நான் யார்?

பெரியார், சேகுவேரா, மார்க்ஸ், லெனின், ரஜினி, கமல் அவ்ளோ ஏன் என்னையையே நீ குடிகாரன், பொம்பளபொறுக்கின்னு சொல்லுங்க. ஹாஹாஹான்னு சிரிச்சிட்டு உங்களுக்கும் தெரிஞ்சிருச்சான்னு போவேன்.
எனக்கு எந்த தனிநபர் மீதும் எந்த பிம்பமும் இல்லை. எனக்கென்று ஒரு பிம்ப வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ஆர்வமும் இல்லை. நான் எப்படி என்று ஆராயும் சுய பரிசோதனை தான் எப்போதும்
நம் மனிதர்களிடம் இந்த சிக்கல் உண்டு. தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவோ. கருத்துகள் மீது அகம் சார்ந்த கூர் நோக்கோ இல்லை. அவர்கள் நம்பிக்கை சார்ந்த பிம்பங்களை கட்டுடப்பததை அவர்களையே நிர்வாணம் ஆக்குவது போல் உணர்கிறார்கள். கேள்வி கேட்பவன் முட்டாள் என்றும் பதில் சொல்பவன் புத்திசாலி என்று பொதுபுத்தியுடன் அணுகுகிறார்கள். கேள்வி கேட்பதை அவமானமாக கருதுகிறார்கள். பதில் தெரியாத கேள்விகளை முட்டாள்தனம் என்றும். மேம்போக்கானவை கேள்விகள் கேட்டவன் நுனிபுல் மேய்கிறவன் என்று புறம்தள்ளுகிறார்கள்.
ஒரு நபர் அல்லது ஒரு கருத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சார்ந்த புனிதபிம்பம் நீங்களாக வளர்த்துக்கொண்டதல்ல. அது உங்களிடன் திணிக்கப்பட்டது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.
தவறான நம்பிக்கை கொண்டதற்கு நீங்க தான் வெட்கபடனும் சென்ட்ராயன்னு காமெடியா சொன்னா உங்களுடம் நட்பு கொண்டதற்கு வெட்க படுறேன்னு ஒருத்தர் சொல்றார். கிறிஸ்தவனா இருந்துட்டு இதை கூட எழுதலைனா எப்படின்னு இன்னொருத்தர் சொல்றார். பச்சையை கேள்வி கேட்டா அவன் காவி, காவியை கேள்வி கேட்டா அவன் வெள்ளை. இந்த முக்கோனத்தை தவிர மனிதனை மனிதனாக பார்க்க யாருக்கும் இயலவில்லை. திணிக்கபட்ட கருத்துருக்கள் மாயக்கண்ணாடி போல் உண்மையை மறைத்து நின்கின்றது.
ராமகிருஷ்ணனும், விவேக்கும் கஞ்சா அடிச்சாங்கன்னு எழுதினேன். அது தப்புன்னு எழுதினேனா? தியானம் கைவசபடாத விவேக்கின் நடுநெற்றியில் அறிவாளால் கீறி அதை மையபடுத்தி தியானம் செய்னு ராமகிருஷ்ணர் சொன்னது எனக்கு எப்படி தெரியும். உங்கள் புனிதபிம்பம் கேள்விக்குள்ளாக்க படுவதை சகிக்கமுடியாத உங்களில் எத்தனை பேர் விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு படித்துள்ளீர்கள், ராமகிருஷ்ணர் அவரது மனைவி சாரதா அம்மையார், விவேக்கின் முதல் குரு ராஜாராம் மோகன் ராய் பத்தி படுத்துள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள் நுனிபுல் மேய்வது யார்.
இப்போதும் நாலு பக்கம் எழுத நாப்பது பக்கம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அதில் இருக்கும் சாத்தியகூறுகளை ஆராய்கிறேன். பதில் தெரியா கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி படிக்கிறேன். தவறு இருப்பின் அதை ஒத்துக்கொள்ளவோ, புதியாக ஒன்றை தெரிந்துக்கொண்டோம் என்பதில் பெருமிதம் கொள்ளவோ எனக்கு வெட்கமோ அவமானமோ இல்லை. என்றும் மாணவன் தான். வித்தியாச"மாணவனாக" தெரிவது என் தவறல்ல.
பெரும்பான்மையும், பொதுபுத்தியும் கட்டமைத்து வைத்திருக்கும் எதையும் நான் கேள்வி கேட்கிறேன். நான் விமர்சிக்காத ஏரியாவே இல்லை என்பது போல் தேடி தேடி படிக்கிறேன்.
திருகுறளில் கடவுள் பத்தி சொல்லவேயில்லை. முதல் குறளில் வரும் ஆதி, பகவன் கூட வள்ளுவர் அப்பா, அம்மா என்றவரிடம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு.
இதில் உள்ள பற்றற்றான் யாருன்னு கேட்டேன். அவர் ஒரு பெரியாரிஷ்டும் கூட.
எந்த முன் முடிவுகளும் இல்லாமல் எதையும் அணுகுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாளர ஓர இருக்கை கிடைத்த குழந்தையை போல் உலகை ரசிக்கமுடிகிறது. நான் சுதந்திரமானவனாக இருக்க விருப்புகிறேன். காற்றை போல் மலரையும், மலத்தையும் எந்ததொரு சுழிப்புமின்றி அதை இருப்பை கடந்து செல்ல நினைகிறேன். எதிர்பார்ப்புகளின்றி இருத்தலில் இருக்கிறேன்
நாளையே ஒரு கஸ்டமர் உங்களால் சம்பாரிச்சேன், இந்தாங்க பத்து லட்சம் என கொடுக்கலாம். அல்லது 5 வருடங்களுக்கு முன் கொடுத்த காசோலையை வைத்து செக் மோசடி வழக்கில் என்னை உள்ளே தள்ளலாம்.
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நாம் இன்பத்தையும், துக்கத்தையும் மாறி மாறி கொடுப்பதகாகவே சமூக சூழல் அமைகிறது. நான் எதையும் எதிர்கொள்ள தயாராய் இருக்கின்றேன். மரணத்தையும் பயமின்றி பார்க்கின்றேன்
ஒஷோ சொல்லுவார். பயம் இல்லையென்றால் ஒரு குழந்தையை போல் நீங்கள் உலகம் ரசிக்கலாம் என்று. ஒஷோ தத்துவயில் படித்தவர். சூஃபி, ஜென் தத்துவ கதைகள் அவருக்கு கூட்டம் சேர்த்து தந்தது. ஆன்மீகத்தை கார்ப்ரேட்மயமாக்கினார். ஆனால் ஓஷோவை விட ஜே.கே என அழைக்கப்பட்ட ஜிட்டு கிருஷ்ணமீர்த்தி தான் உண்மையை போட்டு உடைத்தவர் என்றார் ஒஷோ ஆதரவாளர்களுக்கு கோவம் வரும். வழக்கம் போல் அவர்களும் என்னை நுனிபுல் மேய்பவன் என்பார்கள்.
நான் அப்படி தான். கையில் சிக்காத காற்று. உலகின் மூலை முடுக்கெல்லாம் போவேன்

