கரை சேர்த்த கடல் தேவதை!

நான் ஒரு மீனவன்,

கடலில் களிப்புற்று கிடந்தேன்,

என்னவென்று அறியும் முன்னர்
ஒரு புயல் என் படகை உடைத்தது
ஒரு நொடியில் ஏதுமற்றவன் ஆனேன்
தண்ணீரிலே என் வாழ்க்கை மூழ்கப்போவதாய் நினைத்தேன்.

ஒரு குரல் என்னை அழைத்தது,

அவள் ஒரு கடல்கன்னி,

மண்டிகிடந்த இருளில்
சில வெளிச்சப்புள்ளியாய்
மின்னிய நட்சந்திர ஒளியில்
அவள் முகம் பார்த்தேன்

விரக்திச்சிரிப்பை
தைரியப்புன்னகையாய் மாற்ற
முயற்சித்துக்கொண்டிருந்தாள்
என் கஷ்டம் கேட்ட பின்
அவளும் பல காலமாய்
தனிமையில் இருப்பதாக கூறினாள்

உனக்கு யாரும் துணையில்லையா? என்றேன்.
என்னை தொலைத்துவிட்டார்கள் என்றாள்.
உன் வாழ்க்கை பயணத்தின்
வழிதுணையாக நான் வரவா?என்றேன்
முதலில் நீ கரையேறு
பின் யோசிக்கலாம் என்றாள்.

அவளுக்கு பிரச்சனை
என்னிடம் வருவதல்ல,

மனிதர்களுடன் பழுகுவது,

கடல்கன்னிகள் தேவதை போன்றவர்கள்
மனிதர்களை மகிழ்வாய் வைத்திருப்பார்கள்
மனிதர்களோ வேடிக்கைபொருளாய் பார்ப்பார்கள்.

நான் பெருங்காதலன் என்றேன்.

இந்த கடலை காதலித்தாயா? என்றாள்.

ஆம், என்றேன்
பின் ஏன் கைவிட்டது? என்றாள்.

உன் படகை காதலித்தாயா? என்றாள்.
ஆம், என்றேன்.
பின் ஏன் கைவிட்டது?என்றாள்.

உன் தவறை நீ அறியாதவரை
உன் பெருங்காதல்
பொருந்தாகாதல் என்றாள்.

முழித்தேன்,

மீண்டும் கடலுக்கு செல்வாயா? என்றாள்.
அது ஒவ்வாமை தருகிறது என்றேன்.
மீண்டும் படகுக்கு செல்வாயா?   என்றாள்.
அதை செப்பனிட எண்ணம் இல்லை என்றேன்.

என்னை நானாவே ஏற்றுக்கொள்ளமுடியுமா?
என்றாள்.

முடியும், என்றேன்.

அதற்காக உன்னை மாற்றிக்கொள்வாயா?
என்றாள்.
ஆம்,
என்றேன்.
அது தான் உன் காதலின் பிரச்சனையே
என்றாள்.
காதல் பாடத்தின் அரிச்சுவடியை
கைபிடித்து எழுத ஆரம்பித்தாள்.

ஒரு மாணவனை போல்
அவள் முன் மண்டியிட்டேன்!!!!!!

-ஆமென்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin