குடித்தொழில்!

ஒரிஜினல் வெர்ஷன்


படம் உதவி



தள்ளாடித் துவளும்
குடிகாரனின் கால்கள்
ஐந்தாறு ரவுண்டுகள்
அடித்திருக்க வேண்டும்
கையை நீட்டி
சிகரெட் கேட்கும் நண்பணின்
பாக்கெட்டுக்குள் ஒளிந்து,
சரக்கு, வாட்டர்,
கடலை என எதற்க்கும்
வெளிவராத நூறுருபாய்
தாள்களை காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்;
எனக்குப் பதட்டமாக இருக்கிறது
நாலுரவுண்டில் போதையாகும் இவன்
பின்னாட்களில் திருந்தலாம்
வெள்ளையடிக்கலாம்
சாமியாராகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது

57 வாங்கிகட்டி கொண்டது:

மாயவரத்தான் said...

இப்படி பிச்சு பிச்சு எளுதினா அதுக்கு பேரு கவிதையா?

வால்பையன் said...

நீங்க தான் இணைச்சதா!?

இது அனுஜன்யாவின் கவிதைக்கு எதிர்கவுஜ!
ஒரிஜினலையும் பாருங்க நண்பரே!

மாயவரத்தான் said...

//நீங்க தான் இணைச்சதா!?//


???

Mahesh said...

முடியல வால்... முடியல.... :)))

வால்பையன் said...

தமிழ்மணத்தில் நான் இணைக்கவில்லை, அதான் கேட்டேன்!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சூப்பர்

கிருஷ்ண மூர்த்தி S said...

அவன்.....

குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று...
அதுகூடப் பரவாயில்லை!

எங்கே தேர்தலில் ஜெயித்து
மக்கள் சேவைக்கு வந்துவிடுவானோ?
அதுதான் ரொம்பப் பயமாய் இருக்கிறது!

R.Gopi said...

//பின்னாட்களில் திருந்தலாம்
வெள்ளையடிக்கலாம்
சாமியாராகி
நகரை அச்சுறுத்தலாம்.//

ஏன் வால்... அர‌சிய‌ல்வாதியாகி கொள்ளை அடிக்க‌ கூடாதா? முக்கிய‌மான‌ மேட்ட‌ர‌ விட்டுட்டியே "த‌ல‌"... இல்ல இல்ல‌ "வால்"....

butterfly Surya said...

மேலே உள்ள படத்தில் நீங்க எங்க இருக்கீங்க..??

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...

தமிழ்மணத்தில் நான் இணைக்கவில்லை, அதான் கேட்டேன்!//

ஓ இதுவேற நடக்குதா...
காசா பணாமா-னு இணைச்சு விட்டிருபாங்க

ஹேமா said...

வாலு,
படம்தான் கவிதையை விட அசத்தல்.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர்.. :)

Unknown said...

:-)

ஆரூரன் விசுவநாதன் said...

உண்மைதான்........


அன்புடன்
ஆரூரன்

Prabhu said...

போங்கப்பு போய் பிள்ளைகள படிக்க வைக்க பாருங்க! அத விட்டுப்புட்டு கப்பித்தனமா கவுஜ எழுதிக்கிட்டு :)

அமுதா கிருஷ்ணா said...

இந்த போட்டோல நீங்க எங்க இருக்கீங்க?

தினேஷ் said...

தள்ளாடித் துவளும்
குடிமகனின் கால்கள்
பதினாறு கடைகளைச்
சுற்றியிருக்க வேண்டும்
காலை மடக்கி
படுத்து கிடக்கும் மாட்டின்
இடுப்பில் சாய்ந்து,
ரம், பிராந்தி,
சாராய்ம், கஞ்சா,
போததரும் நூறு
சரக்குகளை காலையிலிருந்து
கொண்ட களைப்பு அவனிடத்தில்;
எனக்குப் பதட்டமாக இருக்கிறது
சிறுவயதில் போதயுறும் இவன்
பின்னாட்களில்
சரக்குவிக்கலாம்
அரசியல்வாதியாகி
நாட்டை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
குடிகாரனாவோ
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது...

மேவி... said...

tasmaac md neenga thaan

Ashok D said...

