சீரியஸான கேள்விகளும் எனது புரிதல்களும்!

கேள்வி, பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது எனது தேடலை அதிகபடுத்தவேயன்றி நான் எல்லாம் அறிந்தவன் என பறைச்சாற்றி கொள்ள அல்ல என்பது அனைத்து நண்பர்களுக்கும் தெரியும். நான் எதிர்பார்த்த, எனது பழைய சிந்தனைகளை தூண்டிவிடக்கூடிய கேள்விகள் தம்மை வெளிபடுத்திக்கொள்ளா விரும்பாத ஒரு நண்பரிடம் இருந்து வந்திருக்கிறது, கேள்விகள் குறைவு தான் என்றாலும் அதன் தாக்கம் மிகப்பெரிது. எனது புரிதலை நான் எங்கே பதிவாக இடுகிறேன், உங்கள் புரிதல்களை பின்னூட்டமாகவே தேவைப்பட்டால் பதிவாகவோ இட உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
விவாதம் தெளிவுறவேயன்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல!

**********

கேள்வி 1)
படைப்புவாத கொள்கை - அடிப்படையில் அனைவரும் சமமே என்று கம்யூனிசம் பேசுகிறது
பரிணாமக் கொள்கை - "survival of the fittest" என்று படிநிலையை ஆதரிக்கிறது.
ஆனால் -- நிஜத்தில் மதவாதிகள் படிநிலையை ஆதரிப்பவர்களாகவும், பரிணாமவாதிகள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களாகவும் இருக்கும் முரணின் மர்மம் என்ன ?? - இது விவாதத்துக்கு


அருமையான கேள்வி!, என்னை பலமுறை தூண்டிய கேள்வியும் கூட!
உயிரினங்கள் அனைத்தும் ஒரே கடவுளால் படைக்கபட்டதென்றால் அங்கே ஏற்ற தாழ்வே இல்லை.
பரிணாமத்தின் படி உள்ளது சிறத்தல் என்றால், நான் உன்னை விட சிறந்தவன் என காட்ட பரிணாமம் பயன்படுகிறது என்பது பொது புத்தியில் விழைந்த விதியாகவே எனக்குப்படுகிறது!


பரிணாம கோட்பாட்டின் படி மனிதனும் ஒரு விலங்கே, டார்வீனிஷ கோட்பாடு தம்மை உயிர்புடன் காத்துக்கொள்ளவும் மேலும் தம் சந்ததியினரை காப்பாற்ற அது செய்யும் வேலைகளையும் வைத்து சிறந்தது(நீண்ட காலம்) வாழும் என வகுத்தார்.


அவர் அதைசொல்லும் பொழுது உலகில் நிலபிரபுத்துவ ஏகாதிபத்தியம் நிலவிகொண்டிருந்தது. நாடு பிடித்தல் அல்லது புதிய தளங்களை கண்டுபிடித்தல் என எல்லா நாட்டினரும் முயற்சித்து கொண்டிருந்தனர். ஆம் நாம் சிறந்தவர்கள் என காட்டாவே அந்த சிரத்தை. நாகரீக உலகில் நாகரிக மற்ற மக்களை பழங்குடியினர் என பட்டம் கட்டி அவர்களை அடிமைகளாக வைத்திருந்தது நிலபிரபுத்துவத்தின் பார்பனீய கோட்பாடே தவிர பரிணாமத்தின் தவறல்ல.




அன்று கறுப்பினத்தவன் மற்றும் போரில் தோற்றவர்கள் அடிமைகளாக கருதப்பட்டார்கள். ஒன்று நிலபிரபுத்துவம் மன்றொன்று அதிகாரமையம், இரண்டும் பார்பனீயத்தின் கிளைகள் தான். அனைவரும் சமம் என்ற வார்த்தை அவர்களை அடிமைகளோடு சேர்ந்து அமரச்சொன்னது போல இருந்தது, உண்மையில் அடிமைகளாக யாரையும் நடத்தாதே எனத்தான் உண்மையான கம்யூனிசம் சொன்னது.