விவேகானந்தர்!

விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று கல்கத்தாவில் பிறந்தார். இயற்பெயர் நரேந்தரநாத் தத்தா (லாரா தத்தா சொந்தகாரரா இருப்பாரோ).

ஐரோப்பிய சார்பு கல்லூரியில் படிந்த பொழுது தான் அவருக்கு சமய வேறுபாடு புரிந்தது. இவர் பிறப்பால் இந்து. நாட்டில் நிலவுவதோ கிறிஸ்துவம். அதையும் தெரிந்துகொண்ட பொழுது அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. கடவுளுக்கு உருவம் இருக்கா இல்லையா என்று.

அக்காலத்தில் புகழ் பெற்று இருந்த பிரம்ம சமாஜத்தில் தன்னை இணைத்துகொண்டார். பிரம்ம சமாஜத்தை உருவாக்கியது ராஜாராம் மோகன்ராய்(ஐஸ்வர்யாராய்!). பெரும்பாலான குறிப்புகளில் விவேக் இவரிடன் சீடராக இருந்தது குறிப்பிடபடவில்லை. ராஜாராம் அத்வைத கொள்கை உடையவர். கடவுளுக்கு உருவம் இல்லை அதே நேரம் நாமும் கடவுளும் வேறு வேறு இல்லை என்று. இவர் தான் அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த கொடிய பழக்கமான உடன்கட்டை ஏறுதல் முறையை ஒழித்தார்.

விவேக்கிற்கு குழப்பம். குழப்பத்திற்கு காரணம் விவேக் கடவுள் இருக்கா இல்லையா என ஆராயவில்லை. கடவுளுக்கு உருவம் இருக்கா இல்லையா என்பதே அவரது சந்தேகமாக இருந்தது. ஆச்சர்யபடஒன்றுமில்லை. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியின் பின்னரும் கடவுள் இல்லாம எப்படி உலகம் என மதவாதிகள் கேட்பது போல் அப்பொழுதும் கேட்டிருப்பார்கள் தானே.

