கபாலிக்கு பூசப்படும் சாதி சாயம்!

நான் சாதாரணமா இம்மாதிரி விசயத்துக்கு பொங்கல் வைக்க மாட்டேன்.
கபாலி படம் சுமார்னு சொன்னா தலித்தியத்துக்கு எதிரான மனநிலை என்ற பொதுபுத்தி தான் எழுத வைக்குது.

தகப்பனை இழுந்து இஸ்லாமியரால் வளர்க்கப்படும் வேலுக்கு பின்னாளில் நாயக்கர் பட்டம் ஒட்டிக்கொண்டது தான் சாதிய திணித்தல். சாதிய கட்டாய அடையாளமாக காட்டும் பார்பனிய தந்திரம்.

கபாலி என்ற பெயரை தவிர வேற என்ன சாதி அரசியலை அந்த படத்தில் பார்த்தீர்கள் என புரியவில்லை. உண்மையில் ரஜினிக்கு சிவன் பெயர் வைத்துக்கொள்வது பிடித்துள்ளது. அருணாசலம், லிங்கா தொடந்து இப்போ கபாலி. அதை ரஞ்சித் இயக்குவதாலயே அதை தலித்திய படம் என்று முத்திரை குத்தி ரஞ்சித்தின் திரை வாழ்வுக்கு சாவு மணி அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்..

ரஞ்சித்தின் அட்டை கத்தி, நாம் பதிமன்களில் வாங்கிய பல்புகளை நினைவூட்டியது.
மெட்ராஸ் ”வடசென்னை”யின் உண்மை முகத்தை காட்டியது. அரசியலில் வளர விடாமல் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என வெளிச்சம் போட்டது.
கபாலி உங்களுக்கு சொல்லியிருக்கும் செய்தி என்ன?

ஆண்ட பரம்பரைடா என வில்லன் சொல்வது திணிக்கபட்ட ஒன்று தான். மலேசியாவில் தமிழன் ஆண்டானா என்ன? 25 வருசமா ஜெயில் இருந்தியே அப்போ மலேசியா முழுவதும் போதை பொருள் விற்று மலேசியாவின் நிழல் உலகை ஆண்ட பரம்பரடா என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம்

நான் கோட் சூட் போடுவேண்டா என்ற வசனத்தை ஆதிக்க சாதிக்கு எதிரான வசனமாகவும் என்னால் பார்க்க முடியவில்லை. முன் நினைவு காட்சி ஒன்றில் சீனர்களும், இந்தியர்களும் சமமாக பார்க்க முடியாது என்ற காட்சி வரும். அதை நீட்சியாக தான் இதை பார்க்க முடியும். படத்தின் கதை அதிகார வர்க்கத்திற்கும், உழைப்பும் வர்க்கத்தின் நடக்கம் போராட்டம். அதில் சாதிய சாயம் பூசுவது ஏன்னு புரியல



சரி, படமாவது பார்க்குற மாதிரி இருக்கா?

இந்த காட்சியை வெட்டி விட்டாலும் படம் புரியும்னு வெட்ட ஆரம்பித்தால் அரை மணி நேர படம் தேறுமான்னு தெரியல. அப்படியானால் மற்ற காட்சிகள் நம் மீது வழிந்து திணிக்கப்படுவது. அழையா விருந்தாளி போல் திரைகதையில் ஒட்டாத பல கதாபாத்திரங்கள். இது ரஜினி படமாக இல்லையென்றால் என்னவாகிருக்கும் என யோசித்து பாருங்கள்.

ஒரே இரவில் வில்லனின் மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கும் ரஜினியை இன்னும் நீங்கள் ரசிப்பீர்களேனால் அது உங்கள் உரிமை. அதை ஏன் என் மண்டைக்குள் திணிக்க வேண்டும்? கடைசி சண்டை காட்சி மட்டும் இல்லையென்றால் லிங்கா, கபாலியை விட பலமடங்கு நல்லா இருந்தது.

சட்டம் ஒழுங்கும் - சமூக பொறுப்பும்!

சுவாதி கொலையை பொறுத்தவரை காவல்துறையின் பொறப்பன்ற தன்மை வெறும் 10% தான். மீதி 90% நாமே பொறுப்பு. இந்த சமூகம் பொறுப்பு, நம் வளர்ப்பு முறை பொறுப்பு.

இங்கே அழகென்றால் சிகப்பா இருப்பதும், கருப்பென்றால் தேவாங்கு என்றும் மூளையில் பதியவைக்கப்பட்டுள்ளது.
ஒரு தனிமனிதனுக்கு மூன்றால் மனிதர் மேல் உள்ள உரிமைகள் என்ன என்பது சொல்லிக்கொடுக்கப்படவில்லை. சக மனிதர்களிடம் நான் நடந்துக்கொள்ள வேண்டிய முறையும் சொல்லிக்கொடுக்கப்படவில்லை.

கொலையாளி இஸ்லாமியன் என்று ஒய்.ஜி.மகேந்திரன் எழுதியதும் அது அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பு என கதறினோம்(நான் எங்கேயும் கதறல, உங்களை தான் சொல்றேன்). கொலையுண்டது பார்ப்பனர் வீட்டு பெண் என்றதும் அவள் மேல் தப்பு இருக்கும் என்று பல்டி அடித்தோம். நமக்கும், ஒய்,ஜி.மகேந்திரத்தனுக்கும் உள்ள வித்தியாசம். ஒய்.ஜி உடப்பில் பூனூல் இருக்கு. அவ்ளோ தான்.

