தமிழ்மணம் மற்றும் மூத்த பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் தமிழ்மணத்தில் இணைந்து பல மாதமாகிறது,
பலமான ஆணி பிடுங்கும் வேலைகளுக்கு மத்தியில் ஐம்பது பதிவுகளுக்கு மேல் எழுதியாகிவிட்டது.
பெயர் தெரியாத அனாநிகளிடம் சண்டையும் போட்டாயிற்று.
ஆனாலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, இது என் தவறா அல்லது நான் வேண்டுமென்றே நிராகரிக்க படுகிறேனா,
ஏன் சொல்கிறேன்னேன்றால் மற்றவர்களுக்கு மட்டும் அந்த சலுகை ஏன்?
இல்லை அதற்காக எதாவது வயது தகுதி வேண்டுமா?
அப்படி பார்த்தால் என்னை விட வயதில் குறைந்தவர்களுக்கு எல்லாம் அந்த சலுகை கொடுக்க பட்டிருக்கிறது,
ஏன் எனக்கு மட்டுமில்லை, நான் செய்த தவறென்ன! அல்லது நான் செய்ய வேண்டியதென்ன? எதுவாகிருந்தாலும் சொல்லுங்கள், அனைத்தையும் நான் செய்ய தயார்.
ஆனால் முடிவு எனக்கு சாதகமாக தான் இருக்க வேண்டும்,
ஒரு சில மணி துளிகளில் என் பதிவுகள் மறைந்து போவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்ற தலைப்பின் கிழே என் பதிவுகள் வர வேண்டும், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
இப்படிக்கு
எதை எப்படி கேட்பது என்று கூட தெரியாத அப்பிராணி வால்பையன்
Subscribe to:
Post Comments (Atom)
11 வாங்கிகட்டி கொண்டது:
இதில் சொல்லியபடி தமிழ்மணக்கருவிப்பட்டையை இணைக்கவும்
http://poorna.rajaraman.googlepages.com/
:(:(:(:(:(:(:(
அண்ணன் இருக்கேன்டா உனக்கு. சின்னப்புள்ள மாதிரி அளுவுறியா.
பொட்டப் புள்ள போல,
புள்ளிராஜா
எங்கள் தலைவர் போலியார் அல்லது சிங்கப்பூர் போலியார் மன்ற தலைவர் கோவியாரிடம் சொன்னால் வழி செய்வார்கள். தவறாமல் போலியாரை தொடர்ப்பு கொள்ளவும்
ஐயா.. நீங்கள் இவ்வளவு தூரம் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கின்றது இதில் என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு திரட்டி உங்கள் பதிவை மறைத்து விடுகின்றது என்பது தங்கள் வருத்தத்திற்கு காரணம் என்றால் தங்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன்.
உங்கள் மன எழுச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்தலுக்கு உகந்தது என்று நீங்கள் கருதுவதை மட்டுமே நீங்கள் பதிகிறீர்கள். இதில் ஒரு தனி நிறுவனம் உங்கள் பதிவுகளை மறைக்கின்றது என்பதற்காக ஏன் அழ வேண்டும்?
உங்கள் ஆன்மா என்ன சொலிகிறதோ அதை எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் வீரியமாகவும், சத்தோடும் இருந்தால் யாராலும் உங்களை மறைக்க முடியாது. உமக்கான வாசகர்கள் வந்தே தீர்வார்கள்.
எனவே தனி ஒரு நிறுவனத் தடையை எண்ணி கலங்காமல், உங்களது பயணத்தைத் தொடர்வீர்.
வால்பையன் வாழ்த்துகள்.தங்கள் பதிவுகள் தற்பொழுது மறுமொழிகளில் வருகிறது.
உரக்க காத்த வேண்டும் போல் இருக்கிறது
நான் வென்றிட்டன்
வால்பையன்
நண்பர் வினையூக்கி அவர்களுக்கு மிக்க நன்றி
உங்கள் உதவியுடன் தான் இது சாத்தியமாயிற்று
மேலும் இதற்காக எனது நண்பர்கள், அவர்களது இஷ்ட தெய்வத்தை வேண்டியதாக தகவல்
அவர்களுக்கும் எனது நன்றிகள்
வால்பையன்
read this
http://idlyvadai.blogspot.com/2006/04/blog-post_114466241689861469.html
இதே கதைதான் எனக்கும் ஆரம்பத்திலே, எப்படி எல்லாருக்கும் மறுமொழி வருது, நமக்கு மட்டும் வரமாட்டேங்குது. அப்புறம் ஒரு வழியா கண்டுபுடிச்சி இப்ப அது நல்லா வேலை செய்யுது. ஆனால் இப்ப மறந்து போச்சுது எப்படி பண்ணினேன் என்று.
//எங்கள் தலைவர் போலியார் அல்லது சிங்கப்பூர் போலியார் மன்ற தலைவர் கோவியாரிடம் சொன்னால் வழி செய்வார்கள். தவறாமல் போலியாரை தொடர்ப்பு கொள்ளவும்//
இல்லையேல் ஆரியபோலி டோண்டு பெங்களுர் அருணை தவறாமல் தொடர்ப்பு கொல்ளவும்
Post a Comment