(நடுநிசி)நாய்களும், மனிதர்களும்!

தண்டோரா மணிஜீ அவர்களின் இந்த பதிவை படித்த பிறகு எழுத தோன்றியது!

நான் படம் பார்க்கல!(பார்ப்பதுமில்லை, பார்க்க நேரமுமில்லை)

இருந்தாலும் இங்கே கேட்கப்பட்டிருக்கும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லனும் என்ற உந்துதல் தோன்றுகிறது!

குடித்து விட்டு மலத்தை தின்பார்களா என்ற கேள்வி அது!

கலவி என்பது இயற்கை உந்துதல், குடித்து விட்டு வெறியில் தாயை நோண்டியவனும், சகோதரியை நோண்டியவனும் உண்டு, மலத்தை தின்பது அவனது மூளையில் ஏற்றப்பட்டதல்ல!

பாலியல் சுதந்திரம் இல்லாதது இந்தியாவில் பெரிய பின்னடைவு, 23 வயது என்பது காமத்தை அடக்கியே ஆள வேண்டும் என்ற காட்டாயத்தில் உள்ளதல்ல, நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்!

ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, மனிதன் ஆதியிலேயே வன்முறையால் நிரம்பப்பட்டவன், அவர்களாக களத்தில் இறங்காவிட்டாலும் மற்றவர்கள் செய்யும் அடிதடியை ரசிப்பார்க்கள், நன்றாக கவனியுங்கள் பொதுபுத்தியில் ஆக்‌ஷன் ஹீரோக்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள், அடுத்தது காதல் மன்னன்கள்!

எத்தனை பேர் சாமியார்களை(நித்தியானந்தாவுக்கு ஏகபட்ட ரசிக குஞ்சாமணிகளாம்) ரோல் மாடல்களாக ஏற்று கொண்டுள்ளார்கள்!




ஆழ்மனதில் உள்ள வன்முறை தூண்டப்பட்டால் கூடவே செக்ஸும் சேர்ந்து கொள்ளும், ஒன்றுக்கொன்று இணையானது, ஆதியில் மனிதர்கள் இணைகளை வன்முறையின் மூலமே அடைந்தார்கள், இன்றும் விலங்கினங்களுக்கு வன்முறையான போட்டி இல்லாமல் ஜோடி கிடைப்பதில்லை.

நாமனைவரும் சமூக விலங்குகள், விதிவிலக்குகளை கட்டுடைத்தல் என்ற முறையில் மாற்றுகோண பார்வையாக மட்டுமே எடுத்து கொள்ள முடியுமே தவிர அதை நியாயபடுத்துதலும், அதையே வாழ்வின் நிலையென்பதும் அடிப்படை நியாயமற்ற தர்க்கங்கள்.

ஏன் சென்சார் அனுமதி வழங்கினார்கள், ஏ சர்டிபிகேட் கொடுத்தும் மக்கள் ஏன் போய் பார்க்கிறார்கள், அவர்கள் வந்து பார்க்க்லைன்னு யார் அழுதா என்பதெல்லாம் பிரச்சனையின் மையத்தை விட்டு உட்காரும் இடத்தில் கொழுப்பு கூடி போய் ஆடி கொண்டே பேசுவது!

கற்பழிப்பு என்பது அதை செய்பவனின் பார்வையில் நியாயம், ஆனால் கற்பழிக்கபட்ட உயிர் என்ன கொண்டைகால் மயிரா!?. பாலியல் வறட்சி தான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் என்று சொன்ன சிக்மண்ட் ப்ராய்டை இங்கே நினைவு கூறுகிறேன்!

குடிபோதையில் சாதரணமாக இருப்பதை விட தைரியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பது நிச்சயம் குடிகாரர்களுக்கு தெரியும், மலத்தை தின்ன குடிகாரர்களுக்கு தைரியம் தேவையில்லை.
கற்பழிக்கவும், கொலை செய்யவும் அவனுக்கு ஏற்பட்ட உணர்வின் காரணம் குடியும் அவன் மனதில் புரையோடிய திரைப்படத்தின் காட்சிகளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சினிமா தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய/ஏற்படுத்தி கொண்டிருக்கிருக்கிற மாபெரும் ஊடகம், அத்துறையினருக்கு இருக்கும் சமூக பருப்புகளில் ஸாரி பொறுப்புகளில் சில நேரங்களில் அதிகபடியாக மறுபக்கத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சிப்பார்கள்!

ஷங்கர் படங்களை பார்க்கும் பொழுது அம்பிகள் மட்டுமே சமூக பொறுப்புள்ளவர்களாகவும், எல்லா பிரச்சனைக்கும் ஷங்கரிடம் தீர்வு இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும், திருத்துகிறேன் என்ற பெயரில் ஊடக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் ஷங்கரை விட, கெளதம் மேனன் மிக மோசமானவராக எனக்கு தெரிகிறார்!




