உலகசினிமாவும் ,தமிழ்சினிமாவும்-கிட்டப்பார்வைக்கும், தூரப்பார்வைக்கும் இடையில்


போனவாரம் "வேர்ல்டு மூவீஸ்" சேனலில் ஒரு வேற்று மொழி படம் பார்த்தேன்,
அதை உலகசினிமா என்று சொல்வதை விட வேற்று மொழிப்படம் என்றே சொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் வேற்று மொழிக்காரர்களுக்கு நமது படம் உலகசினிமா தானே.

அந்த படத்தின் பெயர் longest penalty in the world ஸ்பெயின் நாட்டை சேர்ந்த படம்.
அம்மாதிரியான ஐரோப்பிய நாடுகளில் கால்ப்பந்தாட்டம் வெகுவான பிரசித்தம் என்று அனைவரும் அறிந்ததே. அதை மையமாக கொண்டே அந்த படம். அப்படத்தை பற்றி மட்டுமே சொல்வேது அவ்வளவு சுவாரிசியம் இல்லை என்பதால், அதை போன்று தமிழில் எடுத்த சென்னை 600028 என்ற படத்துடன் ஒப்பிட்டு எழுதுவது கொஞ்சம் அதிக விசயங்களை அலசுவதற்கு எதுவாக இருக்கும்.



எந்த மொழி படமாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு சிறந்த திரைக்கதை முக்கியமானது, இந்த இரண்டு படத்திலும் அது நன்றாகவே இருந்தது.வேற்று மொழி படத்தில் கால்பந்தை மையமாக வைத்து எடுத்திருந்தது போல் தமிழ் படத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்திருந்தனர்.

தமிழ்ப்படங்களை வேற்று மொழிப்படங்களுடன் ஒப்பிடும் பொது வெகு சுலபமான ஒரு வார்த்தை நமக்கு பயன்படுகிறது, வேற்றுமொழி படங்கள் திரைப்படங்களாகவும், தமிழ் படங்கள் மசாலா படங்களாகவும் வெளி வருகிறது, தமிழ் பற்றுள்ளவன் மசாலா இல்லாத படங்கள் வேற்று மொழிக்காரர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறை சொல்லலாம், திரைப்பட பற்றுள்ளவர்கள் மசாலா இல்லாத படங்கள் இவர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறைப்பட்டு கொள்ளலாம், இரண்டுக்கும் தமிழ்நாட்டில் ஆளுண்டு என்பது நிதர்சன உண்மை.


திரைப்படங்களில் தேவையில்லாத கதாப்பாத்திரங்களின் ஆளுமை என்றுமே சலிப்பை தான் தரும், வேற்று மொழி படங்களில் அந்த தவறை அவர்கள் செய்வதில்லை,
விளையாட சொல்லித்தரும் கோச், விளையாட்டு வீரர்கள், அவர்களின் மனைவி, தங்கைகள், அவர்களும் கூட தனித்தனியாக இல்லாமல் ஒருவரின் தங்கை மற்றொரு வீரனின் மனைவியாக காட்டியிருப்பது கதைக்குள் தேவையில்லாத உரையாடல்களை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

அங்கேயும் காதல் உண்டு, தமிழ் சினிமாவை போல் காதல் முழுப்படத்தை ஆக்கிரமிப்பதில்லை, ஒரு வீரனின் காதலியான கோச்சின் மகளை ஹீரோவும் காதலிப்பது இங்கே கொச்சையாக பார்க்கப்படலாம். அங்கே நகைசுவையாக சொல்லப்பட்டுள்ளது, ஒரு பெண் தன் காதலனை தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு என்று போகிற போக்கில் துண்டு சீட்டு வீசுவதை போல் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஆண் தினம் ஒரு பெண்ணுடன் சுற்றினால் அவன் மச்சக்காரன்.
அதே ஒரு பெண் நேற்று ஒரு ஆணுடனும் இன்று ஒரு ஆணுடனும் வந்தால் அவளுக்கு நிறைய பெயர் உண்டு. உதாரணமாக "காயின் பாக்ஸ்" "சேர் ஆட்டோ" "மினி பஸ்" போன்று. ஆணுக்கு மட்டும் ஏன் வேறு பெயர்கள் இல்லை என்று தெரியவில்லை.