ஆபிரஹாம மதஅடிப்படையில் மனிதர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாள் மூலம் பிறந்தவர்கள் என்றே வைத்து கொள்வோம், இன்று ஏன் பிரிவினை. நெற்றியில் இருந்து பிறந்தவன் பிராமணம், சூத்திரன் காலில் இருந்து வந்தவன் என்றால் எங்கே அனைவரும் சமம் என்ற கோட்பாடு.


அதுவல்ல நான் சொன்னது, அடிப்படை இந்துஞானமரபு பற்றி நீங்கள் பேசூவீர்களேயானால் அது பற்றி படுத்த பதிவில் விவாதிப்போம்!

*****

கேள்வி 2)
கடவுள் இல்லை என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்பும், இன்னும் அறிய விரும்புகிறேன், விவாதிக்கலாம் என்று ஒவ்வொரு பதிவின் முடிவிலும் போடும் டிஸ்கி யின் அர்த்தம் என்ன? இல்லாத கடவுளுக்கு நீட்சி ஏதும் உண்டா என இன்னும் தேடுகிறீர்களா ?

தேடல் முடியுறா இன்பம், அதன் பொருட்டே அறிய விரும்புகிறேன் என விவாதத்திற்கு அழைப்பது, என்று நீ கற்பதை என்று நிறுத்துகிறாயோ அன்று பிணத்திற்கு சமமாவாய் என என் தந்தை(அய்யம்பேட்டை அறிவுடை நம்பி இல்லங்க) அடிக்கடி சொல்லுவார், சாவிற்கு முதன் நாள் சாக்ரடீஸ் அவரது நண்பர்களுடன் புதிதாய் ஒரு விசயத்தை எடுத்து விவாதித்தாராம்.




கடவுள் என்ற பதம் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உருவம் உண்டு, உருவம் இல்லை, இயற்கையே கடவுள், உலகம் உருவாக கடவுள் என்ற பதம் தேவையில்லை, அப்படியே கடவுள் இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை என்று ஒரு கூட்டம் என பல பிரிவுகள்.


கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?


ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!


நீங்கள் கேட்ட கடவுளின் நீட்சி எதை வைத்து என எனக்கு புரிகிறது, அன்பே சிவம் படத்தில் கமலால், மாதவன் கடவுள் என்று அழைக்கப்படுவார் அதுப்போலத்தானே :), சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை!


**********

கேள்வி 3)
பரிணாம தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்லருக்கு, யூதர்களை கொன்றது மிகவும் நியாயமாக பட்டதாம். --- ஏனென்றால் பரிணாமக் கொள்கையின்படி ஹிட்லர் தன்னையும் தன் கும்பலையும் மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டதால். அது உண்மையெனில்........பரிணாம தத்துவம் மனிதர்களின் எண்ணங்களில் .....மனிதத்தை வளர்க்குமா ???? ---இதுவும் விவாதத்துக்கு.


ஹிட்லர் பற்றிய வரலாற்று குறிப்புகள் அறிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள், ஹிட்லர் சிறுவயதில் தன் தந்தையால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டவர், இவரது தந்தை ஒரு யூதர் என்ற செய்தியும் உண்டு, ஹிட்லர் ஜெர்மனியை சேர்ந்தவர் அல்ல, ஆஸ்டிரியாவில் பிறந்தவர், சிறு வயதில் Protestantism வகையை சேர்ந்த கிறிஸ்தவர்களின் போதனைகளால் யூதர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என உருமாற்றப்பட்டவர். முக்கியமாக புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.(பின்னாளில் அவரே கிறிஸ்துவத்தையும் எதிர்த்தார்)


ப்ழைய ஏற்பாடு என்னும் கிறிஸ்துவ புத்தகம் இன்று கிறிஸ்தவர்கள் கையில் இருந்தாலும் அதிலிருப்பவற்றை பின்பற்றிவதில் அவர்களுக்கு பல குழப்பங்கள் உண்டு, விருத்தசேதனம் என்னும் ஆண்குறி முன்தோல் நீக்குதல் அதில் தான் உண்டு,(குரானில் இல்லை) பின்னாளில் இயேசிவின் மறைவுக்கு பின் தொகுக்கபட்ட புதிய ஏற்பாடு கிறிஸ்துவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தது, இயேசு யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டதால் யூதர்கள் அன்று கிறிஸ்தவர்களுக்கும் பின்னாளில் இஸ்லாமியர்களுக்கும் எதிரிகள் ஆனார்கள்.