கடைசியில் அவன் பிரபல ப்ளாகர் ஆகலாம் ;)

அ.மு.செய்யது said...

அஷோக் சொன்னதை வழிமொழிகிறேன்.

அனுஜ‌ன்யா க‌விதை கீற்றுல‌ வ‌ந்துச்சாமே..நீங்க‌ உயிரோசைக்கு அனுப்புங்க‌ த‌ல‌..

சொல்லரசன் said...

//தள்ளாடித் துவளும்
குடிகாரனின் கால்கள்
ஐந்தாறு ரவுண்டுகள்
அடித்திருக்க வேண்டும்//


இந்த வரி உங்களுக்கு பொருந்ததே!

யோ வொய்ஸ் (யோகா) said...

என்னமோ குடிக்கிறத பத்தி எழுதியிருக்கீங்க? ஆமா குடிக்கிறதுன்னா என்னா வால்

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))

க.பாலாசி said...

//அதெல்லாம் பரவாயில்லை.
குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது//

இதே வரிகள் அனுஜன்யா அவர்களின் கவிதைக்கு கீழே பின்னூட்டமிட்டவரும் போட்டுவிட்டாரே...

கலையரசன் said...

குடிகாரனாவே இருந்துட்டா.. யாரு வாங்கி தருவா?

மணிப்பக்கம் said...

ஹா ஹா .... ஹா ... கலக்கல் வாலு....... ;)

sriram said...

வாலு
உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல.
நீ பாட்டுக்கு குவியல, சாதி & கடவுள் மறுப்புன்னு போக வேண்டியதுதானே.
யாரையோ பாத்து நீயும் இந்த் கேபிளும் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க..
வால்ல்லு, கவுஜயெல்லாம் நமக்கு வேணாங்கண்ணு, இத்தோட விட்ரு கண்ணு (நெத்தியடி ஜனகராஜ் ஸ்டைல்ல படிக்கவும்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Sabarinathan Arthanari said...
This comment has been removed by the author.
Sabarinathan Arthanari said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

நாலுரவுண்டில் போதையாகும் இவன்
பின்னாட்களில் திருந்தலாம்
வெள்ளையடிக்கலாம்
சாமியாராகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது//

க‌விதையில‌ ந‌ல்ல "கிக்" இருக்கு வாலு.

Anbu said...

:-)))

Beski said...

ஜூப்பரு வால்.

சூரியனும், அசோக்கும்தான்.

தமிழ் அமுதன் said...

மூட கெளப்பிட்டிங்க...!

Kumky said...
This comment has been removed by the author.
Kumky said...

க க க போ...

ப்ரியமுடன் வசந்த் said...

:)))

பீர் | Peer said...

//குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது//

:-(

RAMYA said...

அது சரி போட்டோ போட்டு காட்டுறீங்களா?

இதுலே எதிர் கவுஜ வேறே :(

ம்ம்ம்ம்... ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லே :))

RAMYA said...

//
குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது
//

நியாயமான பயம் கலந்த எதிர்பார்ப்பா தெரியுது!!

நந்தாகுமாரன் said...

அபாரமான எதிர் கவிதை ... மிகவும் ரசித்தேன்

பித்தனின் வாக்கு said...

எனக்கு தெரிந்து அரசியல்வாதிகள் தான் முன்னாள் குடிகாரர்கள், எப்பவும் சிவந்த கண்களுடன் இருக்கும் மந்திரிகளும் உண்டு. ஆனா வால்பையனுக்கு சாமியார் பத்தி சொல்லுலைனா மப்பு ஏறாது. கவிதை எல்லாம் எதுக்கு தலை? சும்மா பார்ப்பனீயம் ஒன்னு போதும் நீங்க நிறைய எழுத நாங்க பின்னூட்டத்தில் கும்மியடிக்க.

அமா எப்ப மொட்ட அடிச்சீங்க? சொல்லவேயில்ல! சொல்லையிருந்த நங்களும் உங்களுக்கு காது குத்தி மில்லி கறி எல்லாம் சாப்பிடுவம் இல்லா.

vasu balaji said...

நல்லாருக்கு எதிர் கவுஜ.

