கூட்டம் அதிகமான நம்ம மெரினாபீச் மாதிரியான இடத்தில் நின்றுகொள்ளுங்கள், யாரையும் சட்டைசெய்யாமால் அண்ணாந்து பார்த்தபடியே இருங்கள், உங்களை கடந்து செல்பவர்களில் நான்கு சதவிகிதத்தினர் அண்ணாந்து மேலே பார்ப்பார்கள் என்பது பொதுவிதி(புத்தி), இப்பொழுது உங்களுடன் இன்னொரு நண்பரையும் சேர்த்து கொள்ளுங்கள், ஆட்கள் கூட உங்களுடன் அண்ணாந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடும் என்பதை நீங்களே உணர்வீர்கள்!
இது ஒரு சாதாரண செயல் மாதிரி தானே தெரிகிறது, ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயந்து இதை தான் செய்து கொண்டிருக்கிறோம், ஏற்கனவே யாரோ ஒருவர் செய்தது என்றால் அதில் குறைவான ரிஸ்க் தான் இருக்கும் என்பது மனிதனின் பொதுபுத்தி கருத்து, ஏனப்பா கோயிலுக்கு போற!? எங்க அப்பாவும் போனார், நானும் போறேன் என்ற பதிலை இளைஞர்களிடம் இன்றும் காணமுடியும், ஒரு செயலை ஏன் செய்கிறோம் என தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் கோவிலுக்கு போனால் உங்களை நல்லவன் என்று சொல்வார்கள் என உங்களுக்கு தெரியாது, ஆனால் அப்படி தான் சொல்லி கொடுத்து வளர்க்கப்பட்டீர்கள்!
பகுத்தறிவு என்பது அதிகப்படியாக வளர்ந்த அறிவு கிடையாது!. இந்த உலகில் பகுத்தறிவு அற்ற மனிதர்களும் கிடையாது, ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அதை ஏன் நான் செய்யனும் என்று கேள்வி கேட்பது தான் பகுத்தறிவு, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அதனால் செய்கிறேன் என்றால் அத்தோடு முடிஞ்சி போச்சு, அதைவிட்டு அந்த புத்தகத்தில் போட்டிருக்கு, அந்த தாத்தா அப்படி தான் செய்ய சொன்னார் என்றால் நாம் முன்னோர்களிடமும், புத்தகங்களிடமும் மூளையை அடகு வைத்து அத்துடன் ஐக்கியமாகி விட்டோம் என்று தான் அர்த்தம்!
கடவுள் இருக்கு, இல்லை என்ற வாதங்கள் பலநூறு வருடங்களாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன! என்றோ நிறுபிக்கப்பட்டிருந்தால் இன்று என்னை போன்று பலர் எங்கே கடவுள் என கேட்டு கொண்டிருக்கமாட்டோம், நாங்கள் பகுத்தறிவு என்ற பெயரில் எதை சொன்னாலும் நம்புவதில்லை, ”பகுத்தறிவின் பால பாடமே கேள்வி கேள்” என்ற பிறகு அதை பெரியாரே சொல்லியிருந்தாலும் அதிலுள்ள உண்மையின் சாத்தியகூறுகளை ஆராய்கிறோம், பர்தா பற்றி பேசினால், இவன் எல்லாத்தையும் டூ பீஸில் போக சொல்றான் ரேஞ்சுக்கு மொட்டராசா குட்டையில விழுந்த கணக்கா பேசுவதில்லை!
அது ஏனப்பா கடவுள் பெண்களுக்கு மட்டும் இவ்வளவு சட்டதிட்டங்களை வைத்து ஆண்களை அவுத்துவிட்டான் என்று தானே கேட்கிறோம், இன்றும் பல விலங்குகளில் ஆணினம் தான் டாமினேட் செய்கிறது, அது அதன் உடல் வலிமையால், ஆனால் மனித இனம் இந்த அளவு உயர்ந்தது பகுத்தறிவால், அதை ஏன் நான் செய்து பார்க்ககூடாது என்ற கேள்வியால் தான் நெருப்பிலிருந்து ராக்கெட் வரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது, அறிவு என்று வந்து விட்டால் ஆணுக்கு சமமாக பெண்ணாலும் சிந்திக்கமுடியும், அதற்கு அவளுக்கு நல்ல கல்வியும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும்!
அதை விட்டுட்டு நீ வெளியே போனா சாமி கண்னை குத்தும் ரேஞ்சுக்கு மிரட்டி வைத்து கொண்டிருந்தால் வீடும் உருப்படாது, நாடும் உருப்படாது!
நன்றாக படித்து வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு அப்பிராணி நண்பர் சொல்கிறார், ஒரு ஆம்பளை கெட்டால் அந்த குடும்பம் மட்டும் கெடுமாம், அதே பொம்பளை கெட்டால் அந்த ஊரே கெடுமாம்! எங்கிருந்து இதெல்லாம் கத்துகிறாங்கன்னு தான் தெரியல!, எந்த பெண்ணும் கெட்டதால ஊரு கெட்டதா எந்த ஆதாரமும் இல்லை, ஆனா நீரோவிலிருந்து ராஜபக்ஷே வரை கெட்ட ஆண்களால நாடே குட்டிசுவரா போன பல ஆதாரங்கள் இருக்கு, பின் எதை வைத்து இப்படியெல்லாம் பழமொழி சொல்றாங்க!
இந்த மாதிரி பானாவுக்கு பானா போட்டு, மானாவுக்கு மானா போட்டு நாமளும் ஆயிரம் பழமொழி சொல்லலாம், திண்னையை தேய்க்கும் பெருசுகள் மாதிரி இந்தகால இளைஞர்களும் அதை நம்பி பேசி கொண்டிருப்பது எதிர்காலத்தின் மேல் நம்பிக்கையை குறைய வைக்கிறது!, உங்களை போலவே எங்களுக்கும் வெற்றிகளும், தோல்விகளும் உண்டு, நாங்கள் எங்கள் தோல்விகளுக்கு என்ன காரணம் என ஆராய்கிறோம், நீங்கள் எல்லாம் கடவுள் செயல் என அடுத்த வேலைக்கு செல்கிறீர்கள், நாங்கள் தோல்விகளால் எங்களுக்கு பின் வரும் சமூகத்திற்கு வெற்றிபடியை கட்டி தருகிறோம், நீங்கள் படியை கட்டி கட்டி உடைத்து கொண்டிருக்கிறீர்கள்!
உங்கள் வெற்றி, தோல்விக்கு நீங்களும் உங்களை சார்ந்த சூழ்நிலையும் தான் காரணம் என நன்றாக தெரிந்துமே சந்திரனும் , வியாழனும் காரணம் என பின்வரும் சந்ததியினருக்கு நீங்கள் கட்டிய படிகளை காட்டாமல் உடைத்தெறிகிறீர்கள், இந்த உலகில் கம்பியூட்டரலிருந்து கடுதாசி வரைக்கும் நேரடியாக அப்பொருளாக கண்டுபிடிக்கப்படவில்லை, ஒவ்வொரு பொருளும் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியை போன்று நீண்ட வரலாற்றை கொண்டது தான், சார்லஸ் பாப்பேஜ் இன்றிருக்கும் கம்பியுட்டருக்கு சொந்தம் கொண்டாட முடியாது, ஆனால் Difference Machine சிஸ்டத்தின் (முதலில் பஞ்ச்கார்டு என்று எழுதியிருந்தேன், தவறை திருந்திய பேநாமூடி அவர்களுக்கு நன்றி) மூலம் முதல் கம்பியூட்டரை கண்டுபிடித்தது அவர் தான்!, பெரும்பான்மை என்னும் பொதுபுத்தியில் இருந்திருந்தால் எந்த வளர்ச்சியும் இந்த உலகம் அடைத்திருக்காது!
(தொடரும்)
106 வாங்கிகட்டி கொண்டது:
me the first
ரொம்ப தான் பகுத்தறிவு உங்களுக்கு. உங்க பொது புத்தி பத்தின விமர்சனத்தில பர்தா போடுறத பத்தின பொது புத்தி பத்தியும் எழுதுவீங்களா. இருபத்தினாலு மணி நேரமும் தலைல குல்லா போட்டிருக்கிற பொது பத்தி எழுதுவீங்களா? ஜெபிச்சா வியாதி போய்டும்கறத நம்பற பொது புத்தி பத்தியும் எழுதுவீங்களா? இல்ல இந்து மத சம்பிரதாயங்கள்ல மட்டும் தான் வீரம் காட்டனும்கிற பொது புத்தியோட நீங்களும் இருந்திருவீங்களா? தொடரும் போட்டிருக்கீங்கள்ல..பாப்போம்.
