நேற்று நடந்த இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் ஆங்கிலம் தெரியாததால் பொறியில் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் விது பற்றிய கலந்துரையாடல்.
ஞாநி, கற்றது தமிழ் இயக்குனர் ராம், வழக்கறிஞர் விஜயன் கலந்து கொண்டார்கள்.
ஞானி இதை அரசியல் ஆக்கினார், விஜயன் அதை உளவியல் ஆக்கினார்,
எனக்கென்னவோ ராம் சொல்வது தான் சரியென்று பட்டது, மிக அதிக ஆங்கில வார்த்தைகளை ராம் பயன்படுத்தினாலும், தமிழ் வளர அவர் கூறிய யோசனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
உயர் கல்விகளை தமிழில் படிப்பதினால் தமிழிலுருந்து விஞ்ஞானம் வளரும் என்று அவர் கூறிய வாதம் சிறந்ததே, ஆனால் அவர் தமிழ் மற்றும் தமிழனுக்கு உலகில் மரியாதை இல்லை என்று சொன்னதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சுய புராணத்திற்கு வருவோம், தமிழில் வோம்,வேன், போல் முடியும் சொற்களை எத்தனை பட்டதாரிகள் சரியாக எழுதுகிறார்கள், எங்கு கால் வேண்டும் எங்கு தேவையில்லை என்ற அடிப்படை அறிவு மேல்படிப்பு வரை அவர்களுக்கு தெரிவதில்லை,
எனக்கும் கூட ஐந்தாவது படிக்கும் வரை உயிர்மெய் எழுத்துக்கள், தனி எழுத்துக்கள் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன் அவை உயிர் மற்றும் மெய் எழுத்துகளின் கூட்டு என்று எனது ஆசிரியரின் திறனான கற்பித்தல் சொல்லி கொடுத்தது, அப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தை நான் கண்டுகொள்வதே இல்லை.
நான் ஆறாவது படிக்க வரும் பொழுது ஆங்கிலத்துக்கு ஒரு பெரிய புத்தகம் கொடுக்க பட்டது, படிப்பது மிக பெரிய சுமை போல் அப்பொழுது தோன்றியது, வேலைக்கு சொல்லும் சிறுவர்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும்.
ஆறாவதில் முதல் பாடத்தில் ஒரு கேள்வி
what is black coffee?
இதற்க்கு பதில்
black coffe is coffee without milk
இதை நான் எப்படி மனப்பாடம் செய்தேன் தெரியுமா?
black coffee
is coffee
without milk
லட்சம் தடவையாவது இதை படித்ததினால் என்றும் எனக்கு மறக்கவில்லை,
முட்டி மோதி ஆங்கிலத்தை தமிழில் எழுதி மனப்பாடம் செய்து ஒன்பதாவது வரை வந்துவிட்டேன் (இன்றுவரை அவ்வளவு தான் படித்திருக்கிறேன்) அங்கே எனக்கு காந்திருந்தது மிக பெரிய ஆப்பு
essey எனப்படும் கட்டுரை, ஒரு வரி, இரு வரிக்கே தாவு தீர்ந்து டவுசர் கிழியும்,
இவ்வளவு பெரிய கட்டுரையா,
it's happend when raju was fifteen, raju's father was a retired teacher , mother was a house wife
என்று ஆரம்பிக்கும் இந்த முதல் பாடத்தை வருடம் முழுவதும் படித்து கொண்டிருந்தேன், அப்படியும் கூட நான் தான் முதல் ரேங்க் எடுப்பேன் என்று சொன்னால் நம்புவர்களுக்கு இந்த வார நம்பிக்கை நட்சத்திரம் விருது.
இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கும் தொழிலில் கூட எனது வாடிக்கையாளர்கள் 90% சதவிகிதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது, இதில் மூன்று பேர் வெளி மாநிலத்தார், அவர்களுக்கு தமிழில் அகரம் கூட தெரியாது, அவர்களிடம் ஆங்கிலம் தான் பேச வேண்டும்,
இருவருமே தப்பு தப்பாக பேசி கொண்டாலும் சரியாக புரிந்து கொள்வோம் என்பதே இங்கு முக்கியம், அவர்களுக்கு தேவை இங்கே வாங்கலாமா, விற்கலாமா
இதை சொல்வதற்கு பெரிய ஆங்கில படிப்பு தேவையில்லை இல்லையா
இன்று ஐந்து இலக்கம் சம்பாரிக்கிறேன் என்றால், அதற்கு ஆங்கிலமோ வேறு மொழிகளோ எனக்கு துணை செய்யவில்லை, "என் தமிழ்" போதும் இதை ஆறிலக்கமாக மாற்ற,
எனக்கு ஆங்கிலம் தெரியாததால் டோண்டு அவர்களின் பின்னூட்டத்தில் அவமானப்பட்ட போதும், வால்பையனுக்கு ஆங்கிலம் தேவையில்லை, அதை விட வேறொன்று கற்று வைத்திருக்கிறார் என்று எனக்காக மதிப்பு மிக்க வரிகளை கூறிய டோண்டு அவர்களுக்கும்,
முதல் முறை சந்தித்த போது உங்களிடம் ஆங்கில குறை இருப்பதாக தெரியவில்லை,
அடுத்தமுறை சந்திக்கும் போது உங்களுடைய வருமானம் இரடிப்பாக வேண்டும் என்று என்னை உற்சாகபடுத்திய தருமி அவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்
37 வாங்கிகட்டி கொண்டது:
மொழி என்பதன் முதல் உபயோகம் தகவல் பரிமாற்றம் மட்டுமே,அதற்கு பண்டிதத்தனம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் மொழி சார்ந்த இலக்கியப் பகுதிக்குள் நுழைய தவறற்ற மொழிப் பிரயோகம் அவசியம்.
பொதுவாக பிழையற்ற மொழிப் பிரயோகம் நல்ல ஒரு பழக்கம்.
தவறாக எண்ணவில்லையெனில்,
/// வரை உயிர்மை எழுத்துக்கள்////
உயிர்மெய் எழுத்துக்கள்.
///essey எனப்படும் ////
essay
//தமிழ் மற்றும் தமிழனுக்கு உலகில் மரியாதை இல்லை என்று சொன்னதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை//
நீங்க மட்டுமல்ல, யாருமே இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
//இன்று ஐந்து இலக்கம் சம்பாரிக்கிறேன் என்றால் //
நாளுக்கா? மாதத்துக்கா? ஆண்டுக்கா? :)
//ஒன்பதாவது வரை வந்துவிட்டேன் (இன்றுவரை அவ்வளவு தான் படித்திருக்கிறேன்) //
உண்மையாதானா?
//எனக்கு ஆங்கிலம் தெரியாததால் டோண்டு அவர்களின் பின்னூட்டத்தில் அவமானப்பட்ட போதும், //
இது என்ன கதை?
தவறு சுட்டிகாட்டுவதில் நான் என்ன தவறாக நினைக்க போகிறேன்!
பிழை திருத்தம் தானே செம்மைக்கு வழி
தவறில் தமிழ் திருத்தப்பட்டது .
ஆங்கிலம் தவறாகவே இருக்கட்டும்
வால்பையன்
//நீங்க மட்டுமல்ல, யாருமே இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.//
நமது வலைகளிலேயே சிலர் செய்கிறார்கள்,
ஒருவர் நான் சாதாரண பிற்படுத்தப்பட்ட தமிழன் என்கிறார்,
அவரை என்னவென்று கேளுங்கள்
வால்பையன்
//நமது வலைகளிலேயே சிலர் செய்கிறார்கள்,
ஒருவர் நான் சாதாரண பிற்படுத்தப்பட்ட தமிழன் என்கிறார்,
அவரை என்னவென்று கேளுங்கள் //
என்ன சுந்தர் இன்னைக்கு பிட்டு போதுமா
வால்பையன்
உங்கள் மனதை திறந்து (குறைகளை-மறைக்காமல் எழுதியுள்ளதற்கு பாராட்டுக்கள்.
//எனக்கு ஆங்கிலம் தெரியாததால் டோண்டு அவர்களின் பின்னூட்டத்தில் அவமானப்பட்ட போதும், வால்பையனுக்கு ஆங்கிலம் தேவையில்லை, அதை விட வேறொன்று கற்று வைத்திருக்கிறார் என்று எனக்காக மதிப்பு மிக்க வரிகளை கூறிய டோண்டு அவர்களுக்கும்,//
இது கொஞ்சம் நெருடியது.
