பரிசல்காரரின் செக்ஸ் தான் காரணமா? என்ற பதிவுக்கு பல்வேறான காரணங்கள் சுட்டிகாட்டி பின்னூட்டம் வந்த்தது. ஆனால் எனக்குள் இது பற்றிய கேள்வி பல வருடங்களாக ஒளித்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் கடைசியில்,இங்கே அது பற்றி என்னுடைய புரிதல்கள்.
குறையிருந்தால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்.
விலங்கியல்.
மனிதன் ஹோமோஎரக்டஸாக இருந்த காலத்திலிருந்தே அவனது உண்மையான தேவை, உணவும்,உறவும் மட்டுமே. அதாவது உயிர் வாழ உணவு, இனத்தை விருத்தி செய்ய உறவு.
இன்றய மனிதனின் மற்ற தேவைகள் எல்லாம் சுயசொறிதலே!.அன்றைய காலத்தில் உணவுக்கு எவ்வளவு கடினப்படனுமோ அதே அளவு அவனது துணையையும் பாதுகாக்க வேண்டும்.இல்லையென்றால் வேறு எவனாவது தூக்கி போய்விடுவான். குரங்கின் மீதுசெய்த ஆராய்ச்சியில் இது தெரிய வந்திருக்கிறது. மற்றொன்று பெண் விலங்குகளின் குணம், பாதுகாப்பு மற்றும் சிறப்புமிக்க சந்ததியினர். அதற்க்காக ஒரு கூட்டத்தில் யார் பலம் வாய்ந்த தலைவனோ அவனையே துணையாக அடைய நினைக்கிறது.
அறிவியல்
”மனித உடற்கூறுகள்” பாடத்திட்டதில் விலங்கியல் பிரிவிலே தான் வருகிறது. பாடத்தில் இனபெருக்க உறுப்புகளை பற்றி மட்டும் சொல்லி கொடுத்தால் போது என்று இந்த சமூகம் நினைக்கிறது. செக்ஸ் பற்றிய அறியாமையும், மூடநம்பிக்கையும் இங்கேயே ஆரம்பித்து விடுகிறது. இது பற்றி நிறைய விசயங்களை விவாதிக்கலாம், ஆனால் பதிவு திசைமாறி போகும் என்பதால் வேண்டாம்.
உடலியல்
மற்ற விளையாட்டுகளில் ஒருவர் வெற்றி பெற ஒருவர் தோல்வி அடைய வேண்டும் என்பது தான் விதி,ஆனால் செக்ஸில் மட்டுமே இருவரும் விளையாண்டு இருவரும் வெற்றி பெறுவது என்று ஒரு சொலவடை உண்டு, இங்கே எத்தனை ஆண்கள் பெண்களுக்கும் உணர்வின் எல்லை உண்டு என்று அறிகின்றனர். ”பிரிமெச்சூர் இஜாக்குலேஷன்” என்பது ஒரு குறைபாடு,அதற்கு சிகிச்சை உண்டு என்று எத்தனை ஆண்களுக்கு தெரியும்.
அதை கூட பொறுத்து கொள்வாள் பெண், ஆனால் அவளை ஒரு இயந்திரம் போல பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்.கட்டிய மனையிவாக இருந்தாலும் அவளின் விருப்பமில்லாமல் தொடுவது வன்முறைக்கு சமமென்று எத்தனை ஆண்கள் ஒத்துகொள்கிறார்கள்.
என் துணையை தேர்ந்தெடுத்து கொள்வது அவரவர் உரிமை என்று ஓரினசேர்க்கையாளர்கள் உரிமை கோருகிறார்கள், ஆனால் தன் கணவன் ஒரு bi-sexual என்பதை ஒரு பெண் எவ்வாறு ஏற்று கொள்ளமுடியும்.
நான் ஆண்,அதனால் எத்தனை பெண்களிடம் வேண்டுமானாலும் தொடர்பு வைத்து கொள்வேன் என்று சொல்லும் ஆண்களை நீங்கள் பார்த்ததில்லையா?
பெண்களின் உடல் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு ஆணை அவள் எப்படி ஆணாக ஏற்றுகொள்வாள்.
உளவியல்
பேசினால் தீராத விசயமில்லை என்பதால் தான் உளவியலில் கவுன்சிலிங் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பத்தை பொறுத்தவரை சராசரியாக பார்த்தால் வாரத்துக்கு ஒரு மணீநேரம் மனையிடம் கணவன் பேசுவது அரிது. அதே நண்பனுடன் போனில் மணிக்கணக்காக அரட்டையடிக்க தயாராக இருப்பான். நாம் பேச தெரிந்த விலங்கு ஒரு ஆணுக்கு இருக்கும் பொதுவான எதிர்பார்புகள் பெண்னுக்கும் இருக்கும். ஒரு காதலியுடன் மணிக்கணக்காக பேசும் காதலன் அதே காதலி மனைவியாக வரும் பொழுது பழய காதலுடன் பேசுவது சிப்பிக்குள் முத்து.
