அண்ணன் அப்துல்லா அவர்கள் பாடிய ”சொல்ல சொல்ல இனிக்கும்” என்ற படம் இந்த வாரம் வெளி வந்திருக்கிறது! தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட இந்த பாட்டு தான் பாடுகிறது!, இந்த ப்டத்தில் என் நண்பர் பாடியிருக்கிறார் என்று சொல்வதை விட இந்த பாட்டு பாடியது எனது நண்பர் என சொல்வதற்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!
**
நேற்று (20.09.09) தருமி ஐயா தலைமையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு நடந்தது! மதுரையிலேயே இருக்கும் தருமி ஐயா, கிருஷ்ணமூர்த்தி ஐயா,ஜெர்ரி, கார்த்திகைப்பாண்டியன், ஸ்ரீதர் மற்றும் பதிவரல்லாத மூன்று நண்பர்களும், வெளியூரிலிருந்து மருத்துவர் தேவன்மாயம், சொல்லரசன், ஆ.ஞானசேகரன் மற்றும் நானும் கலந்து கொண்டோம்!, மதுரை பதிவர்கள் சார்ப்பில் எதாவது செய்யலாம் என்பதே சந்திப்பின் நோக்கம்!
அதன்படி சென்னையில் நடந்தது போன்று டாக்டர் ஷாலினி அவர்களை அழைத்து
“குட் டச், பேட் டச்” நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவானது!
இடத்திற்கு தருமி ஐயா பொறுப்பெடுத்து கொண்டார், உள்ளூரில் இருக்கும் ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு ஜெர்ரி ஏற்று கொண்டார், கார்த்திகைப்பாண்டியனும் ஸ்ரீதரும் விரிவுரையாளர்களாக இருப்பதால் அவர்கள் கல்லூரியில் இருந்து ஆர்வமிக்க மாணவர்களை அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுகொண்டனர்! கார்த்திகைக்கு கூடுதல் பணியாக பணத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும்! நான் சும்மா இருந்தா எப்படி!? சென்ற முறை சென்னையில் நடந்த போது எதிர்பார்த்தது என்ன? நடந்தது என்ன? விடுபட்டவைகள் என்ன என்று நண்பர் நர்சிமிடம் கேட்டு சொல்ல வேண்டியது என் பொறுப்பாக ஏற்று கொண்டேன்!
இதுவரை தேதி முடிவாகவில்லை, ஆனதும் சொல்கிறேன்! முடிந்தவரை நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமறு கேட்டு கொள்கிறேன்!
**
வெகுநாட்கள் கழித்து அரங்கம் சென்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன்!
மதுரை மாப்பிள்ளைவிநாயகரில் கமல் நடித்த உன்னை போல் ஒருவன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ஈரம் படத்திற்கு போனோம்! தமிழில் புதிய முயற்சி என்று சொல்லலாமே தவிர கொண்டாட ஒன்றுமில்லை! செத்து போகும் நாயகி இடது கை பழக்கம் உடையவள் என்ற வித்தியாசம் ஒரு குறியீடு! மற்றவர்கள் இடது கையை பயன்படுத்தும் போது, நாயகியின் ஆவி உள்புகுந்து கொள்கிறது என்று பூடகமாக காட்டுகிறார் ஆனால் சிகப்புநிறத்துக்கும், நாயகிக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை, அது நாயகனுக்கு எப்படி தெரியும் என்பது அதைவிட லாஜிக் ஓட்டை!
வில்லன் தானாக குற்றத்தை ஒப்புகொள்ளவில்லை, அதற்கும் ஆவி உள்புக வேண்டியிருக்கிற்து, அதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் என நமக்கே தோன்றும் போது இயக்குனருக்கு ஏன் தோன்றவில்லை, பரவாயில்லை இயக்குனருக்கு முதல் படம் என்பதால் ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு எட்டு போய் படத்தை பார்த்து விடலாம்!