ஹிட்லர் முதலாம் உலகப்போரில் தாமாகவே முன் வந்து பணியாற்றினார், அப்போது கிடைத்த புகழினால் at wolf என ஜெர்மனியில் குறிக்கும் அடால்ஃப் என்று தம்மை அறிவித்து கொண்டார் அதாவது தம்மை ஒரு ஓநாய் என்று, இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஹிட்லர் என்றால் மேய்ப்பாளர் அல்லது காப்பாளர் என்றூ பொருள், ஒரே பெயரில் முரண்பட்ட இரு கருத்துகளை கொண்டவர் தான் ஹிட்லர்!




தாம் மேலானவர்கள் என்ற ஆரிய தத்துவம் அவரை ஈர்த்தது, ஹிட்லர் ஒரே சமயத்தில் முதலாளித்துவத்தையும், மார்க்சியத்தையும் எதிர்த்தார், யூதத்தலைவர்களால் சோசலிசம் பாதிக்கபடுவாதக கூறிய ஹிட்லர் யூதர்கள் வாழ தகுதியற்றவர்கள் அதாவது உடல் ஊனமுற்றவர்கள் போல் கடவுளின் சாபக்கேடுகள் என வர்ணித்தார், டார்வினசத்தை அவர் அறிந்திருக்கவில்லை ஆனால் உள்ளது சிறக்கும் என்ற தத்துவத்தை அறிந்திருந்தார் என வேண்டுமானால் சொல்லலாம்!, யூதர்களின் மேல் அவருக்கு திணிக்கபட்ட வெறுப்பால் தான் அவர் யூதர்களை கொடுமைபடுத்தினார், அங்கே டார்வீனிசம் வரவில்லை, மதமே காரணமாக இருந்தது.


பரிணாமம் கடவுள் என்ற கோட்பாட்டை மட்டும் எதிர்ப்பதில்லை, கடவுள் பெயரால் ஏற்படும் கலவரங்கள் மற்றும் சொர்க்கம், நரகம் போன்ற மூட நம்பிக்கைகளையும் எதிர்கிறது, எனது பரிணாம பதிவில் நான் ஏற்கனவே கூறியிருப்பதைப்போல் நிலநடுகோட்டுக்கு அருகில் வாழ்ந்த மக்கள் கறுப்பினத்தவர்களாகவும், மேற்கத்திய மக்கள் வெள்ளையர்களாகவும் மாற இயற்கை அமைப்பே காரணம், ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாற ஏற்படும் நிகழ்தகவை பரிணாமம் அழகாக விளக்குகிறது, அவை எங்கேயும் ஒன்றை விட ஒன்று சிறந்தது என சொல்லவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவம் உண்டு என்றே சொல்கிறது, பரிணாமம் நிச்சயம் மனிதத்தை வளர்க்கும்!

********

கேள்வி 4)
மனிதர்கள் ரகசியமாகவேனும் மனதுக்குள் தன்னை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்வதன் - மனோவியல் சார்ந்த _ காரணம் என்ன ??

தீர ஆராய்ந்தால் இச்சிந்தனை நமக்கு திணிக்கப்பட்டவை என்பது விளங்கும், சிறு வயதிலிருந்து நம்மை சுற்றியுள்ளோர் நம்மை உயர்ந்தவனாகவும், புகழ் உச்சாணியை அடைய வேண்டும் என்று திணித்தே நம்மை வளர்க்கிறார்கள், அசம்பாவிதமாக ஒரு சிலர், குழந்தைகளை சிறுமைபடுத்தி தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி தம்மை என்றும் மற்றவர்களை விட குறைவான திறன் உள்ளவர்கள் என்று நினைக்க வைக்கிறார்கள்!