சமூகம்
ஒரு பெண்ணை இயல்பு மீறி நடக்க வைப்பதும் இந்த சமூகமே! அதே பெண்னை குற்ற உணர்வால் தினம் தினம் சாகடிப்பதும் இந்த சமூகமே!. சமூகத்தின் மேல் எனக்கு பயங்கரமான கோபமிருக்கிறது. அது மட்டும் திட வடிவில் கிடைத்தால் சுக்கல் சுக்கலாக உடைத்து விடுவேன்.
சமூகம் என்பது என்ன? ந்ம்மை தவிர சுற்றி உள்ள அனைத்தும் சமூகம்.
அது எப்பொது உருப்படும்? பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பழக்கம் உள்ள வரை அது உருப்படாது.
ஒருவன் தவறு செய்கிறான் என்று சுட்டி காட்ட ஆயிரம் காரணம் சொல்லலாம்,ஆனால் எனக்கு தெரிந்த ஒரே காரணம், நான் ஒழுக்கமானவன் என்று சுய போஸ்டரே!இது அனைத்திற்க்கும் பொருந்தும்.
இங்கே நல்லவர்களாக வாழ்பவர்களை விட நல்லவர்கள் போல் நடிப்பதே அதிகம்.
இச்சமூகத்தில் பெண்ணுக்கு ஏது மதிப்பு, உரிமை,சுதந்திரம்.
ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம், இன்றிலிருந்து இருபது ஆண்டுகளூக்கு பெண் குழந்தைகளே பிறக்காது என்றால் என்ன ஆகும். ஒரு பெண்ணுக்கு மூண்று ஆண் துணை இருப்பார்கள். மறுக்கமுடியுமா உங்களால்.
*************************
இவ்விசயத்தில் குழந்தைகள் பாதிக்கபடுவது உண்மை தான், அதற்கும் இந்த சமூகம் தான் காரணம். இதை ஒரு பெரிய விசயமாக சொல்லி அந்த குழந்தையை வளர்க்க வேண்டியதில்லை என்பதே என் வாதம். ஆனாலும் எல்லா குழந்தைகளும் சமூக விரோதிகளாக வளருவதில்லை அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.
26 வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண் தனது கணவரை விட்டு வேறொரு ஆணுடன் தன் குழந்தைகளுடன் இடம்பெயர்ந்தார். அந்த ஆண் அதற்கு பின் அந்த குழந்தைகளை தன் குழந்தைகளாக வளர்த்தார், படிக்க வைத்தார்,கல்யாணம் செய்து வைத்தார். இன்றும் அது தான் அவர்களது குடும்பம்.
அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை
67 வாங்கிகட்டி கொண்டது:
நச்!
நிதர்சனம் முகத்தில் அறைகிறது!
தவறு ஒரு பக்கமே இருப்பதாகவும், பெண்களே இந்த சமூகத்தின் முதுகெலும்பு என்பது போலவும் பெரிய சுமைகளை அவர்களின் மேல் ஏற்றி வைத்துவிட்டு தான் எங்காவது பராக்குபார்க்க போவதில் என்ன நியாயமிருக்க முடியும்?
//அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை//
இதைப் பகிர்ந்துகொள்ள தைரியம் வேண்டும்.
கபீஷ் said...
//அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை//
இதைப் பகிர்ந்துகொள்ள தைரியம் வேண்டும்.
வழிமொழிகிறேன்.
சமூகம்,நாகரீகம், அடுத்தவன் பழிப்பான் என்று வாழ்வது என வாழாமல், தனக்காக மனிதன் வாழவேண்டும்.
வால்பைய்யன் எனக்கும் இது பற்றி நிறைய கேளவிகளிருக்கிறது.....
அதை எல்லாமிங்கு பகிர்ந்துகொள்ள முடியாது....ஆனாலும் உங்கள்பதிவு நிதர்சனம்!!!!
தங்களுக்கு கிடைத்த தந்தையை பற்றி நான் பெருமைபடுகிறேன்!!!இதையே நான் செய்வேனா என்று எனக்கு தெரியாது???எனக்கு 25 வயதுதான் ஆகிறது..அதனால் என்னிடம் பல கேள்விகள் உண்டு செக்சைபற்றி ஆனால் விடை தான் இல்லை?? :(((((
//அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை//
துணிச்சல் மிக்க தங்களது பகிர்தல் வியப்பில் ஆழ்த்தியது. இப்படி ஒரு பெண் தனது கருத்தை பதிவு செய்வாளாக இருந்தால் அவள் மீது இந்த மனிதர்கள் பூசிவிடும் சேறு சென்மத்துக்கும் ஆறாது.
பெண்கள் பற்றிய விளிப்பும் தெளிவும் இருக்கும் தங்கள் போன்ற இளையோரின் மாற்றங்களில்தான் பெண்ணும் ஒரு சீவனாக மதிக்கப்படும் மாற்றம் உண்டாகும்.
கண்ணாலம் ஆச்சிங்களா ?
மனமார்ந்த இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்கள் தந்தைக்கும் அன்னைக்கும்.
செக்ஸ் மட்டும் காரணம் இல்லை என்பது எனக்கு ஏற்கெனவே தெரியும்.
இந்த வயசுக்கு பல விஷயங்களை அறிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சது.