**
நண்பர் ஒருவர் வெகுநாட்களாக என்னிடம் குழந்தைக்கு பேர் வைக்க நல்ல பெயர் கேட்டு கொண்டிருந்தார், தமிழில் வைக்க வேண்டுமென்றால் இணையத்தில் தேடி கொடுத்திருப்பேன்!, முன்னாடி இந்த எழுத்து தான் வர வேண்டும் என்ற நிபந்தனையென்பதால் எனக்கு தயக்கம், நெருங்கிய நண்பர் என்றால் சொல்லிவிடுவேன்! அவர் என் பதிவுகளையும் படித்துவிட்டு என்னிடமே நியுமராலாஜி கேட்பது தான் சங்கடம்! எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ”கே”வில் ஆரம்பிக்கும் பெயர் கேட்டதற்கு “கே”வில் ஆரம்பிக்கும் ஒரு கெட்டவார்த்தையை சொன்னேன்!
அதன் பின் அவர் என்னிடம் பேசுவதேயில்லை! எனக்கு நண்பர்கள் வேண்டும் அதனால் தயவுசெய்து இம்மாதிரியான புத்திசாலித்தனமான கேள்விகளை(தகவல்களை) என்னிடம் வைக்காதீர்கள்!
**
வா.மு.கோமுவின் “சொல்லகூசும் கவிதை படித்து கொண்டிருக்கிறேன்!
அதிலிருந்து ஒரு சின்ன பிட்டு!
பொம்மைக்கடைகாரனின்
பொம்மை கேட்டது
விளையாட
ஒரு குழந்தை
வேண்டுமென!
105 வாங்கிகட்டி கொண்டது:
முகப்பில் அப்படி இருப்பதால்...
வால் பையனுக்கு நிஜமாகவே இரண்டு கொம்பு இருக்கா? இப்படி கேள்வி கேட்கலாம் அல்லவா? :-)))
//அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!//
அப்துல்லா அண்ணாவுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
--------------------------
எனக்கும் இதேமாதிரி பெயர் வைத்த அனுபவம் உண்டு. அந்த பதிவு(03/2009) இங்கே....
நமிதாவுக்கு என்ன குறை?
http://skylinelk.blogspot.com/2009/03/blog-post_18.html
அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!
//
வாழ்த்துக்கள், அப்படியே குண்டு எஸ்பிபி யாகவும் வரவும் வாழ்த்துக்கள்.
meeting - superb!
நண்பரின் வேண்டுகோளுக்கினங்க "கே"யில பேர் வைச்சு அதிர வைச்சது வாய் விட்டு சிரிக்க வைத்தது...
ஆமா, நம்ம அப்துல்லா பாடின பாட்டு எந்தப் படத்தில், பாடலின் பெயர் சொல்லுங்க கேப்போம் (ஒகே வகை கேள்வி ரகம்தானே :) ...
அவருக்கும் வாழ்த்துக்கள்!
//குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கள்
குட்டி எஸ்.பி.பி க்கு வாழ்த்துக்கள்
தூய தமிழில் பெயர் வைக்க விரும்புவர்களுக்கு கீழ் காணும் இணைப்பை பரிந்துரை செய்யுங்கள்.
http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html
விரும்பும் பெயரை அவர்கள் சூட்டிக் கொள்ளட்டும்.
//பொம்மைக்கடைகாரனின்
பொம்மை கேட்டது
விளையாட
ஒரு குழந்தை
வேண்டுமென!//
நீங்க தான் அந்த கடைக்காரா?
அண்ணன் அப்துல்லா பெரிய பாடகராக வர வாழ்த்துக்கள்
கே என்ற கேசவன் என்று சொல்லி இருக்கலாம்.
கெட்ட வார்த்தை சொல்லி வால் தனத்தை காட்டிட்டீங்களே...
வால் பையன்னு தெரிஞ்சும் இது மாதிரி கேள்வி கேட்டு வாங்கி கட்டிக்கொண்ட நண்பருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். வாலு, சத்தியமா நாங்க கேள்வி கேக்க மாட்டோம்!
பிரபாகர்.
//புத்திசாலித்தனமான கேள்விகளை(தகவல்களை) என்னிடம் வைக்காதீர்கள்!
//
ஐ!! உங்களுக்காக ஒரு 10 கேள்விகளை ஸ்பெஷலா ரெடி பண்ணனும் மனசு பரபரக்குது!!
சாம்பிள்..
1. அக்ஷயதிதியை அன்னிக்கு எந்த கடையில நகை வாங்கலாம்
2. சரஸ்வதி பூஜைக்கு ஏன் பொரி வச்சு சாமி கும்பிடறோம்
3. கன்னி ராசிக்காரங்களுக்கு ஈஸியா ஃபிகர் மடியுமாமே? அப்படின்னா ராசி ச்சேஞ்ச் பண்ணிக்கிற ஆப்ஷன் இருக்கா?