அவமானங்காளை தாண்டி இன்று வலைப்பதிவாளர் பகுதிகளில் ஒரு தனி மரியாதையுடன் வெற்றி வல்ம் வருகிறீர்கள்.உங்கள் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களே(எண்ணிக்கை,பாராட்டுக்கள்,எதிர்கணைகள் - அகியவையே) சாட்சி சாமானியர்களை தாழ்த்திப் பேசுவதே
சிலருக்கு பொழுதுபோக்கு.
காலம் அவர்களுக்கு பாடம் நடத்தும்.
"தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே"
அதுதான் சரியான அணுகுமுறை வால்பையன் அவர்களே. லியோ டால்ஸ்டாயின் கதை ஒன்று இத்தருணத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.
சர்ச்சில் மணியடிக்கும் வேலை செய்து வந்த ஒருவருக்கு திடீரென வேலை போயிற்று. காரணம் என்னவென்றால் புதிதாக வந்த பாதிரியார் சர்ச்சில் வேலை செய்பவர்கள் எல்லோருமே எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் மணியடிப்பவருக்கு அது தெரியாது.
சர்ச்சை விட்டு வெளியே வந்தவர் பிறகு ஒரு வணிக முயற்சியில் இறங்கி பெரிய தொழிலதிபராக வந்தார். ஒரு நாள் அவரைப் பேட்டியெடுக்க ஒரு பத்திரிகையிலிருந்து சிலர் வந்தனர். அச்சமயம் அவரிடம் காரியதரிசி கையெழுத்திட வேண்டிய செக் ஒன்றை அவர் முன்னால் வைத்தார். இவர் அதில் தன் கட்டை விரல் முத்திரையைப் பதித்தார். இதைப் பார்த்த பத்திரிகைக்காரர் "சார் நீங்க இந்த நிலைமிலேயே இவ்வளவு பணக்காரரா இருக்கீங்களே, எழுதப் படிக்க தெரிஞ்சிருந்தா"? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்ப அவர் அமைதியாக பதிலளித்தார் "சர்ச்சில் மணியடித்து கொண்டிருந்திருப்பேன்" என்று.
ஆங்கிலம் என்பது ஒரு மொழி தமிழைப் போலவே. அவ்வளவுதான். நீங்கள் இதை நன்கு உணர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சாமானியர்களை தாழ்த்திப் பேசுவதே
சிலருக்கு பொழுதுபோக்கு.
காலம் அவர்களுக்கு பாடம் நடத்தும்.//
நிறைய கற்றுவிட்டோம் என்ற மமதையில் சிலர் பேசலாம்.
நமது வலையில் அப்படியல்ல என்பது ஆறுதல்.
உலகமயமாக்கல் பற்றிய டோண்டு அவர்களின் பதிவில்
இரண்டு பதிவுக்கு பெரும் வகையில் சந்த்ரா என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
தமிழில் இருந்தால் புரியுமே என்று நான் கேட்டேன்.
அதற்கும் ஆங்கிலத்தில் இதை மொழி மாற்றம் செய்ய எனக்கு நேரம் இல்லை என்றார்,
(வெட்டி ஓட்டியிருப்பார் போல)
அதுவும் ஆங்கிலத்தில் இருந்ததால் இதற்கு பதில் சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று அதிகபிரசங்கி தனமாக முதலில் சொன்னது நான் தான். தவறு என் மேலும் உள்ளது.
