குவியல்!..(03.09.09)

இந்த வாரத்தில் செம்டம்பர் முதல் நாளன்று நண்பரும் கணிப்பொறி வல்லுனருமாகிய நண்பர் வடிவேலன் அவர்கள் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்!, நண்பரது சேவையை பற்றி நீங்கள் அறிவீர்கள், நமக்கு தேவையான, தேடி கொண்டிருக்கும் மென்பொருள்களை நமக்கு இன்ப அதிர்ச்சியாக தந்து மகிழ்பவர், நண்பரது பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம்!

பெண்களை பொறுத்தவரை மிகமுக்கிய பணி சமையல் செய்வதே, ஆனால் பலருக்கு அவர்களது ஹாபியும் சமையல் செய்வதாக தான் இருக்கிறது, புதிது புதிதாக எதாவது செய்து நம்மை அதிர்ச்சிகுள்ளாக்குவதில்!? அவர்கள் வல்லவர்கள், பலர் அம்மாதிரி ப்ளாக் வழியாக நம்மை சோதனை செய்வது நாம் அறிந்ததே, அதில் முக்கியமானவர் தான் தோழி தாரணிபிரியா. அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இன்னும் பலபல கண்டுபிடிப்புகள் சமையலில் செய்து அனைவரையும் அவரைப்போலவே ஆக்க வாழ்த்துவோம்!

இன்று இன்னொரு முக்கியமானவருக்கும் பிறந்தநாள், நான் கும்மி அடிக்க காரணமாக இருப்பவர், சிறந்த நண்பர், எனக்கு மாதாமாதம் படியளக்கும் எனது பாஸ் கார்த்திக் அவர்களுக்கும் இன்று தான் பிறந்தநாள், புகைப்படத்தின் மேல் உள்ள நாட்டத்தால் ப்ளாக் உலகிலிருந்து விலகி ப்ளிக்கரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார், நண்பரும் பல நூறாண்டுகள் எனக்கு சம்பளம் கொடுக்க வாழ்த்துவோம்!
(ஒரே கல்லுல ரெண்டு மாங்கா)


***************************

நமது அண்டை மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி இப்பதிவு எழுதும் வரை கண்டுபிடிக்கப்படவில்லை! இது ஆந்திராவுக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல, மொத்த இந்தியாவுக்கும் அதிர்ச்சி, நமது நாட்டு தேசிய பாதுகாப்பின் மேல் விழுந்த கரும்புள்ளி. உள்துறை அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் வெற்றிலையில் மை போட்டு பார்த்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை, என்ன ஆனார், ஏது ஆனார் என்று ஒரு தகவலும் இல்லை, ஹைதையில் கிளம்பி சித்தூர் வரும் வழியில் ஹெலிகாப்டர் தொலைந்து போயிருக்கிறது, கடைசியாக சிக்னல் வந்த நேரத்தை வைத்து எந்த இடத்தில் காணாமல் போயிருக்கலாம் என்று குத்துமதிப்பாக ”மழமலா” என்ற காட்டுப்பகுதியில் தேடி வருகிறார்கள்!
கனமழை வேறு மீட்பு பணியில் குறுக்கிடுகிறது, தடைகளை மீறு ஆந்திரமுதல்வர் நலமுடன் திரும்புவார் என நம்புவோம்!

*************************

என்னை பொறுத்தவரை ஆக்சன் படங்களுக்கு விமர்சன் தேவையில்லை என்று நினைப்பேன், முக்கால்வாசி படத்தை ஆக்சன் காட்சிகளே ஆக்கிரமித்து கொள்வதால் மக்களின் சுவாரசியம் குறையாமல் ரசிப்பார்கள், ஆனால் சில படங்கள் குறைந்த ஆக்சன் காரணத்தால் கவனிக்காமல் போய்விடக்கூடும், அந்த வரிசையில் மிக முக்கியமான படம் gattaca. 1997 ல் வந்த சயின்ஸ்பிக்‌ஷன் மூவி, ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும். மற்றதெல்லாம் உணர்வுபூர்வமான நடிப்பும், சிறந்த திரைக்கதையும், கடைசிவரை உங்களுக்கு சுணக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ளும், இப்படத்தை பற்றியும் நீண்ட விமர்சனம் எழுதலாம், ஆனால் ஏற்கனவே சரியாக புரிந்து கொள்ளாமல் டெர்மினேட்டர் படத்தை பற்றி எழுதி செமத்தியாக வாங்கி கட்டி கொண்டதால் வேண்டாம் என நினைக்கிறேன்!, ஆனால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என உறுதியளிக்கிறேன்!