பாடல்கள் போல் ஒரு அபலக்கூத்தை சினிமாவில் என்னால் ஜீரணிக்க முடியவில்லை, பின்னணி இசை காட்சிக்கு வலு சேர்ப்பது போல் பின்னணியில் பாடப்படும் பாடல்கள் வேண்டுமானால் வலு சேர்க்கலாம், நொடிக்கொருமுறை துணிகளை மாற்றி கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆடும் டூயட், கழிவறையில் அசிங்க படம் வரையும் மனநோயாளிகளை போன்று டைரக்டர்களை பார்க்க தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் படம் எடுக்க சொன்னால், பாவம் எல்லோரும் வீட்டுக்கு போய் வேறு வேலை பார்க்க வேண்டியது தான். காதலியிடம் காதலன் நீ இல்லாவிட்டால் செத்து போய் விடுவேன் என்று சொல்லும் பொது எனக்கு வாந்தி வருவது போல் உணர்வு ஏற்படுகிறது, தமிழ் படங்களை போல் காதல் என்ற சமுதாய முக்கிய தேவையை!? மக்களுக்கு எடுத்து சொன்ன ஊடகம் வேறெதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அவைகளை நீக்கி விட்டு பார்த்தால் சென்னை 600028 உலகசினிமாக்களுக்கு நிகரான ஒரு திரைக்கதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஸ்பெயின் படத்தோட காப்பின்னு சிம்பிளா சொல்றத விட்டுட்டு எதுக்கு எவ்வளவு பெரிய பதிவுன்னு கேக்கறவங்களுக்கு இது அத பத்தி இல்ல, சினிமாவில் காதல் என்ற கண்றாவியை பற்றி.

இரவு நேர தொல்லைகளும் சில அதிர்ச்சி தகவல்களும்!

நேற்று இரவு பணி முடிந்து பதினொரு மணியளவில் அலுவலகம் அருகே இருக்கும் டீ கடைக்கு சென்றேன், அங்கே அதற்கு அருகே இருக்கும் டாஸ்மார்க் கடையின் சேல்ஸ்மேன் நின்று கொண்டிருந்தார், கொஞ்சம் பரிட்சியம் ஆதலால் கர்நாடகாவில் சரக்கு விலை ஏறி உள்ளதை பற்றி கூறினேன், அவர் தந்த அதிர்ச்சி அதற்கும் மேலே,
இன்னும் மூன்று மாதத்திற்குள் தமிழகத்திலும் ஒரு குவாட்டருக்கு நுப்பது ரூபாய் வரை ஏற வாய்ப்புள்ளதாம்.

தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது போல்
குவாட்டர் விலை கூடினால் குடிகாரர்கள் குறைய வாய்புள்ளது. சந்தோசம்

***********************

வீட்டிற்கு போனதும் என் மனைவி சோத்து பானையை முன்னாடி தூக்கி வைத்து விட்டு தூங்க போய் விட்டால், எப்போதும் நடப்பது தான் அது.

சாப்பிடும் நேரங்களில் தொலைகாட்சி பார்ப்பது வழக்கம்
வழக்கும் போல் ஆன் செய்தேன்.

ஜீரோவில் புதிதாக வந்திருக்கும் வேர்ல்டு மூவீஸ், the triangel என்ற ஆங்கில சீரியல்.
பெர்முடா பற்றிய கதை,
நேற்று இரவே "நாங்கள் மட்டும் சீரியல் பார்க்க கூடாது நீங்கள் மட்டும் பார்க்கலாமா" என்று மனைவி திட்டியதால் சத்தம் குறைவாகவே வைத்து கொண்டேன்.

நான் பார்த்த காட்சி.

அங்கே சென்று வருபவர்களுக்கு ஞாபக மறதி வருவது போல் காட்டினார்கள் நேற்று.
திரும்பி வரும் அவன் தன் மனைவியுடன் காரில் வரும் போது ஒரு கடையை காட்டி இது நேற்று இல்லையே என்பான். இல்லை சில வருடங்களாக இங்கே தான் இருக்கிறது என்பாள். வீட்டிற்கு சென்றதும் பதினைந்து வருடம் மதிக்கத்தக்க சிறுவன் ஓடி வந்து அப்பா என்று கட்டி கொள்வான். ஆசையிடு கட்டி கொள்ளும் அவன், அதன் பின்னே அப்பா என்று ஓடி வரும் ஐந்து வயது சிறுவனை ஆச்சிரியமாக பார்ப்பான்.