நீங்கள் கேள்வி கேட்காமலே இருந்திருக்கலாம் என்று அவர் சொன்னதற்கு தான் டோண்டு அவர்கள் இவ்வாறாக சொல்லியிருந்தார்
//வால்பையனைப் பற்றி ஜாக்கிரதையாகப் பேசுங்கள் அனானி. அவர் எத்தனை அற்புதமான மனிதர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அவர் பங்கு வணிகத்தில் செய்யும் புரோக்கர் தொழிலில் கொடி கட்டி பறப்பவர். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக யாரையும் குறைவாக மதிப்பீடு செய்யும் பழக்கம் தவறானது. பல மொழிகளில் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவுதான்.//
என் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள இது ஒரு கருவியாக இருந்தது
வால்பையன்
//சார் நீங்க இந்த நிலைமிலேயே இவ்வளவு பணக்காரரா இருக்கீங்களே, எழுதப் படிக்க தெரிஞ்சிருந்தா"? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்ப அவர் அமைதியாக பதிலளித்தார் "சர்ச்சில் மணியடித்து கொண்டிருந்திருப்பேன்" என்று.//
ஆஹா!
திரும்பவும் ஒரு கப் பூஸ்டா!
வால்பையன்
(//இன்று ஐந்து இலக்கம் சம்பாரிக்கிறேன் என்றால் //
நாளுக்கா? மாதத்துக்கா? ஆண்டுக்கா? :) )
ஐந்து இலக்கம்ன பத்து போட்டு பின்னாடி ஐந்து சைபர் தானே!
வருசத்துக்கு தான்
(//ஒன்பதாவது வரை வந்துவிட்டேன் (இன்றுவரை அவ்வளவு தான் படித்திருக்கிறேன்) //
உண்மையாதானா? )
ஈரோடு செங்குந்தர் பள்ளியில் கேட்டு பாருங்கள்!
இதுக்கு மேலே இருந்தா ஸ்கூல் கெட்டு போயிடும்-ன்னு அனுப்பிச்சிடம்னு சொல்வாங்க
(//எனக்கு ஆங்கிலம் தெரியாததால் டோண்டு அவர்களின் பின்னூட்டத்தில் அவமானப்பட்ட போதும், //
இது என்ன கதை?)
கீழே லிங்க் கொடுத்துள்ளேன் பாருங்கள்
டோண்டுவின் உலகமயமாக்கல்
வால்பையன்
ஆங்கில அறிவை பற்றிய தங்கள் பதிவு
பாராட்டுக்குரியது.
//வால்பையனைப் பற்றி ஜாக்கிரதையாகப் பேசுங்கள் அனானி. அவர் எத்தனை அற்புதமான மனிதர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அவர் பங்கு வணிகத்தில் செய்யும் புரோக்கர் தொழிலில் கொடி கட்டி பறப்பவர். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக யாரையும் குறைவாக மதிப்பீடு செய்யும் பழக்கம் தவறானது. பல மொழிகளில் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவுதான்.//
//
டோண்டு அவர்களின் பண்பு பாரடத்தக்கது.
ஆங்கிலம் படிப்பதும் ஒன்றும் கம்ப சூத்திரமல்ல. இந்த லிங்கை பயன்படுத்தவும்.http://aangilam.blogspot.com/
மிக எளிய முறையில் ஆங்கிலம் கற்றுத் தரும் களம்.
போதும் போதும் பிட் போட்டது போதும்.
பிட் பின்னுட்டத்தில் மட்டுமல்ல பதிவிலும் பெரிய பிட்டாகத்தான் உள்ளது.
ஆங்கிலம் என்பது வெறும் மொழிதான் அறிவல்ல.
இன்னும் ஆறு மாசம்தான் பாக்கியிருக்குன்னு நினைக்கிறேன்.
//நீங்கள் கேள்வி கேட்காமலே இருந்திருக்கலாம் என்று அவர் சொன்னதற்கு//
அவ்வாறு சொன்னது எனது நண்பர் சந்திரசேகரன் அல்ல. அவர் தனக்கு மொழிபெயர்க்க இயலவில்லை என மட்டும்தான் முதலில் கூறியிருந்தார். அதற்கு எதிர்வினையாக நீங்கள் "அதுவும் ஆங்கிலத்தில் இருந்ததால் இதற்கு பதில் சொல்லாமலே இருந்திருக்கலாம்" என்று சொன்னதற்கு மேலே உள்ள எதிர்வினை கொடுத்தது வேறு ஒருவர். அவருக்குத்தான் நான் பதில் அளித்தேன். நண்பர் சந்திரசேகரன் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர், மிகவும் பண்பானவர்.