...........
நல்ல வேளை என் பையனுக்கு பேர் வைத்துட்டேன் ;-)
அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள்
அப்துல்லாவுக்கு வாழ்த்துகள் !!
வால்பையன் கடவுளை நம்புகிறாரே இல்லையே நான் நம்ப்பறன், ஆனா கடவுளையும், வால்பையனையும் பார்த்தா ஒரு கேள்வி கேக்கனும், பொதுவா வால் இருக்குற பிராணிகளுக்கு எல்லாம் ஜந்து அறிவுதானா எனது நண்பருக்கு மட்டும் ஏன் வாலும் ஏழு அறிவையும் படைச்சனு.
பித்தன் எண்ணிக்கையில் கொஞ்சம் தடுமாறிச் சொன்னது:
/பொதுவா வால் இருக்குற பிராணிகளுக்கு எல்லாம் ஜந்து அறிவுதானா எனது நண்பருக்கு மட்டும் ஏன் வாலும் ஏழு அறிவையும் படைச்சன்னு/
ஐயா,நீங்கள் சொல்ல வருவதென்ன?
அறிவு வாலில் தான் இருக்கிறதென்றா?
நம்ம வாலுக்கு, ஒண்ணு ரெண்டு இல்லை, ஏழு இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டீங்களா?
கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன்:-))
என்ன ரெண்டு கொம்பிருக்கான்னு கேட்கும் வடுவூர் குமாருக்கு:
ரெண்டு மூணு எல்லாம் இல்ல, ஏழுன்னு என்னிப்பாத்தமாதிரிக் கீழே ஒருத்தர்[பித்தன்] சொல்றார், கவனிங்க!
கொம்பு இல்ல, வாலு!
பிரபாகர் ரொம்ப சாமர்த்தியமாச் சொல்றது:
/வாலு, சத்தியமா நாங்க கேள்வி கேக்க மாட்டோம்!/
நீங்க கேக்கலைன்னாலும், கேள்வியும் நானே பதிலும் நானேன்னு உடன்பிற....க்கு...சாரி, ரசிகர்களுக்கு நாங்களே ஆரம்பிச்சுட மாட்டோமா?
கேசவர்த்தினி
குட்டி எஸ்பிபி என்ன, பெருசாவே வரட்டும்.
உங்க கிட்ட ரெண்டு ரூவா சில்லறை கூட கேக்க கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்!
:)
கவிதை அருமை
ஈரோட்ல ஒரு பதிவர் சந்திப்பு போடலாங்க
இப்ப தான் ஈரம் படம் டவுன் லோடு பண்ணி பார்த்திடலாம்னு நினைக்க முன்னால இப்படி எழுதீட்டீங்களே வாழ் இனி பார்க்கனுமா வேண்டாமானு இருக்கு
நல்லா இருக்கு குவியல்!
குவியல் வாசித்து விட்டேன்
சென்ற பதிவு நன்று. முன்னறிவிப்பும், கல்வெட்டு, ஹேமா, சூர்யா பின்னோட்டங்களும் அருமை.
முதலில் அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மாணவ மாணவிகளுக்கான மற்றும் சிறுவர்களுக்கான நீங்கள் மதுரையில் நடத்தவிருக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.
ஈரம் விமர்சனம் சுருங்க சொல்லி விளங்க வைக்கும் முயற்சி...
இறுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள கவிதை நன்று...
//அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!//
எனது வாழ்த்துக்கள்......
உங்க கிட்ட பேர் வெக்க சொன்னதுக்கு பதில் அவர் கவுண்டமணி கிட்ட போயிருக்கலாம் !!!!
//அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!
//
ரிப்பீட்டே... (உடல் அளவு அல்ல என்பதைச் சேர்க்கவும்)
:)
மூன்று மாதங்களுக்கு முன்பே நான் தான் அந்தப் பாடலை முதலில் வீடியோவில் பார்த்தேன்
//“கே”வில் ஆரம்பிக்கும் ஒரு கெட்டவார்த்தையை சொன்னேன்!//
தெரிஞ்சுக்கலாமா?
நான் எல்லாம் இந்த மாதிரி இசகுபிசகான கேள்வி கேட்க மாட்டேன்..வாலுடன் நட்பு என்றால் சும்மாவா....conditions உண்டு..
