி. கடந்த பத்து வருடத்திற்குள் கட்சியில் சேர்ந்தவங்க அவ்வளவு கொள்கைப்பிடிப்போட இருக்க மாட்டாங்க. பிரச்சாரத்துக்கே போனாலும் ஓட்டை மாத்தி குத்திட்டு போயிடுவான்

பெரிய கட்சிக்கே அந்த நிலமைன்னா பாமக, மதிமுக, தேமுதிக பத்தி சொல்லவே வேணாம். அவுங்களும் கட்சி உறுப்பினர் அட்டை இருந்தாலும் ஓட்டை அந்த கட்சிக்கு தான் போடுவாங்கன்னு சொல்ல முடியாது.

இது சாதாரண் விசயம் தானே, மேலும் அது அவுங்களோட உரிமைன்னு நாம பேசலாம். ஆனா கொஞ்சம் கூர்நோக்கி பார்த்தோம்னா மாற்றி விழும் ஒவ்வொரு ஓட்டும் பொது புத்தி அடிப்படையில் நான் ஜெயிக்கிறவன் பக்கம் நிக்கிறேன்னு போடும் ஓட்டு. அதுனால அவனுக்கு யாதொரு பயனும் இல்லைன்னு லேட்டா புரிஞ்சாலும் அடுத்த தேர்தல்லயும் அதே பொது புத்திக்குள்ள போயிருவான்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கு, ஒரு பக்கம் கூட்டம் அதிகமாகும் பொழுது கோழைகள் மிகச்சர்வ சாதாரணமாக தங்களை சமரசம் செய்து கொள்கிறார்கள். கோழைகள் என்ற வார்த்தை கொஞ்சம் அதிக்கபடிதான். இயலாதவர்கள்னு வச்சுக்கோங்க.



நாம எதுக்காக ஓட்டுப்போடுறோம்? யாரோ ஒருத்தர் மேல போய் உட்கார்ந்துகிட்டு நல்லா அனுபவிக்கட்டும்னா, உங்களுக்கும், உங்களை சார்ந்த சமூகத்திற்கும் நல்லது பண்ணனும்னு தானே, அப்போ நமக்காக பாராளுமன்றத்தில் பேசக்கூடியவர்களால் தானே அது சாத்தியமாகும்

சாதிகாரருக்கு ஓட்டுப்போடுவிங்களோ, மத அபிமானத்தில் ஓட்டுப்போடுவிங்களோ, உங்களுக்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு ஓட்டுப்போடுங்க. ஓட்டு போடாம இருக்குறதை விட தவறான ஓட்டு பெரிய தண்டனை கொடுக்கும். அழகிரி, ரித்தீஷ், ராமராஜன் மாதிரியான ஆட்களை செலிபிரட்டி மோகத்தில் ஓட்டுபோட்டு எண்ணத்த கண்டிங்க? வாயை திறந்து பேசுனாங்களா நாடாளுமன்றத்தில்?

உங்களுடய ஒவ்வொரு ஓட்டும் சமுதாய நலன் கருதி இருக்க வேண்டும். மாற்று கட்சியா, மாற்று சாதியா, மாற்று மதமான்னு பார்க்காதிங்க. நம் சமுதாயத்திற்கு நல்லது செய்வாங்களா, நமக்காக நாடாளுமன்றத்தில் பேசுவாங்களான்னு யோசிச்சு உங்க ஓட்டை கொடுங்கள்

சிறு தவறும் ஐந்து வருடத்திற்கான தண்டனையை அளிக்கும்!

3 வாங்கிகட்டி கொண்டது:

sultangulam@blogspot.com said...

குஜராத்தில் தொடரும் கொடுமைகள்!

இதற்கு வைகோ, மருத்துவர் ஐயா, சகோ.விஜயகாந்த் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ஏ! ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட என் இரத்தங்களே! இதற்கு பிறகும் பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்கப் போகிறீர்களா??

தேனீர்க் கடைகளில் தலித் மக்களுக்கு தனிக் குவளை. அதற்குப் பெயர் ‘இராம பாத்திரம்’.

உயர்சாதியினர் கடைகளில் பொருள் வாங்க தடை

அவர்கள் நடத்தும் பேருந்துகளில் பயணிக்கதடை

மதிய உணவுத் திட்டத்தில் பிற ஜாதிக்குழந்தைகளுடன் இணைந்து உணவருந்ததடை என தடைகள் நீடிக்கின்றன.

ஆமதாபாத் போன்ற நகரங்களிலேயே ‘தலித்’ பிரிவினருக்கு வீட்டுக்குடியிருப்புகள் தனியாகவே அமைக்கப்பட்டுள்ளன. அய்.ஏ.எஸ். போன்ற உயர்
அதிகாரிகள்கூட இந்தக் குடியிருப்புகளில்தான் வாழ
வேண்டும்.

ஆமதாபாத் நகரத்தில் மட்டும் இதேபோல் 300
குடியிருப்பு காலனிகள் உள்ளன.
- Engr Sulthan @ fb

RAVI said...

//சிறு தவறும் ஐந்து வருடத்திற்கான தண்டனையை அளிக்கும்!// - அப்ப மக்கள் திருந்தீருவாங்களா பாஸ் :)

வால்பையன் said...

திரும்பவும் அதே தப்பை தான்னா செய்வாங்க.

!

Blog Widget by LinkWithin