நிகழ்வுகளை சரியாக வைத்து கொள்வோம் என பொருள்பட ஆங்கிலத்தில் கூறுவார்கள்: "Let us keep the record straight" என்று. அதைத்தான் நான் இங்கே இப்போது செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\வால்பையன் said...
//நீங்க மட்டுமல்ல, யாருமே இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.//
நமது வலைகளிலேயே சிலர் செய்கிறார்கள்,
ஒருவர் நான் சாதாரண பிற்படுத்தப்பட்ட தமிழன் என்கிறார்,
அவரை என்னவென்று கேளுங்கள்
\\
அவர் இவ்வாறு கூறுவதற்கு காரணம் உள்ளது.
தாழ்வு மனப்பான்மைதான் அது.
ஏனெனில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல் எல்லோருக்கும் தன் தாய் மொழிதான் சிறந்ததாகத் தெரியும்.
மற்ற மொழிகளின் சிறப்பையும் அழகையும் ரசித்தாலும், உணர்ந்தாலும் தன் மொழியை யாரும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் தமிழர்கள்? அப்படியில்லையே என நாம் வருந்தலாம்.
அதற்கும் காரணம் தாழ்வு மனப்பான்மைதான்.
ஒன்று தன்னிடம் திறமையில்லாதிருக்கலாம்.
இரண்டாவது மற்ற வேறுபாடுகளைவிட சாதி வேறுபாடு மிகைத்திருப்பது தமிழ்நாட்டில் (அல்லது தென்னிந்தியாவில்)தான்.
திராவிடத் தமிழர்களை ஆரியர்கள் அடக்கியதிலிருந்து தமிழர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதிய ஆரியர்கள், தமிழையும் தாழ்வானதாகக் கருதுகிறார்களே தவிர மொழி என்பதற்காக இவ்விதமான வேறுபாடுகள் அல்ல.
இவ்வித தாழ்வு மனப்பான்மை ஒழிய சாதி ஒழிய வேண்டும்.
ஆனால் அதனை ஒழிப்பதாகக் கூறிக் கொள்ளும் பலர் இன்றுவரை அதனை ஒழித்தாகத் தெரியவி்ல்லை.
//ஆனால் அவர் தமிழ் மற்றும் தமிழனுக்கு உலகில் மரியாதை இல்லை என்று சொன்னதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//
தமிழனுக்குத் தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசினால் மரியாதை இல்லை.. முக்கியமாக சென்னையில்.. தமிழிலில் பேசுபவனை முட்டாளாகத்தான் பார்க்கிறார்கள்...
அடப்பாவி நீயும் செங்குந்தர்தானா? அதுதான் இந்தப்போடு போடறயா.
நல்ல வேளை நீங்களாச்சும் ஆங்கில அறிவு முக்கியமில்லைன்னு உங்க வாழ்க்கையை உதாரணம் காட்டியிருக்கீங்க. வலையுலகுல பலர் இந்தி படிக்கலையேன்னு கவலைப்படறாங்க, சிலர் தமிழ் கட்டாயப்பாடமா இருக்கத்தேவையில்லைங்கறாங்க. நீங்களாவது இப்படி எழுதறது சந்தோசமா இருக்கு
வால் பைய்யன் சத்யப்ரியன் "மொழியா அறிவு"ன்னு ஒரு பதிவு போட்டிருந்தார் அதோட லின்க் கீழ படிச்சு பாருங்க..
http://sathyapriyan.blogspot.com/2007/04/blog-post.html
தமிழ் மட்டும் தெரிந்தால் மட்டம் என்பது ஆங்கிலம் தெரியும் முட்டாள்களின் மட்டமான புத்தி அவ்வளவே.
//http://aangilam.blogspot.com/
மிக எளிய முறையில் ஆங்கிலம் கற்றுத் தரும் களம்.//
தமிழ்நெஞ்சம் பதிவில் இந்த லிங்கை பார்த்த மாதிரி ஞாபகம், கண்டிப்பாக உபயோக படுத்திகொள்கிறேன்
வால்பையன்
//ஆங்கிலம் என்பது வெறும் மொழிதான் அறிவல்ல.//
உங்க பதிவுல தாங்க பிட்டு பெருசா இருந்துச்சு
வால்பையன்
//இன்னும் ஆறு மாசம்தான் பாக்கியிருக்குன்னு நினைக்கிறேன்.//
விடமட்டிங்க போலருக்கு!
