நாம் இந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, அது விதிக்கப்பட்டது என்று நினைத்து கொண்டாலும் சரி, தற்செயலானது என்று நினைத்து கொண்டாலும் சரி, உண்மை என்னவென்றால் நாம் பிறக்கும் போதே அந்த நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் நம்மோடு சேர்ந்து ஊட்டப்படுகிறது, முன்னோர்களின் தியாகம் நம்மிடயே நாட்டு பற்றை வளர்க்கிறது!, வரலாறு மறக்கப்படும் போது நாட்டின் மேல் உள்ள பற்றும், ஆர்வமும் குறைந்து மூன்றாம் நிலம் போன்ற எண்ணம் ஏற்படுகிறது!
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வியாபார விசயமாக ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது, ஒரு ரயிலில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் தீடிரென்று எழுந்து இருக்கையில் கிழிந்திருந்த கிழிசலை தைக்க ஆரம்பித்தார், இந்தியரோ அவர் இங்கே தான் வேலை செய்கிறார் போலன்னு நினைச்சிட்டார், தைத்து முடிந்த அவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை எடுத்து பார்க்க ஆரம்பித்தார், இந்தியருக்கோ ஆச்சர்யம், தைத்து கொண்டிருந்தவர் கோப்புகள் பார்த்து கொண்டிருக்கிறாரே என்று!
ஐயா யார் நீங்க? என்று கேட்டார்!, ஏழெட்டு முகவரி அட்டைகள் நிரம்பிய உறை ஒன்றை தருகிறார், அத்தனைக்கும் அவர் தான் நிறுவனரும் கூட, இந்தியருக்கோ ஆச்சர்யம், பின் ஏன் ஐயா நீங்கள் இதை தைத்தீர்கள் என கேட்கிறார், ஜப்பான்காரர் சொல்கிறார், ஐயா இது என் நாடு, இங்குள்ள பொருள்கள் எமது பொருள்கள் மாதிரி தான், அதை பத்திரமாகவும் நன்றாகவும் பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வோரு ஜப்பானியனின் க்டமை என்றார், அது உண்மையோ, புனைக்கதையோ அது நமக்கு தேவையில்லை, ஆனால் அம்மாதிரி கதைகள் தான் இரண்டாம் உலகப்போரில் சாம்பலாய் போன ஜப்பானை மீண்டும் உயிர்பெறச் செய்தது!
சமூக அக்கறையில் யாருக்கும் நரம்புகள் புடைக்க வேண்டும், கழுத்தில் நரம்பு தெரிந்து ரத்தம் பீரிட வேண்டும், நம்மையும், நம் சுற்றுசூழலையும் அக்கறையுடன் கவனித்து கொண்டாலே போதும், மனிதர்களுக்கு உரிய அடிப்படை கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் மதிக்க தவறினால் நாம் மனித உருவில் திரியும் ஜந்துவை போல தான்!
*****************
டிஸ்கி:எனக்கு இந்த மாதிரியெல்லாம் கருத்து சொல்லப்பிடிக்காது தான், ஆனா என்ன செய்யுறது ஒரே மாதிரி எழுதிகிட்டு இருந்தா நமக்கும் போரடிக்குமுல்ல!
60 வாங்கிகட்டி கொண்டது:
me th 1 st ah
nice nalla eruku
happy republic day
இனிய குடியரசு நல் வாழ்த்துக்கள் டு வால் பையன்
ஆமாங்க .......
வீடு சுவரில் எச்சி துப்ப மாட்டாங்க....ஆனால் பஸ் ஸ்டான்ட் சுவரில் நன்றாக எச்சி thUPPUVANGA
நல்ல பகிர்வு ..............
அருமையான, நேர்மையான இடுகை....
சுதந்திரம் கிடைத்தை கொண்டாடுவதை விட குடியரசு அறிவிக்கப்பட்டதுதான் மிக முக்கியமானது. அதுவே... ஒரு கட்டத்தில் பலவீனமாகவும் மாறியது ஆனாலும், குடியரசுவின் உண்மையான நோக்கத்தை எந்த அரசியல்வாதியும் மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை...
(அதேனுங்க டிஸ்கியில உள் / சைடு குத்து... )
அந்தப் படம் அழகா இருக்கு...
என்னமோ கொஞ்ச நாளா வாலுக்கு பர்சனாலிட்டி கூடிகிட்டே பொகுதுங்கோ!!!
//அந்தப் படம் அழகா இருக்கு...
என்னமோ கொஞ்ச நாளா வாலுக்கு பர்சனாலிட்டி கூடிகிட்டே பொகுதுங்கோ!!! //
இது தான் ஒரிஜினல் உள்/சைடு குத்து!