அந்த சமயத்தில் தான் ராமகிருஷ்ண(பரமஹம்சரை) பற்றி கேள்வி பட்டார். ராமகிருஷ்ணர் தாம் காளியை பார்த்ததாக அக்காலத்தில் உளரிக்கொண்டிருந்தார். அதை ராமகிருஷ்ணபரமஹம்சர் வரலாற்றிலும் அவரது மனைவி சாரதா அம்மையார் வரலாற்றிலும் காணலாம்(அதெல்லாமாடா படிச்சன்னு கேட்குற உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்) ராமகிருஷ்ணர் பணத்தை தொடமாட்டார். தொட்டால் கை கோணிக்கும் என்ற கதையெல்லாம் அக்காலத்தில் உண்டு.

கடவுளை பார்த்த ஒருவரால் தான் நமக்கு கடவுளை காட்ட முடியும் என நம்பிய விவேக். ராமகிருஷ்ணரை பார்த்தார். ஆனாலும் ராமகிருஷ்ணரின் விளக்கங்கள் விவேக்கிற்கு திருப்தி அளிக்கவில்லை. சும்மா தியானம் பண்ணு காளி வருவான்னு சொன்னா எப்படி வருவா?
அந்த சமயத்தில் விவேக்கிற்கு ஹுட்கா(கஞ்சா) பழக்கத்தை கற்று தந்தார் ராமகிருஷ்ணர். பின் நெற்றியில் அறிவாளால் ஒரு கீறலிட்டு அதை மையபடுத்தி தியானம் செய்ய சொன்னார். அப்பொழுது விவேக் காளியை பார்த்ததாக வரலாறு சொல்கிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த காளியும் அக்காலத்தில் போட்டோவில் இருக்கும் காளி மாதிரி தான் இருந்தா.(படம் வரைபவன் ஏற்கனவே காளியை பார்த்திருப்பானோ)

விவேக்கின் முட்டாள்தனமாக பொன்மொழிக்கு ஒரு சாம்பிள்


அந்த காலகட்டத்தில் இந்தியா ஆங்கிலேயர்களிடன் அடிமை பட்டு கிடந்தது. விவேக் இந்திய விடுதலைக்காக ஒரு இலையை கூட கிள்ளிபோடவில்லை.(விவேக் அண்ணன் விடுதலை போராட்டவீரர்) அது தனது வேலையில்லை என்றும். சமயம் பரப்புதலே தனது பணி என வாழ்ந்தார். கன்னியாகுமரியில் மூன்றுநாட்கள் தியானம் செய்த விவேக் இந்தியாவின் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக கூறினார்.

விவேக்கை போலயே இந்தியவிடுதலையில் அக்கறை காட்டாத இந்த்துவா வாதிகள் விவேக்கை சிகாகோவில் நடந்த உலக மதங்களில் மாநாட்டில் பேச அழைத்தனர். அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேச இந்து மதத்தில் வேறு யாரும் இல்லை என்பது வேறு கதை.(படிச்சா தானே)

பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று பேச்சை ஆரம்பித்தது.
உங்களை போல் எனக்கு குழந்தை வேண்டும் என கேட்ட பெண்ணிடம் ஏன் என்னை போல், என்னையே குழந்தையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என சொன்னது போன்றவை இவரது புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்குகள்.

ஜூலை 4 1902 தனது 39 வது வயதில் காலமானார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்து இருந்தது. சுயமைதுனம் செய்து கொள்ளாததால் விரைப்பை கேன்சர் இருந்தது என கூட பரவலாக கருந்து உண்டு. அதையெல்லாம் விவேக்கை விவேக்காக பார்த்தால் மட்டுமே ஆராய முடியும். முன்னாடி சுவாமி போட்டு அழைப்பதும் கண்ணை கட்டிகிட்டு மணலில் ஊசி தேடுபதும் ஒன்னு தான்.


ஜல்லிகட்டு!

