பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்கள் வீட்டில் நான் தான் முத்தவன்,எனக்கு பிறகு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிக்காக தான் இந்த பதிவு.

வீட்டில் கடைசி என்று முடிவு செய்து விட்டதால்,செல்வ செழிப்போடு இருக்கட்டும் என்று செல்வம் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் குடும்ப பெயர் ராஜ், அதனால் அதுவும் கூடவே.
ரொம்பவே செல்லம். அதனால் ஒன்பதாவது பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு குடுத்தார்கள். ஆனால் என்ன சாபமோ தெரியவில்லை.யாருமே எங்கள் வீட்டில் ஒன்பதாவது தாண்டவில்லை.

கவனித்தலை விட புரிதலே பெரிது என்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் புரிந்து வைத்திருந்தனர். அதனால் படிப்பு இல்லை என்பது எங்களுக்கு ஒரு குறைவாகவே தெரியவில்லை. வாழ்வதற்க்கு எதாவது செய்ய வேண்டும்.அதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் படித்தவர்களுக்கே சவால் விடும் வகையில் சிறந்த வெல்டராக இருக்கிறார் கோவையில். புத்தகங்களில் அவரது ஆர்வம் எனக்கே ஆச்சரியம் தரும். ஒஷோவின் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். தத்துவங்களை பற்றிய தர்க்கம் எனக்கும் அவருக்கும் விடிய விடிய நடக்கும்.

இதெல்லாம் இப்போ ஆறு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.

சகோதர்களாக இருந்தாலும் நாங்கள் பழகுவது நண்பர்கள் போல தான். கரும்பிலிருந்து காமம் வரை விவாதிக்காத விசயங்கள் இல்லை.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல்லுகேற்ப நான் எவ்வளவு தான் ஓவராக மட்டையானாலும் சரியாக என்னை வீட்டில் சேர்ப்பதில் பெரும்பங்கு இவருக்கு தான்.

அந்த தம்பிக்கு தான் இன்று(7-11-2008) பிறந்த நாள். ஈரோட்டில் இருந்தால் பார்ட்டி தர்றேன்னு தான் சொன்னார். ஆனால் என்னுடய இன்னொரு தம்பியின் திருமணதிற்க்கு அழைப்பிதல் கொடுக்க மதுரை செல்வதால் முடியவில்லை.

இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.

போட்டோ இல்லாததால் போட முடியவில்லை

40 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் அமுதன் said...

நான்தான் பஸ்ட்டா?

தமிழ் அமுதன் said...

நான் எவ்வளவு தான் ஓவராக மட்டையானாலும் சரியாக என்னை வீட்டில் சேர்ப்பதில் பெரும்பங்கு இவருக்கு தான்


கொடுத்து வைச்ச அண்ணன்!
தம்பிக்கு வாழ்த்துக்கள்!

அமர பாரதி said...

தம்பிக்கு இனிய பொலிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இது போன்றே பலப்பல பிறந்த நாள் காண வாழ்த்துகிறேன்.

dondu(#11168674346665545885) said...

தம்பிக்கு அன்பான ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

cheena (சீனா) said...

அன்பின் செல்வராஜிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

அன்பின் வால்பையா - மதுரைக்கு எப்பொழுது வருகிறாய் ?

தொடர்பு கொள்

கார்க்கிபவா said...

முதலில் என் வாழ்த்துகள் சகா.. இப்படி ஒரு தம்பி கிடைத்த உங்களுக்குத்தான்..

இது அவருக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

விஜய் ஆனந்த் said...

// கார்க்கி said...
முதலில் என் வாழ்த்துகள் சகா.. இப்படி ஒரு தம்பி கிடைத்த உங்களுக்குத்தான்..

இது அவருக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் //

ரிப்பீட்டேய்!!!

சின்னப் பையன் said...

//// கார்க்கி said...
முதலில் என் வாழ்த்துகள் சகா.. இப்படி ஒரு தம்பி கிடைத்த உங்களுக்குத்தான்..