//அந்த ஆண் அதற்கு பின் அந்த குழந்தைகளை தன் குழந்தைகளாக வளர்த்தார், படிக்க வைத்தார்,கல்யாணம் செய்து வைத்தார். இன்றும் அது தான் அவர்களது குடும்பம்.//
தங்கள் தந்தை போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்.
அன்பின் வால் பையா
அலசல் அறிவு அருமை. இருப்பினும் யதார்த்தம் - இயல்பான வாழ்வு - சமூகம் என்றெல்லாம் இன்றும் இருக்கிறதே.
அன்பான தந்தைக்கும் அழகான தாய்க்கும் அன்பினைத் தெரிவிக்கவும்.
துணிச்சல் அதிகம் உனக்கு
சபாஷ்!!!
//அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை//
உங்கள் தந்தைய வணங்குகிறேன். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். சமுதாயத்துக்கு இந்த மாதிரி எடுத்துக்காட்டுகள்தான் தேவை.
வா.பை, உங்க அம்மாவுக்கும் அந்த பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் புரிஞ்சிதுங்களா ?
உங்க பதிவிலேயே அதுக்கான பதில் இருக்கு பாருங்க !
"மற்றொன்று பெண் விலங்குகளின் குணம், பாதுகாப்பு மற்றும் சிறப்புமிக்க சந்ததியினர். அதற்க்காக ஒரு கூட்டத்தில் யார் பலம் வாய்ந்த தலைவனோ அவனையே துணையாக அடைய நினைக்கிறது"
இப்போ அந்த பெண்ணை யோசிச்சி பாருங்க. உண்மையிலேயே பாதுகாப்பு காரணம்னா, தன் குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டுப்போக மனசு வருமா ?
குழந்தைகள் கஸ்டடி தொடர்பா இந்திய குடும்ப நல சட்டம் பெண்களுக்கே சாதகமா இருக்கு-னு நினைக்கிறேன். அதாவது, குழந்தைகள் 18 வயது வரைக்கும் அம்மாவிடமே இருக்கவேண்டும்-னுதான் சட்டம் சொல்லுது-ன்னு நினைக்கிறேன். அப்படி இருக்கையில, சட்டரீதியாவோ இல்லாமலோ விலக்கு பெற்று, குழந்தைகளையும் தன்னோடே அழைத்துக்கொண்டு சென்றிருந்தால் அந்தப்பெண் பாராட்டுதலுக்கு உரியவரே.
ஆனால் ... குழந்தைகள் எப்படியும் போகட்டும், தன் நலமே முக்கியம் என்ற சுயநலத்தோடு நேர்மையே இல்லாமல் திருட்டுத்தனமாக இன்னொரு ஆணுடன் போவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும் ? இதை தவறு என்று சொல்ல ஆணாதிக்க மனம்தான் வேண்டுமென்றில்லையே ?
அன்புடன்
முத்துக்குமார்
வால் பரிசல் பதிவிலேயே விவாதம்ன்னு போகவேண்டாமேன்னு வந்துட்டேன்.
ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டு கனவனை விட்டுவிட்டு போகிறாள் என்றால் எப்படி இப்படி கூட செய்ரான்னு எல்லாருமே கேக்கறாங்க.
இப்படி கூட செய்யனும்னா அந்த பொண்ணுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கலாம்ன்னு சின்னதா யாரும் யோசிக்கரதே இல்லை.
100% சரின்னும் ஒண்ணுமில்ல.100% தப்புன்னும் ஒண்ணுமில்ல.
//ஆனால் ... குழந்தைகள் எப்படியும் போகட்டும், தன் நலமே முக்கியம் என்ற சுயநலத்தோடு நேர்மையே இல்லாமல் திருட்டுத்தனமாக இன்னொரு ஆணுடன் போவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும் ? இதை தவறு என்று சொல்ல ஆணாதிக்க மனம்தான் வேண்டுமென்றில்லையே ?
அன்புடன்
முத்துக்குமார்/
இதே வேலையை ஒரு ஆண் செய்தால் இவ்வளவு பரபரப்பு இருக்காதே. அதுதான் சமூகக்குற்றம். ஓடுவது பெண்ணோ ,ஆணோ அது அவர்கள் இஷ்டம் கஷ்டம்.
உங்கள் தந்தைக்கும்..தாய்க்கும்..வணக்கங்கள்..உங்களது புரிதலுக்கு பாராட்டுகள்
ஒட்டு மொத்தமாக ஆண் குலம் தவறு அல்லது பெண் குலம் தவறு என்று பேசுவது சரியாகாது.ஒரு சில நிகழ்வுகளில் அது ஆணின் தவறாகவும்,சில இடங்களில் அது பெண்ணின் தவறாகவும் இருக்கிறது.
குழந்தைகளை விட்டு விட்டு ஓடும் ஆணை சமூகம் கண்டிக்கவில்லை என்று சொல்வது தவறு.
ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் தன் குழந்தைகளின் நலன் கருதி எடுக்கபட்ட முடிவுகளை மட்டுமே நாம் பாராட்ட வேண்டும்,தன் சுய நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும்.
உங்கள் துணிவுக்கு என் பாராட்டுக்கள்
உங்கலோட அனுபவங்கள எங்கலோட பகிரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.. நண்பா, கவலை கொள்ளாதே சகா...நீ எனக்கு தோழன் அல்ல உடன் பிறவா சகோதறனும் கூட...