ந்யூமராலஜி பெயரில் வேலை செய்யுமா தெரியாது. (உடனடி உதாரணம் என் பெயர். நானொன்றும் இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இல்லை). ஆனால் ஒரே சைக்கிக் எண் உள்ளவர்களிடத்தில் சில ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. இது குறித்து ஒரு பதிவு எழுத ஆசை இருப்பதால் இத்தோடு என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.
http://kgjawarlal.wordpress.com
//மதுரையிலேயே இருக்கும் தருமி ஐயா, கிருஷ்ணமூர்த்தி ஐயா,ஜெர்ரி, கார்த்திகைப்பாண்டியன், ஸ்ரீதர் மற்றும் பதிவரல்லாத மூன்று நண்பர்களும்,..................//
:( :( :(
நானும் பதிவர் தானே, வால்பையன் ஐயா அவர்களே !!!!
அண்ணன் அப்துல்லா பெரிய பாடகராக வர வாழ்த்துகள்..
'கே' அருமை..
அப்துல்லா எப்பவுமே டாப்புத்தான்!
அர்த்தமுள்ள மீட்டிங்..! கண்டிப்பா நிகழ்ச்சி சிறப்பா அமையும்..! வாழ்த்துக்கள்!
கவிதை அருமை.
அப்துல்லா அண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள.
குட்டி எஸ்.பி.பி அப்துல்லாக்கு வாழ்த்துக்கள்!!!
//அண்ணன் அப்துல்லா அவர்கள் பாடிய ”சொல்ல சொல்ல இனிக்கும்” என்ற படம் இந்த வாரம் வெளி வந்திருக்கிறது! தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட இந்த பாட்டு தான் பாடுகிறது!, இந்த ப்டத்தில் என் நண்பர் பாடியிருக்கிறார் என்று சொல்வதை விட இந்த பாட்டு பாடியது எனது நண்பர் என சொல்வதற்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!
///
naanum vaazhththikireen esamaa
அப்துல்லாவுக்கு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அந்த புரோகிராம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
குவியல் நல்ல அவியல்
வாலுக்கு நன்றி
மறுபடியும் மதுரையா????????
இருங்க ஸ்ரீ பதிவை எட்டிப் பார்த்துட்டு வரேன்.. :))
அப்துல்லா ப்ரதர்க்கு வாழ்த்துக்கள்!!
கவிதை நல்லாயிருக்கு வால்!!
அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துகள் !!!
வாமு கோமுவின் நாவல் வெளிவந்ததும் தெரியப்படுத்துங்கள்..கண்டிப்பாக படிக்க வேண்டும்.
மேலும் பா.ரா.வின் பதிவில் வால்பையனைப் பற்றிய குறிப்பையும் பார்த்தேன்.வால் கலக்குறேள் !!!
சந்தோஷம் பிராப்திரஸ்து !!
அது என்ன குட்டி எஸ்.பி...
எஸ்,பி யை விட உயர வாழ்த்துக்கள் அண்ணா...
***************
பதிவர் சந்திப்பினில் கலந்து கொள்ள இயலவில்லை அண்ணா..
மன்னிக்கவும்...
இனிதே நடந்தமைக்கு மகிழ்ச்சி..
************
ஈரம் திரைப்படம் அருமையாகவே இருந்தது அண்ணா..
************
கவிதை அருமை..
ஹை வால் படம் பார்த்துட்டாரு......
குழந்தைக்கு பேர் வெக்கற மேட்டரு சூப்பரு தல !
கவிதை அருமை. மதுரைக்கு நானும் வரவேண்டும் என நினைத்திருந்தேன். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருந்தார்கள். தவிர்க்க முடியவில்லை. வந்திருந்தால் சந்தித்து இருக்கலாம்.
அண்ணன் அப்துல்லா பெரிய பாடகராக வர வாழ்த்துக்கள்!!
ரொம்ப விறுவிறுப்பா எழுதி இருக்கீங்க வால்
அனைத்து செய்திகளுமே அருமை!!
அப்புறம் அந்த கவிதை ம்ம்... நடகட்டும் நடகட்டும் :))
அப்புறம் ஈரம் திரை விமர்சனம் அருமை ரகம்!!
குவியல் அருமை.
அந்தக் கவிதை... ம்ம்ம்.