தல! நல்லாத்தான் எழுதியிருக்கீங்க. படமும் பிரமாதம்
//இந்து மத சம்பிரதாயங்கள்ல மட்டும் தான் வீரம் காட்டனும்கிற பொது புத்தியோட நீங்களும் இருந்திருவீங்களா? //
கடவுள், கோவில்னு சொன்னா இந்து மதம்னு அர்த்தம் எடுத்துகிறது தான் பொதுபுத்தி, போனபதிவு பர்தா பத்தி தானே இருந்தது, ஏன் இப்படி பேசுறிங்க நண்பரே! எனக்கு நீங்கள் என்றுமே எதிரியல்ல!
கடவுள் பெயரால் மக்களை முட்டாளாக்குபவர்களை தான் சாடி கொண்டிருக்கிறேன், நீங்கள் அந்த வகையறாவில் வருவீர்களா!?
எனக்கு எல்லா கருமாந்திர மதமும் ஒன்னு தான், தட் மீன்ஸ் எல்லாமே கருமாந்திரம் தான்!
இப்ப சந்தோசமா!?
எங்க அண்ணன் ஹேராம் கேட்டுக்கீற கேல்விக்கு பதிலுண்டா
இந்த மலுப்பல் எல்லாம் வேனாம் தல்
தல.., பஞ்ச் கார்ட கண்டு பிடிச்சது ஹெர்மன் ஹோல்லறித் அவர் 1890 - ல கண்டுபிடிச்சார்..., சார்லஸ் பேபேஜ் 1870s-ல இறந்துட்டார்..., அவர் கண்டுபிடிச்சது Difference Machine...,
// எனக்கு எல்லா கருமாந்திர மதமும் ஒன்னு தான், தட் மீன்ஸ் எல்லாமே கருமாந்திரம் தான்!
///
சரியா சொன்னிங்க தல எல்லாமே ஒரே குட்டைல ஊறிய மட்டைங்க தான் ...
//பஞ்ச் கார்ட கண்டு பிடிச்சது ஹெர்மன் ஹோல்லறித் அவர் 1890 - ல கண்டுபிடிச்சார்..., சார்லஸ் பேபேஜ் 1870s-ல இறந்துட்டார்..., அவர் கண்டுபிடிச்சது Difference Machine..., //
தகவலுக்கு நன்றி, சிறிய பெயர் குழப்பம் இருந்தது, கூகுளில் பாதர் ஆஃப் த கம்பியூட்டர் என்றால் இந்த பெயர் ஒரு சைட்டில் வந்தது, தகவல் பிழைக்கு மன்னிக்கவும்!
மாற்றி விடுகிறேன்!
//இந்த மலுப்பல் எல்லாம் வேனாம் தல்//
பதிவுலயே சொல்லியிருக்கேனே! ஏற்கனவே அண்னாந்து பார்த்தவர்களை பின்பற்றி அண்னாந்து பார்ப்பவர்கள் தான் எல்லா மத பிரியர்களும், அதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என பிரித்து பார்க்க ஒன்றுமில்லை!
முஸ்லீமுக்கு குல்லான்னா, இந்துவுக்கு பட்டை, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை!
பரவால்ல தல.., உலகத்தில் அன்றும் இன்றும் உடல் வலு தான் ஆதிக்கம் செலுத்துகிறது.., அதை தான் இந்த ஆண் பெண் வேறுபாடுகள் உணர்த்துகின்றன...,
வர வர எனக்கு சொல் புத்தியும் இல்லாம சுய புத்தியும் இல்லாம போய்ட்டு வருது. எங்க ஆத்த அப்பவே சொன்ன... இந்த ப்ளாக் எல்லாம் படிக்காதன்னு கேட்டா தானே.. ஒரே குழப்பமா இருக்குதுப்பா...
//பதிவுலயே சொல்லியிருக்கேனே! ஏற்கனவே அண்னாந்து பார்த்தவர்களை பின்பற்றி அண்னாந்து பார்ப்பவர்கள் தான் எல்லா மத பிரியர்களும், அதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என பிரித்து பார்க்க ஒன்றுமில்லை!
முஸ்லீமுக்கு குல்லான்னா, இந்துவுக்கு பட்டை, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை!//
சரியாச்சொன்னீங்க தல....
நிறைய மூட நம்பிக்கைங்களுக்கு மதம்தான் மூல காரணமா இருக்கு...
வாஸ்து, கல்லு, தோஸம்....
மதமாவது பரவாயில்ல. இவனுங்க அட்டகாசம் தாங்க முடியல...
//பேநா மூடி said...
பரவால்ல தல.., உலகத்தில் அன்றும் இன்றும் உடல் வலு தான் ஆதிக்கம் செலுத்துகிறது.., அதை தான் இந்த ஆண் பெண் வேறுபாடுகள் உணர்த்துகின்றன...,///
தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆகிறான்...
//உலகத்தில் அன்றும் இன்றும் உடல் வலு தான் ஆதிக்கம் செலுத்துகிறது.., அதை தான் இந்த ஆண் பெண் வேறுபாடுகள் உணர்த்துகின்றன...,//
இந்த சிந்தனையையும் பொதுபுத்தியில் தான் சேர்க்க வேண்டும் தோழரே!
மாமிசபட்சினி விலங்குகள் வேட்டையாட பெரும் சிரத்தை எடுத்து கொள்கின்றன! சைவ பட்சிணி விலங்குகள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அதைவிட பெரும் சிரத்தை எடுத்து கொள்கின்றன! ஆனால் மனிதன் குளீரறையில் அமர்ந்து கொண்டு நாலையும், நாலையும் கூட்டுவதற்கு கூட கால்குலேட்டரை தேடி கொண்டிருக்கிறான்!
அன்றைய மனிதனுக்கு வேட்டையாடினால் தான் உணவு, எதிரிகளிடமிருந்து பெண்களை காப்பாற்றினால் தான் இனபெருக்கத்திற்கு பெண், இன்று அப்படியா இருக்கிறான், 30 வயதில் சுகர், 35 வயதில் ஹார்ட் அட்டாக்!, 50 வயதில் ஆளே இல்லை!
ஆண் மனபலத்தோடு உடல் பலத்தையும் இழுந்து கொண்டிருக்கிறான் என்பதை ஒப்பு கொள்ளாவிட்டால் நாமும் மேலுள்ள லிஸ்டில் சேரலாம்!
//அன்றைய மனிதனுக்கு வேட்டையாடினால் தான் உணவு, எதிரிகளிடமிருந்து பெண்களை காப்பாற்றினால் தான் இனபெருக்கத்திற்கு பெண், இன்று அப்படியா இருக்கிறான், 30 வயதில் சுகர், 35 வயதில் ஹார்ட் அட்டாக்!, 50 வயதில் ஆளே இல்லை!///
ஆஹா.........
நாம இன்னும் அந்த பட்டியலில் தான் இருக்கிறோம் .., என்ன வேட்டையாடும் விஷயங்கள் தான் மாறிவிட்டது...,
//பெரும்பான்மை என்னும் பொதுபுத்தியில் இருந்திருந்தால் எந்த வளர்ச்சியும் இந்த உலகம் அடைத்திருக்காது!
//
இப்ப இருக்க வளர்ச்சிக்கு வித்திட்ட பலர் தீவிர கடவுள் நம்பிக்கையாளராக இருந்திருகிரார்களே -:)))))))))
நீங்கள், நாங்கள் என பிரித்துப் பார்க்கும் வழக்கத்தை விட்டொழியுங்கள். இப்படிப் பிரித்துப் பிரித்து தான் எல்லாமே சின்னாபின்னமாகி இருக்கிறது. இறைவன் மீது நம்பிக்கை கொண்டோரிடமும் அன்புடன் உங்கள் எண்ணங்களை எடுத்துச் சொல்லுங்கள், அதைவிடுத்து, நீங்கள் செய்வது எல்லாம் தவறு, நாங்கள் செய்வது எல்லாம் சரி என சொல்லும்போது நீங்களும் பொதுபுத்தியுடன் தான் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கேள்விகள் கேட்பது பெரிய விசயமில்லை, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் மனதுக்கும் ஒரு வழி தேட வாய்ப்பு தாருங்கள். என்ன சொன்னாலும் திருந்தமாட்டேன் என்கிறார்களே எனும் ஆதங்கம்தான் கருமாந்திரம் என்றெல்லாம் உங்களை எழுத வைக்கிறது.