-வீணாபோவனவன்.
நீங்களாக உங்கள் குடும்பத்தை புகழவில்லை, பிறர் புகழ செய்துள்ளீர்கள், அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களே சாட்சி. மேலும் சாதித்து புகழடைய வாழ்த்துக்கள்.
உங்கள் அம்மா எத்தகைய மனக் கஷ்டங்களுக்குப் பின் அந்த முடிவு எடுத்திருந்தாலும் தனது வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து இருக்கிறார். இவ்வளவு புரிதல் உள்ள கணவன், பிள்ளை கிடைத்ததே அதற்குச் சான்று.
உங்கள் நேர்மைக்கும் துணிவுக்கும் பாராட்டுகள் வால்பையன். உங்களின் மனப்பக்குவம், தெளிவு மிகவும் பெருமை கொள்ளதக்கதாக அமைந்திருக்கிறது. தாயின் உணர்வை மனதை புரிந்து கொண்டிருக்கும் உங்களை பெற்றெடுத்தற்காக உங்கள் தாயார் மிகவும் மகிழ்வார்கள்.
பொதுவான அளவுகோல்களைக் கொண்டு இந்த விசயத்தை அணுக முடியாது என்பதை உங்கள் அனுபவம் உறுதி செய்திரூக்கிறது. ஒவ்வொரு முடிவுக்கு பின்னும் உள்ள காரணங்களை பேச பெரும்பாலானோர் விரும்புவதில்லை. கணவன் மனைவி உறவுகளுக்கிடையேயான பிரிவை பேசும் போது மற்ற எல்லா காரணிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு காமம் மட்டுமே பிரதானபடுத்தப்படுகிறது, ஏனென்றால் அந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை இழிவாகவும், குற்றம் சுமத்தியவரை பரிதாபகரமாகம் பார்க்கும் மனப்பாங்கே இந்த சமுகத்த்திற்கு இருக்கிறத்து. பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலாமல் ஒருவரின் குணத்தை இகழ்வதோடு நிறுத்தி கொள்கிறது.
//அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை//
உங்கள் தந்தைய வணங்குகிறேன். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். சமுதாயத்துக்கு இந்த மாதிரி எடுத்துக்காட்டுகள்தான் தேவை.
''இதை நான் வழி மொழிகிறேன்''
உண்மையை அப்படி யே சொல்வதற்கு ஒரு விதமான மனதைரியம் வேணும் . அதை சரியான கோணத்தில் எடுத்துக்கவும் எல்லாருக்கும் இங்க தெரிஞ்சுருக்கு..நல்லது.
குடுகுடுப்பை, தெகா , பாபு போன்றவர்களின் பின்னூட்டமும் நன்றாக இருந்தது.
உங்களது இந்த பதிவு மனதை மிகவும் பாதித்தது. உண்மை சுடும் என்பார்கள். அது உண்மைதான் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
உங்கள் நேர்மைக்கும் துணிவுக்கும் பாராட்டுகள் வால்பையன்.
//உங்கள் நேர்மைக்கும் துணிவுக்கும் பாராட்டுகள் வால்பையன்.//
ரிப்பீட்டு...
தன் வீட்டு பெண் தன் இஷ்டத்திற்கு தோழிகளை (தோழர்கள் இல்லை) வைத்துக்கொள்ள கூட சில வீடுகளில் ஆண்கள் விடுவதில்லை. ஆனால் அதே ஆண் தோழிகளுடன் வரம்புமீறி நடந்துகொண்டும், தன் வாழ்க்கையை பெண்களுடனே நேரம் கிடைக்கும் போது எல்லாம்(இது அடுத்த வீட்டு பெண்) கழிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக நான் பார்த்து இருக்கிறேன். இப்படி ஒரு சமூகத்தில் இருக்கும் நாம், ரொம்பவும் அட்வான்ஸ்'ஆக யோசிப்பது கூட குற்றமாகிப்போகும். :(
//உங்கள் நேர்மைக்கும் துணிவுக்கும் பாராட்டுகள் வால்பையன்.//
வழிமொழிகிறேன்
அருண்,
இது பொதுப்படுத்திப் பார்க்கவோ அல்லது எல்லாவற்றையும் செக்ஸின் அடிப்படையில் பார்க்கவோ கூடாத ஒன்று.
ஒரு குழந்தையைப் பெற்றுத்தர மறு ஜென்மம் எடுக்கும் பெண், அந்தக் குழந்தைக்காக இவ்வாறான முடிவுகள் எடுக்கும்போது உயர்வாகவும், குழந்தையைத் தவிர்த்து தன் சுகமே முக்கியமென்று நினைக்கும் போது தாழ்வாகவும் மதிக்கப் படுகிறாள்.
அவரவர் நிலையில் இருந்து பார்த்தால்தான் சரியாகப் புரியும்.
ஒரு வாதத்திற்காக அல்லாமல் உங்களையே முன் வைத்ததில் நீங்கள் என் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் இம்மனநிலை எளிதில் வாய்க்காது. .