தண்டனை என்பதே திருந்துவதற்காக தான் என்பது அனைவரும் அறிந்தது, ஆனால் நாளடைவில் அது சேடிஷத்தின் உச்சிக்கு சென்றது, ஒருவரை தண்டனைக்குள்ளாக்குவது, கொடுமை படுத்துவது மனவக்கிரத்தின் உச்சத்திற்கு சென்றது, அதனை நிரூபித்து கொண்டிருக்கிறது இன்றைய ஊடகங்கள். அதற்கு உதாரணம் நடுநிசிநாய்கள்!

இவையனைத்தும் என் கருத்துகள் மட்டுமே, நல்லதொரு உரையாடலை நோக்கி!

41 வாங்கிகட்டி கொண்டது:

hiuhiuw said...

எழுத்துப் பிழைகள் நிறைந்து இருப்பது தற்செயலா அல்லது அண்ணன் ஜாக்கி சேகர் அவர்களைக் கலாய்க்கும் உத்தியா?

யூ டூ வால்!!!

Baskar Perumal said...

ஷங்கரை பற்றிய கருத்து 100% உண்மை. சினிமாகாரர்கள் ஊருக்குதான் உபதேசம். உதாரணம்: கறுப்பு பணம் ஒழிப்பு.

Krishnan said...

//ஷங்கரை பற்றிய கருத்து 100% உண்மை. சினிமாகாரர்கள் ஊருக்குதான் உபதேசம். உதாரணம்: கறுப்பு பணம் ஒழிப்பு. - //
உண்மை

சில வருடங்களுக்கு முன்னால் ஞானி சொன்னார் "சினிமாவில் உள்ளவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் நேர்மையாய் இருப்பதில்லை என்று. " அது முழுக்க உண்மை. நல்ல விஷயங்கள் எவ்வளோவோ இருந்தும் வக்கிரங்களை காட்டி, தான் எந்த அளவு சிறப்பாக வக்கிரத்தை காட்டுகிறேன் பார் என்று நல்ல மனதுகளையும் வக்கிரபடுத்து வார்கள் .

மோனி said...

//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //

என்னய்யா இது
பைத்தியக்காரத்தனமான வாதம் ?

Ashok D said...

ஷங்கர் மேட்று உண்மைதான் வால்

Ashok D said...

//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!//

வால் இங்க முப்பது வயது வரை நகரத்தில் கல்யாணம் ஆகாத ஆண்கள் ஜாஸ்தி... என்ன கொடுமை பாருங்க... விபாச்சரத்தை கூட தடை பண்ணியிருக்காங்க.. பெண்களும் இங்க முப்பது வயதுவரை கல்யாணம் கட்டாமல் வாழ்கின்றனர்..

வால்பையன் said...

//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //

என்னய்யா இது
பைத்தியக்காரத்தனமான வாதம் ? //


செக்ஸ் என்பது இயற்கை உந்துதல், அது கிடைக்காத பட்சத்தில் வன்முறையாகவும் அதை அடைந்திருக்கக்கூடும் என்று சொல்லியிருக்கிறேன், கண்டிப்பா கற்பழிப்பேன் என்றா சொன்னேன்!

இந்தியாவில் இருக்கும் பாலியல் வறட்சியை சுட்டிகாட்டவே அந்த வார்த்தை, வன்முறையை நியாயபடுத்தும் நோக்கமல்ல!

Anonymous said...

வால் இங்க முப்பது வயது வரை நகரத்தில் கல்யாணம் ஆகாத ஆண்கள் ஜாஸ்தி... என்ன கொடுமை பாருங்க... விபாச்சரத்தை கூட தடை பண்ணியிருக்காங்க.. பெண்களும் இங்க முப்பது வயதுவரை கல்யாணம் கட்டாமல் வாழ்கின்றனர்..//
இவர்கள் சுய தொழில் செய்பவர்களோ என்னமோ..அட..வேலை பிஸியிலபணம் சம்பாதிக்க குறியா இருந்திருப்பாங்கன்னு சொல்றேன்

Anonymous said...

கண்டிப்பா கற்பழிப்பேன் என்றா சொன்னேன்!//
குறி வழக்கம் போல உங்களை நோக்கி திரும்புது தல..

Anonymous said...

என்னய்யா இது
பைத்தியக்காரத்தனமான வாதம் //
300 வரிகளில் இதை மட்டும் கப்புன்னு பிடிச்சிட்டாரய்யா

Anonymous said...

