அதிமுக(வில் இருந்து ஆரம்பிப்போம்)

2010 லயே தெரி்ந்து விட்டது அதிமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று. திமுக தவிர்த்து வலுவான எதிர்கட்சியாக எதுவும் இல்லை. தேமுதிகவுக்கு வாழ்வு கிடைத்தது

உண்மையில் அது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியல்ல, திமுகவுக்கு கிடைத்த தோல்வி. திமுக எதிராக 2ஜியோ, வேறு காரணிகளோ இல்லை. ஒரே வில்லன் மின்சாரம் மட்டுமே

மின்மிகை மாநிலம் ஆக்குவேன் என ஆட்சிக்கு வந்த அதிமுக வந்த ஓராண்டில் 6 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 12 மணி நேரமாக கூடியது. பேய்க்கு பயந்து பிசாசிடன் மாட்டிய கதையானது மக்களுக்கு.

வந்த சிறிது நாளில் வழக்கம் போல் கஜானா காலி, எனக்கு உங்களை விட்டா யார் இருக்கான்னு பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. அந்த வலி மறக்கும் முன்னே பால் விலையும், மின்சார கட்டணமும் உயர்த்தபட்டது. மக்கள் எதோ கனா கண்ட மாதிரி பேந்த பேந்த முழித்தார்கள்

மின்மிகை மாநிலம் ஆக்கிட்டோம்னு மார்தட்டிக்கொண்டிருக்கும் அதிமுக அரசு, அரசு சார்ப்பில் சொந்தமாக ஒரு மின் திட்டமும் கொண்டு வரவில்லை, ஒரு யூனிட் மின்சாரம் கூட நாங்கள் உருவாக்கினோம் என சொல்லிக்கொள்ள முடியவில்லை.

எப்படி ஆனது மின்மிகை மாநிலம்? கிட்டதட்ட யூனிட் 16 ரூபாய் என்ற விலைக்கு வாங்கி மக்களுக்கு மானியத்தில் கொடுத்தது, மின்சார வாரியத்தின் கடன்சுமை இனிமே உனக்கு கடன் தர மாட்டோம்னு வங்கிகள் சொல்லும் அளவுக்கு போனது. அதனால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. நன்றாக இயங்கிகொண்டிருந்த அனலாக் மீட்டரை முற்றிலுமாக டிஜிட்டலாக மாற்றினர். அதிகவிலைக்கு மின்சாரம் வாங்கியது, டிஜிட்டல் மீட்டர் வாங்கியது இரண்டிலும் ஊழல் நடந்துள்ளது என மின்சார வாரிய ஊழியர்களே பேட்டி கொடுத்தனர்

ரமணா படத்தில் காட்டப்படுவது போல் டாப்10 ஊழல் பொறியாளர்கள் என பேனர் வைக்கப்பட்ட பெருமை அதிமுகவுக்கே. எல்லா துறையிலும் 40% கமிசன் கேக்குறாங்க, நாங்க எப்படிங்க தொழில் பண்றது என எல்லா காண்ட்ராய்ட் ஆள்களும் புலம்பினர்.

4 வயது சிறுவன் மது குடித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது, அதிமுக மற்றும் அதன் சார்ப்பு தவிர அனைவரும் மதுவிலக்கை கொண்டு வர கேட்டனர். அரசின் காசி செவிடானது. நம் மக்கள் தான் மறதிக்கு பிறந்தவர்கள் ஆச்சே, இயற்கையே பொறுக்காமல் பெரு மழையை அனுப்பி அதிமுக அரசின் செயலற்ற தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

மற்ற கட்சிகள் மக்களுக்கு கோவம் என்றால் இப்பொழுது மக்கள் அதிமுக மேல் வெறுப்பில் இருக்கின்றார்கள்.(ஆங்காங்கே உதார்விடும் அடிமைகள் விதிவிலக்கு) கிராமத்துமக்கள் சிலர் எம்.ஜி.ஆருக்காக சின்னத்தில் குத்தலாம் ஆனால் நகர்புற மக்கள் களமிறங்கி அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது

(கள நிலவரம்)

அரசு பேருந்தும், இன்சூரன்ஸும்!

சொந்த பயன்பாட்டுக்கோ, பயணியர் பயன்பாட்டுக்கோ எந்த வாகனமாக இருந்தாலும் இன்சூரன்ஸ் கட்டிப்பாக கட்டியாக வேண்டும். இல்லையென்றால் அபராதம்.

இருசக்கர வாகனத்துக்கு இன்சூரன்ஸ் 1000 ரூபாய், இன்சூரன்ஸ் இல்லையென்றால் அபராதம் 1500. தேதி முடிந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தாலும் காவலர் கறாராக இருப்பார். உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா வீட்டுக்கு எப்படி பணம் கிடைக்கும்? அக்கறை இல்லையா, கண்ணீர் இல்லையா, கடையடைப்பு இல்லைன்னான்னு.