*****************************

இந்தவாரம் எதிர் கவுஜ!
மாட்டியவர்

நீ அனுப்பிய இரு பாட்டிலும்
இன்று வந்து சேர்ந்தது
வழக்கம் போல திறக்கமுடியவில்லை
இதில் எது நல்லசரக்கு? எது கெட்டசரக்கு?
ஒன்றில் வழிந்தோடிய நுரையும்
இன்னொன்றில் எப்போதும் போல் எனக்கான போதையும்


சென்றமுறை நீ அனுப்பிய சரக்கு குறித்து குறிப்பேதும் இல்லையே
உனக்காக நான் அனுப்பிய சைடிஷும்
இரு அவிச்ச முட்டையும் வந்து சேர்ந்ததா?

79 வாங்கிகட்டி கொண்டது:

SUBBU said...

:)

SUBBU said...

முடியல :)

பீர் | Peer said...

இந்த மாதிரி அடிக்கடி நாட்டுக்கு ஏதாவது நல்லது சொல்லுங்கண்ணே..

க.பாலாசி said...

பிறந்தநாள் கொண்டாடும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்களும்...முக்கியமா உங்க பாஸ்க்கு...(உங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை மணியாடர் செய்யவும்)

எதிர் கவுஜையில் நல்ல போதை...

இதை எழுதி உங்களை எதிர்கவுஜ போட தூண்டியவருக்கு எனது அனுதாபங்கள்...

கடைசியா கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி...ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிவிட்டது...

நன்றி வணக்கம்...

யாசவி said...

ரெட்டி இறந்து விட்டார்

:-(

Vidhoosh said...

இரசித்தேன். :))

=================================
இல்லை, ஆமாம், இல்லை,
ஆமாம் அவை வெறும் கற்கள், ஆமாம்,
மீண்டும் இல்லையென கற்கள் வீசி
மலைபோலாகி விட்ட கடவுள்
இருக்கிறது மலை மட்டும்,
ஆமாம் இல்லை, ஆமாம் இல்லையா?
கடவுள் ஆமாம் இல்லை மதம்
மதம் ஆமாம் இல்லை கடவுள்
கடவுள் ஒன்றாம், மதம் பலவாம்,
மதம் ஒன்றாம், கடவுள் பலவாம்,
ஆமாம் இல்லையா? இல்லையா?
==========================

இதுக்கும் ஏற்கனவே டோண்டு பின்னூட்டத்துல சொன்னாப்ல ரெண்டு புல் அடிச்சு எழுதவும் என்று தலை சுத்தி, தள்ளாடிக்கிட்டே, ஒரு அறைகூவல். ஆம்ம்ம்மாம்....

வாழ்க உமது கலைச் சேவை. :))

-- வித்யா

அப்பாவி முரு said...

என்று குத்துமதிப்பாக ”மழமலா” என்ற காட்டுப்பகுதியில் தேடி வருகிறார்கள்!


அண்ணே அது, மழமலா இல்லை “நல்லமலா”

Vidhoosh said...

தாரணி, வடிவேலு, கார்த்தி எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

--வித்யா

Anonymous said...

தாரணி, வடிவேலு, கார்த்தி எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Beski said...

ஆந்திரா கதை ஏதோ ஆக்சன் பட ரேஞ்சுக்குல்ல இருக்கு!

எதிர் கவுஜ சூப்பரு, வழக்கம்போல.

குவியல் அருமை.

கிருஷ்ண மூர்த்தி S said...

விதூஷ் திருப்பியும் சொன்னது:
/இல்லை, ஆமாம், இல்லை,
ஆமாம் அவை வெறும் கற்கள், ஆமாம்,
மீண்டும் இல்லை/

வால்பையனை ஒரு வழி ஆக்காமல் தாய்க்குலம் ஓய்வதில்லைஎன்று மிடுவு கட்டியே..

/கற்கள் வீசி
மலைபோலாகி விட்ட கடவுள்
இருக்கிறது மலை மட்டும்,
ஆமாம் இல்லை, ஆமாம் இல்லையா?/

ரெண்டு புல் பத்தாது!

கிரி said...

பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

படம் பார்த்து விடுவோம்

ஈரோடு கதிர் said...

//உள்துறை அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் வெற்றிலையில் மை போட்டு பார்த்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை//

நேற்று காலையில் இருந்து இரவு வரை என்ன செய்தார்கள் என்பதுதான் ஆச்சர்யம்....