என் மனைவியின் சித்தப்பாவுடன் தற்பொழுது (20 வருடங்களாக) சேர்ந்து வாழும் பெண்மனிதான் அவரது முதல்மணைவி மூலம் பிறந்த 6 குழந்தைகளுக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்திருக்கிறார். மகன்களில் இருவரை நல்லவிதமாகப் படிக்கவைத்து (cnc training) தற்பொழுது சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்கள். இவ்வளவு செய்தும் அவருக்கு சமூகத்தில் மரியாதை இல்லை என்பது வேதனையான ஒன்று.
சமூகம் கிடக்குது கழுத.. அத ஒத்தை ஆளா கட்டி இழுக்க முடியாது.. நமக்கு தேவையானத, மனசுக்கு நிறைவானத, புடுச்சத நாம தான் தேர்ந்து எடுத்துக்கணும். சமூகத்த பத்தி கவலை பட்டா கடைசீ வரை அது மட்டும் தான் மிஞ்சும்(கவலை).
செத்ததுக்கு அப்புறமா தூக்கிட்டு போக நாலு பேரு வேணும். அதுக்காக நாம பாடுபட்டா போதும். உங்க அப்பா அம்மாவ நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குங்க...
உங்கள் தைரியம்!,... பாராட்டுகள்
வணக்கம் வால்பையன்.நான் உங்கள் பதிவுக்கு வந்துவிட்டு பின் பரிசலிடம் போய்விட்டு மீண்டும் இங்கே திரும்பி வந்துள்ளேன்.
அவரது பதிவின் பெண் கூடவே குழந்தைகளையும் கூட்டிச் சென்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
இப்படியான சிக்கலில் பெரும்பான்மை பெண்கள் இந்த மாதிரியான முடிவைத்தான் எடுக்கிறார்கள்.
உங்கள் வெளிப்படையான பதிவுக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் அருமையான படைப்பு.
When I read the topic..
I thought it would be yet
another mundane discussion on sex.
but after readin it..I was proved wrong.said in a very interesting,different perspective.
as people said in their comments..
I was taken aback after reading the last paragraph..!!
Did you ever remember that once writer Sujatha told his psychiatrist friend, a love story about 2 persons, and told him that I never believe in love, except for thsi one..
Read that one, if u didnt..
U will like it..
I think it is my first time I am reading ur blog,really really good!!
இதுதான் முழுமையான கோணத்தில் செய்யப்பட அலசல்னு சொல்ல நான் மனநல மருத்துவர் கிடையாது. ஆனால் என்னைப்பொறுத்தவரை மிக மிக சரியா சொல்லிருக்கீங்க.
//ஒருவன் தவறு செய்கிறான் என்று சுட்டி காட்ட ஆயிரம் காரணம் சொல்லலாம்,ஆனால் எனக்கு தெரிந்த ஒரே காரணம், நான் ஒழுக்கமானவன் என்று சுய போஸ்டரே!இது அனைத்திற்க்கும் பொருந்தும்.
இங்கே நல்லவர்களாக வாழ்பவர்களை விட நல்லவர்கள் போல் நடிப்பதே அதிகம்.//
இங்க சொல்லிருக்க ஒவ்வொன்னும் அவ்ளோ உண்மை. பல சமயம் தன்னோட தூய்மைய பறைசாற்றுகிறேன் பேர்விழின்னு பலப்பேர் அனாவசியமானக் கருத்து கந்தசாமிகளா மாறி, மாரல் போலீசிங் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.
விதம் விதமா, பெண்ணாய் பிறந்த காரணத்துக்காகவே எவ்ளோ இன்னல் வந்தாலும் குழந்தைக்காக தாங்கிக்கிட்டே ஆகனும்னு கம்பெல் பண்றவங்க, பலசமயம் உண்மைச் சூழலை புரிந்துக்கொள்வதில்லை:(:(:(
நான் சரியான வார்த்தைகளில் என் கருத்துக்களை வெளிப்படுத்திருக்கேனான்னு தெரியலை. ஆனா பதிவுல நீங்க அவ்ளோ சரியா வெளிப்படுத்தி இருக்கீங்க.
"இப்படி கூட செய்யனும்னா அந்த பொண்ணுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கலாம்ன்னு சின்னதா யாரும் யோசிக்கரதே இல்லை."
மன அழுத்தம் என்பது இருபாலருக்கும் உரியதுதானே ? சம்பந்தப்பட்ட கணவரைக்கேட்டால் அவரும் ஒரு கதையை வைத்திருக்கக்கூடும்.
"இதே வேலையை ஒரு ஆண் செய்தால் இவ்வளவு பரபரப்பு இருக்காதே. அதுதான் சமூகக்குற்றம். ஓடுவது பெண்ணோ ,ஆணோ அது அவர்கள் இஷ்டம் கஷ்டம்."
நிச்சயம் அவர்கள் இ(க)ஷ்டமேதான். அது இங்கே பொதுமேடைக்கு வந்தபோதுதான் என் இரண்டு சதங்களுக்கும் தகுதியாகிறது.
".... அனாவசியமான கருத்து கந்தசாமிகளா மாறி ..."
".... என் கருத்துக்களை ..."
ரசித்தேன்.
நிச்சயம் அவர்கள் இ(க)ஷ்டமேதான். அது இங்கே பொதுமேடைக்கு வந்தபோதுதான் என் இரண்டு சதங்களுக்கும் தகுதியாகிறது
//
பொது மேடைக்கு இழுத்து வருவது ஏன்/யார்?