அல்லது அண்ணன் ஜாக்கி சேகர் அவர்களைக் கலாய்க்கும் உத்தியா?//
ரூட் திருப்பி விட்டாச்சு வண்டியெல்லாம் இந்த பாதையில போகட்டும் ஓவர்

Anonymous said...

எழுத்துப் பிழைகள் நிறைந்து இருப்பது தற்செயலா///
இவர் டிரேடு மார்க்கும் இதான்யா..அண்ணன் உண்மையை உரக்க சொல்லும் பதட்டத்துல டைப் பண்ணிட்டாரு இதப்போய் நோண்டுறியே

Anonymous said...

ஆழ்மனதில் உள்ள வன்முறை தூண்டப்பட்டால் கூடவே செக்ஸும் சேர்ந்து கொள்ளும்//
பத்து பேரு சேடிஸ்ட் ஆனா அதுவே படைப்பு பிதாமகன் கவுதம் மேனனுக்கு கிடைத்த வெற்றி

Anonymous said...

இதை சொல்லாமல் விட்ட பாரதிராஜா,ஷங்கர்,பாலா,மணிரத்னம், வகையறாக்கள் அரைத்த மாவை அரைக்கும்..கூறு கெட்ட.., மேட்டர் தெரியாத.., தமிழ் சினிமாவின் படைப்பு திறனை வெளிக்கொணர தெரியாத ,முற்றிலும் புது பார்வை பார்க்க தெரியாத,தமிழ் மக்களுக்கு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த தெரியாத முண்டங்கள்

Krishnan said...

வால், வோர்ட் பிரஸ் அக்கௌன்ட் மூலம் கமெண்ட் பண்ணுவதை அனுமதிக்கவும்.

Anonymous said...

//வால், வோர்ட் பிரஸ் அக்கௌன்ட் மூலம் கமெண்ட் பண்ணுவதை அனுமதிக்கவும்.//

நன்றி வால்

RAVI said...

//பாலியல் வறட்சிதான் காரணம்//

இதுக்கு சீக்கிறமா நல்ல தீர்வ சொல்லுப்பா..

MANO நாஞ்சில் மனோ said...

என்னைய்யா நடக்குது உலகத்துல....

Riyas said...

ஏதோ சொல்றிங்கன்னு புரியுது ஆனா என்ன சொல்றிங்கன்னு புரியல்ல..

Riyas said...

//நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்//

Note the point..

சின்ன வயசுலயிருந்து இருக்கா...?

Riyas said...

//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்//

வாலுக்கு என்னமோ ஆயிருச்சி.. எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.. பெண்களே வேகமாக ஓடுங்க..

Riyas said...
This comment has been removed by the author.
Ashok D said...

//குடித்து விட்டு மலத்தை தின்பார்களா என்ற கேள்வி அது!//

திங்கமுடியாது...
ஏனாக்கா அதுவரை தின்றதிலேயே டேஸ்டா தான் நாக்கு விரும்பும்..

உதாரணத்துக்கு... ஒருவர் சம்பார்சாதமே சாப்பிட்டார் என்றால் சரக்கு உட்டவொடனே... பிரியானி உடலாம்ன்னுதான் தோனும்
(அந்த சாம்பார் சாதம் அடியேன் தான் :)))

Ashok D said...

யோவ் வால்... இம்புட்டு தம்கட்டி பின்னூட்டம் போடறனே... என்னடா ஒர்த்தன் சூப்பரா!? கவிதயெல்லாம் எழுதறானே வந்து ஆஹா ஓஹோன்னு கமெண்டு போடறீயா மேன்

அதுக்குன்னு ஆஹா ஓஹோன்னு எல்லாம் போடக்கூடாது...

Ashok D said...

எல்லாருக்கும் இன்னிக்கு லீவு போல... நம்ம மட்டும் ஏன் யாருமே இல்லாத ... டீக்கடையில டீ ஆத்தனும்..

ஞாஞளஙலாழன் said...

//நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்/
//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //

என்னத்த சொல்ல வால்? நமது சமூகத்தில் இப்போதெல்லாம் ஆண்களின் திருமண வயதே 27-31 ஆகி விட்டது. பெரும்பாலனவர்கள் தவறான வழிகளில் செல்வதில்லையே!

Shanmugam Rajamanickam said...

//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //

ஹா..ஹா.. முற்றிலும் உண்மை..

தமிழ் ஈட்டி! said...

பதிவில் இருந்த சில பிழைகள்:

//அடிதடியை ரசிப்பார்க்கள்//
ரசிப்பார்கள்

//ஏகபட்ட//
ஏகப்பட்ட

//நியாயபடுத்துதலும்//
நியாயப்படுத்துதலும்

//குடிபோதையில் சாதரணமாக//
சாதாரணமாக

பிழை இன்றி எழுதவும் சகோ.வாழ்க தமிழ்!