//இது என் நாடு, இங்குள்ள பொருள்கள் எமது பொருள்கள் மாதிரி தான், அதை பத்திரமாகவும் நன்றாகவும் பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வோரு ஜப்பானியனின் க்டமை என்றார்,//
இதே நினைப்பு நமக்கும் வந்துவிட்டால் நாமளும் நல்லா இருப்போம்.
அருமை
டிஸ்கி:எனக்கு இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டம் போடப்பிடிக்காது தான், ஆனா என்ன செய்யுறது ஒரே மாதிரி எழுதிகிட்டு இருந்தா நமக்கும் போரடிக்குமுல்ல
நல்லாருக்கு..கட்சி தலைவர் அறிக்கை மாதிரி...ஆனா புடிச்சிருக்கு..மனசுல தச்சுருச்சு....குடி அரசு வாழ்த்துக்கள்
விவேகாநந்தர் சொன்னது மதிரேயே இறுக்குது கடைசி paragraph..gud.
//என்னமோ கொஞ்ச நாளா வாலுக்கு பர்சனாலிட்டி கூடிகிட்டே பொகுதுங்கோ!!!//
வழிமொழிகிறேன்...
உங்க அழகுக்கு காரணம் என்னவோ....
//உங்க அழகுக்கு காரணம் என்னவோ.... //
ப்ளீச்சிங் பவுடர்!
குடியரசுக்கு வயது அறுபது. இந்த பதிவோடு ஆந்திர சம்பவங்களை இணைத்து பார்த்தேன்... ஹ்ம்ம்ம்... நல்ல பகிர்வு வால்'s.
//வருஷம் 365 நாளும் தான் டாஸ்மாக்கிலும் பாரிலும் நடப்பதேன்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!//
அலவலகத்துக்கு எதிரில் இருக்கும் டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது!
நான் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறேன்!
//நான் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறேன்!//
இத நம்புற மாதிரி இல்லையே..
குடியரசு தின வாழ்த்துக்கள்!
//நான் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறேன்!//
இத நம்புற மாதிரி இல்லையே.. //
இன்னைக்கு எனக்கு ஆபிஸ் இருக்குங்க!
மேலும் தற்பொழுது நான் குறைத்து கொண்டுள்ளேன்!
//தற்பொழுது நான் குறைத்து கொண்டுள்ளேன்!//
Wow appo celebration not for republic day.
உங்களுக்கு தான்... இருந்தாலும் நீங்க சரக்கை கம்மி பண்ணினதை கொண்டாட வேண்டாமா..
//உங்களுக்கு தான்... இருந்தாலும் நீங்க சரக்கை கம்மி பண்ணினதை கொண்டாட வேண்டாமா.. //
மர பூரிகட்டை அதிகம் உடைகிறதென்று இரும்பில் வாங்கி வைத்திருக்கிறார்!
மாசக்கடைசி மருத்துவ செலவுக்கு பணம் கையில் இல்லையே!
//வால்பையன் said...
மேலும் தற்பொழுது நான் குறைத்து கொண்டுள்ளேன்!//
நல்லது... வாழ்த்துகள்
//மர பூரிகட்டை அதிகம் உடைகிறதென்று இரும்பில் வாங்கி வைத்திருக்கிறார்!//
ஹ ஹ... அப்போ சுதந்திர தினத்துக்கு பதிவு போட மாட்டீங்களா..
//அப்போ சுதந்திர தினத்துக்கு பதிவு போட மாட்டீங்களா.. //
ஊருக்கு போறன்னைக்கு தான் எனக்கு சுதந்திரம்!
நான் மலேஷியால இருக்குறேன். இன்னைக்கு காலைல ஆஃபிஸ் வந்து கூகிள் இந்தியா பக்கத்தை திறந்ததுக்கு அப்புறம் தான் இது ஞாபகத்துக்கு வந்தது. ஒரே அசிங்கமா போய்டுச்சு எனக்கு... எல்லாருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...
100 % அக்மார்க் உண்மை.
சமூக அக்கறையில் யாருக்கும் நரம்புகள் புடைக்க வேண்டும், கழுத்தில் நரம்பு தெரிந்து ரத்தம் பீரிட வேண்டும்,...
தல..நீங்க விஷாலை சொல்றீங்களா..இல்ல விக்ரம சொல்றீங்களான்னு புரியல...
கேப்டன் இப்பல்லாம் துப்பாக்கியே எடுக்கறதில்ல.....
ஈரோடு கதிர் said...
//வால்பையன் said...
மேலும் தற்பொழுது நான் குறைத்து கொண்டுள்ளேன்!//
நல்லது... வாழ்த்துகள்
ஏனுங்னா ...இதுக்கெல்லாமா வாழ்த்து சொல்லுவாங்க....