அவன் மனைவின் முகத்தை ஒரு முறை பார்ப்பான், அந்த இடத்தில் ஒரு அமைதி நிலவும், அதன் பிறகு உங்கள் கற்பனைக்கு

****************************************

சன் டீவியில் ஜெமினி கணேசன், ரங்காராவ் நடித்த படம்
நான் பார்த்த போது பாவம் ஜெமினியின் மனைவி இறந்திருப்பார்.
ரங்காராவ் அவரை மறுமணம் செய்ய வற்புறுத்த ஜெமினி காஞ்சனா இருந்த இடத்தில் வேறொரு பெண்ணா என்று சொல்லும் போது நானும் அதே அளவு காதலனுடன் என் மனைவியுடன் இருக்கிறேனா என்று வெட்கம் வந்தது,

பிறகு ரங்காராவ் சாவித்திரியை ஜெமினிக்கு பொண்ணு பார்க்க போக ஒரு வழியாக தமிழ் படம் சுபத்தில் தான் முடியும் என்று அடுத்த சேனல்



அடுத்தடுத்து இரண்டு சேனல்கள் ரஜினி பாட்டு, கேட்கும் மூடில் நானில்லை என்பதால் அடுத்த சேனல்,
யாருக்கோ மாட்டிய பெல்டை யாரிடமிருந்தோ எடுத்து எப்படி சுருங்கி விட்டது பாருங்கள் இடுப்பு என்று பூச்சி காட்டி கொண்டிருந்தார்கள்,

என் நண்பன் ஒருவன் இந்த விளம்பரத்தை பார்த்து அந்த பெல்டை வாங்கி இருக்கிறான்.
வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரிந்திருக்கிறது, அதை உபயோகிக்கும் முன் நான்கு கிலோ மீட்டர் ஓட வேண்டுமாம், அதற்கு எதற்கு பெல்டு

*********************************************************

அடுத்ததில் ஒரு டாக்டர் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வைக்க மருந்து இருப்பதாக கூறி கொண்டிருந்தார், சும்மா சொல்லி கொண்டிருந்தால் இங்கே அதை ஏன் எழுத போகிறேன், எல்லாம் வல்ல கர்த்தரின் துணையால் அதை செய்வாராம்,

அதற்கு எதற்கு இவர், நேரா சர்ச்சுக்கு போய் இயேசுவே எனக்கு புள்ள கொடுன்னு கேட்டுட்டு போயிரலாமே

***************************************************

அடுத்ததுல ஒருத்தர் கல்லு விக்கிறாரு, ஜாதிகல்லாமா இவனுங்களை எல்லாம் பிஞ்ச செருப்பு வைச்சு தான் அடிக்கணும்,

நாய்க்கு உள்ளது போல் மனிதனுக்கும் நிற குருட்டு இருந்திருந்தால்
மஞ்ச கல்லு ஜிங்குசான், பட்ச கல்லு ஜிங்குசான்னு ஆட்டம் போட மாட்டானுங்க

************************************************

அடுத்ததுல செய்திகள்,
இந்தியாவை எப்படியாவது படுகுழிக்குள் தள்ளியே தீருவேன் என்று மன்மோகன் சிங் சபதம் செய்திருப்பார் போல, எந்த எதிர்ப்புகள் வந்தாலும் அமெரிக்கா அணு உலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அறிக்கை விடுகிறார்.

2012 ல உலகம் அழியும்ன்னு மாலைமலர்ல போட்டாங்க, உலகம் அழியுதோ என்னவோ இந்தியாவை அழிக்க பல பேர் உள்ளேயே முயற்சி செய்கிறார்கள்.

**************************************

தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் போடுங்கள்

ஒரு பின்னூட்டத்தின் எதிர்வினை (நண்பன் தியாகுவிர்க்கு)


என்னுடைய முந்தய பதிவான அந்த கொலையை நான் தான் செய்தேன் என்ற பதிவிற்கு
நீ அளித்த பின்னூட்டம் உண்மையில் எனக்கு இம்மி அளவும் அதிர்ச்சி அளிக்கவில்லை நண்பா, சாதரணமாக நண்பர்களுடன் பேசுவதே விவாதத்திற்கு உட்படும் போது, பொதுவில் வைத்துள்ள இந்த மொக்கைக்கு இந்த பின்னூட்டம் ஒரு பெரிய விசயமில்லை. உன்னுடைய பின்னூட்டம் கீழே கொடுக்க பட்டுள்ளது.

///தியாகு said...
ஒரு அரை கிறுக்கனின் முழு கிறுக்கல்கள் " என்கின்ற தலைப்பு இதற்கு மிக பொருத்தமாக இருக்கும் .. ................................................ நான் வால்பையனை கிறுக்கன் என்று சொல்வதாக தவறாக யாரும் புரிந்துகொள்ளவேண்டாம். தலைப்பை பற்றியது எனது இந்த கருத்து ///

இது அதே பதிவில் மற்றொரு நண்பர் அளித்த பின்னூட்டம்.
இந்த பின்னூட்டம் கொஞ்சம் மறைமுகமானது அவ்வளவே.

