பிறந்தநாள் வாழ்த்துகள்!

 எங்கள் வீட்டில் நான் தான் முத்தவன்,எனக்கு பிறகு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிக்காக தான் இந்த பதிவு.


வீட்டில் கடைசி என்று முடிவு செய்து விட்டதால்,செல்வ செழிப்போடு இருக்கட்டும் என்று செல்வம் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் குடும்ப பெயர் ராஜ், அதனால் அதுவும் கூடவே. ரொம்பவே செல்லம். அதனால் ஒன்பதாவது பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு குடுத்தார்கள். ஆனால் என்ன சாபமோ தெரியவில்லை.யாருமே எங்கள் வீட்டில் ஒன்பதாவது தாண்டவில்லை.

கவனித்தலை விட புரிதலே பெரிது என்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் புரிந்து வைத்திருந்தனர். அதனால் படிப்பு இல்லை என்பது எங்களுக்கு ஒரு குறைவாகவே தெரியவில்லை. வாழ்வதற்க்கு எதாவது செய்ய வேண்டும்.அதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

வருணாவுடன் செல்வம். மொபைலில் எடுத்தது!

அதை நிரூபிக்கும் வகையில் படித்தவர்களுக்கே சவால் விடும் வகையில் சிறந்த வெல்டராக இருக்கிறார் ஈரோட்டில். புத்தகங்களில் அவரது ஆர்வம் எனக்கே ஆச்சரியம் தரும். ஒஷோவின் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். தத்துவங்களை பற்றிய தர்க்கம் எனக்கும் அவருக்கும் விடிய விடிய நடக்கும்.

இதெல்லாம் இப்போ ஏழு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.

சகோதர்களாக இருந்தாலும் நாங்கள் பழகுவது நண்பர்கள் போல தான். கரும்பிலிருந்து காமம் வரை விவாதிக்காத விசயங்கள் இல்லை.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல்லுகேற்ப நான் எவ்வளவு பிரச்சனையில் இருந்தாலும் நம்பிக்கையும் அவ்வபோது உதவியும் செய்து வருபவர்.

அந்த தம்பிக்கு தான் இன்று(7-11-2012) பிறந்த நாள்.

இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.

8 வாங்கிகட்டி கொண்டது:

அகல்விளக்கு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :-))

சங்கவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

தொழிற்களம் குழு said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

துளசி கோபால் said...

செல்வராஜுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

Alien A said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

முத்தரசு said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

வருண் said...

உங்க சகோதரர் செல்வத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

!

Blog Widget by LinkWithin