//இந்த ப்டத்தில் என் நண்பர் பாடியிருக்கிறார் என்று சொல்வதை விட இந்த பாட்டு பாடியது எனது நண்பர் என சொல்வதற்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! //
வால் அண்ணனுக்கும் வாழ்த்திய அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் நன்றி :)
//வடுவூர் குமார் said...
முகப்பில் அப்படி இருப்பதால்...
வால் பையனுக்கு நிஜமாகவே இரண்டு கொம்பு இருக்கா? இப்படி கேள்வி கேட்கலாம் அல்லவா? :-)))//
நான் கடவுள் மறுப்பாளன் என்பதால் பலர் என்னை சாத்தான் என்பார்கள், அதன் அடையாளமாக தலையில் கொம்பு தல!
//வேந்தன் said...
//அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!//
அப்துல்லா அண்ணாவுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
--------------------------
எனக்கும் இதேமாதிரி பெயர் வைத்த அனுபவம் உண்டு. அந்த பதிவு(03/2009) இங்கே....
நமிதாவுக்கு என்ன குறை?
http://skylinelk.blogspot.com/2009/03/blog-post_18.html//
ஆனாலும் உங்களுக்கு ஓவர் குசும்பு தல!
உங்க நண்பர் அப்படி கேட்டதுக்கு காரணம் நீங்க நன்னிதப்பின்னு பேர் வச்சது!
/குடுகுடுப்பை said...
அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!
//
வாழ்த்துக்கள், அப்படியே குண்டு எஸ்பிபி யாகவும் வரவும் வாழ்த்துக்கள்.//
இதுக்கு பேரு தான் கொலைவெறிங்கிறது!
//Thekkikattan|தெகா said...
meeting - superb!
நண்பரின் வேண்டுகோளுக்கினங்க "கே"யில பேர் வைச்சு அதிர வைச்சது வாய் விட்டு சிரிக்க வைத்தது...
ஆமா, நம்ம அப்துல்லா பாடின பாட்டு எந்தப் படத்தில், பாடலின் பெயர் சொல்லுங்க கேப்போம் (ஒகே வகை கேள்வி ரகம்தானே :) ...
அவருக்கும் வாழ்த்துக்கள்!//
இன்னேரம் பாடல் இணையதளத்தில் வந்திருக்கும் தல! அடுத்த பதிவில் தருகிறேன்
T.V.Radhakrishnan said...
//குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றி சார்!
//பீர் | Peer said...
குட்டி எஸ்.பி.பி க்கு வாழ்த்துக்கள்//
நன்றி தல
//தூய தமிழில் பெயர் வைக்க விரும்புவர்களுக்கு கீழ் காணும் இணைப்பை பரிந்துரை செய்யுங்கள்.
http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html
விரும்பும் பெயரை அவர்கள் சூட்டிக் கொள்ளட்டும்.//
சுட்டிக்கு நன்றி தல!
//நசரேயன் said...
//பொம்மைக்கடைகாரனின்
பொம்மை கேட்டது
விளையாட
ஒரு குழந்தை
வேண்டுமென!//
நீங்க தான் அந்த கடைக்காரா?//
நாந்தான் அந்த பொம்மை!
சின்ன அம்மிணி said...
அண்ணன் அப்துல்லா பெரிய பாடகராக வர வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றிங்க!
//சண்முகம் said...
கே என்ற கேசவன் என்று சொல்லி இருக்கலாம்.
கெட்ட வார்த்தை சொல்லி வால் தனத்தை காட்டிட்டீங்களே...//
சரிதான் ஆனா அவுங்க பேர் மேல் உள்ள ஆசையில் கேட்கலையே!
எண் கணிதத்தில் மேல் உள்ள ஆசையில் அல்லவா கேட்டார்கள்!
//பிரபாகர் said...
வால் பையன்னு தெரிஞ்சும் இது மாதிரி கேள்வி கேட்டு வாங்கி கட்டிக்கொண்ட நண்பருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். வாலு, சத்தியமா நாங்க கேள்வி கேக்க மாட்டோம்!
பிரபாகர்.//
வேற கேள்வி கேட்கலாம் தல!
இது தான் எனக்கு கொஞ்சம் அலர்ஜி!
ஜெகநாதன் said...
//புத்திசாலித்தனமான கேள்விகளை(தகவல்களை) என்னிடம் வைக்காதீர்கள்!