விசயம் என்னான்னா

இந்த இன்சூரன்ஸ் அரசு பேருந்துகளுக்கும் பொருந்தும். விபத்து ஏற்பட்டாலோ, யாரேனும் மரணம் அடைந்தாலோ நிவாரண தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுத்துவிடும் ஆனால் தமிழ்நாட்டில் பல வருடங்களாகவே அரசு பேருந்து விபந்தில் சிக்கி அடிப்பட்டவர்கள், இறந்தவர்கள் பேருந்து நிறுவனம் நிவாரணம் வழங்குவது இல்லை. அரசை கேட்டால் அது தன்னாட்சி என்பார்கள். கவனிக்க மட்டும் ஒரு ஐ.ஏ.எஸ் போடுவார்கள்

எனக்கு நினைவு தெரிந்தே பல வருடங்களாக நீதிமன்றங்கள் நிவாரணம் அளிக்காத அரசு பேருந்தை ஜஸ்தி செய்ய தீர்ப்பு வழங்கியுள்ளது. நம் நாட்டு நீதி விசாரணையை பற்றி உங்களுக்கு தெரியும். நிலுவைகள் கிடக்கும் வழக்குகள் மட்டும் லட்சகணக்கில் உள்ளது. வழக்கு தொடந்தர்வரே செத்து போன வழக்கு ஆயிரகணக்கில் இருக்கும்.

இறந்தவர் குடும்பமும், ஊனமுற்றவர் குடும்பமும் வழக்குக்காக அலைய முடியாமல் விட்ட வழக்குகள் எத்தனை இருக்கும். ஏன் இந்த மெத்தன போக்கு. அப்படியே போக்குவரத்துதுறை இன்சூரன்ஸ் கட்டியிருந்தால் அவர்களுக்கு ஜஸ்தி ஆன பேருந்துகளை விட குறைவாக தான் செலவாகிருக்கும். ஏன் அரசு பேருந்துகளுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயம் என நீதி மன்றம் உத்திரவிட மறுக்கிறது.

பொதுநல வழக்கு ஒன்று போடலாமா?

நாம் வாக்காளர்களா இல்ல மடையர்களா!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் 2004 ல் விறபனையான விலைக்கு வந்துவிட்டது. கிட்டதட்ட 12 வருடத்திற்கு முன் இருந்த விலை. அப்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தெரியுமா?
உலக சந்தையில் விலை இறங்கும்போதெல்லாம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை குறைத்து விலையை சமம் செய்வது. அது முடியாத பட்சத்தில் கலால் வரியை உயர்வது என மக்கள் நல விரோத அரசாக பாஜக செயல்படுகிறது.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் முழுதாய் முடியவில்லை, எட்டு முறை கலால் வரியை உயர்த்தியுள்ளார்கள். கங்கையை சுத்தபடுத்த 1000 கோடி, வல்லபாய் படேலுக்கு சிலை வைக்க 1300 கோடி என நம் பணம் வீணாய் தான் போகிறது.



அரசியல்வாதிகளின் பெரிய பலமே நடுத்தரவர்க்கத்தை தவிர மீதம் உள்ள அனைவரும் தான். விலைவாசி உயர்வை பற்றி கவலை படுவது நடுத்தரவர்க்கம் மட்டுமே. மேல்தட்டு மக்களுக்கு என்ன விலை என்றாலும் கவலை இல்லை. கீழ்தட்டு மக்களுக்கு வெறும் கஞ்சிய குடிச்சே வாழ்ந்துகிறேன்னு பெருந்தன்மை.

இதுவரை ஊழல் இல்லைன்னு பெருமையா வேற சொல்லிகிறாங்க. சுத்பாரத் மாதிரி திட்டத்திற்கு இவர்கள் செய்யும் செலவு எல்லாமே அரசு இழப்பீடு தான். மோடியின் வெளிநாடு சுற்றுபயணமும் பெரிய வெற்றியெல்லாம் இல்லை. மோடி போகாட்டியும் நடக்க வேண்டியது நடந்துகிட்டு தான் இருக்கும்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரப்போகின்றது. அம்மா உணவகம் மட்டுமே உருப்படியான ஒன்று. இலவச மடிகணிணி, இலவச கால்நடைகளில் ஊழல் நடந்துருக்காதுன்னு சொன்னா அதிமுககாரன் கூட நம்ப மாட்டான். ஏன்னா அடிமைகளுக்கு அரசியல்வாதிகள் ஊழல் செய்வது தவறில்லைன்னு ஊறிபோச்சு.

செயல்படாத அரசுன்னு குறை சொல்லும் திமுகவிடம் நீங்க ஏன் அப்ப பண்ணலன்னு கேட்டா சரியான பதில் இல்லை. லோக் ஆய்க்தா சட்டம், மதுவிலக்கு திமுகவால் அப்பொழுது மறுக்கபட்ட ஒன்று தான். மேலே காங்கிரஸும், பாஜகவும் ஒன்று என்றால். கீழே திமுகவும், அதிமுகவும் ஒன்று. அவர்களுக்கு மாற்றி மாற்றி ஓட்டுபோடுவது நம் முட்டாள்தனத்தை தவிர வேறில்லை.