ஆண்கள் வகுத்த நீதி இது, என் பார்வையும் அப்படித்தான். பெண்களே அவர்கள் உரிமைகளை வகுத்தால் உலகின் பார்வை வேறாக இருக்கக்கூடும்
பாஸ் .....
ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடிங்கன்னு நினைக்கிறேன்...
* உங்கள் வெளிப்படையான உணர்வுகளுக்கு வாழ்த்துக்கள்....
* உங்கள் அவசர சிந்தனைக்கு ஆழ்ந்த வருத்தங்கள் .........
ஏற்கனவே படிச்சிட்டு என்ன பின்னூட்டமிடறதுனு தெரியாம போயிட்டேன். இந்த முறை படிக்கும்போதும் அதே. என்ன சொல்றதுனு தெரியல சகா.
கணவன் மனைவி உறவில் மனைவியின் எதிர் பார்ப்பு வேறு. அதை கணவன் புரிந்துகொள்ளாமல் பேருக்காக திருமணம் செய்து வாழ்வதனால்தான் பிரச்சனையே.
தங்களது பதிவு பலரை யோசிக்கவைத்து அவர்களுள் சிறிய மாற்றம் கொண்டுவந்தால் அதுவே உங்கள் வெற்றி.
அந்த வெற்றிகிட்ட என் வாழ்த்துக்கள்.
அனாவசிய கருத்துக் கந்தசாமிகள் பெருகும்போது, சிலக் கருத்துக் காமாட்சிகள் பெருகுவது அவசியமான, இயல்பான ஒன்று.
ILA said...
//அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை//
உங்கள் தந்தைய வணங்குகிறேன். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். சமுதாயத்துக்கு இந்த மாதிரி எடுத்துக்காட்டுகள்தான் தேவை.
///
முழு மனதுடன் வழிமொழிகிறேன்..
உங்கள் எண்ணம் உயர்வானது... உங்கள் எழுத்தில் துணிவை காண இயலுகிறது..
தொடருங்கள்...
ஒரு நல்ல விவாதத்தை எதிர்பார்த்தேன்.
ஆனால் இங்கே எல்லோரும் எனக்கு பாராட்டு பத்திர வாசித்து கொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக அதை செர்த்த காரணம். இவ்விசயத்தை எழுதுவதற்க்கு எனக்கு தகுதி உண்டு என காட்டவே.
இவ்விசயத்தில் சமூகத்தின் அணுகுமுறையை பற்றி விவாதிக்க யாராவது வாங்களேன்.
நன்றி சுந்தர்
நன்றி தெகா
நன்றி கபீஷ்
நன்றி குடுகுடுப்பை
நன்றி கமல்
கேட்க்காமல் எந்த ஒரு தெளிவும் பெறமுடியாது.
கூச்சப்படாமல் சந்தேகங்களை யாரிடமாவது கேட்டு விடுங்கள்.
பதில் அளிப்பவர் அனுபவசாலியாக இருப்பது நல்லது.
நன்றி தமிழ்24
நன்றி முத்துகுமார்!
என் மகளுக்கு 6 வயது ஆகிறது
நன்றி துளசிகோபால்
நன்றி பாலராஜன்கீதா
நன்றி சீனா ஐயா
நன்றி நந்து அண்ணா
நன்றி இளா
விரிவான பின்னூடத்திற்க்கு நன்றி முத்துகுமார்.
இவ்விசயத்தில் பெண்ணை மட்டும் குறை சொல்லுதல் தவறு என்று சொல்கிறேன்.
அவளை அழைத்து சென்ற ஆணுக்கு தெரியாதா இவளுக்கு குழந்தைகள் இருக்கு என்று.
இதை வேறு மாதிரியும் அணுகலாம்.
திருமணம் ஆகாத ஒரு பெண் துணையை தேடிகொண்டால் அவளுக்கு இந்த சமூகம் உதவி செய்கிறது.
பெற்றொர்களை சமாதானம் செய்கிறது. உண்மையில் அந்த பெண் அவளது பெற்றோருக்கு செய்தது துரோகம் தானே!
குழந்தைகளை பொறுத்தவரை இதை ஒரு பெரிய விசயமாக ஆக்கவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அவர்கல் வேலைக்கு போகும் வரை யாரவது வழர்த்தாலே போதும். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்து கொள்வார்கள்.
//100% சரின்னும் ஒண்ணுமில்ல.100% தப்புன்னும் ஒண்ணுமில்ல.//
உண்மைதான்!
மேலை நாடுகளில் யாரும் இவ்விசயத்தை பரபரப்புக்குள்ளாக்குவதில்லை.
இங்கே தான் இப்படி
நன்றி ராதாகிருஷ்னன்
நன்றி பாபு
//சுய நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும்.//
சுயநலம் இல்லாத எந்த விசயத்தையும் மனிதன் செய்வதே இல்லையே
நன்றி வீணாபோனவன்.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் சகோதரர்கள் தானே!
நன்றி ஆ!இதழ்கள்
நன்றி சதானந்தம்!