//
ஐ!! உங்களுக்காக ஒரு 10 கேள்விகளை ஸ்பெஷலா ரெடி பண்ணனும் மனசு பரபரக்குது!!
சாம்பிள்..
1. அக்ஷயதிதியை அன்னிக்கு எந்த கடையில நகை வாங்கலாம்//
டாஸ்மாக்கில்
//2. சரஸ்வதி பூஜைக்கு ஏன் பொரி வச்சு சாமி கும்பிடறோம்//
பொறி நல்ல சைடிஷ் என்பதால்
// 3. கன்னி ராசிக்காரங்களுக்கு ஈஸியா ஃபிகர் மடியுமாமே? அப்படின்னா ராசி ச்சேஞ்ச் பண்ணிக்கிற ஆப்ஷன் இருக்கா?//
இருக்கு, செத்து போய் திரும்பவும் பொறக்கனும்!
//கிரி said...
நல்ல வேளை என் பையனுக்கு பேர் வைத்துட்டேன் ;-)
அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள்//
குசும்பு தல உங்களுக்கு!
//Mahesh said...
அப்துல்லாவுக்கு வாழ்த்துகள் !!//
நன்றி தல!
//பித்தன் said...
வால்பையன் கடவுளை நம்புகிறாரே இல்லையே நான் நம்ப்பறன், ஆனா கடவுளையும், வால்பையனையும் பார்த்தா ஒரு கேள்வி கேக்கனும், பொதுவா வால் இருக்குற பிராணிகளுக்கு எல்லாம் ஜந்து அறிவுதானா எனது நண்பருக்கு மட்டும் ஏன் வாலும் ஏழு அறிவையும் படைச்சனு.//
ஐந்து, ஆறுன்னெல்லாம் நாம்(மனிதன்) தான் சொல்லிகிட்டு திரிகிறோம்!, வாழும் தகுதியுடயவை அனைத்தும் அறிவு பெற்றவையே!
//ஐயா,நீங்கள் சொல்ல வருவதென்ன?
அறிவு வாலில் தான் இருக்கிறதென்றா?
நம்ம வாலுக்கு, ஒண்ணு ரெண்டு இல்லை, ஏழு இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டீங்களா?//
சார் நீங்க சொல்றதுன்னு என்னான்னு எனக்கு புரிஞ்சி போச்சு!
:)
//கிருஷ்ணமூர்த்தி said...
பிரபாகர் ரொம்ப சாமர்த்தியமாச் சொல்றது:
/வாலு, சத்தியமா நாங்க கேள்வி கேக்க மாட்டோம்!/
நீங்க கேக்கலைன்னாலும், கேள்வியும் நானே பதிலும் நானேன்னு உடன்பிற....க்கு...சாரி, ரசிகர்களுக்கு நாங்களே ஆரம்பிச்சுட மாட்டோமா?//
இது நல்ல ஐடியாவா இருக்கே!
//தண்டோரா ...... said...
கேசவர்த்தினி//
இந்த பேரு வச்சா எண்ணை, எண்ணைன்னு கூப்பிட மாட்டாங்களா தல!
//pappu said...
குட்டி எஸ்பிபி என்ன, பெருசாவே வரட்டும்.
உங்க கிட்ட ரெண்டு ரூவா சில்லறை கூட கேக்க கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்!//
ரெண்டு ரூவா என்ன! ரெண்டாயிரம் கூட கேக்கலாம், இருந்தா தானே தர்றதுக்கு!
சூரியன் said...
:)//
நன்றி தல!
///கதிர் - ஈரோடு said...
கவிதை அருமை
ஈரோட்ல ஒரு பதிவர் சந்திப்பு போடலாங்க//
வெகு விரைவில் உங்கள் தலமையில்!
//Suresh Kumar said...
இப்ப தான் ஈரம் படம் டவுன் லோடு பண்ணி பார்த்திடலாம்னு நினைக்க முன்னால இப்படி எழுதீட்டீங்களே வாழ் இனி பார்க்கனுமா வேண்டாமானு இருக்கு//
பாருங்க தல!
உங்களுக்கு பிடிச்ச விசயங்கள் எதாவது இருக்கலாம்!
மங்களூர் சிவா said...
நல்லா இருக்கு குவியல்!//
நன்றி தல
//யோ வாய்ஸ் (யோகா) said...
குவியல் வாசித்து விட்டேன்//
பொறுமைக்கான நோபல் பரிசு உங்களுக்கு
//D.R.Ashok said...