அதுவும் நல்லதுக்கு தான்!
நிறைவேத்துறேன்
வால்பையன்
//அதுவும் ஆங்கிலத்தில் இருந்ததால் இதற்கு பதில் சொல்லாமலே இருந்திருக்கலாம்" என்று சொன்னதற்கு மேலே உள்ள எதிர்வினை கொடுத்தது வேறு ஒருவர்.//
ஆமாம் அது அனானி,
நான் தான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்
மன்னிக்கவும்.
வால்பையன்
//இவ்வித தாழ்வு மனப்பான்மை ஒழிய சாதி ஒழிய வேண்டும்.
ஆனால் அதனை ஒழிப்பதாகக் கூறிக் கொள்ளும் பலர் இன்றுவரை அதனை ஒழித்தாகத் தெரியவி்ல்லை.//
உண்மை தான், சாதியை ஒழித்துவிட்டேன் என்று சொல்பவர்கள் சாதியை வளர்க்கிறார்கள்.
கலப்பு மணமும், காதல் திருமணமும் வருங்காலத்தில் சாதியை ஒழிக்கும் என்று நம்புவோம்
வால்பையன்
//தமிழனுக்குத் தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசினால் மரியாதை இல்லை.. முக்கியமாக சென்னையில்.. தமிழிலில் பேசுபவனை முட்டாளாகத்தான் பார்க்கிறார்கள்...//
உங்க பேர் மாதிரியே இது சும்மா fun தானே!
சென்னையில் தூய தமிழ் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள்!
அவர்களுக்கென்று ஒரு தமிழ் உண்டு அதை கற்று கொள்ளுங்கள்
வால்பையன்
//அடப்பாவி நீயும் செங்குந்தர்தானா? அதுதான் இந்தப்போடு போடறயா.//
நீங்களுமா!
எந்த வருஷம்
வால்பையன்
//நல்ல வேளை நீங்களாச்சும் ஆங்கில அறிவு முக்கியமில்லைன்னு உங்க வாழ்க்கையை உதாரணம் காட்டியிருக்கீங்க. வலையுலகுல பலர் இந்தி படிக்கலையேன்னு கவலைப்படறாங்க, சிலர் தமிழ் கட்டாயப்பாடமா இருக்கத்தேவையில்லைங்கறாங்க. நீங்களாவது இப்படி எழுதறது சந்தோசமா இருக்கு//
வருகைக்கு நன்றி
இந்த ஊக்கம் நான் கடந்து வந்த தொழில்கள் பற்றி எழுத தூண்டுகிறது!
எனது தன்னபிக்கைக்கு காரணம் கணிதம்! அதை பற்றி விரிவாக எழுதுகிறேன்
வால்பையன்
வால் பையன் Said...
// உண்மை தான், சாதியை ஒழித்துவிட்டேன் என்று சொல்பவர்கள் சாதியை வளர்க்கிறார்கள்.
கலப்பு மணமும், காதல் திருமணமும் வருங்காலத்தில் சாதியை ஒழிக்கும் என்று நம்புவோம் //
கலப்பு மணமும், காதல் திருமணமும் இதுவரை சாதியை ஒழிக்கவில்லை. எப்படி வருங்காலத்தில் இவை சதியை ஒழிக்கும் என நம்புவது.
ஒன்றை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
காதல், கலப்பு மணங்கள் நிகழ்வதே அபூர்வம்.
அப்படி நிகழ்ந்தாலும் ஆண் எந்த சாதியைச் சார்ந்துள்ளானோ அந்த சாதியைக் கொண்டே அந்தப் பெண்ணும் அவர்களின் சந்ததிகளும் நிலைபெறுகின்றன என்பதுதான் இன்றுவரை உள்ள யதார்த்தம்.
உயர்சாதிப் பெண் கீழ்சாதி (இப்படிக் கூறுவதற்கு மண்ணிக்கவும்) ஆண் ஒருவனை மணந்துகொள்ள முன்வருவது அதைவிட அரிது.
தமிழ் தீண்டாமையை ஒழித்து விடுமா?