எப்படியோ ஒன்றை நிலைநாட்ட மற்றொன்றை அடிமைப்படுத்தும் பொதுபுத்தி எவரையும் விட்டுப் போகாது என்பதுதான் உண்மை.
ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒன்று விருப்பமாகிப்போக....
அதன் பின் எவ்விதமான கேள்விக்கும் உட்படுத்தாமல்... தொடர்ந்து புனிதப்படுத்துவதுதான் தவறாக மாறுகிறது...
அது.... கடவுள் / எழுத்தாளன் / தலைவன் / நடிகன் என யாராக இருந்தாலும்
//இப்ப இருக்க வளர்ச்சிக்கு வித்திட்ட பலர் தீவிர கடவுள் நம்பிக்கையாளராக இருந்திருகிரார்களே//
அண்ணே, ஆரம்பிச்சு வச்சதை பத்தி பேசிகிட்டு இருக்கேன், நீங்க அண்ணாந்து தான் பார்ப்பேன்னு அடம்பிடிக்கிறிங்க!
இப்ப இருக்குற கண்டுபிடிப்புகள் ஏற்கனவே இருந்ததின் நீட்சி, உண்மைய சொல்லனும்னா கடந்த பத்து வருசமா புதுசா ஒரு டெக்னாலஜியும் நாம கண்டுபிடிக்கல!, பொக்ரான்ல வெடிச்ச குண்டு ஆல்ப்ரட் நோபல் போட்ட விதை, அதுக்கு அப்துல்கலாம் சொந்தம் கொண்டாட முடியாது!
வளர்ந்த நாடுகளை விட நாம 20 வருடம் பின் தங்கியிருப்பதற்கு காரணமே, எப்பவும் இந்த பொது புத்தியிலேயே திரியிறது தான்!
ஒருவர் தீவிர கடவுள் நம்பிக்கையாளரா பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்! எந்த குழந்தையும் நான் இந்த மதத்தில் தான் பிறக்க வேண்டும் என விரும்பி பிறப்பதில்லை, ஆனால் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் யாருக்கும் குறைவதில்லை, அதை மதம் என்னும் மண்னை போட்டு மூட வேண்டாம், உங்களை குழந்தைகளுக்கு மதத்தை சொல்லி தராமல் வளருங்கள்!
அவர்கள் மனிதத்தை வளர்ப்பார்கள்!
//ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒன்று விருப்பமாகிப்போக....
அதன் பின் எவ்விதமான கேள்விக்கும் உட்படுத்தாமல்... தொடர்ந்து புனிதப்படுத்துவதுதான் தவறாக மாறுகிறது...
அது.... கடவுள் / எழுத்தாளன் / தலைவன் / நடிகன் என யாராக இருந்தாலும்//
பதிவின் சுருக்கமே இது தான் தல!,
சிறுவயதில் நமகெல்லாம் ஒரு ரோல் மாடல் இருப்பார்கள், அவர்களுக்கு பிடித்ததெல்லாம் அன்று நமக்கும் பிடிக்கும், ஆனால் ஏன் பிடிக்கும் என்று இன்றும் கேள்வி கேட்கவில்லையென்றால் என்னாவது!?
//இந்த மாதிரி பானாவுக்கு பானா போட்டு, மானாவுக்கு மானா போட்டு நாமளும் ஆயிரம் பழமொழி சொல்லலாம்//
ஹா..ஹா... சரியாசொன்னீங்க பாஸ்.
// hayyram said...
ரொம்ப தான் பகுத்தறிவு உங்களுக்கு. உங்க பொது புத்தி பத்தின விமர்சனத்தில பர்தா போடுறத பத்தின பொது புத்தி பத்தியும் எழுதுவீங்களா. இருபத்தினாலு மணி நேரமும் தலைல குல்லா போட்டிருக்கிற பொது பத்தி எழுதுவீங்களா? ஜெபிச்சா வியாதி போய்டும்கறத நம்பற பொது புத்தி பத்தியும் எழுதுவீங்களா? இல்ல இந்து மத சம்பிரதாயங்கள்ல மட்டும் தான் வீரம் காட்டனும்கிற பொது புத்தியோட நீங்களும் இருந்திருவீங்களா? தொடரும் போட்டிருக்கீங்கள்ல..பாப்போம்.//
// வால்பையன் said...
இந்து மத சம்பிரதாயங்கள்ல மட்டும் தான் வீரம் காட்டனும்கிற பொது புத்தியோட நீங்களும் இருந்திருவீங்களா? //
கடவுள், கோவில்னு சொன்னா இந்து மதம்னு அர்த்தம் எடுத்துகிறது தான் பொதுபுத்தி, போனபதிவு பர்தா பத்தி தானே இருந்தது, ஏன் இப்படி பேசுறிங்க நண்பரே! எனக்கு நீங்கள் என்றுமே எதிரியல்ல!
கடவுள் பெயரால் மக்களை முட்டாளாக்குபவர்களை தான் சாடி கொண்டிருக்கிறேன், நீங்கள் அந்த வகையறாவில் வருவீர்களா!?
எனக்கு எல்லா கருமாந்திர மதமும் ஒன்னு தான், தட் மீன்ஸ் எல்லாமே கருமாந்திரம் தான்!
இப்ப சந்தோசமா!? //
எனக்கு எல்லா மதமும் சம்மதமே! ஆணால் சமீப காலமாக சில உலக அரசியல்கள் புரிய ஆரம்பித்ததன் விளைவாக இந்து மதத்தை பற்றி விமர்சிப்பவர்கள் மீது கோபம் வருகிறது ..
நாத்திகம், ஆத்திகம், பிற மதங்கள், பிற வாழ்க்கை முறைகள் எல்லாவற்றையும் சகித்து கொண்டிருப்பது இந்து மதம் மட்டுமே! மற்ற மதங்கள் இல்லை!
இதை நான் உறக்க சொல்வேன்! இந்து மதத்தை பற்றி மற்ற மதத்தவர்கள் நிறைய விமர்சனம் செய்கிறார்கள், ஆனால் இந்த இந்திய, குறிப்பாக தமிழக நாத்திகவாதிகள் மட்டும் உலகின் சிறப்பான கோழைகள், இந்து மதத்தை மட்டுமே இழிப்பார்கள்...! ;)
யார் மூடநம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளார்களோ, அவர்களுக்குத்தான் முதல் & அதிரடி சிகிச்சை. ஆகவே எனக்கு மட்டும் ஆப்பு அடிக்கிறீர்கள் என்று புலம்ப வேண்டாம். எல்லோருக்கும் உண்டு ஆப்பு. அவசரப்பட வேண்டாம். ரொம்பப் பேசினால் இன்னும் பெரிய ஆப்பாக தேடவேண்டி வரும். You carry on வாலு.
//நீங்கள், நாங்கள் என பிரித்துப் பார்க்கும் வழக்கத்தை விட்டொழியுங்கள்.//
பகுத்தறிவு அற்ற மனிதன் எவருமில்லை என்று பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன், உங்களை(மத நம்பிக்கையாளர்களை) கீழிறக்கியோ, என்னை மேலேற்றியோ எனக்கு எந்த ஆதாயமும் கிடையாது!
//நீங்கள் செய்வது எல்லாம் தவறு, நாங்கள் செய்வது எல்லாம் சரி என சொல்லும்போது நீங்களும் பொதுபுத்தியுடன் தான் இருக்கிறீர்கள்//
எங்கேயும் அப்படி குறிப்பிடும் பழக்கம் எனக்கில்லை, பகடியின் தேவைக்காக எங்கேயாவது எனது நண்பர்களை மட்டுமே நான் கேளி செய்திருப்பேன்! இங்கே சரி, தவறு என்றெல்லாம் எதுவுமில்லை, உண்மை என்பதே அதிகபடியான சாத்தியகூறுகள் என்று தான் பதிவில் குறிப்பிடுவேன்! நானும் பொதுபுத்தியில் இருந்திருப்பேன், இருக்கிறேன் என்பதில் எந்த மாற்றமுமில்லை, ஆனால் நான் மாற நினைக்கிறேன்!