சென்ற பதிவு நன்று. முன்னறிவிப்பும், கல்வெட்டு, ஹேமா, சூர்யா பின்னோட்டங்களும் அருமை.//
ஏன் தல அங்க இடமில்லையா!?
//க.பாலாஜி said...
முதலில் அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மாணவ மாணவிகளுக்கான மற்றும் சிறுவர்களுக்கான நீங்கள் மதுரையில் நடத்தவிருக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.
ஈரம் விமர்சனம் சுருங்க சொல்லி விளங்க வைக்கும் முயற்சி...
இறுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள கவிதை நன்று...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல!
புலவன் புலிகேசி said...
//அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!//
எனது வாழ்த்துக்கள்......//
எனது நன்றிகள்!
//rajan RADHAMANALAN said...
உங்க கிட்ட பேர் வெக்க சொன்னதுக்கு பதில் அவர் கவுண்டமணி கிட்ட போயிருக்கலாம் !!!!//
அவரும் இதை தான் த்ல செஞ்சிருப்பாரு!
//கோவி.கண்ணன் said...
//அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!
//
ரிப்பீட்டே... (உடல் அளவு அல்ல என்பதைச் சேர்க்கவும்)
:)
மூன்று மாதங்களுக்கு முன்பே நான் தான் அந்தப் பாடலை முதலில் வீடியோவில் பார்த்தேன்//
உடம்புக்கு ஒன்னும் ஆகலையே!
//இறக்குவானை நிர்ஷன் said...
//“கே”வில் ஆரம்பிக்கும் ஒரு கெட்டவார்த்தையை சொன்னேன்!//
தெரிஞ்சுக்கலாமா?//
சாட்டில் வாங்க தல சொல்லுறேன்!
//அமுதா கிருஷ்ணா said...
நான் எல்லாம் இந்த மாதிரி இசகுபிசகான கேள்வி கேட்க மாட்டேன்..வாலுடன் நட்பு என்றால் சும்மாவா....conditions உண்டு..//
ஹாஹாஹா
உஷாரா தான் இருக்கிங்க போல!
//Jawarlal said...
ந்யூமராலஜி பெயரில் வேலை செய்யுமா தெரியாது. (உடனடி உதாரணம் என் பெயர். நானொன்றும் இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இல்லை). ஆனால் ஒரே சைக்கிக் எண் உள்ளவர்களிடத்தில் சில ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. இது குறித்து ஒரு பதிவு எழுத ஆசை இருப்பதால் இத்தோடு என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.//
பெயரில் மட்டுமல்ல, எல்லா மனிதர்களுகுள்ளும் ஒற்றுமை உள்ளதே தல!
//பாலகுமார் said...
//மதுரையிலேயே இருக்கும் தருமி ஐயா, கிருஷ்ணமூர்த்தி ஐயா,ஜெர்ரி, கார்த்திகைப்பாண்டியன், ஸ்ரீதர் மற்றும் பதிவரல்லாத மூன்று நண்பர்களும்,..................//
:( :( :(
நானும் பதிவர் தானே, வால்பையன் ஐயா அவர்களே //
மன்னிச்சிகோங்கண்ணா!
இனிமே அந்த மாதிரி தப்பு வராம பாத்துக்கிறேன்! எனக்கு மண்டையில உறைக்கனும்னு தான் அதன் பின் பேர சேர்க்கல!
//பட்டிக்காட்டான்.. said...
அண்ணன் அப்துல்லா பெரிய பாடகராக வர வாழ்த்துகள்..
'கே' அருமை..//
ரொம்ப நன்றி தல!
//சுரேகா.. said...
அப்துல்லா எப்பவுமே டாப்புத்தான்!
அர்த்தமுள்ள மீட்டிங்..! கண்டிப்பா நிகழ்ச்சி சிறப்பா அமையும்..! வாழ்த்துக்கள்!//
ரொம்ப நன்றிங்க!
நாஞ்சில் நாதம் said...
கவிதை அருமை.
அப்துல்லா அண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள.//
நன்றி தல!
// இரவீ - said...
குட்டி எஸ்.பி.பி அப்துல்லாக்கு வாழ்த்துக்கள்!!!//
நன்றி தல!
அக்னி பார்வை said...