தீட்சிதர்களே அதாவது ஆரிய ஆதிக்க வர்க்கமே அழத் தமிழில் தேவாரம் பாடினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவர்களே தமிழில் அர்ச்சனை செய்தாலும் செய்வார்களே ஒழிய, தீண்டத்தகாதவர்களோடு அவர்களுக்குள்ள மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இது தான் சாதி ஒழிப்பு விஷயத்தில் தமிழ் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.
அதாவது மேல்சாதிக்காரர்களின் உள்ளத்தில் தாழ்த்தப்பட்டவர்களைப்பற்றிய எண்ணமும் சிந்தனையும் அப்படியேதான் இருக்கும்
தலைப்பு தமிழ் பற்றியது
ஆனால் என்னமோ சாதியைப் பற்றி அதிகம் பேசி விட்டேன்.
காரணம் தமி்ழை இழிவாகக் கருதுவது சாதியினால் என்பதால்தான்.
வருகைக்கு நன்றி புகழன்
//காதல், கலப்பு மணங்கள் நிகழ்வதே அபூர்வம்.//
அதை தான் மாற்ற சொல்கிறேன்,
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு,
காதல் திருமணத்திற்கு எதிர்வினை சாதி ஒழிப்பு!
இதில் அபூர்வம் என்ன இருக்கிறது?
இன்று காதல் சாதாரண விஷயம்
//மேல்சாதிக்காரர்களின் உள்ளத்தில் தாழ்த்தப்பட்டவர்களைப்பற்றிய எண்ணமும் சிந்தனையும் அப்படியேதான் இருக்கும்//
இவ்வளவு விசயத்தையும் தமிழிலேயே சொல்லிவிட்டு பிறகு ஏன் தமிழ் மேல் நம்பிக்கையின்மை,
அது சரி யார் மேல்சாதி? யார் கீழ்சாதி?, தமிழ் தானே படித்தீர்கள் இப்போது சொல்கிறேன் யார் மேல்சாதி யார் கீழ்சாதி என்று
"இட்டார் மேலோர் இடாதோர் இழிகுலத்தோர்"
நீங்கள் யாரென்று முடிவு செய்து கொள்ளுங்கள்
நான் மேல்சாதி என்று சொல்லித்திரியும் மூடர்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை
//தலைப்பு தமிழ் பற்றியது
ஆனால் என்னமோ சாதியைப் பற்றி அதிகம் பேசி விட்டேன்.
காரணம் தமி்ழை இழிவாகக் கருதுவது சாதியினால் என்பதால்தான்.//
உங்கள் கண்ணோட்டத்தில் பிழை இருக்கிறது! தமிழ் நாட்டில் எல்லா சாதியினரும் தமிழ் தான் பேசுகிறார்கள்! தமிழ் பேசுகிறவன் கீழ் சாதியல்ல! மாற்ற மனிதனை மதிக்காதவனே கீழ்சாதி!
வால்பையன்
//இன்று ஐந்து இலக்கம் சம்பாரிக்கிறேன் என்றால், அதற்கு ஆங்கிலமோ வேறு மொழிகளோ எனக்கு துணை செய்யவில்லை, "என் தமிழ்" போதும் இதை ஆறிலக்கமாக மாற்ற,//
நண்பரே!
நம்பிக்கை தான் வாழ்க்கை என்பாங்க! அது உங்களிடம் நிறைய உள்ளது.அதை வைத்து இல்லாததைப் பூர்த்தி செய்வீர்கள்.
//நண்பரே!
நம்பிக்கை தான் வாழ்க்கை என்பாங்க! அது உங்களிடம் நிறைய உள்ளது.அதை வைத்து இல்லாததைப் பூர்த்தி செய்வீர்கள்.//
என் நம்பிக்கையை வளர்ப்பதே உங்கள் ஊக்கம் தானே
வால்பையன்
சரி சரி அடுத்த பதிவு எப்போது?
ரொம்ப நாள் ஆச்சுப்பா...
//சரி சரி அடுத்த பதிவு எப்போது?
ரொம்ப நாள் ஆச்சுப்பா...//
போட்டாச்சு!! போட்டாச்சு!!
வால்பையன்
Post a Comment