//என்ன சொன்னாலும் திருந்தமாட்டேன் என்கிறார்களே எனும் ஆதங்கம்தான் கருமாந்திரம் என்றெல்லாம் உங்களை எழுத வைக்கிறது.//
இல்லை நண்பரே! ஹேராம் முழுதாக பதிவை படித்தாரா என கூட எனக்கு தெரியாது, என்னை மட்டும் கேள்வி கேட்குறியே, அவர்களையும் கேள் என்பது எனது மதம் பெரிது என்ற சிந்தனை, எனக்கு எல்லா மதமும் ஒன்று தான் எனும் பட்சத்தில் அதை நான் கருமாந்திரமாக தானே பார்க்கமுடியும்!,
இந்த அறையில் பாதி பேர் கழுதைகள் எனும் போது எல்லாருக்கும் கோவம் வந்ததாம், சரி பாதி பேர் கழுதைகள் இல்லை எனும் போது அடங்கினார்களாம், இந்த கதை நியாபகம் இருக்கிறதா!?, அவர் மதத்தை மட்டும் விமர்சிக்கிறேன் என்று முதலில் எண்ணினார், எல்லா கருமாந்திரமும் ஒன்னு தான்னு சொன்னவுடன் அமைதியாகிட்டார்!
//எப்படியோ ஒன்றை நிலைநாட்ட மற்றொன்றை அடிமைப்படுத்தும் பொதுபுத்தி எவரையும் விட்டுப் போகாது என்பதுதான் உண்மை. //
நிச்சயமாக எனக்கு அந்த எண்ணம் இல்லை தோழரே! மதங்கள் கடந்த மனிதம் வளர வேண்டும் என்ற ஆசையை தவிர வேறொன்றும் இல்லை என்னிடம்!
//தமிழக நாத்திகவாதிகள் மட்டும் உலகின் சிறப்பான கோழைகள், இந்து மதத்தை மட்டுமே இழிப்பார்கள்...! ;) //
எனக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாதுன்னு எல்லாருக்கும் தெரியும், உங்களுக்கும் இன்று முதல் தெரியும்!
/// //தமிழக நாத்திகவாதிகள் மட்டும் உலகின் சிறப்பான கோழைகள், இந்து மதத்தை மட்டுமே இழிப்பார்கள்...! ;) //
எனக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாதுன்னு எல்லாருக்கும் தெரியும், உங்களுக்கும் இன்று முதல் தெரியும்!
///
வாலு ... சே ... உங்களை நான் அந்த கோழைகளின் பட்டியலில் வைக்க வில்லை, நீங்களாக சேருகிறீர்கள் என்றால் ... ? தொடர்ந்து இந்து மதத்தை மட்டுமா நீங்கள் விமர்சித்து வருகிறீர்கள்?
பொதுவாக எல்லாம் ஒன்றுதான் எனக்கு என்று சொல்லுவது, ஜகாதான்...! தனியாக, ஒவ்வொரு மதத்தின் குறைகளை பற்றியும் நீங்கள் பதிவு போட்டு, பாருங்களேன்!
பார்சல் பாம் வரும்!
தங்களின் விளக்கங்கள் படித்தேன், மிகவும் மகிழ்ச்சி.
மனிதம் வளர வேண்டுமெனில் மனிதம் வளர்க்கும் முயற்சிகள் என்ன, எப்படி செய்ய வேண்டும் என சிந்தித்து அதன்படி செயலாற்றுவோமெனில் நிச்சயம் மனிதம் வளரும்.
மதங்களுடன் கூடிய மனிதமும் வளர்க்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏன் இல்லாமல் இல்லை எனும் கேள்வி எழும் வாய்ப்பு இருக்கிறதுதானே?
நல்ல பதிவு வால்...
என்னால் விவாதிக்க இயலாது..ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொள்கிறேன்...
சிதறியதில் ஈரோடு கதிரின் முத்தைப் பொறுக்கிக் கொண்டேன்...
நல்ல பதிவு
ரொம்ப நல்ல கருத்து அருண்.
தொடரும் //
வாழ்த்துக்கள்.
//தனியாக, ஒவ்வொரு மதத்தின் குறைகளை பற்றியும் நீங்கள் பதிவு போட்டு, பாருங்களேன்!
பார்சல் பாம் வரும்! //
அப்படிதான் மனிதம் வளர்க்கனும்னா அதையும் தான் செய்வோமே!
//மதங்களுடன் கூடிய மனிதமும் வளர்க்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏன் இல்லாமல் இல்லை எனும் கேள்வி எழும் வாய்ப்பு இருக்கிறதுதானே?//
மதம் என்று வந்து விட்டாலே குறுகிய வட்டத்திற்குள் சிக்கி கொள்ள வேண்டியிருக்கிறதே! மதத்தையும், மத அடையாளங்களையும் வீட்டிற்குள் மட்டுமே வைத்து கொண்டால் ஒருவேளை சாத்தியமாகலாம்! ஆனால் நம்ம மக்களுக்கு அது ஒத்துவருமான்னு தெரியலையே!
//வெ.இராதாகிருஷ்ணன் said...
மதங்களுடன் கூடிய மனிதமும் வளர்க்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏன் இல்லாமல் இல்லை //
ஆமாம் சபாஷ். நிச்ச்யம் வளரும்.
// வால்பையன் said...
மதம் என்று வந்து விட்டாலே குறுகிய வட்டத்திற்குள் சிக்கி கொள்ள வேண்டியிருக்கிறதே! மதத்தையும், மத அடையாளங்களையும் வீட்டிற்குள் மட்டுமே வைத்து கொண்டால் ஒருவேளை சாத்தியமாகலாம்!//
என்ன கொடுமை வால் இது?
மதத்தால் மனித நேயம் வளரும் என்றால் ஏன் அதை பொத்தி வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டும். வீதிக்கு வர என்ன தயக்கம்?
இஸ்லாம் மனித நேயம் (மும்பை, 9/11)
சனாதன மனித நேயம் (சமணர்கள் கழுவேற்றல் மற்றும் தீண்டாமை)
கிறித்துவ மனித நேயம் (சிலுவைப்போர்கள் Crusades -wars of the cross))
புத்த மனித நேயம் (இலங்கை)
போன்ற மனித நேயங்கள் எல்லாம் தெருவிற்கு வர வேண்டும்.
வந்து எல்லாவற்றையும் சுபிட்சமாக்கட்டும்.
**
நல்லது வெளியில் வரட்டும் , கெட்டது வீட்டில் இருக்கட்டும்.
மதம் நல்லதா? கெட்டதா?
// வால்பையன் said...
//தனியாக, ஒவ்வொரு மதத்தின் குறைகளை பற்றியும் நீங்கள் பதிவு போட்டு, பாருங்களேன்!
பார்சல் பாம் வரும்! //
அப்படிதான் மனிதம் வளர்க்கனும்னா அதையும் தான் செய்வோமே! //
// வால்பையன் said...
//மதங்களுடன் கூடிய மனிதமும் வளர்க்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏன் இல்லாமல் இல்லை எனும் கேள்வி எழும் வாய்ப்பு இருக்கிறதுதானே?//
மதம் என்று வந்து விட்டாலே குறுகிய வட்டத்திற்குள் சிக்கி கொள்ள வேண்டியிருக்கிறதே! மதத்தையும், மத அடையாளங்களையும் வீட்டிற்குள் மட்டுமே வைத்து கொண்டால் ஒருவேளை சாத்தியமாகலாம்! ஆனால் நம்ம மக்களுக்கு அது ஒத்துவருமான்னு தெரியலையே! //
உண்மைதான் வாலு!
ஆணால் இதெல்லாம் நடக்காது, மனிதம் என்பது, தனி, எங்கும் இருக்கும்!
எல்லா மதத்தினரிடமும் இருக்கும்!
மதத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருக்க மற்ற மதத்தினர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்!
அரசியலிலும் (ல்-வாதிகளுடனும்) மனிதம் வளர வேண்டும் இங்கே, அதுவே தற்போதைய தேவை!!
மதத்தை மறப்போம்!
நல்ல பகிர்வு..மதம் இனம் மொழி எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டு நாம் மனிதர்கள்....
\\\\A Man without TAIL said...
///நான் இஸ்லாத்துக்கு எதிரி அல்ல, கடவுளுக்கும், மதத்திற்கும் எதிரி!--வால்பையன் said...
January 15, 2010 9:58 PM/// செமக்காமடி. செமப்பெத்தல். இதுக்குத்தான் எல்லாரும் சொல்றாங்க வால்ஸ், கொஞ்சம் அடச்சுக்கங்கன்னு. மாட்டுப்பொங்கலும் அதுவுமா முழுத்தண்ணியில ஒரே மப்புல கண்டபடி உளறாதீங்க வால்ஸ். "எனக்கு எல்லா உணவையும் பிடிக்கும். ஆனா, டைஜஸ்டிவ் சிஸ்டமும் எக்ஸ்கிரீட்டறி சிஸ்டமும் தான் பிடிக்காது".---இதில் என்ன உளறல் இருக்கிறது என்று நாளை உங்களுக்கு போதை & ஹாங்ஓவர் தெளிந்தபின்னால் நிதானமாய் படித்து பதில் சொல்லவும்.\\\\
oh..! still not coming to normal... that is your pothupuththi.
@ A Man without TAIL
நல்லா சிரிப்பு வர்ற மாதிரி இருந்தது உங்கள் பின்னூட்டம்!
உங்களை பொறுத்தவரை கடவுள் என்றால் அல்லாஹ்!
மதம் என்றால் இஸ்லாம் மட்டும் தான் இல்லையா!?
:)
நிச்சயமாக எனக்கு அந்த எண்ணம் இல்லை தோழரே! மதங்கள் கடந்த மனிதம் வளர வேண்டும் என்ற ஆசையை தவிர வேறொன்றும் இல்லை என்னிடம்!//
இதுதான் சொல்ல வருகிறீர்கள்,
மண்ணில் புதைந்த மலை நெம்புவதற்கு நிறைய கருவிகள் தேவைபடுகிறது. இதுதான் சரி வா என்று கூப்பிடவில்லை
பொதுவில் வையுங்கள், புரிய வேண்டுபவர்களுக்கு புரியட்டும். இல்லை அடிபட்டுதான் புரிந்துகொள்வேன் என்று புண்ணாகி வந்தால், மீண்டும் கடிந்து கொள்ளாமல் மருந்து போடுங்கள் அருண். எப்போதுமே மரியாதையும், அன்பும், பொறுமையும்
நிச்சயம் சாதிக்கும். தொடருங்கள்:).
//அந்த புத்தகத்தில் போட்டிருக்கு, அந்த தாத்தா அப்படி தான் செய்ய சொன்னார் என்றால் நாம் முன்னோர்களிடமும், புத்தகங்களிடமும் மூளையை அடகு வைத்து அத்துடன் ஐக்கியமாகி விட்டோம் என்று தான் அர்த்தம் //
வால் ...தெரியாமல் தான் கேட்கறேன் பதில் சொல்லுங்க ....நீங்க மட்டும் என்ன... டார்வின் கூட கப்பலில் சென்று...அவர் பார்த்த evolution சம்பந்தமான ஆதாரங்களை பார்த்தீங்களா ?... இல்லை அவர் கூட போனவர்கள் யாராவது உங்களுக்கு நல்ல அறிமுகமா ? ..இல்லைனா அவர் புகைபடம் எடுத்தாரா ? அதை பார்த்தீங்களா ? ..
....பிக் பாங்...நடந்தத பார்த்தீங்களா ? .....இல்லைனா அதை பார்த்தவர்கள் எடுத்து வச்ச புகைபடம் எதனாச்சு பார்த்தீங்களா ? ரெண்டும் இல்லையா ..அப்புறம் ஏன் அதை உங்க வீட்டு கொள்ளை புறத்தில் நிக்கும் போது பார்த்த மாதிரி நம்பறீங்க ?
எல்லாம் எப்படி போய்ட்டுயிருக்கு?
@ Sammy
டார்வின், பெரியார் என்று யார் சொன்னாலும் நம்புவது பகுத்தறிவாளனின் வேலையில்ல தல! பதிவுலயே சொல்லியிருக்கிறேன், உண்மையின் அதிகபட்ச சாத்தியகூறுகளை மட்டுமே நாம் உதாரணத்திற்கு முன் வைக்கிறோம்! இதில் யாரும் விதிவிலக்காக இருக்கமுடியாது! நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியலைனா நானும் பேந்த பேந்த முழிச்சிகிட்டு தானே நிக்கனும்!
உண்மையை சொல்லனும்னா டார்வினின் எந்த புத்தகமும் நான் படித்ததில்லை, அது தமிழில் கிடைக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது!
me the 45th
//உண்மையின் அதிகபட்ச சாத்தியகூறுகளை மட்டுமே நாம் உதாரணத்திற்கு முன் வைக்கிறோம்//
//உண்மையை சொல்லனும்னா டார்வினின் எந்த புத்தகமும் நான் படித்ததில்லை//
உண்மையின் சாத்தியகூறுகளை ஆராய்ந்து இருப்பீர்கள் என்றால்..... நீங்கள் படித்து இருக்கணுமே தல !....நீங்களும் யாரோ வாத்தியார் தாத்தா சொன்னதோ, முன்னோர்கள் சொன்னதோ நம்பின மாதிரி தானே அர்த்தம்...
//உண்மையின் சாத்தியகூறுகளை ஆராய்ந்து இருப்பீர்கள் என்றால்..... நீங்கள் படித்து இருக்கணுமே தல !....நீங்களும் யாரோ வாத்தியார் தாத்தா சொன்னதோ, முன்னோர்கள் சொன்னதோ நம்பின மாதிரி தானே அர்த்தம்...//
உங்களுக்கும் எனக்கும் உரையாட உரிமையுண்டு! பிறக்கும் போதே யாரும் முழு அறிவோடு பிறப்பதில்லை! ஆனால் உங்களது கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லையென்றால் நான் உண்மையை ஒத்து கொள்வேன்!
உங்களது கேள்வி என்னவென்று தெரிந்து கொள்ளலாமா!?
An interesting discussion in http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/
That's good for all.
வால்பையன், மேல் ஜனவரி 20th, 2010 இல் 1:06 மாலை சொன்னார்:
1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்கமுடியவில்லை!?
2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தை சொல்ல முடியவில்லை!?
3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகை படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!?
4.இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளை படைத்தது யார்!?
5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக்கூடாது!?
*****
இதுல அஞ்சு கேள்வி இருக்கு, பதில் சொல்லுங்க, வரிசையா கேட்டுகிட்டே இருக்கேன்!
inimai, மேல் ஜனவரி 20th, 2010 இல் 5:08 மாலை சொன்னார்: வால்பையன்,
உம்ம கேள்விகளெல்லாம் ஏற்கனவே எல்லாரும் கேட்டது தான். பதில் உண்டு ஐயா. இங்கு சொல்லாத காரணம் மேலே சொன்னதுதான்.
மறவாமல் நேரடி விவாதத்தில் செங்கொடிக்கு இந்த மாதிரி அசட்டு கேள்விகளை கேட்க உதவியாக இருங்கள்.
வால்பையன், மேல் ஜனவரி 20th, 2010 இல் 7:10 மாலை சொன்னார்:
இது தான் உங்கள் பதிலாக வரும் என்று நான் எதிர்பார்த்தேன்!
என் போன் நம்பர் 9994500540
அட்ரஸ் வேணுமா!?
நான் கழுத்தையெல்லாம் பிடிக்க மாட்டேன், நேரில் வர்றிங்களா விவாதத்திற்க்கு!
inimai, மேல் ஜனவரி 20th, 2010 இல் 7:53 மாலை சொன்னார்: பையா, இந்த தைரியத்தை நான் மெச்சுகிறேன்.
முகவரி:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
போன்- 91 044 25215226
வால்பையன், மேல் ஜனவரி 20th, 2010 இல் 7:58 மாலை சொன்னார்:
முகவரிக்கு நன்றி!
சந்திப்பு நடக்கும் சமயம், எனக்கும் தகவல் அளித்தால் கலந்து கொள்கிறேன்!,
inimai, மேல் ஜனவரி 20th, 2010 இல் 7:58 மாலை சொன்னார்:
பையா,
இல்லை அவர்களை TNTJ அல்லது PJ அவர்களை நான் உம்மிடம் வரச்சொல்லவா?
#
வால்பையன், மேல் ஜனவரி 20th, 2010 இல் 8:02 மாலை சொன்னார்:
தாராளமாக, தனி ஒருவனாக அவர்களிடம் விவாதிக்க நான் தயார்!
நல்லா நச்..நச்..நச்சுன்னு சொல்றிங்க வால்.நல்ல் பதிவு..
நல்ல படைப்பை தந்ததிற்கு நன்றி
’’’’கடவுள் இருக்கு, இல்லை என்ற வாதங்கள் பலநூறு வருடங்களாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன! என்றோ நிறுபிக்கப்பட்டிருந்தால் இன்று என்னை போன்று பலர் எங்கே கடவுள் என கேட்டு கொண்டிருக்கமாட்டோம்,’’’
உமக்கு கடவுள் இல்லை என்று தோன்றினால் பொதிட்டு போகவேண்டியது தானே ஏன் இஸ்லாம் மதத்தை மட்டும் தாக்கி எழுதனும்.
சொல்லுங்க கேட்டுகிறேன்
இளமைத் துடிப்புடன் எழுதப்பட்ட பதிவு பகுத்தறிவின் தர்க்க மொழியில் பக்தர்களை சிந்திக்க வைக்கும். நன்றி, வால்பையன்.
ஆயிரத்தில் ஒருவனுக்கு மட்டும் ஆயிரம் பார்வைகள் வந்து கொண்டு இருக்கும் வலைத்தளங்களில்,நல்ல விஷயங்கள் பற்றி தெளிவுடன் பதிவு செய்யவும் கூடவே விவாதத்திற்கும் தயாராகவே இருக்கும் உங்கள் தைரியத்திற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேற்று தான் முதல் முறையாக தங்கள் தளத்திற்கு வந்தேன்.தொடரட்டும் தங்கள் பணி..புத்தக மூட்டையைச் சுமக்காமல், பாரதி சொன்னது போல் தெளிந்த அறிவைச் சுமந்து திரியும் எங்களைப் போன்றவர்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.வாழ்த்துக்கள்
அருமை.தொடரட்டும் அதிரடி.
நடுராத்திரி ஆகுது....
காலைல பாத்துக்கலாம்...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
Vaal,
I totally agree with each and every word of this post.
As I got the same view point, some times I actually wonder, whom we are talking to?
To people who believe in books written 1000 years before? To people who think so and so books got solution for every single problem? To people who think God is running this world??
Even very recently, in Haiti Earthquake nearly 50,000 people died. Where was the f***ing god?? If he can't stop such a thing from happening, what is the use of his existence??
Even if there is a god, he is useless, and he is not any worthier than bullshit!
F**k God, F**k all religions. Period!
வாலு...அருமையான அலசல்/பதிவு.
நிறைவான சிந்தனை.எத்தனைதான் சொன்னாலும் ஏறணுமே காதில.
காலம் உருண்டு விஞ்ஞான வளர்ச்சியில் உலகமே வளைஞ்சு போச்சு.இன்னும் எங்க வீடுகள்ல வேற மதமா ,ரெண்டாவது கல்யாண்மான்னு ஏதோ சொல்லக்கூடாத வார்தையை சொல்லிட்ட மாதிரி அசிங்கமா நினைக்கிறாங்களே !
மணிப்பக்கம் ஒருத்தராவது உண்மைய சொல்றது கொஞ்சம் ஆறுதல்.
//பொதுவாக எல்லாம் ஒன்றுதான் எனக்கு என்று சொல்லுவது, ஜகாதான்...! தனியாக, ஒவ்வொரு மதத்தின் குறைகளை பற்றியும் நீங்கள் பதிவு போட்டு, பாருங்களேன்!
பார்சல் பாம் வரும்!///
எப்படிங்க வினவு மாதிரி புரட்சிய விதைக்கிரோம்னு பீலா உடுற தளம் கூட பர்தா பத்தி எழுதினா ஐயப்பன பத்தி கூடவே எழுதி 'நான் ரொம்ப நல்லவன்'னு காட்டிக்கிறாங்க. வாலுக்காவது அந்த தைரியம் இருக்கான்னு பொறுத்திருந்து பாப்போம்.
//அந்த புத்தகத்தில் போட்டிருக்கு, அந்த தாத்தா அப்படி தான் செய்ய சொன்னார் என்றால் நாம் முன்னோர்களிடமும், புத்தகங்களிடமும் மூளையை அடகு வைத்து அத்துடன் ஐக்கியமாகி விட்டோம் என்று தான் அர்த்தம்///
பெரியார் இப்படிச் சொன்னார் பெரியார் அப்படிச்சொன்னார்ன்னு சொல்லி தமிழ் நாட்டு மக்கள நிம்மதியா வாழவிடாம ஒரு கூட்டம் பொதுபுத்தியில் அலையுதே அது பத்தி என்ன நினைக்கிறீங்க. ஒரு தனி பதிவு போடுங்க பாப்போம்.
இதை விடவும் பல விஷயங்கள் நம்மை கடிப்போடறதால இந்த மாதிரி யோசிக்காம பொதுவா அப்படியே போற மாதிரி இருக்கு(படிப்பு, மார்க், காலேஜ், படிப்பு மார்க், வேலை, திருமணம், குழந்தை, சீட், குடும்பம், குழந்தைங்க படிப்பு, மார்க், நம்ம வேலை...)
பிரபாகர்.
பயனுள்ள பதிவு வால்..
http://www.valpayan.blogspot.com
வால் நண்பா! இந்த சைட்ட கொஞ்சம் பாருங்க. நான் உங்க சைட்ன்னு நினைச்சிட்டேன்.
//உமக்கு கடவுள் இல்லை என்று தோன்றினால் பொதிட்டு போகவேண்டியது தானே ஏன் இஸ்லாம் மதத்தை மட்டும் தாக்கி எழுதனும். //
அதை உங்கள் கடவுள் வந்து சொல்லட்டும், அது வரை நீங்களும் ............... இருங்க!
//பெரியார் இப்படிச் சொன்னார் பெரியார் அப்படிச்சொன்னார்ன்னு சொல்லி தமிழ் நாட்டு மக்கள நிம்மதியா வாழவிடாம ஒரு கூட்டம் பொதுபுத்தியில் அலையுதே அது பத்தி என்ன நினைக்கிறீங்க. ஒரு தனி பதிவு போடுங்க பாப்போம். //
நிம்மதியா வாழ்றாங்களா இல்லையான்னு நீங்களோ, நானோ சொல்ல முடியாது,
நீங்கள் எனது பதிவுகளை முழுமையாக படித்ததில்லை போலும், பல இடங்களில் பெரியார் தொண்டர்களை சாடியிருக்கிறேன், உங்கள் பதிவில் கூட.
உங்களுக்கும் ப்ளாக் இருக்கு, உங்களுக்கும் நம்பிக்கை இருக்கு, உங்களுக்கும் கோவம் இருக்கு, தாராளமா எழுதுங்க, என்னை ஏன் ட்விஸ்ட் பண்ணி விடுறிங்க!?
//http://www.valpayan.blogspot.com
வால் நண்பா! இந்த சைட்ட கொஞ்சம் பாருங்க. நான் உங்க சைட்ன்னு நினைச்சிட்டேன். //
நான் தமிழிலே தற்குறி, ஆங்கிலத்தில் பதிவெழுத போறேனாக்கும்!
இது மாதிரி இன்னும் ரெண்டு மூணு போலி வால்பையன் ப்ளாக் இருக்கு, அது தற்செயலா நடந்ததா!? வேணும்னே செஞ்சாங்களான்னு தெரியல!
//இதை விடவும் பல விஷயங்கள் நம்மை கடிப்போடறதால இந்த மாதிரி யோசிக்காம பொதுவா அப்படியே போற மாதிரி இருக்கு(படிப்பு, மார்க், காலேஜ், படிப்பு மார்க், வேலை, திருமணம், குழந்தை, சீட், குடும்பம், குழந்தைங்க படிப்பு, மார்க், நம்ம வேலை...)//
விசயமே இது தானே!
இதற்காக நீங்கள் உங்கள் உழைப்பையும், முயற்சியையும் கைவிடாமல் போராடுகிறீர்களா!? அல்லது கோவில் குளம் சுற்றுகிறீர்களா!?
//நீங்கள் எனது பதிவுகளை முழுமையாக படித்ததில்லை போலும்,// ஆத்தாடி நீங்க ரொம்ப சீனியர். மல போல எழுதீருக்கீங்க. எல்லாத்தையும் படிக்க முடியல தான் தல.