வருண் said...

***ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!,***

ரொம்ப காமெடியா எழுதுறீங்க வால்! :)))

முதல்முறை செக்ஸுக்காக கற்பழிச்சவனுக அதிகமா இல்லை செக்ஸ் பழகியவன் கற்பழிச்சது அதிகமானு ஒரு "டேட்டா" பாருங்க!

உண்மை விளங்கும்! :)

கவிதை பூக்கள் பாலா said...

அருண் ஏன்? ஏன்? இப்படி ? ஹயோ கொஞ்சம் ஓவர் ஹா உண்மைய போட்டு உடைக்கிறீங்க போல , பாவம் பொண்ணுங்கெல்லாம் பயபடுறாங்க பாருங்க .......

K.MURALI said...

வால்,
தெளிவான மற்றும் உண்மையான விளக்கம்.

jothi said...

// நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்!//

என்ன‌ சொல்ற‌துன்னே தெரிய‌ல‌,.. பிர‌மிப்பா இருக்கு

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், படத்தினை முழுமையாகப் பார்க்கா விடினும் படம் பற்றிய உங்கள் ட்ரெயிலர் விமர்சனம் அருமை. அதுவும் தமிழ்ச் சினிமா வித்தகர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ள மறுமலர்ச்சி நோக்கிய, புதிய சிந்தனை நோக்கிய உங்களின் இப் பதிவினை ரசித்தேன்.

காமம்- அடக்கி வைத்திருப்பதனால் தான் அழிவினைத் தருகிறது என்பது அறிஞர்களின் கருத்து. ஆணோ, பெண்ணோ வரம்புகளை மீறாது அதனை பாதுகாப்புடன் அணுகினால் தவறில்லைத் தானே சகோதரம்?

சி.பி.செந்தில்குமார் said...

>>>திருத்துகிறேன் என்ற பெயரில் ஊடக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் ஷங்கரை விட, கெளதம் மேனன் மிக மோசமானவராக எனக்கு தெரிகிறார்!

ஆமோதிக்கிறேன்

KARTHIK said...

// வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சிப்பார்கள்! //

பாஸ் சில பெண்களே உங்கள கூப்டு என் பெட் ரூம்ல கேமரா வெயி பாத்ரூம்ல வெய்யினு சொல்லுறாங்களே அவங்க எந்த வை பாஸ்

KARTHIK said...

//குறி வழக்கம் போல உங்களை நோக்கி திரும்புது தல..//

பாஸ் பாத்து ஜாக்கரதையா இருங்க :-))

webworld said...

ஏதோ படம் எடுக்குறான் ...நம்ம எல்லாத்தையும் பார்க்க வைக்க டிவி சேனல்-ல ஒன்னு உடாம மார்க்கெட்டிங் பன்னுராணுக...மார்க்கெட்டிங் மாட்னஸ் புடிச்ச மெண்டல் பயலுக!!!.. நம்ம நண்பர் ஒருத்தர் பார்வை ஒன்றே போதுமே படத்த பார்த்து லவ் பண்ண ஆரம்பித்து வேற ஏதோ லவ் படத்த பார்த்து ரயில் வண்டில பாஞ்சு தற்கொல பண்ணிகிட்டாறு ....

நெல்லை கபே said...

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எழுதியிருக்கிறீர்கள் அது தப்பு. கணியன் பூங்குன்றனார் சொன்னது யாவரும் கேளிர்.
யாவரும் கேளீர் என்றால்...'எல்லாரும் கேட்டுக்குங்க' என்று பொருள். 'யாவரும் கேளிர் என்றால்...'எல்லாரும் உறவினர்' என்று பொருள். அப்போதுதான் யாதும் ஊரே என்பது சரியாய் வரும்.

பாலா said...

//
அத்துறையினருக்கு இருக்கும் சமூக பருப்புகளில் ஸாரி பொறுப்புகளில் சில நேரங்களில் அதிகபடியாக மறுபக்கத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சிப்பார்கள்!
//

உண்மை தான்... மேட்டர பத்தி மேட்டர் எடுக்கிறதே உலக மேட்டர் என்றாகிவிடும்போல...
என்ன மேட்டர் டா சாமி...

yazhlmalairajan said...

//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //


நீ வால் பையன் இல்ல லூசு பையன்.

Mak said...

உங்கள் மனதில் இருப்பவற்றை உங்கள் வலைப்பக்கத்தில் வெளிக்கொணர்ந்தது ஆரோக்கியமான விஷயம். ஆனால் சரியான நடையில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உங்கள் பதிவை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவு செய்வதற்கு முன்பு மறுமுறை படித்து பாருங்கள்.

!

Blog Widget by LinkWithin