லேட்டாக எழுந்ததால் நான் பார்த்ததிலிருந்து ஆரம்பம்
அதிலும் என்னை கவர்ந்தவை மட்டும்
பொன்வண்ணன்
இந்தியாவிர்க்கும்,இலங்கைக்கும் கருவறை உறவு,
ஆதாம்,ஏவாள் பிறந்தகாக கருதப்படும் லெமூரீயா கண்டத்தில் இந்தியாவும், இலங்கையும் ஒன்றாகதான் இருந்தது.
கனடா,லண்டன் போன்ற நாடுகளில் இலங்கை தமிழர்கள் வாழ உரிமை அளிக்கப்படுகிறது.அங்கே அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு வாழ உரிமை இல்லை.இங்கே தான் அவர்கள் அகதிகள்.
ஷாம்
இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களே எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்
நடிகர்சிவக்குமார்
தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் உடன் வந்திருந்தார்.
அவர்கள் சார்பாக ஐந்துலட்சம் நன்கொடையாக கொடுத்தார்.
பிரதமர் அனுமதியுடன் கலைஞர் மற்றும் தமிழ் தலைவர்கள் இலங்கை சென்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவது அவரது நீண்ட நாள் கனவாக இருக்கிறது என்றார்.
மணிவண்ணன்
மற்றவர்கள் போல் அல்லாமல் இவர் சிறை சென்று திரும்பிய சீமானுக்கும், அமீருக்கும் வணக்கம் சொன்னார்.உலகில் பலநாடுகளில் மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படலாம். ஆனால் எங்கேயும் உயிர்வாழும் உரிமை மறுக்கப்படவில்லை, ஆனால் இலங்கையில் வாழும் நமது சகோதரர்களுக்கு மறுக்கபடுகிறது என்றார்.
விவேக்
தமிழன் எந்த ஊருக்கு சென்றாலும் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த இடம் முன்னேற உழைக்கிறான், ஆனால் கடைசியில் அவன் தான் ஏமாற்றபடுகிறான். அதை உணர்ந்த பின் தான் போராட்டம் என்றார்.
இளவரசு
நாடெங்கும் மிருகங்களின் உரிமையை பாதுகாக்க மிருக வதை சட்டம் இருக்கிறது. ஆனால் மனித வதை சட்டம் எங்கேயும் இல்லை. மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய சபைகளே அதை கண்டு கொள்வதில்லை என்றார்.
எழுத்து பிழைகளை பொறுத்தருள்க
10 வாங்கிகட்டி கொண்டது:
சுட சுட செய்திகள் என்பது
இதுதானா?
இன்னும் வந்துகிட்டு இருக்கு நண்பரே
உடனடி செய்திகளுக்கு நன்றிகள்..
நன்றி தூயா
அடுத்த பார்ட்டும் வந்து போட்டாச்சு
இந்த காமெடிக்குள்ள நீங்க எதுக்கு வாலை விடறீங்க......?
வாங்க கும்கி
நான் பார்வையாளனாக இங்கே பதிகிறேன். ஆங்காங்கே எனக்கு பிடித்த கருத்துகளை தொட்டுள்ளேன்.
அவ்வளவே
நல்ல பதிவு - தொலைக்காட்சியில் பார்க்காதவர்களுக்கு ஒரு காட்சி
நல்வாழ்த்துகள்
நன்றி சீனா ஐயா
nalla blog anna..thodarattum ungal pani!!
என்னங்க அனுசுயா இத்தன ப்ளாக் வச்சிருக்கிங்க!
எத படிக்கிறது நானு
நல்ல தமிழ் ப்ளாக்கா நீங்களே சொல்லுங்க
Post a Comment