திருப்ப முடியாதவை!

ஆளே மாறிகினாய்யா, சோக்காகீது கண்ணாடி, நிஜாரெல்லாம், பாத்து ஒரு அஞ்சு வர்ஷம் ஆகும், கண்ணாலாம் கட்டிகினானாம், ரெண்டு புள்ளங்கலாம், பழ்சயெல்லாம் மறந்துட்டானாம்,
நமக்கு தான் ஒரு இழவும் மறக்கமாட்டிகுது, நெஞ்சுல தச்ச முள்ளுகணக்கா குத்திகிணேருக்கு.
ஆனா ஒன்னு உதவி செய்யாங்காட்டியும் பரவால, உபத்ரம் மட்டும் செய்யகூடாது என்ன சகா நாஞ்சொல்ரது, வர்டா!


சரி உடு மச்சி நடந்தது நடந்துடுச்சி, இந்த டாவுகளே இப்பிடித்தான், நீ பேஜாராகாதன்னு ஒரு சால்னா கடையாண்ட போனோம், ரெண்டு பெரும் குறைய குறைய குட்சோம், அவன் எங்கயோ வடக்கால போறேன்னு சொன்னான், எனக்கு மனசெல்லாம் கஷ்டமா போச்சுப்பா, என்ன பொயப்புடா இதுன்னு வந்துட்டேன். அதான் சகா நான் அவங்ககூட கட்சியா சரக்கடிச்சது


மெய்யாலுமே அந்த பொண்ணு சொல்லிருஜ்சுபா! பின்ன சும்மா அய்யனார் அருவா கணக்கா நுப்பது, ஒன் மன்னாரு கழுத்துல கீதுன்னா எந்த பொண்ணு தான் மிர்சலாகாம இருக்கும், அதான் ஜகா வாங்கிருச்சு, எனக்கா மேட்டர் எதுவுமே தெரியாது.
அவனோ என்னை ஊரெல்லாம் தேடிகின்னு கீறான். கட்சியில புட்சிடான்பா, ஓஓஓஒன்னு ஒரே அழுவாச்சி.


இது தெரியாம என் ஃப்ரெண்டு அவரோட தன்யே போய்கினாம்பா, ஊருக்கே அப்பால இருக்குற கட்டுலு ஓட்டலு, அங்க முப்பது பேத்துக்கு நடுவால நம்ம பையன்,
எல்லார் கையிலயும் பெர்சு பெர்சா சாமானம் சும்மா பதமா கீது, நம்ம ஆளும் நீ முடிஞ்சா வெட்டிக்கோன்னு சவால் வுட்டுனுகிறான். சில பெற்ய மன்செங்கல்லாம் கெஞ்சி பாத்துருக்காங்க, கட்சியா சொல்லிட்டான், அந்த பொண்ண சொல்ல சொல்லுங்கோ நான் விட்டுடுறேன்னு.


நம்ம தோஸ்து ஒருத்தர் கீறாருப்பா, ஊருக்குள் பெரிய ரவுடின்னு அவரே சொல்லிக்குவாரு, அவராண்ட போய் ஹெல்ப் கேட்டேன், நானென்னமோ செய்ய நென்ச்சது ஹெல்பு தான். ஆனா அதுவே அவனுக்கு படா பேஜாரா பூச்சுப்பா. நம்ம ரவுடி தோஸ்தும் அந்த பொண்ணும் ஒரே கேஸ்டாம். வந்தது அங்கே தான் வினை. பட்சி கட்சி மாறியது.


அரசனுக்கும், ஆண்டிக்கும் தான் பிரச்சனையில்லை அந்த ரெண்டுமே நாந்தான்பா, இதெற்கெல்லாம் சேத்து வேட்டு வச்சிச்சி அவனோட பட்லி மேட்டரு, இவன் கொட்த லெட்டரு அவளோட வீட்ல சிக்கிகிச்சாம், அவள எங்கேயோ எஸ்கேப் பண்ணிட்டாங்களாம், தேடி கண்டுபிடிக்கணுமாம், நாம தான் பழக்கத்துக்கு எத வேணும்னாலும் செய்வோமே. கிளம்பிடோம்ல.


இதுக்கு முன்னாடி அவே ன் இத பத்தி என்னாண்ட பேஸ்னதேயில்ல, ஒரு தபா நான் அவே ன் வூட்டாண்ட போகsசொல்ல அந்த பொண்ணாண்ட பேசிகின்னு இருந்தத பார்த்தேன்.
நாலு வருஷமா லவ்விகின்னு கீறாராம். பொண்ணுவூட்ல மாலு கம்மினாலும், கேஸ்ட் பாப்பாங்களாம்.


அம்புட்டு குஜாலான பாருக்கு இதிக்கு முன்ன நான் போனதேயில்ல,
நானும் கீறேன்னு சொல்லிகிட்டா மாதிரி ஒரு டம்மி பல்பு ஒன்னு மினிக்கிகின்னு இருந்துச்சு அதுக்கு கீழ குந்துணோம், வசதியாகீறானாம், சொந்த பிஸ்னஸாம், உன்கும் வேல தர்றேங்கிறான், வாங்கி கொடுத்த பீருக்கு மண்டையையாவது ஆட்டனுமே ஆட்டிகினே யிருந்தேன்.