ஒரு முதல்வர் காணமல் போனதையே 24 மணி நேரம் வரை எங்கிருக்கிறார் என கண்டறிய முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது

பரிசல்காரன் said...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...
முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

பரிசல்காரன் said...

@ கார்த்திக்

ஹாப்பி பர்த்டே பாஸூ!

Eswari said...

//இப்படத்தை பற்றியும் நீண்ட விமர்சனம் எழுதலாம், ஆனால் ஏற்கனவே சரியாக புரிந்து கொள்ளாமல் டெர்மினேட்டர் படத்தை பற்றி எழுதி செமத்தியாக வாங்கி கட்டி கொண்டதால் வேண்டாம் என நினைக்கிறேன்!//

அந்த பயம் இருக்கட்டும்..

இளவட்டம் said...

குவியல் அருமை.எதிர் கவுஜ நல்லாவே இருக்கு.அப்புறம் படம் பார்த்துறலாம்.

தினேஷ் said...

கவுஜ கிக்கு..

அப்புறமா எல்லோருக்கும் ஹேப்பி பெர்த்டே...

தினேஷ் said...

ரெட்டி சாவுக்கு என் கூட வேலை பாக்குர ரெட்டி அழுகுறான் , ரெட்டி ரொம்ப நல்லவர இருப்பாரோ ?

கலையரசன் said...

குவியல் கும்மு!!

//இரு அவிச்ச முட்டையும் வந்து சேர்ந்ததா?//

வந்து சேர்ந்தது தல.. அதுகூட இஞ்சி ஊறுகாயும் ஆனுப்பியிருந்தால் சந்தோஷமாய் இருந்திருக்கும்!

அகல்விளக்கு said...

//நண்பரும் பல நூறாண்டுகள் எனக்கு சம்பளம் கொடுக்க வாழ்த்துவோம்!//


வாழ்த்துவோம்!...........


:-)

எம்.எம்.அப்துல்லா said...

//அண்ணே அது, மழமலா இல்லை “நல்லமலா”


//

அவரு நைட்டு கேட்ட நியூஸ் இது.அந்த நேரத்துல வாலு காதுல அப்பிடித்தான் விழுகும்

:))

S.A. நவாஸுதீன் said...

மூவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கார்ல்ஸ்பெர்க் said...

வால் அண்ணா, நான் கூட இந்தப் படத்த பார்த்திருக்கேன்.. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்தான்..

கார்ல்ஸ்பெர்க் said...

ஆனா, நீங்க சொன்ன மாதிரி விமர்சனம் சொல்லாம இருக்குறது நல்லதுதான்.. நாம கதை இதுதான்னு நெனச்சுட்டு இருப்போம் ஆனா உண்மையான கதை வேற என்னவோவா இருக்கும் :)

ஹேமா said...

கவிதை தலை சுத்துது.

Suresh Kumar said...

நல்ல குவியல் .

ஆந்திர முதலமைச்சர் மரணம் மிகவும் வருத்தமான செய்தி .

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

எதிர் கவுஜ ஸூப்பர்... :)

ஆரூரன் விசுவநாதன் said...

"வாலு"ங்கறது சரியாத்தான் இருக்கு.....

வாழ்த்துக்கள்

அகநாழிகை said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Admin said...

பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Admin said...

//பீர் | Peer said...
இந்த மாதிரி அடிக்கடி நாட்டுக்கு ஏதாவது நல்லது சொல்லுங்கண்ணே..//



எது நல்லது?

Anbu said...

பிறந்தநாள் கொண்டாடும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்களும்.

தேவன் மாயம் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் !!!..உங்க பாசுக்கும் எனது வாழ்த்துக்களைச் சொல்லவும்!!

Cable சங்கர் said...

/கவிதை தலை சுத்துது.
//

சுத்தாம என்ன பண்ணும். அது சரக்கு பத்தின கவிதை இல்லையா.?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பிறந்த நாள் காண்போருக்கு வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தாரணி, வடிவேலு, கார்த்தி எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thamira said...

பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.!

Menaga Sathia said...

பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

Sanjai Gandhi said...

தொர இங்லிஷ் படமெல்லாம் பாக்குது.. :))

மாதேவி said...

தாரணி, வடிவேலு, கார்த்தி,உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாரணி பிரியா said...

நன்றி வால் :)

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்கோ

அறிவிலி said...

பொறந்த நாள் காரங்களுக்கு வாழ்த்துகள்.