நான் எப்போதும் சொல்வேன், நான் முடியாது என்று சொல்வது கிடையாது, தெரியாது என்று வேண்டுமானால் சொல்வேன், இவ்வுலகில் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவனால் செய்ய முடிந்த காரியத்தை எனக்கு செய்யத்தெரியாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக செய்ய முடியாமல் இருக்காது. முயற்சியின்றி முடியாது என்போர் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அவர்கள் தம் நம்பிக்கையையை வளர்த்து கொள்ள இனி முடியாது என வார்த்தையை பயன்படுத்தாமல் தெரியாது, ஆனால் சொல்லிக்கொடுத்தால் செய்வேன் என்றால்.............


உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள்ளும் இருக்காது!

********

உங்களது கேள்விக்கான எனது புரிதல்களை பதில்களாக அளித்துள்ளேன், ஹிட்லர் பற்றிய தகவல்களில் சில வரலாற்று பிழை இருக்கலாம், தெரிந்தவர்கள் சொன்னால் திருத்தி விடுகிறேன். மேலும் இம்மாதிரியான கேள்விகள் எனக்கு புதிய அனுபவங்களை கொடுப்பதால் உங்களிடமிருந்து இம்மாதிரியான மற்றும் தர்க்கம் சார்த்த எந்த கேள்வியாகினும் என்னை செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்கிறேன்!

25 வாங்கிகட்டி கொண்டது:

Radhakrishnan said...

உங்கள் புரிதல்களில் இருந்து எனது புரிதல்கள்.

//உயிரினங்கள் அனைத்தும் ஒரே கடவுளால் படைக்கபட்டதென்றால் அங்கே ஏற்ற தாழ்வே இல்லை.//

இதை எப்படி நிரூபிப்பது என்பது புரிய இயலாத ஒன்று. ஒரு தாய், ஒரு தந்தை என இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஏற்ற தாழ்வுகளுடன் இருப்பதில்லையா?

//சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை//

தர்மமும் இல்லை, கடமையும் இல்லை. அது உதவி.

//பரிணாமம் கடவுள் என்ற கோட்பாட்டை மட்டும் எதிர்ப்பதில்லை, கடவுள் பெயரால் ஏற்படும் கலவரங்கள் மற்றும் சொர்க்கம், நரகம் போன்ற மூட நம்பிக்கைகளையும் எதிர்கிறது, பரிணாமம் நிச்சயம் மனிதத்தை வளர்க்கும்!//

எதிர்ப்பது எதையும் எளிதாக அனைத்தையும் வளர்ப்பது இல்லை. பரிணாமம் மட்டும் தான் மனிதத்தை வளர்க்குமா? மதங்களும் மனிதம் வளர்க்கும்.

//முயற்சியின்றி முடியாது என்போர் தன்னம்பிக்கை குறைந்தவர்கள்//

முயற்சிக்காமல் முடியாது என தன்னைப் பற்றி தெரிந்து கொண்டு சொல்பவர்கள் புத்திசாலிகளாக இருக்கலாம்.

நன்றி அருண்.

வால்பையன் said...

//உயிரினங்கள் அனைத்தும் ஒரே கடவுளால் படைக்கபட்டதென்றால் அங்கே ஏற்ற தாழ்வே இல்லை.//

இதை எப்படி நிரூபிப்பது என்பது புரிய இயலாத ஒன்று. ஒரு தாய், ஒரு தந்தை என இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஏற்ற தாழ்வுகளுடன் இருப்பதில்லையா? //

எதில் நீங்க ஏற்றதாழ்வு பார்ப்பீர்கள், உருவத்திலா, குணத்திலா அல்லது குறையிலா, பதிவிலேயே சொல்லியிருக்கேன், பரிணாமம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிதன்மை உண்டு என்றே சொல்கிறது தவிர நீ பெருசு நான் சிறுசு எனச்சொல்வதில்லை!

//சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை//

தர்மமும் இல்லை, கடமையும் இல்லை. அது உதவி. //

உதவுவதற்கு பெயர் உதவி என்று எனக்கும் தெரியும், ஆனால் அதை தர்மமாக கொள்ளலாகாது, கடமையாக கொள்ள வேண்டும் என்பது என் கருத்து :)

//பரிணாமம் கடவுள் என்ற கோட்பாட்டை மட்டும் எதிர்ப்பதில்லை, கடவுள் பெயரால் ஏற்படும் கலவரங்கள் மற்றும் சொர்க்கம், நரகம் போன்ற மூட நம்பிக்கைகளையும் எதிர்கிறது, பரிணாமம் நிச்சயம் மனிதத்தை வளர்க்கும்!//

எதிர்ப்பது எதையும் எளிதாக அனைத்தையும் வளர்ப்பது இல்லை. பரிணாமம் மட்டும் தான் மனிதத்தை வளர்க்குமா? மதங்களும் மனிதம் வளர்க்கும். //

ஆண்டாண்டுகாளமாக பல மதங்கள் தான் வளர்ந்து கொண்டு இருக்குறது, இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் பெளத்தம் இல்லை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துவம் இல்லை, ஆயிரத்து நானுறு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் இல்லை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சீக்கியம் இல்லை.

ஆனால் மனிதம் பரிணாமத்தால் வளர்ந்து கொண்டேத்தான் இருக்கிறது.

//முயற்சியின்றி முடியாது என்போர் தன்னம்பிக்கை குறைந்தவர்கள்//

முயற்சிக்காமல் முடியாது என தன்னைப் பற்றி தெரிந்து கொண்டு சொல்பவர்கள் புத்திசாலிகளாக இருக்கலாம். //

நான் புத்திசாலி இல்லை, ஒத்துகிறேன் :) .

நிகழ்காலத்தில்... said...

\\கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?\\


கண்டிப்பாக தேவை அருண். ஆனால் அந்த கடவுள் எது? உங்களுக்கு தெரியாதது அல்ல., இயற்கை விதிகளே கடவுள். அவற்றை மதித்து வாழ்ந்தால் போதும்., அப்ப உருவ வழிபாடு பொய்யா என்றால்இயற்கை விதிகளை மதித்து வாழ்ந்து பார்த்தால் புரியத் தொடங்கும். அதற்கு முதலில் மனதில் ஏற்புத்தன்மை வேண்டும்.

உடலை மனதை நலம் பேணும் செயல்கள் இயற்கைவிதிகள் என வைத்துக்கொள்ளுங்கள்.


\\ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!\\

முடியும். என்ன சம்பந்தம் என்றால் தாய் பிள்ளை உறவுதான்:)

ஒருவயது குழந்தை மெள்ள எழுந்து நடக்க ஆரம்பிக்கும். சுயமாக அது நடக்கும். ஆனால் தான் சுயமாக நடக்கிறோம் என்ற உணர்வு இருந்தோ அல்லது இல்லாமலோ தாயின் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டு நடக்கும்.

இது ஒரு மனோரீதியான ஆதரவு, தாய்பிள்ளை உறவின் நெருக்கம், மனதிற்கான ஆறுதல். பிடிவாதமாக தனியே நடப்பேன் என்பது தவறேதுமில்லை :))

சார்வாகன் said...

நண்பர் வால் பையன் நல்ல புரிதல்கள்.சில பகிர்தல்கள்.

பரிணாம் கொள்கை என்பது மனித் சமுதாய‌த்தின் வாழ்வியலை விள்க்குகிறது,வரையறுக்கிறது என்பதில் நம்க்கு மாற்று கருத்து இல்லை.