ரொம்பா நா கழிச்சி அவன பார்த்தேன், ஆளு கொஞ்சம் புஸ்டியா கீறான் ,
பாக்கச்சொல்லவே கண்டுகிணான், சரக்கடிக்கசொல்ல ஃப்ரெண்ட்சுகலாண்ட அவனையும் பாத்துருக்கேன், பேஸ்னாமாதிரி கூட ஞாபகங்கீது, சும்மா என்ன பார்த்ததும் ஒரு ஸ்மைல வுட்டுகினு ஃபிரியா இருந்தா வா மச்சி சரக்கடிக்கபோலான்னான். யார்ரா வருவான்னு குந்திகினுயிருந்தேன், உடுவேனா உடனே கிளம்பிட்டேன்.





*****************


டிஸ்கி:சற்றே மாற்றம் செய்த மீள்பதிவு!

45 வாங்கிகட்டி கொண்டது:

கிருஷ்ண மூர்த்தி S said...

மீள் பதிவுன்னா தலை "கீழ்" பதிவு அப்படீன்னு ஒரு அர்த்தம் இருக்கோ:-))

Mahesh said...

இன்னாவோ ஸொல்ல வர்ரன்னு தெர்து...ஆனா இன்னான்னுதான் புர்ல....

Menaga Sathia said...

வாலு என்ன எழுதிருக்கிங்க.இது சிறுகதையா? ஒன்னுமே புரியல்ல.

அ.மு.செய்யது said...

மன்னிக்கவும்....சுத்தமாக புரியவில்லை.( முதல் 3 பாரா மட்டும் தான் படித்தேன். கீழே செல்ல மனம் வரவில்லை.)

மெட்ராஸ் பாஷைக்கு மட்டும் மெனக்கெட்டிருக்கிறீர்கள்.அது மட்டும் பிசிரில்லாமல் வந்திருக்கிறது.

தேவன் மாயம் said...

நல்லா கீது வால்!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

வேணாம் எல்லாரும் பாவம்ன்னு பாக்குறேன்....

அப்பறம் நாங்களும் களத்துல இறங்கவேண்டிவரும்

-:)

ஊர்சுற்றி said...

இங்கே என்ன நடக்கிறது?! ஏதோ புரிந்த மாதிரியும் உள்ளது புரியாத மாதிரியும் உள்ளது?!

பீர் | Peer said...

//தேவன் மாயம் said...

நல்லா கீது வால்!!//

மருத்துவரே, எதுவாக இருந்தாலும் தமிழில் சொல்லவும்.

நான் said...

முத புரியிர மாதிரி இருந்தது.....


இரு நைனா தண்ணி அடிச்சுட்டு வந்து பார்க்குரேன்...

Arun Kumar said...

மீள் பதிவா தலை கீழ் பதிவா?

ஜெட்லி... said...

என்ன நைனா நீ அடிச்ச சரக்கெல்லாம்
தெளிய வச்சிட்ட....
உன்னாண்ட ஒரு புல் இருந்த இப்படிக்க
தள்ளு....

அமுதா கிருஷ்ணா said...

தாங்க முடியலை...

ஹேமா said...

வாலு எனக்கு ஒண்ணுமே புரியல.ஓட்டு மட்டும் போட்டேன்.

Ashok D said...

//பொண்ணுவூட்ல மாலு கம்மினாலும், கேஸ்ட் பாப்பாங்களாம்.//

துட்டு நெறிய இந்துக்கிச்சின்னு வெச்சிக்கொ.. யவனும் கேஸ்ட் என்னா மதமே பாக்கமாட்டானுங்கோ...

Ashok D said...

யப்பா வாலு மெட்றாஸு பாஸ்ஸ உன்க்கு சுமாராதான் வர்து. நான் அந்த பாசைல ஒரு கவிஞ்ஜ ரெடி பண்ணின்னுகிறேன் அதுவரிக்கும் மெட்ராஸு பாஸய எதுவும் பண்ணாதப்பா..

அகல்விளக்கு said...

இன்னாபா.

எத்தினி ரவுண்டு ஊத்திகின.

இப்டி கலக்ற.....

அறிவிலி said...

புர்ல... புர்ல ங்கறவங்களுக்காக...

கடசில இருக்கற சப்ப மூக்கு பிகரு ஏன் தல கீழா இருக்குன்னு யோசிங்கப்பா....

வாலு.. சூப்பர்பா (கதை இல்ல ஐடியா)

அப்பறம் ஒரு சந்தேகம், இது பின் நவீனத்துவத்துல சேருமா?????

மேவி... said...

RAITTU.....


SEAT POTACHU... OFFICE KKU POI PADIVAI PADIKKIREN

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆமா என்னா மொழியில எழுதியிருக்கீங்க வால்..

யாழினி said...

சென்னைக்கு நா போனதில்லை....
ஆனா என் காத சுத்தி இந்த மொழி பறந்திட்டே இருக்குபா...
எனக்கு எதும் புரில...