உங்க பாஸுக்கு என் ஆறுதல்.

எதிர் கவுஜ அருமை.

பரிசலுக்கு ரொம்ப முடியலயாம். விசாரிச்சதா சொல்லுங்க.

யோ வொய்ஸ் (யோகா) said...

பிறந்த நாள் கொண்டாடுறவங்களுக்கு வாழ்த்துக்கள்,

கவுஜ சூப்பர்ணா

நாஞ்சில் நாதம் said...

:))

sriram said...

''பெண்களை பொறுத்தவரை மிகமுக்கிய பணி சமையல் செய்வதே''

நீ இதுக்கு பெண்ணியவாதிகளிடமிருந்து நல்லா வாங்கிக் கட்டிக்க்ப்போற

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Radhakrishnan said...

பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

கவிதை அருமை.

- இரவீ - said...

தாரணி, வடிவேலு, கார்த்தி எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

- இரவீ - said...

கவுஜ சூப்பரு ...

- இரவீ - said...

அட ஒரு 50...

சென்ஷி said...

தாரணிபிரியா, வடிவேலன் மற்றும் கார்த்திக் பாஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எதிர் கவுஜ அருமை! :)

நட்புடன் ஜமால் said...

மூவருக்கும் வாழ்த்துகள்.

Unknown said...

ஓட்டுக் குத்திட்டேன்.. :)))

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாரணிப்பிரியா அக்கா எல்லாருக்கும் ஸ்வீட் பண்ணி கொடுங்க

ஜெட்லி... said...

எதிர் கவுஜ சூப்பர் அண்ணாத்த....

ஜெட்லி... said...

எதிர் கவுஜ சூப்பர் அண்ணாத்த....

VISA said...

எதிர் கவுஜ

நீ அனுப்பிய இரண்டு பிகரும் இன்று வந்து சேர்ந்தது.
வழக்கம் போல் முடியவில்லை.
இதில் எது நல்ல சரக்கு? எது பல(பலான) சரக்கு ?



ஒன்றில் வழிந்தோடிய நுரையும்
இன்னொன்றில் எப்போதும் போல் எனக்கான போதையும்.

அ.மு.செய்யது said...

பிறந்தநாள் கொண்டாடும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்களும்...( தாமதமத்திற்கு மன்னிக்க !! )

எதிர்கவுஜ டாப்பு...ஏற்கெனவே விதூஷ் பதிவில பார்த்துட்டேனே !!

சங்கரராம் said...

குவியல் சரியான அவியல்

அப்துல்மாலிக் said...

குவியல்

அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒரு நல்ல மனிதரை காங்கிரஸ் இழந்துவிட்டது

கவுஜயிலே போதை தலைக்கேரியது

Unknown said...

தாரணி, வடிவேலு மற்றும் கார்த்தி அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்..

கவுஜ கலக்கல்..

அது சரி(18185106603874041862) said...

//
அவர்களது ஹாபியும் சமையல் செய்வதாக தான் இருக்கிறது, புதிது புதிதாக எதாவது செய்து நம்மை அதிர்ச்சிகுள்ளாக்குவதில்!? அவர்கள் வல்லவர்கள், பலர் அம்மாதிரி ப்ளாக் வழியாக நம்மை சோதனை செய்வது நாம் அறிந்ததே,
//

:0)))

Anonymous said...

FYI..
http://truetamilans.blogspot.com/2009/09/blog-post.html#comment-7143750611489666636

ப்ரியமுடன் வசந்த் said...

எதிர் கவுஜ கலக்கல் போதை தல......

Anonymous said...

கவிதை போதை....

குவியல் சைட் டிஷ்..

பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நமது அண்டை மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி இப்பதிவு எழுதும் வரை கண்டுபிடிக்கப்படவில்லை! இது ஆந்திராவுக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல, மொத்த இந்தியாவுக்கும் அதிர்ச்சி, நமது நாட்டு தேசிய பாதுகாப்பின் மேல் விழுந்த கரும்புள்ளி. உள்துறை அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் வெற்றிலையில் மை போட்டு பார்த்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை, //

உண்மை தான் பாதுகாப்பின் அலட்சியம் தான் காரணம்....இந்த கரும்புள்ளிக்கு எல்லாம் கவலைபடும் நாடா நம் திரு நாடு? இல்லையே....

Nathanjagk said...