இம்புட்டு அப்புரானியா ஆகாதுங்னா...
குடிய அரசுதானே நடத்தது லாபகரமா. நம்ம வயிறு தான் பாவம். கொஞ்சம் காஸ்ட்லிக்கு மாற சொல்லி அரசு நம்மை என்னமா motivate பண்ணுது. வாழ்க குடியரசு!
ithu followupkku
:).
”இது என் நாடு, இங்குள்ள பொருள்கள் எமது பொருள்கள் மாதிரி தான்” இத நம்பாளுங்க கரெக்டா புரிஞ்சுக்கிட்டாங்க. அதான் எல்லா இடத்துலயும் இருக்கற பொது சொத்தையெல்லாம் அவனவன் வூட்டுக்கு எடுத்துட்டு போய்டறான்..
கதை அருமை!
பரஸ்பர வாழ்த்துக்கள்! குடியரசு தினத்தையும் சேர்த்து....
நல்ல கருத்து. பஸ் உடைக்குறது இல்ல எரிக்கறத நிறுத்துனாலே போதும்.
இன்னிக்காவது குடிக்காம இருங்க :)
ஆமா, இதுல எதுக்கு தல உங்க Foto? :)
குடியரசு தின வாழ்த்துக்கள்..
///எனக்கு இந்த மாதிரியெல்லாம் கருத்து சொல்லப்பிடிக்காது தான்///
இந்த வரிகளில் உங்கள் நேர்மை தெரிகிறது. வாழ்த்துக்கள்.
61 வயசாகுது.பெருசு இன்னும் கொஞ்சம் வேகமா நடந்திருக்கலாம்.(பெரிய உடம்பா இருக்கறதால பாரமோ?)இருந்தாலும் பக்கத்து வீட்டு கிழடுகளோட ஒப்பிட்டா அண்ணாத்தே பரவாயில்லைதான்.
//இன்னிக்காவது குடிக்காம இருங்க //
நீங்க யாரு இதைச் சொல்ல? தினம் உங்களிடம் காசு வாங்கித்தான் வால் சரக்கடிக்கிறாரா? சொந்தமா ஒரு ப்ளாக் இருந்தா உடனே எல்லாத்துலயும் மண்டைய நுழைச்சு கருத்து சொல்றத நிறுத்துங்க
குடியரசு தின வாழ்த்துக்கள்....
அருண் "பொங்கி"ட்டீங்க ;-) நல்லா இருக்கு இடுகை... கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கு..புதுசா இருப்பதால் :-)
Yes. you are correct as whatever u said in that story. but it is applicable only for old peoples in japan and not applicable for younger generation....
"இன்று குடியரசு தினம்!//
வாழ்த்துக்கள் அருண்.:)
நல்ல கருத்துகள்.
----------
டிஸ்கி:
உங்களுக்கு நிஜமாவே யாரோ சூன்யம் வெச்சிட்டாங்க...:)
குடியரசு கொண்டாட்டத ஆரம்பிச்சுட்டேன்...
குடியரசு தின வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு.
என்ன ஒரு பதிவு.. என் கருத்துகளோடு ஒத்துப் போகிறது... உணர்ந்தால் தான் மாற்றம் நிகழும்....
நன்றி...
டிஸ்கி நல்லா இருக்கு.
//நம்மையும், நம் சுற்றுசூழலையும் அக்கறையுடன் கவனித்து கொண்டாலே போதும்//
சரிதான்.
குடி யரசு தின வாழ்த்துக்கள்!
நல்ல கருத்தான பதிவு வால்ஸ். அந்தப் படத்தில் நீங்களும் ஜப்பான் காரர் மாதிரிதான் இருக்கீங்க. நன்றி.
மிகவும் அருமை.
நல்லா இருக்கு.
புனைகதையா இருந்தால்தான் என்ன? நல்ல விஷயங்களைப் புனைந்தேனும் தரலாம். தப்பில்லை! அசத்துங்க.
அன்பின் வால்
இன்று முதல் ( 26.01.2010) குறைத்துக் கொண்டதற்கு நல்வாழ்த்துகள் - வேடிக்கை பார்ப்பது தொடரட்டும்.
நாமெல்லாம் சப்பானியராக முடியாது - உட்டுத்தள்ளுங்க
படம் உண்மையிலேயே ப்ர்சனாலிட்டி கூடி இருக்கு வாலு
வூட்ல இரும்புக்குப் பதிலா தங்கத்துல வாங்கச் சொல்லுங்க - சரியா
வருகை புரிந்து ஊக்கமளித்த நண்பர்கள் அனைவர்களுக்கும் நன்றி!
Post a Comment