நீங்கள் சொல்வது உண்மைதான்
நன்றி ஜீவன்
நன்றி முத்துலட்சுமி/கயல்விழி
நன்றி மோகன்பிரபு
நன்றி ச்சின்னபையன்
நன்றி விக்னேஷ்வரன்
நன்றி கவிதா
உண்மைதான் பெண்களுக்கு நிறைய உரிமைகள் மறுக்கபடுகின்றன
நன்றி அருப்புகோட்டை பாஸ்கர்
நன்றி வடகரை வேலன்
உங்கள் சித்தப்பாவை சமூகதிடம் மரியாதை எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
இந்த சமூகத்திடம் மரியாதை வாங்குவதற்க்கு சும்மா இருக்கலாம்.
நன்றி சிம்பா
நன்றி ஞானசேகரன்
நன்றி ராஜநடராஜன்
நன்றி அன்புடன் அருணா
தமிழ் நெஞ்சத்துக்கு நன்றி சொன்னதெல்லாம் சரிதான் அது எதுக்குன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?
நன்றி விலெகா
நன்றி சென்
படித்திருக்கிறேன். கற்றதும் பெற்றதும் தொகுப்பில் வந்திருந்தது.
காதலுக்காக பிளேடால் கிழித்து கொள்வதையும் பார்த்திருக்கிறேன்.
இவையெல்லாம் ஒருவகையான மனவியாதியே!
காதலாவது, மண்ணாங்கட்டியாவது
நன்றி ராப்
நன்றி மாதேஷ்
வருந்துங்க
கொஞ்சம் விளக்கமா எதுக்காக வருந்துறிங்கன்னு சொன்னா நானும் தெரிஞ்சிக்குவேன்
நன்றி கார்க்கி
நன்றி புதுகைத் தென்றல்
ராப்
//கருத்துக் காமாட்சிகள்//
ரசித்தேன்.
நன்றி தாமிரா
நன்றி பழையபேட்டை சிவா
சபாஷ்டா.... நீ ஒரு ஆள்தான்!!!!
// ஒரு நல்ல விவாதத்தை எதிர்பார்த்தேன்.
ஆனால் இங்கே எல்லோரும் எனக்கு பாராட்டு பத்திர வாசித்து கொண்டிருக்கிறார்கள். //
பாஸ்...
சப்பதனமான matter 'எ போட்டு நல்ல publicity தேடீர்கீங்க..... பலே achieve பண்நீடிங்க.....
add 'ல எவ்ளோ பைசா பண்ணுனீங்க ..... இல்ல இத வெச்சு வேற ஏதாவது get together arrange பண்நீருகீங்களா........
//அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை//
என்கிட்ட வார்த்தைகளே இல்லை.. ஆனாலும் உங்களால் எப்படி இவ்ளோ தைரியமாக சொல்ல முடிந்ததுனு சொல்லுங்க..
நன்றி என் பதிவுகள்!
எல்லோரும் பாராட்டும் அளவுக்கு இதற்கு தைரியம் தேவைப்படுமா என்று தெரியவில்லை.
இந்த விசயத்தை மற்றவர்கள் எழுதுவதை விட நான் எழுதுவதற்க்கு தகுதியானவன் என்பதாலேயே தான் எழுதினேன். அதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் அதையும் சுட்டி காட்டினேன்.
நான் எதோ விளம்பரத்துக்காக எழுதியது போல் மாதேஷ் வந்து கதறிட்டு போறார். சரி விடுங்க அவரு கஷ்டம் அவருக்கு.
சிறுவயதிலிருந்தே எனக்கான அடையாலத்தை நான் தேட ஆரம்பித்து விட்டேன். எப்போதே அதை அடைந்தும் விட்டேன், இதோ இணையத்தில் வால்பையன்.
தொழிலில் சிறந்த ஆலோசகர்.
எனது அடையாளமாக இவை இருந்தாலே போதும்.
இனி எனது பெற்றோர்கள் எனக்கு அடையாளம் தரவேண்டியதில்லை.
முடிந்தால் எனது அடையாளம் அவர்களுக்கு பயன்படட்டும்.
// நான் எதோ விளம்பரத்துக்காக எழுதியது போல் மாதேஷ் வந்து கதறிட்டு போறார். சரி விடுங்க அவரு கஷ்டம் அவருக்கு. //
ஆமாங்கோ .... எனக்கு ரொம்ப குஷ்ட்டமுங்கோ.............
// சிறுவயதிலிருந்தே எனக்கான அடையாலத்தை நான் தேட ஆரம்பித்து விட்டேன். //
ஏனுங்கோ.... அப்போ ...... எப்ப அத தொலச்சிங்கன்னு சொல்லுங்கோ.........
// எப்போதே அதை அடைந்தும் விட்டேன், இதோ இணையத்தில் வால்பையன். //
அப்புடியா ............... சரிங்கோ..
// தொழிலில் சிறந்த ஆலோசகர். //
அடேங்கப்பா... !! ஆமாங்கோ ... , நெசந்தானுங்கோ.... , நேத்து BBC news ல சொன்னாங்கோ....
// இனி எனது பெற்றோர்கள் எனக்கு அடையாளம் தரவேண்டியதில்லை.