பரிணம்த்தின் படி உயர்வு தாழ்வு என்று கூற முடியாது.ஒவொருவருக்கும் அவன் உயர்ந்தவன்.ஆகவே ஒவ்வொரு மனிதனும்(உயிர்) சூழலுக்கு ஏற்க தன்னை மாற்றி வாழ,இனவிருத்தி செய்யவே செய்கிறான்.இதில் சுயநலம்,போட்டி என்பது தவிர்க்க இயலாதது.மனிதர்கள் குழுவாக இயங்கும் போது (சில)சுயநலன்கள் பொது நலத்திற்காக் விட்டுக் கொடுக்கப் பட்டால் மட்டுமே இயங்க முடியும்.

(மனித்) குழுவிற்குள் ஒற்றுமை,வெளியே போட்டி என்பதும் இயல்பே
ஆகவே பரிணாமம் என்பது பொது உடமைத் தத்துவத்தை ஆமோதிக்கிறதா என்பதுஎன் நெடுநாள் கேள்வி.

அதாவது மார்க்க்ஸ் கொளகைப்படி அனைத்து தொழிலாளர்களும் ஒரு குழுவாக தங்களுக்குள் ஒற்றுமை+ஒடுக்கும் வர்க்கத்தின் மேல் உரிமை போராட்டம் என்றால் பரிணாமம் பொது உடமைத் தத்துவத்தை ஆதரிக்கிறது எனலாம்.

ஆனால் இனம், மொழி,மதம்,சாதி என்ற குழுக்கள் தங்களுக்குள் போராடும் போது பரிணாமம் பொது உடமைத் தத்துவத்தை எதிர்க்கிறது.

ஆகவே குழுக்கள் உருவாகும் சூழலுக்குஏற்ப‌ கூற முடியுமே தவிர பொதுவாக கூற இயலாது!!!!!!!!!!

.நன்றி!!!!!!!!!!!!!!

Riyas said...

இரண்டாவது கேள்விக்கான பதில் புரியவில்லை குழப்புகிறீர்கள்..

கடவுள் இல்லை என முடிவு செய்துவிட்டால் முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டியதுதானே.. எதற்காக தேடனும்,

அப்போ ஒருவேளை இருக்கலாம்..என்ற நம்பிக்கையா..?

Riyas said...

//பரிணாமம் நிச்சயம் மனிதத்தை வளர்க்கும்!//

மனிதத்தை வளர்க்க பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ, கடவுளை நம்பவேண்டுமென்றோ கட்டாயம் எதற்கு?

மனதின் ஓரம் கொஞ்சம் மனிதநேயமும் எல்லோரும் நம்மைப்போன்ற மனிதர்களே என்ற எண்ணம் இருந்தாலே போதும்..

வால்பையன் said...

Riyas said...
இரண்டாவது கேள்விக்கான பதில் புரியவில்லை குழப்புகிறீர்கள்..

கடவுள் இல்லை என முடிவு செய்துவிட்டால் முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டியதுதானே.. எதற்காக தேடனும்,

அப்போ ஒருவேளை இருக்கலாம்..என்ற நம்பிக்கையா..?//


ரியாஸ், எனக்கு தெரியும் அப்படி ஒன்று இல்லையென்று,


உம்மை விவாதததுக்கு அழைக்கவே இந்த பதிவு!

வால்பையன் said...

Riyas said...
இரண்டாவது கேள்விக்கான பதில் புரியவில்லை குழப்புகிறீர்கள்..

கடவுள் இல்லை என முடிவு செய்துவிட்டால் முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டியதுதானே.. எதற்காக தேடனும்,

அப்போ ஒருவேளை இருக்கலாம்..என்ற நம்பிக்கையா..?//


ரியாஸ், எனக்கு தெரியும் அப்படி ஒன்று இல்லையென்று,


உம்மை விவாதததுக்கு அழைக்கவே இந்த பதிவு!

Riyas said...

மொத்தத்தில் கடவுளை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் மனிதநேயமில்லா காட்டுமிராண்டிகள்,

கடவுளை ஏற்காதவர்கள் மட்டும்தான் மனிதத்தை வளர்ப்பவர்கள் என்கிறீர்களா..

