இரண்டாம் உலகம் பார்த்த பொழுது இந்த மாதிரி கதையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு மண்டைக்குள் உறுத்திகிட்டே இருந்தது. கதையின் மையகளம் பேரலல் யூனிவர்ஸ்(http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction) ) ஜெட்லி நடிச்ச தி ஒன் என்ற படம் இதுக்கு ஒரு முன்னோடியா இருந்துச்சுன்னு சொல்லலாம், அதன் பின் வந்த ஃபேண்டசி படங்களை விட oz the great and powerful னு ஒரு படம் எனக்கு இரண்டாம் உலகத்தோடு நிறைய ஒத்து போற மாதிரி தெரிஞ்சது.
ஒரு படைப்பு என்பது எதோ ஒரு தாக்கத்தின் விளைவாகவே உருவாகிறது அது சினிமாவாக இருந்தாலும் அல்லது நாவலாக இருந்தாலும், சென்னை 600028 வந்த போது அந்த படமும் ஒரு தாக்கத்தால் உருவானது தான் என எழுதியிருந்தேன், http://valpaiyan.blogspot.in/2008/06/blog-post_24.html அதில் ஃபுட்பால், இங்கே கிரிக்கெட். ஒரு சில மாற்றங்கள் அல்லது நம் சூழலுக்கு தேவையான மசாலா சேர்த்து கலப்பதால் அதன் மூலம் அறியப்படாமல் போய் விடுமா என்ன?
மங்காத்தா, கேயாஸ் என்ற ஆங்கில படத்தின் தளுவல். ஆரம்பம், டைஹார்ட் 4 மற்றும் ஸ்வார்ட் ஃபிஷ் படத்தின் தாக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இரண்டாம் உலகம் படத்தில் என்ன தாக்கம் இருந்திருக்கும் என யோசிக்கையில் தோன்றியதை பகிர்கிறேன்.
oz the great and powerful
சர்க்கஸில் மேஜிக்மேனாக இருப்பவன் அங்கே நடக்கும் ஒரு சண்டையில் காற்று பலூனில் ஏறி தப்பிக்கிறான், அது ஒரு சூறாவளி காற்றில் சிக்குகிறது, அப்பொழுது அவன் வேண்டிக்கொள்கிறேன் தன்னை காப்பாற்றும்படி, சூறாவளி மறைகிறது ஆனால் அவன் இறங்குவதோ பூமி அல்ல.(இரண்டாம் உலகம்) அங்கு ஏற்கனவே இருந்த ராஜா சொன்னது போல் தம் உலகை காக்க வந்த ரட்சகனாக பார்க்கப்படுகிறான்.
சின்ன சின்ன விசயங்களில் லாஜிக்காக அவனது தேவை அங்கே உணர்த்தப்படுகிறது, குரங்கை சிங்கத்திடமிருந்து காப்பாற்ற வண்ணகுண்டை வீசி அதனை பயமுறுத்துதல், உயிருள்ள பீங்கான் பொம்மையின் உடைந்த காலை பசை கொண்டு ஒட்டி நம்பிக்கை பெறுதல் போன்றவை மிக முக்கியமான/லாஜிக்கான காட்சிகள். அந்த உலகில் இல்லாதவற்றை, இவனுக்கு தெரிந்தவற்றை கொண்டு அங்கே முக்கியத்துவம் பெறுகிறான். இறுதியில் வென்று நாட்டு மக்களுக்கு விடுதலை அளிக்கிறான்!
இரண்டாம் உலகில் பூமி ஆர்யா விரல் சூப்பும் பாப்பா மாதிரி முதலில் வருகிறார் பின் கோவா சென்று புரபசரை சைட் அடிக்கிறார், மற்ற பெண்களுடன் நெருக்கமாக பழகி அனுஷ்காவின் பொஸிசிவ்நெஸ்ஸை கிளரிவிடுகிறார், பின் அனுஷாகாவுடன் ரொமான்ஸ் பண்ணுகிறார், பின் அனுஷ்கா செத்து போனதும் தாடி வளர்கிறார்.