இது அவருக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் //

ரிப்பீட்டேய்!!!//

ரிப்பீட்டேய்!!!

KARTHIK said...

ச்சின்னப் பையன் said...

//// கார்க்கி said...
முதலில் என் வாழ்த்துகள் சகா.. இப்படி ஒரு தம்பி கிடைத்த உங்களுக்குத்தான்..

இது அவருக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் //

ரிப்பீட்டேய்!!!//

// ரிப்பீட்டேய்!!!//

ரிப்பீட்டேய்!!!

மோகன் காந்தி said...

செல்வராஜ் தம்பிக்கு வாழ்த்துக்கள்!

thamizhparavai said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துகள் !

வீணாபோனவன் said...

உங்கள் அன்புத்தம்பிக்கு எனது பிறந்தநாள் வாழத்துக்கள்.

-வீணாபோனவன்.

ரமணா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

சிம்பா said...

செல்வத்திற்கு பிறந்த தின வாழ்த்துக்கள்..

நீங்க மட்டையானா எப்படி உங்களை காப்பாத்தி கரை சேர்கிராரோ அதே போல் மட்டையாகும் பல அண்ணன்களுக்கு உதவி செய்து, சரக்கு அடித்து மட்டையாவோர் சங்கத்துக்கு நமது செல்வம் ஒரு விடிவெள்ளியாக இருக்க வாழ்த்துக்கள்...

பாபு said...

என் வாழ்த்துக்களையும் அவருக்கு சொல்லி விடுங்கள்

ஆ! இதழ்கள் said...

//இதெல்லாம் இப்போ ஆறு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.//

எல்லா தம்பிகளும் அண்ணன்களை இப்படித்தான் சரியாக புரிந்துவைத்துள்ளார்கள்.

Anonymous said...

தம்பியுடையான் மட்டைக்கு அஞ்சான்.

உங்க தம்பிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால்.

Maximum India said...

உங்கள் தம்பிக்கு வரும் வருடம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.

உங்கள் எழுத்துக்கள் Multi Degree படித்தவர்களை விட சிறப்பாகவே இருக்கிறது. எனவே திரும்ப திரும்ப படிக்காதவன் என்று சொல்லி என்னைப் போன்றவரை ஏளனம் செய்ய வேண்டாம்.

Kumky said...

வடகரை வேலன் said...
தம்பியுடையான் மட்டைக்கு அஞ்சான்.

உங்க தம்பிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால்.

மறுக்கா கூவிக்கிறேன்....

Kumky said...

தத்துவங்களை பற்றிய தர்க்கம் எனக்கும் அவருக்கும் விடிய விடிய நடக்கும்.

இதுதான் கொஞ்சம் புரியமாட்டேங்குது...கொஞ்சம் வெளக்கினா நல்லாருக்கும்.

Thamira said...

வடகரை வேலன் said...
தம்பியுடையான் மட்டைக்கு அஞ்சான்.//

செல்வ‌ராஜிற்கு வாழ்த்துக‌ள் வால்பைய‌ன்.!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

உங்கள் அன்புத்தம்பிக்கு எனது பிறந்தநாள் வாழத்துக்கள்.

லிங்காபுரம் சிவா said...

உங்கள் சகோதரருக்கு பிறந்த நாள் நல்வாழ்துக்கள்!

வாழ்க உங்கள் சகோதரத்துவம்!

வால்பையன் said...

நன்றி ஜீவன்

நன்றி அமரபாரதி

நன்றி டோண்டு சார்

நன்றி சீனா சார்
உங்களுக்கு அழைத்தேன். போன் எடுக்கவில்லை

நன்றி கார்க்கி

நன்றி விஜய்ஆனந்த்

நன்றி ச்சின்னபையன்

நன்றி கார்த்திக்

நன்றி மோகன்காந்தி

நன்றி தமிழ்பறவை

நன்றி கோவிஜி

நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

நன்றி டி.வி.ராதாகிருஷ்ணன்

நன்றி வீணாபோனவன்

நன்றி ரமணா

நன்றி சிம்பா

நன்றி பாபு

நன்றி ஆ.இதழ்கள்

நன்றி வடகரைவேலன்

நன்றி மோகன்பிரபு

நன்றி கும்க்கி

நன்றி தாமிரா

நன்றி அருப்புகோட்டை பாஸ்கர்

நன்றி பழையபேட்டை சிவா

Sanjai Gandhi said...