இதற்கான உங்கள் அலவுகோள் என்ன என அறிந்துகொள்ளலாமா..அல்லது இது உங்கள் தனிப்பட்ட கருத்துமட்டும்தானா..?

மதவாதிகள் குண்டு வைக்கிறார்கள், அதனால் கடவுளை ஏற்பவர்கள் அனைவரும் மனிதநேயமில்லாதவர்கள் என்ற டெம்பிளேட் பதில் வராது என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//
மனிதத்தை வளர்க்க பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ, கடவுளை நம்பவேண்டுமென்றோ கட்டாயம் எதற்கு?

மனதின் ஓரம் கொஞ்சம் மனிதநேயமும் எல்லோரும் நம்மைப்போன்ற மனிதர்களே என்ற எண்ணம் இருந்தாலே போதும்..//

நண்பர் ரியாஸின் கோட்பாடு மிகவும் எளிதாகவே இருக்கிற மாதிரி தெரிகிறது.

பெரும்பாலான நேரங்களில் சாதாரண மனிதர்கள் கடவுள் பற்றிய நினப்பே இல்லாமலும்,பரிணாமம் என்றால் என்ன என்ற அரிச்சுவடி கூட அறியாமலே மனித நேயத்துடனே இருக்கிறார்கள்.

shiva said...

LOOADA NEE..EPPO PARTHALUM SAATHI SAATHI..MUTTAL

Dr.Dolittle said...

கேள்வி 3)
பரிணாம தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்லருக்கு, யூதர்களை கொன்றது மிகவும் நியாயமாக பட்டதாம். --- ஏனென்றால் பரிணாமக் கொள்கையின்படி ஹிட்லர் தன்னையும் தன் கும்பலையும் மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டதால். அது உண்மையெனில்........பரிணாம தத்துவம் மனிதர்களின் எண்ணங்களில் .....மனிதத்தை வளர்க்குமா ???? ---இதுவும் விவாதத்துக்கு.

எனக்கு மனதில் பட்ட பதில் :
எந்த ஒரு race அடக்குமுறைக்கு உட்படுகிறதோ , அந்த இனம் பரிணாமத்தின் படிக்கட்டுகளில் வேகமாக முன்னேறும் என்பது நிரூபிக்க பட்ட உண்மை . hitler ஆல் அடக்குமுறைக்கு உட்படுத்த பட்ட யூத இனம் பரிணாமத்தின் படிக்கட்டுகளில் வேகமாக முன்னேறி iq வில் உலகின் முதல் இடத்தில உள்ளது, உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் அனைவரும் யுதர்கள் .
நமது கண் முன்னே யூதர்களுக்கு அடுத்து ஒரு இனம் இனம் பரிணாமத்தின் படிக்கட்டுகளில் வேகமாக முன்னேறி iq வில் இரண்டாம் இடைதிர்க்கு விரைந்து கொண்டு உள்ளது , அந்த இனத்தின் பெயர் " ஈழத்தமிழர்கள் ".

Thuvarakan said...

this post was superb.... its gives ans for lots of questions

phantom363 said...
This comment has been removed by the author.
phantom363 said...

ஹிட்லர் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர். இதனால் நடுத்தர வகுப்பினரால் இவரை ஏற்றுக்கொள்ளமுடிந்தது.

http://educationforum.ipbhost.com/index.php?showtopic=8945

vanila said...
This comment has been removed by the author.
vanila said...

//நான் எப்போதும் சொல்வேன், நான் முடியாது ********இருக்காது.//

நீண்ட நாட்களுக்கு பிறகு அருண் back to form .

Vadakkupatti Raamsami said...

என் கேள்விக்கு பதில் சொல்லுங்க வால்பையன்(சும்மா பீ ஜே லிங்கை ஹோம் வொர்க் கொடுக்க வேணாம்)
*************************************
ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!
அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா?

naren said...