யூகங்கள் அடிப்படையில் தீர்ப்பை எழுத இந்த இணைய போராளிகளுக்கு தான் எத்தனை அவசரம். தான் சார்ந்த நம்பிக்கையை உண்மை என நிறுவ முயலும் மதவாதிகளுக்கும். நடந்த கொலையை சாதியுடன் முடிச்சிட்டு பெண் பார்பனர் என்பதால் அவள் மேல் குற்றம் சாட்ட முனையும் உங்கள் நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம். பகுத்தறிவு, மதவாதத்தை போல் பல்லிளிக்க காரணம் என்ன?

ராம்குமாரின் வெறிசெயலுக்கு அவன் தாழ்வுமனப்பான்மையும், ஆணாதிக்க சிந்தனையும் தானே காரணம். வினுபிரியாவின் தற்கொலைக்கு காரணம், அவளை நிர்வாணமாக சித்தரித்த இன்னொரு ஆணாதிக்க வெறியனின் செயல் தானே காரணம்.



இரு கொலைகளையும் கண்டித்த உங்களில் எத்தனை பேர் பெண்ணின் உரிமைகளை மதித்த யோக்கியன், மனைவியை அடிக்காத ஆண்மகன். மாற்றம் வேண்டும் என்பது சரிதான். ஆனால் மாற்றம் உங்களிடமிருந்து அல்லவா ஆரம்பிக்க வேண்டும்.

உன்னை காதலிச்சா நான் சந்தோசமா இருப்பேன் என்பதா காதல், என் காதலை துறந்தால் தான் நீ சந்தோசமா இருப்பன்னா நான் விலகிறேன்னு என்பது தானே காதல். இந்த புரிதல் இல்லாம எங்கனம் காதல் மனிதம் வசப்படும்?

கரை சேர்த்த கடல் தேவதை!

நான் ஒரு மீனவன்,

கடலில் களிப்புற்று கிடந்தேன்,

என்னவென்று அறியும் முன்னர்
ஒரு புயல் என் படகை உடைத்தது
ஒரு நொடியில் ஏதுமற்றவன் ஆனேன்
தண்ணீரிலே என் வாழ்க்கை மூழ்கப்போவதாய் நினைத்தேன்.

ஒரு குரல் என்னை அழைத்தது,

அவள் ஒரு கடல்கன்னி,

மண்டிகிடந்த இருளில்
சில வெளிச்சப்புள்ளியாய்
மின்னிய நட்சந்திர ஒளியில்
அவள் முகம் பார்த்தேன்

விரக்திச்சிரிப்பை
தைரியப்புன்னகையாய் மாற்ற
முயற்சித்துக்கொண்டிருந்தாள்
என் கஷ்டம் கேட்ட பின்
அவளும் பல காலமாய்
தனிமையில் இருப்பதாக கூறினாள்

உனக்கு யாரும் துணையில்லையா? என்றேன்.
என்னை தொலைத்துவிட்டார்கள் என்றாள்.
உன் வாழ்க்கை பயணத்தின்
வழிதுணையாக நான் வரவா?என்றேன்
முதலில் நீ கரையேறு
பின் யோசிக்கலாம் என்றாள்.

அவளுக்கு பிரச்சனை
என்னிடம் வருவதல்ல,

மனிதர்களுடன் பழுகுவது,

கடல்கன்னிகள் தேவதை போன்றவர்கள்
மனிதர்களை மகிழ்வாய் வைத்திருப்பார்கள்
மனிதர்களோ வேடிக்கைபொருளாய் பார்ப்பார்கள்.

நான் பெருங்காதலன் என்றேன்.

இந்த கடலை காதலித்தாயா? என்றாள்.

ஆம், என்றேன்
பின் ஏன் கைவிட்டது? என்றாள்.

உன் படகை காதலித்தாயா? என்றாள்.
ஆம், என்றேன்.
பின் ஏன் கைவிட்டது?என்றாள்.

உன் தவறை நீ அறியாதவரை
உன் பெருங்காதல்
பொருந்தாகாதல் என்றாள்.

முழித்தேன்,

மீண்டும் கடலுக்கு செல்வாயா? என்றாள்.
அது ஒவ்வாமை தருகிறது என்றேன்.
மீண்டும் படகுக்கு செல்வாயா?   என்றாள்.
அதை செப்பனிட எண்ணம் இல்லை என்றேன்.

என்னை நானாவே ஏற்றுக்கொள்ளமுடியுமா?
என்றாள்.

முடியும், என்றேன்.

அதற்காக உன்னை மாற்றிக்கொள்வாயா?
என்றாள்.
ஆம்,
என்றேன்.
அது தான் உன் காதலின் பிரச்சனையே
என்றாள்.
காதல் பாடத்தின் அரிச்சுவடியை
கைபிடித்து எழுத ஆரம்பித்தாள்.

ஒரு மாணவனை போல்
அவள் முன் மண்டியிட்டேன்!!!!!!

-ஆமென்

!

Blog Widget by LinkWithin