//பல இடங்களில் பெரியார் தொண்டர்களை சாடியிருக்கிறேன், உங்கள் பதிவில் கூட.// ஆமாம். ஒத்துக்கரேன். நீங்க பத்தின்னன்னு ஒத்துக்கரேன்.
//என்னை ஏன் ட்விஸ்ட் பண்ணி விடுறிங்க!?// ஆகா. கோவிச்சிக்கிட்டீங்க போல இருக்கு. கோச்சுகுங்க, கோச்சுக்குங்க. நான் உங்கள ட்விஸ்ட் பன்னல தல. இந்த டைட்டில்ல நான் சொன்ன எல்லா பொது புத்தியும் கவராகுமான்னு தெரிஞ்சிக்கற ஆர்வம் தான் வேறொன்னும் இல்ல. நடத்துங்க பாக்கலாம்.
தோழர் வால்!
மிக அருமையான பதிவு. அதுவும் உங்களின் எழுத்தது நடை சூப்பர்! நான் ஒரு பதிவன் அல்ல. பின்னூட்டுவதும் ரொம்ப அரிது. ஆனால் இந்தப் பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டாமல் போக என் மனச்சாட்சி இடம் கொடுக்கல. உங்களுக்கு ஒரு Red Salute!
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
தோழமையுடன்,
இலங்கையில் இருந்து இ.அரவிந்த்.
//உமக்கு கடவுள் இல்லை என்று தோன்றினால் பொதிட்டு போகவேண்டியது தானே//
அது போதிட்டு இல்லைங்க
பொத்தீட்டு....
//ஏன் இஸ்லாம் மதத்தை மட்டும் தாக்கி எழுதனும்//
அவங்க தான் பாம் பார்சல் அனுப்புவாங்களாமே
--
//உமக்கு கடவுள் இல்லை என்று தோன்றினால் பொதிட்டு போகவேண்டியது தானே//
அது போதிட்டு இல்லைங்க
பொத்தீட்டு....
//ஏன் இஸ்லாம் மதத்தை மட்டும் தாக்கி எழுதனும்//
அவங்க தான் பாம் பார்சல் அனுப்புவாங்களாமே
--
1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்கமுடியவில்லை!?
சண்ட போடக்கூடாதுன்னு அவங்காத்தா சொல்லி இருக்காம் !
2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தை சொல்ல முடியவில்லை!?
அதெல்லாம் வியாபார யுக்தி ! ஆமா எல்லாம் தெரியும்னா எனக்கு அரிக்குது எங்க அரிக்குதுன்னு சொல்ல சொல்லுங்க
3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகை படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!?
இடைல பொங்கல் லீவு சோ ஊருக்கு போயிட்டாரு சம்சாரத்த பாக்க
4.இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளை படைத்தது யார்!?
உலகம்!
5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக்கூடாது!?
5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக்கூடாது!?
கூடாதுன்னு யாரு சொன்னா ...... தானா தோன்றதுக்கு முன்னாடி சாமி சும்மா இருக்க மாட்டாம தொண்டைய தொரந்துட்டார்
// ஒருவர் தீவிர கடவுள் நம்பிக்கையாளரா பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்! எந்த குழந்தையும் நான் இந்த மதத்தில் தான் பிறக்க வேண்டும் என விரும்பி பிறப்பதில்லை, ஆனால் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் யாருக்கும் குறைவதில்லை, அதை மதம் என்னும் மண்னை போட்டு மூட வேண்டாம், உங்களை குழந்தைகளுக்கு மதத்தை சொல்லி தராமல் வளருங்கள்!
அவர்கள் மனிதத்தை வளர்ப்பார்கள்!
Superb !!!
ரொம்ப நாளா இந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் போடறது எல்லாம் விட்டு இருந்தன்.
ஆனா இந்த பதிவு என்னைப் போட சொல்லுது.
பொது புத்தி இதுக்கு சரியான தமிழ் சொல் கிடைக்குமா?
கலைஞர் தொலைகாட்சி "விளக்கு வச்ச நேரத்துல" தொடர் பார்த்தேன்.
தன் பெண் பிள்ளைக்கு எப்ப திருமணம் செய்யலாம்னு சோசியர் போய் பார்த்தா ஒரு அம்மா.
சோசியர் சொன்னார் உன் மகளை விஷ "உயிர்" தீண்டும் என!
பிள்ளைகள் இதை நம்ப வில்லை.
பிள்ளைகள் அறிவார்ததுடன் பேசறாங்கன்னு சொல்லிட்டு, அப்பா அதைப் பத்தி அவளவா பயப்படல.
அவங்க வீட்டில் தேள் வந்து விட்டவுடன் அறிவுத் தெளிவுடன் இருந்த பிள்ளைகளே பயந்து அம்மா சொன்னதக் கேட்கிறாங்க.
இதுவரை அவங்க கிட்ட இருந்த மனித அறிவு அவர்களைக் காப்பாற்ற வில்லை.
இதே நிலை தான் நம் எல்லோரிடமும். நம்மைக் கடவுள்கள் காப்பாற்றுவர்!
//உங்களது கேள்வி என்னவென்று தெரிந்து கொள்ளலாமா!?///
நீங்க கேட்கும் கேள்வி தான்....உலகம் எப்படி உருவாச்சு ? உயிரினம் எப்படி உருவாச்சு ? மனிதன் எப்படி உருவானான் ?
வால் என்ற தனி மனிதர் .. 'புத்தகங்களிடமும் மூளையை அடகு' வைக்காமா....'தாத்தா ...முன்னோர்கள்' ....சொல்வதை நம்பாம, 'உண்மையின் சாத்தியகூறுகளை எந்த அளவுக்கு ஆராயந்திருக்கீர்' அப்படின்னு தெரியனும்......'அதை எப்படி ஆராயந்தீர்' என்பதும் தெரிய ஆவல்.
//நாளும் நலமே விளையட்டும் said...
நம்மைக் கடவுள்கள் காப்பாற்றுவர்!//
ஆமென்
எங்க போனாரு அவரு ? இவங்களையும் காப்பாத்தச் சொல்லுங்க ப்ளீஸ்
http://www.youtube.com/watch?v=hi64O9PpFOM
.
//உலகம் எப்படி உருவாச்சு ? உயிரினம் எப்படி உருவாச்சு ? மனிதன் எப்படி உருவானான் ?//
தனிப்பதிவாக போடுகிறேன் தல!
//உலகம் எப்படி உருவாச்சு ? உயிரினம் எப்படி உருவாச்சு ? மனிதன் எப்படி உருவானான் ?//
தனிப்பதிவாக போடுகிறேன் தல!
January 21, 2010 10:32 PM
WELCOME...WELCOME...
But....
///வால் என்ற தனி மனிதர் .. 'புத்தகங்களிடமும் மூளையை அடகு' வைக்காமா....'தாத்தா ...முன்னோர்கள்' ....சொல்வதை நம்பாம, 'உண்மையின் சாத்தியகூறுகளை எந்த அளவுக்கு ஆராயந்திருக்கீர்' அப்படின்னு தெரியனும்......'அதை எப்படி ஆராயந்தீர்' என்பதும் தெரிய ஆவல்./// -- DON'T BYPASS THIS CONDITION.
//'புத்தகங்களிடமும் மூளையை அடகு' வைக்காமா....'தாத்தா ...முன்னோர்கள்'//
Here SCIENCE is not included.
Kindly remember, anything without obvious proof is never called as science. They are called as simply theory. (eg; big-bang theory, Darwin's theory of evolution...etc.,)
//DON'T BYPASS THIS CONDITION.//
நன்றி அனானி...
பதிவின் ஆசிரியருக்கு.......நான் இல்லிங்கோ இந்த அனானி...:-)
யோசிக்க வைத்துள்ளீர்கள்..... யோசிப்பார்களா? என்பது தெரியாது
நல்லா இருக்கு ஜி..
//பொது புத்தி இதுக்கு சரியான தமிழ் சொல் கிடைக்குமா?//
பொது - ஜெனரல்
புத்தி - நாலேஜ்
ஸோ ஜெனரல் நாலேஜ்
///பொது புத்தி இதுக்கு சரியான தமிழ் சொல் கிடைக்குமா?//
பொது - ஜெனரல்
புத்தி - நாலேஜ்
ஸோ ஜெனரல் நாலேஜ் //
இதுக்கு தான் மண்டையில கிட்னி வேணுங்கிறது!