கடந்த பதிவிலிருந்து அனைத்து கேள்விகளுக்கு சரியாக பதில் எழுதியதால். நீங்கள் distinctionல் பாஸ், first rank.

இன்னும் அடுத்த வகுப்பிற்கு சென்று தொடருங்கள்.

dondu(#11168674346665545885) said...

//ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!
அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா?//

கசப்பானாலும் அதுதான் உண்மை. வேறு வழியில்லை. மோசஸின் தந்தை தனது அத்தையைத்தான் மணம் புரிந்ததாக பழைய ஏற்பாடு கூறுகிறது. பார்க்க: http://bible.cc/exodus/6-20.htm

நடத்தை விதிகள் மோசஸ் காலத்துக்கு அப்புறம்தான் வந்தது. அதற்கு என்ன இப்போது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சொறியார் said...

நடத்தை விதிகள் மோசஸ் காலத்துக்கு அப்புறம்தான் வந்தது. அதற்கு என்ன இப்போது?////
.
.
இப்போ கள்ளநோட்டு அடிப்பது சட்டவிரோதம் என ஒரு சட்டம் இயற்றப்பட்டது!அது இயற்ற படுவதற்கு முன்பில் இருந்தே கள்ள நோட்டு அடிப்பவர்கள் உண்டு!ஆக அந்த சட்டம் இயற்றுவதற்கு முன் அடித்த கள்ள நோட்டுகள் செல்லும் என அறிவிப்பது போல உள்ளது நீங்க சொல்வது!

dondu(#11168674346665545885) said...

கள்ள நோட்டுகள் என்ன, சரியான நோட்டுகள் கூட ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து செல்லாது என அரசு அறிவிக்க இயலும்.

ஆனால், அதே சமயம் அந்த அறிவிப்புக்கு முன்னால் சம்பந்தப்பட்ட நோட்டுகளை வைத்து செய்யபட்ட வியாபாரங்கள் செல்லாது என யாரும் கூற முடியாது. அதே போலத்தான் மோசஸ் விதிமுறைகளுக்கு முன்னால் பாவிக்கப்பட்ட பொருந்தா திருமணங்களை இப்போது செல்லாது என அறிவிக்க இயலாது. இனிமேல் அவ்வாறு செய்யமுடியாது என்பது மட்டுமே உண்மை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

aotspr said...

மிகவும் நல்ல கேள்விகளும் .....புதிரான பதில்களும்.....

"நன்றி,
கண்ணன்

http://www.tamilcomedyworld.com"

மனித புத்திரன் said...

ஆனால், அதே சமயம் அந்த அறிவிப்புக்கு முன்னால் சம்பந்தப்பட்ட நோட்டுகளை வைத்து செய்யபட்ட வியாபாரங்கள் செல்லாது என யாரும் கூற முடியாது. அதே போலத்தான் மோசஸ் விதிமுறைகளுக்கு முன்னால் பாவிக்கப்பட்ட பொருந்தா திருமணங்களை இப்போது செல்லாது என அறிவிக்க இயலாது. இனிமேல் அவ்வாறு செய்யமுடியாது என்பது மட்டுமே உண்மை.
///
.
.
அதெல்லாம் குழப்ப பயன்படுத்தலாம்!உண்மை என்னவெனில் அந்த காலத்தில் வாழ்ந்த சபல புத்தி ஆண்கள் தங்கள் விருப்பம் போல கணக்கில்லா மனைவிகள் விருப்பம்போல வாழ்ந்துகினு வாழ்ந்தனர்!ஆனால் நமக்கு பின் யாரும் இப்படி இருந்து விட கூடாது என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு கேள்வியாக இறைவனிடம் கேட்பது போலவும் அதற்கு இறைவன்(??!!உண்மையில் இவுன்களே) பதில் சொல்வது போலவும் அமைத்தனே!அவ்வளவே!

Unknown said...

மிகவும் அருமையான பதிவு. நன்றி வாழ் பையன். இது தான் முதல் தடவை. தொடர்ந்து படிக்கிறேன்

!

Blog Widget by LinkWithin