//jaisankar jaganathan said...
வெயில் காலத்துல இப்படிதான் இருக்கும். போகபோக சரியாகிவிடும்//

வெயில் குறையும் போது கொசுக்கள் குறையுமா
அல்லது எனது பித்தம் தெளியுமா
என்ற வாதத்தை இங்கே வைக்கலாம், ஆனால் அவ்வாறாக வம்பிலுத்தால்
விமர்சன சுதந்திரம் கெட்டுவிடும்

மீண்டும் அரசியல்வாதியின் மறுப்பு அறிக்கை போல் ஒரு பின்னூட்டத்தை விட்டு
உனக்கு நீயே சமாதானம் செய்து கொண்டாய்,

///வால்பையன் உண்மையிலே ரொம்ப அறிவாளி , நல்லவரு , வல்லவரு , ஒரே ஒரு பதிவுல எப்படி கிறுக்கன் சொல்லுவேன்///

இப்பதிவின் மூலம் என்னை உனக்கு உரித்து காட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறேன்,

நண்பா எனக்கு குண-தோற்ற கட்டமைப்பு (இமேஜ்) என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவைகள் கண்டிப்பாக என் சுதந்திரத்தை கெடுக்கும், நான் ஒரு சந்தோஷ பிராணி என்பதை சந்தோசமாக கூறிக்கொள்வேன், கட்டமைப்புகளை மீருவதே என் இயல்பாக வைத்துள்ளேன்,

நான் தெளிவானவன் என்று எப்பொழுதுமே சொல்லி கொள்வது கிடையாது,
இங்கே யாருமே தெளிவில்லை, எதாவது ஒரு தேடல் நம்மை ஆட்டி வைத்து கொண்டே தான் இருக்கிறது. சிலரது வெளிப்பாடு மற்றவர்களை குழப்புகிறது.

என்னுடன் நீ சில நாட்கள் பழகி இருப்பதால், என்னை பற்றி எதாவது ஒரு கருத்தை வைத்திருப்பாய், அதன் வெளிப்பாடே அந்த பின்னூட்டமாகவும் இருக்கலாம்,
அதில் தவறேதும் இல்லை, என்னை எதிர்காலத்தை பற்றி கவலை இல்லாத மனிதன் என்பாய், எனக்கு இப்பொழுது முப்பது வயது ஆகிறது, பதினைந்து வயதில் முப்பது வயதை பற்றி நான் கவலை கொள்ளவில்லை, நாற்பத்தைந்து வயதை பற்றி இப்பொழுது ஏன் கவலை கொள்ளவேண்டும்.

மற்றொன்று என்னுடைய எழுத்துக்கள்,
சமீபத்திய என்னுடைய புனைவு பதிவுகளான

உண்மை என்றால் என்ன?

புதிரில் கலந்த கனவுகள்!

உங்கள் வீட்டு மின்விசிறி!

ஏணி பிடித்து ஏறும் சிந்தனை!

கனவுகள் நிறைந்த தூக்கம்!

போன்ற பதிவுகளை படிக்கும் போது அது கண்டிப்பாக ஒரு மனம் பிறழபட்டவனின் எழுத்தாக தான் தோன்றும், நான் ஏன் இவ்வாறாக எழுதுகிறேன்,
காரணம் மிக எளிது, நேற்று எரிபொருள் விலை ஏறிவிட்டது என்பது செய்தி,
இதை ஒரு பதிவாக போட்டால் என்னை நானே ஏமாற்றி கொள்கிறேன் என்று அர்த்தம்.

இங்கே இருந்து ஒன்றை எடுக்கிறேன், அதை உன்னிடம் கொடுக்கிறேன்.
அதற்கு பதில் நீயே அதை எடுத்து கொள்ளல்லாம், நான் அதை கொடுப்பதென்றால்
அதில் என்மை(என்மை-என் தனித்தன்மை என்பதை குறிப்பிட இவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன், அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்றோ அது அந்த அர்த்தம் தராது என்றோ சொன்னால், அது பற்றி எனக்கு கவலை இல்லை நான் இப்படி தான்)
நிறைவாக இருக்கவேண்டும்,

இம்மாதிரியான தனித்துவத்தில் தான் நான் என்னை முழுமையாக உணர முடிகிறது.
எனக்கான சுதந்திரம் முழுமையாக என்னால் அனுபவிக்க படுகிறது,
புலம்புதல் வாழ்க்கை இல்லை நண்பா
புரிதலே வாழ்க்கை

இன்னொன்று நீ என்னை குறைவாக மதிப்பிட்டு உள்ளாய்!
என்னை முழு கிறுக்கன் என்று சொல்லியிருந்தால் இன்னும் சந்தோசபட்டிருப்பேன்.