//அண்ணன் அப்துல்லா அவர்கள் பாடிய ”சொல்ல சொல்ல இனிக்கும்” என்ற படம் இந்த வாரம் வெளி வந்திருக்கிறது! தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட இந்த பாட்டு தான் பாடுகிறது!, இந்த ப்டத்தில் என் நண்பர் பாடியிருக்கிறார் என்று சொல்வதை விட இந்த பாட்டு பாடியது எனது நண்பர் என சொல்வதற்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! அண்ணன் ஒரு குட்டி.எஸ்.பி.பியாக வர வேண்டுமென்று அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்!
///
naanum vaazhththikireen esamaa//
வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி தல
//அபுஅஃப்ஸர் said...
அப்துல்லாவுக்கு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அந்த புரோகிராம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
குவியல் நல்ல அவியல்//
ரொம்ப நன்றி தல!
//ஜெரி ஈசானந்தா. said...
வாலுக்கு நன்றி//
நான் தான் தல நன்றி சொல்லனும்!
//SanjaiGandhi said...
மறுபடியும் மதுரையா????????
இருங்க ஸ்ரீ பதிவை எட்டிப் பார்த்துட்டு வரேன்.. :))//
இந்த தடவை மாட்டியது வேற ஆளு அங்கிள்!
//Mrs.Menagasathia said...
அப்துல்லா ப்ரதர்க்கு வாழ்த்துக்கள்!!
கவிதை நல்லாயிருக்கு வால்!!//
ரொம்ப நன்றிங்க!
//அ.மு.செய்யது said...
அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துகள் !!!
வாமு கோமுவின் நாவல் வெளிவந்ததும் தெரியப்படுத்துங்கள்..கண்டிப்பாக படிக்க வேண்டும்.
மேலும் பா.ரா.வின் பதிவில் வால்பையனைப் பற்றிய குறிப்பையும் பார்த்தேன்.வால் கலக்குறேள் !!!
சந்தோஷம் பிராப்திரஸ்து !!//
நாவலின் ஒரு அத்தியாயம் இன்றைய குவியலில் லிங்க் இருக்கு பாருங்க தல!
//Anbu said...
அது என்ன குட்டி எஸ்.பி...
எஸ்,பி யை விட உயர வாழ்த்துக்கள் அண்ணா...//
நன்றி அண்ணே!
சந்திப்பில் உங்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன்!
/ஜெட்லி said...
ஹை வால் படம் பார்த்துட்டாரு......//
உலகம் அழிஞ்சிருப்போவுது பாஸ்!
//மின்னல்ப்ரியன் said...
குழந்தைக்கு பேர் வெக்கற மேட்டரு சூப்பரு தல !/
கேட்டவரு நொந்து நூடுல்ஸ் ஆகிருப்பாரு பாவம்!
மாதவராஜ் said...
கவிதை அருமை. மதுரைக்கு நானும் வரவேண்டும் என நினைத்திருந்தேன். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருந்தார்கள். தவிர்க்க முடியவில்லை. வந்திருந்தால் சந்தித்து இருக்கலாம்.//
உங்களுக்காகவே விரைவில் ஒரு சந்திப்பு அரங்கேற்றிவிடலாம் தல!
RAMYA said...
அண்ணன் அப்துல்லா பெரிய பாடகராக வர வாழ்த்துக்கள்!!
ரொம்ப விறுவிறுப்பா எழுதி இருக்கீங்க வால்
அனைத்து செய்திகளுமே அருமை!!//
ரொம்ப நன்றி ரம்யா!
//எவனோ ஒருவன் said...
குவியல் அருமை.
அந்தக் கவிதை... ம்ம்ம்.//
நன்றி தல!
ஊடகன் said...
//இந்த ப்டத்தில் என் நண்பர் பாடியிருக்கிறார் என்று சொல்வதை விட இந்த பாட்டு பாடியது எனது நண்பர் என சொல்வதற்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! //
சேம் ப்ளட்டுன்னு சொல்ல வர்றிங்களா தல!
//எம்.எம்.அப்துல்லா said...
வால் அண்ணனுக்கும் வாழ்த்திய அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் நன்றி :)//
உங்களை வாழ்த்துவதில் எனக்கு தான் அண்ணே பெருமை!
You have an excellent taste for movies,tailboy!
;-) Please see the movies of Billy Wilder (Director) You may start with the movie 'The Apartment' and share your views here
Keep up your good work too!
Best regards,
Post a Comment