குரங்கினத்தின் ஒரு பிரிவாக நியாண்டர்தால் வளர்ந்தது. அதிலிருந்து ஹோமோ எரக்டஸ் உருவானது. வேட்டையாடப்படும் உயிரினமாக இருந்த நாம் வேட்டையாடும் உயிரினமாக மாறியது அப்பொழுது தான். நெருப்பை உருவாக்க கற்றக்கொண்டதும் இவர்கள் தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. கல், குச்சி ஆகியவற்றை ஆயுதாக பயன்படுத்தினர். பின் வந்த ஹோமோ சேபியன்ஸ் மேம்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர். தூரத்தில் இருந்தே தாக்கக்கூடிய வில் போன்ற ஆயுதங்கள் கொண்டு ஹோமோ எரக்டஸ் இனத்தை முற்றிலுமாக அழித்தனர். அதிலிருந்து மேம்பட்ட உயிரினமாக மாறிய ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் தான் நாம் அதாவது மனிதர்கள்.
மனித நாகரிகத்தின் தொடக்கம், ஒரே இடத்தில் தங்கி தனக்கான உணவை தானே உற்பத்தி செய்ய தொடங்கியது. அதை தான் நாம் விவசாயம் எங்கிறோம். குகையில் தங்கிய மனிதன் ஆற்றுபடுகைகள் குடியிருக்க வீடுகள் கட்ட தொடங்கினான். தகவல் தொடர்பு மொழியை வளர்த்தது. மொழி அறிவை வளர்த்தது. அறிவு அத்தனையும் கண்டுபிடித்தது. ஆக விவசாயமே அனைத்திற்கும் தொடக்கம். அதை மனிதன் தொடங்கவில்லையென்றால் இன்றும் நாம் வேட்டையாடி உண்டுகொண்டு இருப்போம். ஆதி பழகுடியினர் சிலர் தவிர நாம் அனைவருமே விவசாய பரம்பரைகள் தான்.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை விவசாய மண், எனக்கு நைட்ரஜன் வேணும், பாஸ்பரஸ் வேணும், யூரியா வேணும் அதையெல்லாம் உரமாக போடு என கேட்கவில்லை. இன்றும் மழைகாடுகளிலிருந்து மனித தொல்லை இல்லாத வனபகுதிகள் எந்த செயற்கை உரமும் இல்லாமல் தங்களை பாதுகாத்துக்கொள்கின்றன. அவைகளின் உதிர்ந்த இலைகள், விலங்குகளின் சாணங்கள் மண்ணில் மக்கி நைட்ரஜனாகவும், பாஸ்பரஸாகவும் மண்ணை பாதுகாத்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடோ, மாடோ குட்டி ஈன்றால் அது பெண்ணாக இருந்தால் பாலுக்கும்/இனபெருக்கத்திற்கும், ஆணாக இருந்தால் உழுவுக்கும், பட்டி என இடத்தில் வைத்து சாண உரத்திற்கும் பாதுகாக்கப்பட்டது. ட்ராக்டர் என்ற சாதனம் காளைகளின் தேவையை பாதி ஒழித்தது. செயற்கை கருவூட்டல் மீதி ஒழித்தது. இன்று காளைகள் உணவுக்காக மாட்டுகறியாக ஏற்றுமதி செய்யவே வளர்க்கப்படுகிறது.


தனக்கு சோறு போட்ட விவசாயத்திற்கு மனிதன் செலுத்தும் மரியாதையே பொங்கல். அதை தமிழர் திருநாள் என்பதை விட உழவர் திருநாள்(பலர் அப்படி தான் சொல்வாங்க) என்பதே சரி. உணவு விவசாயத்தின் மூலமே கிடைக்கின்றன. அதை உண்ணும் அனைவரும் உழவர் திருநாளை கொண்டாடவேண்டும். அதன் ஒரு பகுதியான ஜல்லிகட்டை நடத்த வேண்டும்
நிலபிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்க சாதிகள் விவசாயம் செய்தும். சிறுபான்மையினர் விவசாய கூலிகளாகவும் இருந்தது உண்மை தான். ஆதிக்கசாதியினர் வளர்த்த மாடுகளை சிறுபான்மையினர் பிடிப்பதை விரும்பாமல் இருந்தது உண்மை தான். இன்றைய சமூகம் மாற்றம் அடைந்து வருகிறது. பெரும்பாலோர் பெயருக்கு பின்னால் அடைமொழியை சேர்த்துக்கொள்வதில். மூளை வளர்ச்சி அடையாத சில ஜந்துகள் மட்டும் பெயருக்கு பின்னால் சாதி சேர்த்துக்கொண்டு அழைகிறார்கள். நீங்க என்ன ஆளுக என்று கேட்கும் பழக்கமும் மறைந்து வருகிறது.
காளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கையின் சமநிலை பாதுகாக்கப்படவேண்டும். உணவு சுழற்சி பாதுகாக்கபடவேண்டும். காளைகளை போற்றும் ஜல்லிகட்டு நடத்தப்படவேண்டும்.

!

Blog Widget by LinkWithin