அடடே தாமதமாக வந்துவிட்டேனே..

செல்வத்திற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.. :)

உங்களுக்கு பார்ட்டி தரலைன்னா என்ன? அதான் நான் கோவைல இருக்கேனே.. :))

வெண்பூ said...

செல்வராஜிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

//இதெல்லாம் இப்போ ஆறு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.//

அண்ணா இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்.. :)))))))))))))

Unknown said...

ம்ம்ம் அப்பறம் உங்க தம்பிக்கு பிலேடட் விஷேஸ் :))

Unknown said...

//பொடியன்-|-SanJai said...
அடடே தாமதமாக வந்துவிட்டேனே..

செல்வத்திற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.. :)

உங்களுக்கு பார்ட்டி தரலைன்னா என்ன? அதான் நான் கோவைல இருக்கேனே.. :))

November 10, 2008 10:48 AM//
//வெண்பூ said...
செல்வராஜிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
November 11, 2008 9:12 PM//

ஹை என் அண்ணன்களும் என்ன மாதிரி தான் லேட்டா வரதுல ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்பாப் பெருமையா இருக்கு... ;)))))))

g said...

இனிய பொலிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

VG said...

தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல தம்பி. தமிழில் எழுதுவதற்கு problem இல்லை. ஆனால் மலேசியா நண்பர்களுக்கு தமிழில் படிக்க தெரியாதே. பொது நலமாக யோசித்து தான் ஆங்கிலத்திலே எழுதிகிறேன். :)

take care ~!

Poornima Saravana kumar said...

வால் எங்க போனீங்க? ப்ளாக் பக்கம் காணவில்லை.

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பிக்கு

பாலராஜன்கீதா said...

//எங்கள் வீட்டில் நான் தான் முத்தவன்,எனக்கு பிறகு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிக்காக தான் இந்த பதிவு.//
உங்களின் அடுத்த இடுகையை வாசித்துவிட்டு இன்னொருமுறை இந்த இடுகையை வாசித்துவிட்டு நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற எண்ணத்தில் உங்கள் இல்லத்தினர் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

anujanya said...

உங்கள் தம்பிக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

நன்றி சஞ்சய்

நன்றி வெண்பூ

நன்றி ஸ்ரீமதி

நன்றி ஜிம்ஷா

நன்றி விஜி
தமிழிலில் எழுதுவது மேலும் உங்களுக்கு எழுத்தார்வத்தை உருவாக்கும்

நன்றி என்பதிவுகள்

நன்றி குடுகுடுப்பை

நன்றி பாலராஜன்கீதா

Suresh said...

தலைவா ரொம்ப நன்றி லிங் கொடுத்தற்க்கு..

நானும் என் தம்பியும் நீங்க சொன்ன மாதிரி கரும்பு முதல் ;) காமம் வரை பேசுவோம்

அவரு வெல்டரா சூப்பர் தலை அதுவும் சிற்நது விளங்குறாரு வெரி குட்

நானும் ரொம்ப படிப்ஸ் எல்லாம் இல்லை , தம்பி நல்லா படிப்பான் ..

//வ்//


அவர்கள் எப்போதும் புத்திசாலி தான்...

//இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.//

என்ன இது புரியவில்லை நம்மகிட்டவே வா என்ன இது ?

உங்க தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. தலைவா

வால்பையன் said...

//இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.//

என்ன இது புரியவில்லை நம்மகிட்டவே வா என்ன இது ?//

நவம்பர் 7 அன்று தான் நடிகர் கமலஹாசனுக்கும் பிறந்த நாள்!

!

Blog Widget by LinkWithin