//'உண்மையின் சாத்தியகூறுகளை எந்த அளவுக்கு ஆராயந்திருக்கீர்' அப்படின்னு தெரியனும்......'அதை எப்படி ஆராயந்தீர்' என்பதும் தெரிய ஆவல்.//
ஒரு ஹாபை நாலே கட்டிங்க்ள ( சைட் டிஷ் இல்லாம ) அடிச்சுட்டு வெயில்ல உக்காந்தா வாந்தி வர ஒரு பத்து நிமிஷம் ஆகும். அந்த கேப்புல கண்ணு ரெண்டையும் இருக்க மூடிட்டு கவுத்தி வெச்ச காலி டம்ளர மனசுக்குள்ள கொண்டு வந்தீங்கன்னா ..... குண்டலினி எழும்பும் ! அப்போ உங்க எல்லா கேள்விக்கும் விடை வரிசையா கெடைக்கும்
//இதுக்கு தான் மண்டையில கிட்னி வேணுங்கிறது!//
விடுங்க தல எல்லாருக்கும் மண்டைலையே இருக்கணும்னு எதிர்பாக்க முடியுமா
//கலைஞர் தொலைகாட்சி "விளக்கு வச்ச நேரத்துல" தொடர் பார்த்தேன்.//
நீங்க எந்த நேரத்துல பாத்தீங்க
உரத்த சிந்தனை,தான்...
super!!!!!!!!
super!!!!!!!!
நல்ல பதிவு
நல்ல சிந்தனை வால். கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று நம்மால் சொல்ல முடியாது..ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய மனசாட்சிக்கு விரோதமாய் nadavaamal irunthaal sarithaan.
//நம்மைக் கடவுள்கள் காப்பாற்றுவர்!//
என்ன பன்மைல சொல்றீங்க ! ஒரே கடவுள்தான் !
நைட்ஷோ நித்தி ! என்கிற பரமஹம்ச நித்தியானந்தர்
î¤ô¢ô¤î¢ ¶¼è¢è£¢ªêò¢î õöè¢èñ -- ªðí¢è÷¢
óò¤ì¢´ ºèñô£¢ ñ¬ø¬õî¢îô¢;
õô¢ô¤ ò¤¬ìò¤¬ù»ñ¢ æé¢è¤ºù¢ù¤ø¢°ñ¢ -- Þï¢î
ñ££¢¬ð»ñ¢ Í´õ¶ ê£î¢î¤óé¢èí¢ì£ò¢;
õô¢ô¤ ò¤¬ìò¤¬ù»ñ¢ ñ££¢ð¤óí¢¬ì»ñ¢ -- ¶í¤
ñ¬øî¢îî ù£ôö° ñ¬øï¢îî¤ô¢¬ô;
ªê£ô¢ô¤î¢ ªî£¤õî¤ô¢¬ô, ñù¢ñîè¢è¬ô -- ºèê¢
«ê£î¤ ñ¬øªñ£¼ è£îô¤é¢°í¢«ì£?
1
Ý£¤ò£¢ ºù¢ªùø¤è÷¢ «ñù¢¬ñªòù¢è¤ø£ò¢? -- ðí¢¬ì
Ý£¤ò𢠪ðí¢èÀè¢°î¢ î¤¬óè÷¢ àí¢«ì£?
棤¼ º¬øèí¢´ ðöè¤òð¤ù¢ -- ªõÁñ¢
åð¢¹è¢°è¢ è£ì¢´õî¤ï¢ ï£íªñù¢ù¯?
ò££¤¼ï¢ ªîù¢¬ùò¤é¢° î´î¢î¤´õ££¢ -- õ½
õ£è ºèî¢î¤¬ó¬ò Üèø¢ø¤õ¤ì¢ì£ô¢?
裣¤ò ñ¤ô¢¬ôò® õ¦í¢ðêð¢ð¤«ô -- èù¤
èí¢ìõù¢ «î£½£¤è¢èè¢ è£î¢î¤¼ð¢«ð«ù£?
தில்லித் துருக்கர் செய்த வழக்கம் பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் ...........இதுக்கு மேல
கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கு தேவைனா இங்க போயி படிச்சுக் கொங்க http://www.tamilvu.org/slet/l9100/l9100ur2.jsp?id=191
ராஜன் ராதாமணாளன் நீ என்ன பார்பானுக்கு சொம்பு தூக்கியா
பாரதியாருக்கு லிங்க் தர்ரே
சூரியன்
hi vaal piyan
this article is republished in www.tamiljournal.com pathivukal section.
regards
mozhiventhan
tamil journal news editor
http://nithyatales.webs.com
http://nithyananda-cult.blogspot.com/
about nithyanadha- the FRAUD hindu "samiyar" who gets 1 lakh for 15 minutes visit to anyone's home for
"blessing the home"
வால், சரியான பதிவு. இந்த தெளிவு எல்லாருக்கும் இருந்து விட்டால் !!!
-மணிகுமார்
சரியா சொன்னிங்க தல ...
என்ன எழவுக்கு இப்படி?
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ
நாத்திகர்கள் அனைவரின் கோளாறும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. அதாவது எதையும் அரை குறையாக புரிந்து கொள்வது தான் அந்தக் கோளாறு.
மேற்கண்ட கேள்விகள் அனைத்திலும் அது தான் தெரிகிறது.
இப்லீஸை அழிக்கவில்லை என்பதற்கும் அழிக்க இயலவில்லை என்பத்ற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை. நமக்கு இயலுமான் அனைத்தையும் நாம் செய்ய மாட்டோம். நமக்கு இயலுமான விஷயத்தில் நமக்கு எது விருப்பமோ அதைத் தான் செய்வோம். இப்லீஸை அல்லாஹ்வுக்கு அழிக்க முடியவில்லை என்று குர் ஆன் எந்த வசந்த்தில் கூறி இருக்கிறது என்பதற்கு அவரிடம் ஆதாரம் கேளுங்கள். நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகு. அதைத் தான் அரை குறை என்கிறோம்.
இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. ஒரே வேதப்புத்தகத்தில் என்னால் சொல்ல முடியாதத்தால் பல வேதங்களில் சொல்லி இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினால் தான் இப்படி கேட்க முடியும். இவர் ஐந்து கேள்வி கேட்டால் மக்கள் மனதில் நன்றாக பதிய வேண்டும் என்பதற்காக் வாரம் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?
இங்கேயும் அதே அறை குறை தான் வெளிப்படுகிறது. நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருலைத் தூக்க முடியும். ஆனால் தேவை கேற்ப சிறிது சிறிதாக் தூக்கினால் நம்க்கு ஐம்பது கிலோ தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐமபது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது கேட்பாரா?
நாலாவது மற்றும் ஐந்தாவ்து கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்ல்வும். அதில் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லவும்.
கடவுள் படைக்கவில்லை என்று கூறும் இவர்க்ளும் ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். ஒரு அணு வெடித்து இந்த உலகம் எப்படி உண்டானது என்று கூறுகிறார்கள். அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள். ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மேபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப் பூர்வமானது.
எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.
அருமை ................ நண்பரே ........ இதுபோன்ற பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறோம் .....
வால், எதையோ உண்மையாக்க முயற்சிக்கிறீர்கள்! அல்லது எதையோ பொய்யாக்க முயற்சிக்கிறீர்கள்! உண்மையில் எதேனும் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறீர்களா?
உண்மையில் உங்களின் எழுத்து உங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. உங்களின் பின்னூட்ட கருத்துக்கள் உங்களின் நேர்மையைக் காட்டுகிறது.
படித்தேன், ரசித்தேன்!
வாழ்த்துக்கள்!
*/ வளர்ந்த நாடுகளை விட நாம 20 வருடம் பின் தங்கியிருப்பதற்கு காரணமே, எப்பவும் இந்த பொது புத்தியிலேயே திரியிறது தான்! */
ஒரு பூஜியத்தை விட்டுடீங்க இன்னு நினைகிறேன். என்னை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளில் உள்ள அறுபது வயது கிழவி கூட ரொம்ப நல்ல யோசிக்கறா .
//ஒரு பூஜியத்தை விட்டுடீங்க இன்னு நினைகிறேன். என்னை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளில் உள்ள அறுபது வயது கிழவி கூட ரொம்ப நல்ல யோசிக்கறா .//
அதையும் பாத்துட்டீங்களா ? நீங்க பலம் தின்னு கொட்டை போட்டவர்தான்
Post a Comment