Sabarinathan Arthanari said...

//கிருஷ்ணமூர்த்தி said...

எங்கே தேர்தலில் ஜெயித்து
மக்கள் சேவைக்கு வந்துவிடுவானோ?
அதுதான் ரொம்பப் பயமாய் இருக்கிறது!//

கவுஜ அருமை. அண்ணன் கிருஷ்ணமூர்த்தி க க க போ...

Prapa said...

நீண்ட நாட்களுக்கு பிறகு கவுஜ....
ஐயோ தல அதுவும் நம்ம மேட்டர்....

கிரி said...

// மாயவரத்தான்.... said...
இப்படி பிச்சு பிச்சு எளுதினா அதுக்கு பேரு கவிதையா?//

//butterfly Surya said...
மேலே உள்ள படத்தில் நீங்க எங்க இருக்கீங்க..??//

:-)))))

Suresh Kumar said...

நல்ல தொழில் குடி தொழில்

அன்புடன் மலிக்கா said...

வால் பையா, கவிதை சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இறக்குவானை நிர்ஷன் said...

ஒரு மார்க்கமாத் தான் கிளம்பியிருக்கீங்க...

இது எங்க வச்சி எழுதின கவித? மறைக்காம சொல்லனும்.

ராஜ நடராஜன் said...

இன்னா ஸ்டைலு இது-படம்?

ராஜ நடராஜன் said...

சாமியாராய் நகரை அச்சுறுத்துவதை விட முழுவாழ் குடிகாரனாவது உத்தமம் அல்லவா?

யாழினி said...

ஒரு மார்கமாவே.... எழுதறிங்களே...????

Rajan said...

குடிச்சிட்டு படிக்கவும் ; படிச்சிட்டு குடிக்கவும் ஏற்ற கவித!

"உழவன்" "Uzhavan" said...

குடிகாரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது

எதிர் கவுஜ ஆனாலும் நல்ல கவுஜ

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஹலோ வாழ், குழிகாரர் சங்க தழைவர் என்ற முழையில் கண்டனங்களை தெழிவித்து கொழ்கிழேன்

வால்பையன் said...

நன்றி மாயவரத்தான்
நன்றி மகேஷ்
நன்றி பாலகுமாரன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி கோபி
நன்றி சூர்யா
நன்றி கதிர்
நன்றி ஹேமா
நன்றி அக்கீலீஸ்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி விசுவநாதன்
நன்றி பப்பு
நன்றி அமுதா கிருஷ்ணன்
நன்றி சூரியன்
நன்றி டம்பி மேவி
நன்றி அசோக்
நன்றி அ.மு.செய்யது
நன்றி சொல்லரசன்
நன்றி யோ வாய்ஸ்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி பாலாஜி
நன்றி கலையரசன்
நன்றி மணிப்பக்கம்
நன்றி ஸ்ரீராம்
நன்றி ஞானப்பித்தன்
நன்றி அர்த்தநாரி
நன்றி கருணாகரசு
நன்றி அன்பு
நன்றி எவனோ ஒருவன்
நன்றி ஜீவன்
நன்றி கிம்க்கி
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி பீர்
நன்றி ரம்யா
நன்றி நந்தா
நன்றி பித்தன்
நன்றி வானம்பாடிகள்
நன்றி பிரபா
நன்றி கிரி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி அன்புடன் மலிக்கா
நன்றி இறங்குவானை நிர்ஷன்
நன்றி ராஜநடராஜன்
நன்றி யாழினி
நன்றி ராதாமணாளன்
நன்றி உழவன்
நன்றி கிறுக்கல் கிறுக்கன்!

Kumky said...

நான் கிம்க்கி டுக் இல்ல வாலாரே...

கும்க்கி பெக்-காக்கும்.

வால்பையன் said...

//கும்க்கி said...
நான் கிம்க்கி டுக் இல்ல வாலாரே...
கும்க்கி பெக்-காக்கும்.//

பிங்கி பிங்கி பாங்கி
ஃபாதர் இஸ் எ டாங்கி!

அதுக்கு அப்புறம் என்ன!?

!

Blog Widget by LinkWithin