ஏமாறுதல் அல்லது ஏமாற்றப்படுதல்!

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சிபோச்சுடான்னு ஒரு பாட்டு வரும் பொழுதே இப்படி ஒரு கட்டரை எழுத வேண்டும் என நினைத்தேன். சமீபத்திய பீப் சாங் இதை எழுத வைத்துவிட்டது.

பொதுபுத்தியும், உளவியல் சிக்கலுமே அந்த மாதிரியான எண்ணத்திற்கு காரணம். என் அம்மாவுக்கு 6 மாசம் முன்னாடி எனக்கு மாதிரியே முகவாதம் வந்தது. வேற வழியில்லாம சேலம் அரசு மருத்துவமனைக்கு வாங்கம்மான்னு கூப்பிட்டா அங்க தான் அப்பா இறந்தார் நான் அங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என் தோழி ஒருவர் தவறான சிகிச்சையால் கால்கள் வலுவிழந்தவர். சமீபத்திய சென்னை மழையில் மலேரியா வந்த போது ஒரு ஊசி போய் போடுங்கன்னு மச்சின்னு சொன்னேன். செத்தாலும் சாவேன் இனி ஊசி போட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

இப்படியான பொதுபுத்தி தான் ஒரு சார்பு மனநிலை அல்லது எதிர்ப்பு மனநிலையை உருவாக்குவது. இது எல்லா அரசியலுக்கும் பொருந்தும். சிம்பு ஊருக்கு தெரிந்தே இரு பெண்களை காதலித்தவர். நமக்கு தெரியாமல் நிறைய இருக்கலாம். ஆக அவரை பொறுத்தவரை பெண்கள் ஏமாற்றுபவர்கள். அந்த கோவத்தின் வெளிப்பாடு தான் பீப் சாங்.

இன்னொரு தோழர் கோபமாக ஒரு பதிவு போட்ருந்தார். அதை ஏன் “என்ன சூனாக்கு லவ் பண்றோம்”னு பாடலைன்னு. அதற்கு தான் தலைப்பு ஏமாறுதல் அல்லது ஏமாற்றப்படுதல். நான் ஏமாந்துட்டேன் என்பதற்கும் ஏமாத்திட்டான் என்பதற்கும் உளவியல் வேறுபாடு உண்டு.

ஏமாந்துட்டேன் என்பது சுயகழிவிரக்கத்தையும், தாழ்வுமனப்பான்மையும் கொடுக்கும், ஏமாத்திட்டான் என்பது கோபத்தையும், பழி உணர்வையும் கொடுக்கும். உளவியல் நான் கற்றுக்கொண்ட பாடம். ஏமாந்துட்டேன் என்பது நம்மை எதுக்கும் லாயக்கில்லைன்னே கொண்டு போகும். நேர்மறை எண்ணங்களை புகுத்த வழியில்லாமல்... ஏமாத்திட்டான் என்று வரும் கோவத்தில் நேர்மறை எண்ணங்களை புகுத்தி அவனுக்கு முன் வாழ்ந்து காட்டனும்னு உத்வேகம் கொடுக்கும். அதாவது நர்ஸ் பொண்ணு போயிட்டா டாக்டர் பொண்ணை டாவடி லாஜிக்.

இதில் ரொம்ப முக்கியம் இயற்கை உயிரியல். அது இல்லாம உளவியல் வராது. அதை சொல்லும் முன்னர் ஒன்றை கட்டாயம் சொல்லவேண்டும். ஒழுக்கம் என்பது தனிநபர் சார்ந்தது. உங்களுக்கு கற்பிக்கப்பட்டது அல்லது நம்பபடுவது தான் ஒழுக்கம் என நீங்கள் நினைத்துக்கொள்ள உரிமை இருக்கு,. யாரும் உங்க சட்டைய பிடித்து ஏண்டா ஒழுக்கமா இருக்கன்னு கேட்கபோறதில்ல. அதே போல் நீ ஏன் என்னை மாதிரி இல்லைன்னு கேட்கவும் உங்களுக்கு உரிமை இல்லை.