ப்ரியமுடன் வசந்த் said...

கண்ணக்கட்டுது சாமீய்ய்.....

நாயி சேகர் said...

புரியும் ஆனா புரியாது

Rajan said...

கத எழுதறவன் மனுஷன்...

கத படிக்கறவன் பெரிய மனுஷன்...

நான் பெரிய மனுஷன்! நீங்க மனுஷனா ?

ஊடகன் said...

கலக்குறீங்க வால்......... தொடருங்கள்.......................

ஊடகன் said...

கலக்குறீங்க வால்......... தொடருங்கள்.......................

Unknown said...

ஒன்னியும் புர்ல மாமே..

JACK and JILLU said...

நமக்கு புரிஞ்சிருச்சு.... அம்மணிக்குத்தான் புரியல!

க.பாலாசி said...

இந்த பாஷைய ஈசியா பேசிடலாம்....ஆனா அதை டைப்பண்றதுதான் கஷ்டம்...ரொம்பவே மெனக்கட்டிருக்கீங்க...நல்லா சொன்னாலே நமக்கெல்லாம் புரியமாட்டுது. நீங்க தலைகீழா சொன்னா எப்டி நைனா புரியும்...

Beski said...

பின்னூட்டத்துல புரிய வச்சவங்க வாழ்க.

சோக்காகீதுபா.

பஞ்ச் பாலா said...

இஷ்டம் இருந்த எல்லா கட்டுரைய ஆன்லைன்ல போடு, சும்மா இந்தியா டுடைல பாரு, அனந்த விகடன்ல பாரு, சரோஜா தேவில பாருன்னு நச்சரிக்காதே. உனக்காக எல்லாம் காசு செலவு பண்ண முடியாது. புரியிதா...என்னத்த புரியுதோ.

"எழுதிட்டு சொல்லுறவன் பல்லி, சொல்லாம எழுதறவன் கில்லி."

பஞ்ச் பாலா said...

அய்யோ மன்னிச்சிருங்க, யாருக்கோ அனுப்பவேண்டியதை உங்களுக்கு தவறுதலா அனுப்பிட்டேன்.

"சாந்தி ஒயின் ஷாப்புல பக்கம் வாரும், உள்ள போய் அடிச்சா வாந்தி வரும்"

கண்ணகி said...

வால்பையா மப்பு அதிகமோ

தருமி said...

ஊகும் ....

:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

புர்ல....தலை

அன்புடன் அருணா said...

ஒண்ணும் புரிலை!!!

வால்பையன் said...

எனதருமை நண்பர்களுக்கு பதிவின் கடைசியில் இரு படத்தை கொடுத்துள்ளேன்
அதை கடைசியில் கொடுக்க காரணம் அதில் உள்ள குறியீடு தான்!

பதிவை கடைசி பராவிலிருந்து படியுங்கள்!
ப்ளீஸ்!

கண்ணகி said...

nanri. நன்றி. தங்கள் முதல் கருத்துரைக்கும், வருகைக்கும் நன்றி. ம்ற்றும் தமிழ்க்குடுன்ம்பம், ஷிர்டி.சைதாசன், ஜாஸ்வந்தி, பார்வையாளர்கள், அவர்களுக்கும் எப்படி எந்த வழியாக நன்றி தெரிவிப்பது என்றும் தெரியவில்லை. பின்னுட்டப் பெட்டி எங்கே உள்ளது? அதை எப்படி பயன்படுத்துவது? சொல்லுங்களேன் ப்ளீஸ்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

முதல்ல பின்னூட்டங்களை படிச்சிட்டு பதிவை படிச்சதால தப்பிச்சுட்டேன்னு நினைக்கிறேன்

நசரேயன் said...

பழைய சோறு நல்லாவே இருக்கு

அ.மு.செய்யது said...

ஓக்கே..வால் !!! த‌லை கீழா ப‌டிச்ச‌தும் புரிஞ்சிடுச்சி !!!( நல்லா இருக்கு )
முன்னாடியே சொல்லிருக்க‌லாம்ல‌...

Jawahar said...

அடுத்தமுறை இதுமாதிரி பதிவு போடும் போது கூடவே பொழிப்புரையும் எழுதவும். பரிமேலழகர் உரை படிச்சி புரிஞ்சிக்கிறதுக்குள்ளே முந்தின வரி மறந்து போகுது.

http://kgjawarlal.wordpress.com

கலையரசன் said...

நல்லாயிருக்கு தல!

Joe said...

ஒரு எழவும் புரியல!

வால்பையன் said...

படித்து டரியலான நண்பர்களுக்கு நன்றி!

இதாவது தலைகீழாக இருக்கு!
நான் படித்த ஒரு நாவல் பக்கங்கள் மாறி மாறி வரும்! படித்து புரிந்து கொள்வதற்குள் டரியலாகும்!

அப்படி கூட ஒரு கதை எழுதும் யோசனை உள்ளது!

பாரதசாரி said...

இது ஒரு நல்ல முயற்சி - வாழ்த்துக்கள்

!

Blog Widget by LinkWithin