//பெண்களை பொறுத்தவரை மிகமுக்கிய பணி சமையல் செய்வதே// யாரும் கும்மியடிக்க வர​லே? ஆச்சரியமா இருக்​கே? ம்ம்!! பாஸின் பதி​வைப் பார்த்​தேன். அரு​மை! எதிர்கவி​தை Xஸலண்ட்!!

Maximum India said...

தாரணி, வடிவேலு, கார்த்திக் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அடுத்த பிறந்தநாளை துணைவியாருடன் கொண்டாட கார்த்திக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

நன்றி.

கார்த்திக் பிரபு said...

eppadiyya ipadlam arumiaya eludhurenega im following u

keep it up :)

http://gkpstar.googlepages.com/

Venkatesh Kumaravel said...

எதிர்கவுஜ சூப்பரோ சூப்பர். கேட்டகா படம் பற்றி பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி.

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

மங்களூர் சிவா said...

பிறந்தநாள் கொண்டாடும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்களும்.

மகேஷ் : ரசிகன் said...

எதிர் கவுஜை Super..... :)))))))))

g said...

இந்த மாதிரி அடிக்கடி நாட்டுக்கு ஏதாவது நல்லது சொல்லுங்க.

ரௌத்ரன் said...

பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

நண்பா கார்த்திக்...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ரொம்ப லேட்டா சொல்றேன்.

KARTHIK said...

தாரணிப்பிரியா மற்றும் வாத்தியார் வடிவேலு அவர்களுக்கும் எனது தாமதமான வாழ்துக்கள் :-))

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி :-))

@ மேக்ஸ்
// அடுத்த பிறந்தநாளை துணைவியாருடன் கொண்டாட கார்த்திக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.//

அண்ணா எந்தவருசமும் இல்லாமா இந்தவருசம் எல்லாரும் இப்படியே சாபம் விடுராங்க என்ன நடக்குமே தெரியல :-))

நன்றி.

ஊர்சுற்றி said...

நல்ல குவியலுங்கோ!

உங்கள் ராட் மாதவ் said...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

முடியல ... முடியல.. முடியல...

தாங்க முடியல

தாங்க முடியல

தாங்க முடியல

தாங்க முடியல :-)))))

உங்கள் ராட் மாதவ் said...

தாரணி, வடிவேலு, கார்த்தி எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

நன்றி சுப்பு
நன்றி பீர்
நன்றி பாலாஜி
நன்றி யாசவி
நன்றி விதூஷ்
நன்றி அப்பாவி முரு
நன்றி மயில்
நன்றி எவனோ ஒருவன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி கிரி
நன்றி கதிர்
நன்றி பரிசல்காரன்
நன்றி ஈஸ்வரி
நன்றி இளவட்டம்
நன்றி சூரியன்
நன்றி கலையரசன்
நன்றி அகல்விளக்கு
நன்றி அப்துல்லா
நன்றி நவாஷுதீன்
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி ஹேமா
நன்றி சுரேஷ்குமார்
நன்றி அக்கீலீஸ்
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி அகநாழிகை
நன்றி சந்ரு
நன்றி அன்பு
நன்றி தேவன்மயம்
நன்றி கேபிள்சங்கர்
நன்றி ஸ்ரீ
நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி Mrs.Menagasathia
நன்றி சஞ்சய்
நன்றி மாதேவி
நன்றி தாரணிபிரியா
நன்றி அறிவிலி
நன்றி யோவாய்ஸ்
நன்றி நாஞ்சில்நாதம்
நன்றி ஸ்ரீராம்
நன்றி வெ.ராதாகிருஷ்ணன்
நன்றி ரவீ
நன்றி சென்ஷி
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி குமாரசுவாமி
நன்றி குடுகுடுப்பை
நன்றி ஜெட்லி
நன்றி விசா
நன்றி அ.மு.செய்யது
நன்றி சங்கரராம்
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி அதுசரி
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி தமிழரசி
நன்றி ஜெகநாதன்
நன்றி மேக்ஸி
நன்றி கார்த்திக்பிரபு
நன்றி வெங்கிராஜா
நன்றி தமிழ்முல்லை
நன்றி மங்களூர் சிவா
நன்றி மகேஷ்
நன்றி ஜிம்ஷா
நன்றி ரெளத்ரன்
நன்றி கார்த்திக்
நன்றி ஊர்சுற்றி
நன்றி மிக்ஸ்
நன்றி ராம் மாதவ்

தாமத நன்றிக்கு மன்னிக்கவும் நண்பர்களே!

!

Blog Widget by LinkWithin