முடிந்தால் எனது அடையாளம் அவர்களுக்கு பயன்படட்டும். //
அடங்கொன்னியா..... , நீங்க.... அவங்களுக்கு அடையாளம் தரிங்களா...!!!
நெம்ப சந்தோசமுங்கோ....... !!!!
ஐயா .. சாமி ... மகாஜனங்களே... நல்லா கேட்டுங்கோங்க.... இந்த பாவத்துக்கெல்லாம்
நா ஆளாகமாட்டேன்...
ஐயா வால்ப்பையனுங்கோ ,
நல்லவரு, வல்லவரு , நாலும் தெரிஞ்சவரு , பெரிய வியாபார காந்தமுங்கோ......
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க வால்பையன்.. பரிசலின் பதிவையும் படித்தேன்.. உங்களின் பதிவையும் படித்தேன்.. இன்றைய நிலையில் மிகவும் தேவையானதொரு விவாதம்.. நீங்கள் முன்வைத்திருக்கும் உண்மைகள், இச்சமூகத்திற்கு சாட்டையடி..
//சமூகம் என்பது என்ன? ந்ம்மை தவிர சுற்றி உள்ள அனைத்தும் சமூகம்.
அது எப்பொது உருப்படும்? பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பழக்கம் உள்ள வரை அது உருப்படாது.
//
ஒவ்வொருத்தரும் நினைத்துப் பார்க்க வேண்டியது..
மாதேஷ் உங்க பின்னூட்டம் தான் கலக்கலா இருக்கு!
இப்படி தான் யார் என்ன எழுதியிருந்தாலும் குறுக்கு கேள்வி கேக்கனும்
நன்றி bee.morgan
// மாதேஷ் உங்க பின்னூட்டம் தான் கலக்கலா இருக்கு!
இப்படி தான் யார் என்ன எழுதியிருந்தாலும் குறுக்கு கேள்வி கேக்கனும். //
ஏன் , நெடுக்க கேள்வி கேட்டா.. பதில் சொல்லமாடின்களோ.....!! யோவ் வாலு.. , என் வாழ்க்கைல மொள்ளமாரி , முடுச்சொவ்க்கி , கேப்பமாரி ..... இவிகளைஎல்லாம்
தனி தனியாதான் பார்த்துருக்குறேன்... ஆனா.. இப்போ , இதெல்லாத்தையும் ஒட்டு மொத்தமா உங்கிட்டதான் பாக்குறேன்....யோவ் நீ எமனையே பர்கர்க்குள்ள வெச்சு தின்னு ஏப்பம் உடுற ஆளுயா....!!!!!
மாதேஷ் நான் இவ்வளவு புகழாரத்துக்கு உரியவனா! ரொம்ப நன்றி நண்பரே!
ஒருவனின் ஆணவத்தை உடைதெரியும் உங்கள் வாக்கியங்கள், பொதுபுத்தியுடய எவனையும் யோசிக்கவைக்கும்.
கட்டுடைத்தலில் நீங்கள் எல்லொரையும் மிஞ்சி விட்டீர்கள்.
தொடர்க உங்கள் பணி
the primary question on whether the attraction, deception and sly satiation is sexual or not is difficult to answer. it can be sexual only in some cases. by sexual i mean the physical orgasmic-oriented sex.
but in most cases it is a reaffirmation of one's attractiveness quotient. after marriage, the partner is generally taken for granted and attempts to attract or get attracted become less focused.
every human wants to flaunt some aspect of their imagined or real attraction and get appreciation. by natural selection process when the applause comes from the opposite sex it is a sweeter sound.
causal slips in this regard are common but a person with integrity and personal ethos would soon wake up and focus on the proper priorities of life.
to quit a relationship when it is intolerable is the best option. but the tolerance limit is often clouded by social conveniences.
i dont know if i answered you, maybe if you ask specific questions i can do better
vaalpaiyan anna ungal kalaikarathey tholila vechi irukuravaru madesh... naanum avar kooda sernthu ungala kalaichi iruken.. i wil catch u soon..... and regularly in ur blogs....
அண்ணா உங்களை வளர்த்த தந்தைக்கு என் பாராட்டுகள்! அவரை இந்த பதிவை படிக்க சொல்லுங்கள். அவர் உங்கள் மீது வைத்த பாசத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கும், உங்கள் தாய் அவர் மீது வைத்த காதலை புரிந்து கொண்டதற்கும் துள்ளி குதிப்பார்
உங்கள் அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் தன் குழந்தைகளையும் அழைத்து சென்றதற்க்கு, உங்கள் அப்பாவுக்கும் தன்னை நம்பி வந்தவளின் குழந்தைகளை தன் குழந்தைகளாய் வளர்த்தற்க்கு. உங்களுக்கும் அவர்கள் எடுத்த முடிவை அதே போல் ஏற்றதர்க்கு, பல மகன் களுக்கு அவ்விதமான மனம் வருவதில்லை. ஆனால் என் பதிவில் கள்ள காதல் என்று குறிப்பிட்ட வார்த்தை தாங்கள் எடுத்து கொள்ளும் அர்த்தம் போன்றது அல்ல என்று மட்டும் தெரியப்படுத்த விரும்புகின்றேன். http://josephinetalks.blogspot.com/2011/01/blog-post_29.html
Post a Comment