வேறு உலக ஆர்யா, கத்தி சுத்தத்தெரியாமல் தளபதி/தந்தையிடம் திட்டு வாங்குகிறார். அனுஷ்காவிடம் செமத்தியா உதை வாங்குகிறார் ஆனால் அனுஷ்காவுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் பயங்கர மிருகத்தை வேட்டையாடுகிறார். ட்ரங்கன் மங்கி சண்டை போடுகிறார். எதிரி நாட்டிற்குள்ளே அனைவரையும் வெட்டி சாய்க்கிறார், சுச்சு போட்டா வீரம் வர்ற மாதிரி எதாவது செல்வராகவன் கண்டுபிடிச்சிருப்பார் போல.
காதலை கற்றுத்தர பூமி ஆர்யா அங்கே போக வேண்டியதின் கட்டாயம் எங்கேயும் இல்லை. ஆர்யா அனுஷ்காவை பார்த்ததும் பூ பூக்கிறது அதாவது காதல் அங்கே வந்து விட்டதாம். அதே பார்வையை அங்கிருக்கும் ஆர்யா பலமுறை வீசியும் பூக்களுக்கு காது கேக்கவில்லை போலும். காதல் என்பது ஒரு உணர்வு அதன் குறீயிட்டை சரியாக பயன்படுத்த தெரியாமல்
தடுமாறியிருக்கிறார் செல்வராகவன்.
கடவுளுக்கு எதை எப்போ செய்யனும்னு தெரியும் என்பது போல் ஒரு பாத்திர படைப்பு. ஆர்யாவுக்கு சாவே இல்ல போல. ஓவ்வொரு உலகமா அனுப்பிவைக்கப்படுகிறான். சரி இரண்டாம் உலகில் காதல் வந்துருச்சு பின் அதன் தாக்கம் என்ன? அங்கே காதல் வர வேண்டிய அவசியமென்ன? அங்கே ஏற்கனவே எல்லாரும் புணர்ந்து பிள்ளை பெத்துகிட்டு தானே இருக்காங்க? இந்த காதலால் அங்கே நிகழ்ந்த மாற்றம் என்னான்னு சொல்ல வேணாமா? ஒரு வேளை இரண்டாம் பாகம் வருமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
குப்பை ராஜான்னு சொல்வது சுதந்திரத்தின் அறிகுறியா? நானெல்லாம் தூக்கு மேடையில் நின்னா ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டுவேன். இந்தியாவில் கூட காங்கிரஸ், பிஜேபியை கொள்ளைகூட்டம்னு சொல்லுது, பிஜேபி காங்கிரஸை ரத்தகறை படிந்த கரங்கள்னு சொல்லுது. இதுல என்ன குறியீடு வந்து வாழுதுன்னு தெரியல. செல்வா நல்ல டைரக்டர் தான் அதுக்காக அவர் சொதப்பினதையும் தூக்கி வச்சு கொண்டாடினா பின் நல்ல சினிமாவுக்கு என்ன அர்த்தம்?
நல்ல ஒரு அருமையான கான்செப்டை மொக்க ஸ்கீர்ன்ப்ளேவால் சொதப்பியிருக்கார் செல்வா. ஒரு விமர்சனத்தில் தமிழ்சினிமா 25 வருடம் கழித்து பார்க்க வேண்டிய படத்தை இப்போதே எடுத்திருகிறார்னு படிச்சேன். இவுங்க 25 வருசமா படமே பாக்குறதில்ல போலன்னு நினைச்சிகிட்டேன் :) உலகமே ஒரே கூரையில் கீழ் வந்த பிறகு அந்த டெக்னாலஜி இல்ல. டெக்னீஷியன்ஸ் இல்லன்னு சொல்ற கதையை நம்ப முடியாது. சிஜி ஒர்க் பண்ண ஆளுங்க இருக்காங்க, உட்கார்ந்து வேலை வாங்குறதுக்கு என்ன முடைன்னு தெரியல.