கட்சியை பார்த்து ஓட்டு போடுவது பொதுபுத்தி மனநிலை வெற்றிபெரும் பக்கம் இருப்பது ஒரு பெருமிதம். நல்ல வேட்பாளரா? படிச்சவரா? மக்களுக்கு நல்லது செய்யும் ஆர்வம் உள்ளவரா? அவரது கொள்கைகள் என்ன? தொகுதி பற்றி அவரது அறிவு உள்ளவரான்னு பார்த்து போட்டால் இந்த முறை தப்பிக்கலாம். இல்லையென்றால் திரும்பவும் அஞ்சு வருசம் கழிச்சு அதிமுக வரும், திரும்ப திமுகன்னு அவுங்களுக்கு பயம் இல்லாம போயிரும். தவறுகளை துணிந்து செய்ய மக்களின் இந்த பொதுபுத்தியே காரணம். உங்க தொகுதி வேட்பாளர் எந்த கட்சியா இருந்தாலும் சரி. அவர் எப்படிபட்டவர் என முழுதாக அறிந்து வாக்களியுங்கள்.

சாதி அபிமானம், மத அபிமானம், கட்சி அபிமானம், செலிபிரட்டி அபிமானம் பாத்து நீங்கள் எதுவும் நன்மை அடைந்ததுண்டா? இங்கே கட்சிக்கு ஆதரவாக எழுதும் அனைவரும் அதற்கு பணம் பெறுபவர்கள் தெரியுமா?
நாம் தமிழரோ, பாமகவோ, விசிகவோ உங்கள் தொகுதிக்கு நல்லது பண்ணுவாரான்னு பார்த்து ஓட்டு போடுங்க. ஜனநாயகத்தை மதிங்க. காசு கொடுத்தா பரவாயில்லைங்க. உங்களுக்கு தான் ஓட்டு போடுவேன்னு சமாளிச்சிட்டு நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க.

இப்படி புலம்பி புலம்பியே நான் மெண்டல் ஆகிருவேன் போல்!

பழங்குடியினர் கலவி கலாச்சாரம்!

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள பழங்குடியினர் இன்றும் பெண்குழந்தைகளின் பிறப்புறுப்பில் கிளிட் மற்றும் லெபியா மஜோரா பகுதியை நீக்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.

கானா பழங்குடியினர்களில் விதவை பெண் முன்பின் அறியாத ஆணுடன் அன்றைய இரவை கழிக்க வேண்டும். அது அவர்கள் ஆன்மாவை சுத்தம் செய்வதாக நம்புகிறின்றனர்.

பாப்புவா நியூ கினியா பழங்குடியினர் தங்கள் குழந்தைகள் சிறுவயதிலயே உடலறவு கொள்ள அனுமதிக்கின்றனர். பெண்குழந்தைகள் 8-10 வயதிலும் ஆண் குழந்தைகள் 10-12 வயதிலும் செக்ஸ் அனுபவம் பெறுகின்றனர். திருமணத்திற்கு முன் உடலறவை அவர்கள் இயற்கையின் தேவையாக நினைக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு முன் அவர்கள் உணவை பரிமாறிக்கொள்ள அனுமதியில்லை

மாங்கியா(Mangaia) நாட்டில் ஆண்குழந்தைகளுக்கு 13 வயது ஆகும் பொழுது அவர்கள் குடும்பத்திலேயே மூத்தவர்(பெண்) அந்த சிறுவனுக்கு செக்ஸ் பாடம் ப்ராக்லிட்டிகலாக எடுக்க வேண்டும்.

கம்போடிய பழங்குடியினர் தங்கள் பெண் குழந்தைகள் பூப்படைத்தவுடன் தனியாக குடில் ஒன்றை கட்டிக்கொடுப்பனர். தினம் ஒரு நபரோடு கூட அவர் உடலறவு கொள்ளலாம். யாரை பிடித்திருந்திறதோ அவரை திருமணம் செய்து கொள்ளலாம். தன் மீது உண்மையான காதல் கொண்டுள்ள ஆணை கண்டுபிடிக்கும் பகுதியாக இந்த சடங்கு பார்க்கப்படுகிறது

நேபாள பழங்குடியினர்களில் ஒரு பெண்ணை குடும்பத்தில் உள்ள சகோதர்கள் உடலறவு கொள்ளும் வழக்கம் உள்ளது.

பிரேசிலில் சாப்பிடுவதற்கும், உடலறவு கொள்வதற்கும் ஒரே வார்த்தை தான், இரண்டுமே உடலில் முக்கிய தேவை என்பது அவர்கள் நம்பிக்கை.

!

Blog Widget by LinkWithin