பதிவு போட மேட்டர் இல்லையென்றாலும் எதையாவது எழுதி கொல்வோம்ல

அந்த கொலையை நான் தான் செய்தேன்!

இதை பகிரங்கமாக ஒத்து கொள்வதில் எனக்கு வருத்தம் எதுவுமில்லை!
நான் ஏன் இதை மறைக்கவேண்டும், எத்தனையோ பேர் செய்யமுடியாமல் தவித்து கொண்டிருப்பதை நான் செய்தேன் என்பதில் எனக்கு பெருமையே.

இன்னொன்றையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும்,
என் நிலையில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள்.
இங்கே வாழும் மனிதர்கள் காந்தி போல் வாழ வேண்டும் என்று நினைத்தாலும்,
காந்தி போல் வாழ்வதில்லை. எல்லோர் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

நானும் மனிதன் தான், எனக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு,
ஒரு நாள், இரண்டு நாளாக இருந்தால் பரவாயில்லை, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள்.
என்று திருமணம் ஆகி தனி குடித்தனம் வந்தானோ அன்று ஆரம்பித்தது எனக்கு அந்த பிரச்சனை, ஒரு மனிதன் பகலிலெல்லாம் வேலை செய்து இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்று தான் நினைப்பான், அந்த நிம்மதியே கெடுவதென்றால் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராயிருப்பான், எனக்கும் அதே நிலை தான்.

ஈரோட்டிலே இம்மாதிரியான பொருள்களுக்கு பேர் போன கடை சங்கீதா ஷாப்பிங் சென்டர், நான்காவது தளத்தில் எனக்கான பொருள் இருந்தது, அதை பொருள் என்று சொல்வதை விட ஆயுதம் என்று தான் சொல்லவேண்டும், விளையாட்டு பொருள் போல் தெரிந்தாலும், அது மிக பயங்கரமான ஆயுதம்,

கைபிடியிலேயே அதன் நேர்த்தி தெரிந்தது, கடைக்காரன் இருநூறு ரூபாய் சொன்னான், என்னிலையோ அதற்காக ஆயிரம் ஆனாலும் செலவு செய்வேன். இருந்தாலும் புத்தி போகுமா, அவனிடம் பேரம் செய்தேன், இது நீண்ட நாள் உழைக்கும் என்றான். விட்டால் என்னை சீரியல் கில்லர் ஆக்கி விடுவான் போலிருக்கு.

அன்றிரவு அதற்கான திட்டம் வகுத்தேன், அதற்கு மெல்லிய வெளிச்சம் தேவையா அல்லது தேவையில்லையா என்று எனக்குள் குழப்பம் இருந்தது, காரணம் எனக்கு அது புதிது, படுக்கையில் படுத்து, அந்த ஆயுதத்தை மறைவாக வைத்து கொண்டேன்,
சில நிமிடங்களில் அந்த சத்தத்தை உணர்தேன், இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் வசதியாக இருக்கும் போல தோன்றியது, கொஞ்சம் காத்திருந்தேன்,

இது தான் சரியான நேரம், கையில் அந்த ஆயுதத்தை கெட்டியாக பற்றி கொண்டு வீசினேன், சட சட வென்று சத்தம், அத்தனை கொசுக்களும் உயிரற்ற நிலையில் அந்த பேட்டில் ஒட்டி கொண்டது, இதுவரை என் தூக்கத்தை கெடுத்த கொசுக்களை கொன்ற மகிழ்ச்சியில் தூங்கினேன்,அது ஒரு பேட்டரியில் இயங்கும் மின் பேட்



தயவுசெய்து மன்னிச்சிடுங்க நண்பர்களே!
சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு பஸ்ஸில் வரும் போது ஒரு பாட்டு போட்டார்கள். அதை கேட்டவுடன் இந்த மொக்கை தோன்றியது, அது என்ன பாட்டுன்னா

"கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்குதடா என்ன அடிக்கடி

கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்கவந்தா அதை நசுக்கடி"

என்ன படம்ன்னு தெரியாது
ஆனா மாளவிகா சூப்பரா ஆடினா

!

Blog Widget by LinkWithin