ஆகமொத்தம் அவசரத்தில் பிரசவித்த குழந்தை - இரண்டாம் உலகம்
6 வாங்கிகட்டி கொண்டது:
ஏதோ மாத்தியோசி என்பாயிங்களே அப்படி இப்படி (ஏ)மாத்தி யோசிச்சிருக்கிறார்..உ.ம்.அம்மா சாமி ..பொதுவா பெண் சாமினா பெரிய குங்குமப்பொட்டு ...அகன்ற முகாம் ...காற்றில் பறக்கும் கூந்தல்...40 வயதுக்கு மேல் என்றுதான் இருப்பார்கள்....ஆனால் இதில் அழகான குட்டியை சாமின்னு...அம்மான்னு...அப்புறம் ஆளாளுக்கு கையில தூக்கிக்கிட்டு கில்மா சாமியாட்டம்
அதுதான் அண்ணேன் என்னால ஜீரணிக்க முடியல...கண்ணுக்குள்ளே நிக்குது ஆனால் ...பொதுவா ஒரு படத்தைப் பார்த்தால் ஓன்று இரண்டு நாட்களில் அதன் தாக்கம் மற்றைந்துவிடும்...கொஞ்ச பேர் பேசுவார்கள் ஆனால்..இரண்டாம் உலகம் பற்றிய பேச்சும் தாக்கமும் அவ்வளவு எளிதில் தீராது..அங்கே அவருக்கு வெற்றி
ii oo padama sir athu,
colour coloura light,
kiral viluntha film a snow fall solluranga,
pittu padathula nadikira english nayagarkal,
vari vilakku vanga PVP CINEMA panna vela 'amma' name,
koncham naachum manasachi illatha selva doctor student a anushka pottu irukkar..oru vela pora edam kulirungirathala anush kavanu therila,,,but sema aunty anushka,
oru epic kadavul ulagatha padachan, shahthan kathala padachanu solli irukkum,
ippa vera oru ulagathukku ariya shahthan aka aduthavan pondatikku love panna solli thara porar,
anga manda mela kondankira mathiri ella pakkamum light eriuthu,
egg graphics singam mattum ok,
ana singathoda mukatha patha kannadi potta selva mathiriya theriuthu...,
yeppa enna koduma sir ithu,
inimay visal mathiri selva vum sontha company arampichu padam edukka sollanum,
engada selva padathukku vanthurukkom innum ponnuka yarum ketta vartha pasuliyanu thonuchu atha nivarthi pannidar selva,
oonaii attukutti padam pathu konndu iruntha ennai ......en nanban vada tamil avatar padathukku polamnu kuppudan appiya result theyrinchu pochu enakku,,,,,,
appuram theater rompa mosam 20 rs ticket a 60 rs vikkiranu pavinga
அய்யோடா தப்பிச்சேன்டா சாமி.நன்றி :)
அய்யோடா தப்பிச்சேன்டா சாமி.நன்றி :)
//டெக்னீஷியன்ஸ் இல்லன்னு சொல்ற கதையை நம்ப முடியாது. சிஜி ஒர்க் பண்ண ஆளுங்க இருக்காங்க, உட்கார்ந்து வேலை வாங்குறதுக்கு என்ன முடைன்னு தெரியல.//
ஒருவேள, எல்லாப் படத்துக்கும் "making of FX at cheap price" அப்படின்னு டெமோ வீடியோ வெளியிட்டா அதைக் காப்பியடிச்சு நல்லா செய்வாங்களோ என்னவோ! so, தப்பு வெளிநாட்டுக்காரங்கிட்ட.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்
வலைச்சர தள இணைப்பு : சண்டே என்றால் ரெண்டு!ஹீ
Post a Comment