இயற்கையின் படி ஒரு உயிரின் கடமை வாழ்வது, தனது சந்ததினரை உருவாக்கி செல்வது. அதிலும் மேம்பட்ட இனபெருக்கம் முக்கிய கடமை. இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். ஒரு பெண் மானுக்காக இரண்டு ஆண் மான்கள் சண்டை போடுவது. இரண்டு ஆண் ராஜநாகங்கள் சண்டை போடுவது. இரண்டு சிங்கங்கள் சண்டை போடுவது அனைத்தும் ஒரு பெண்ணிடம் நான் பலிசாலி, ஆரோக்கியமானவன். நல்ல சந்ததியினரை உருவாக்க பயன்படுவேன்னு காட்டத்தான்.

மனித இனம் மற்ற உயிர்கள் இருந்து மேம்பட்டது. அதன் இவ்வளவு வளர்ச்சிக்கும் காரணம் ஒன்றே ஒன்று தான். மேம்பட்ட தகவல் தொடர்பு. என் சிந்தனையை உங்களுக்கு உணரசெய்தல். உங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளல். மற்ற உயிரினங்களில் தகவல் தொடர்பு உண்டு ஆனால் இவ்வளவு மேம்பட்டதல்ல அது.

இயற்கை உயிரியலின் படி மனிதனும் ஒரு விலங்கு தான். மற்ற உயிர்களை போலவே மனிதர்களும் மேம்பட்ட சந்ததினரை உருவாக்கிசெல்லும் கடமை உள்ளது. ஆதியில் அப்படித்தான் இருந்தது. தலைமை பண்புள்ள சிலர் சமூகத்தில் சில ஒழுக்கவிதிகளை திணிக்க அதுவே பொதுபுத்தியாகிவிட்டது.

பொதுவாக ஒரு சொலவடை உண்டு, ஒரு ஆணுக்கு உடலறவுக்கு தேவை இடம் மட்டுமே, ஒரு பெண்ணுக்கு தேவை நம்பிக்கை. என்ன தான் சமூக விதிகளுக்குள் கட்டுபட்டு கிடந்தாலும் ஒரு ஆணை விட இன்னொரு ஆணிடம் மேம்பட்ட கவர்ச்சி இருப்பின் பெண்ணுக்கு ஈர்ப்பு திரும்பவது இயற்கை. ஒரு பெண்ணை எப்பொழுதும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆண் வசம் வைத்துக்கொள்வது பெண்ணிடம் இல்லை. ஆணின் செயலில் தான் உள்ளது.

எப்பொழுதும் யாரையும் விட நீ தாண்டா பெஸ்ட்னு பேரு வாங்கனும்னா கூட பெண்ணுக்கு சில பரிசோதனைகள் தேவைபடும் தானே. சிறந்தவனாக இருக்க முயற்சியுங்கள். பெண் அடிமையாக இருக்க வேண்டும் என எண்ணவது பீப்சாங் பாடவைக்கும். பொதுபுத்தியில் எல்லா பெண்களும் இப்படித்தான் என நினைப்பவர்கள் அதை ஆதரிக்கவும் கூடும்.

ஆனால் இது முழுக்க முழுக்க உளவியல் சிக்கலே.
பெண் எப்பொழுதும் பெண்ணாக தான் இருக்கிறாள். ஆண் நிறம் மாறிக்கொண்டே இருக்கின்றான்.



4 வாங்கிகட்டி கொண்டது:

யாஸிர் அசனப்பா. said...

//பெண் எப்பொழுதும் பெண்ணாக தான் இருக்கிறாள். ஆண் நிறம் மாறிக்கொண்டே இருக்கின்றான்.//

sema bro

shri Prajna said...

"பெண் எப்பொழுதும் பெண்ணாக தான் இருக்கிறாள். ஆண் நிறம் மாறிக்கொண்டே இருக்கின்றான்.":-)

rajamelaiyur said...

எல்லாத்திலும் விதிவிலகென்று சில உண்டு. ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட பையன்களை நூல் விடும் பெண்களும் உள்ளனர்

வால்பையன் said...

அதான் இயற்கை. தகுதியான ஆணை தேர்தெடுப்பது பெண்ணின் கடமை/உரிமை

!

Blog Widget by LinkWithin