தத்துவம்!

நீண்ட நாள் கழித்து தன்னிச்சையான என் பதிவு, நேற்றே எழுத வேண்டுமென்றிருந்தேன் வேறு ஒரு உறவினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எழுதமுடியவில்லை. மேலும் கிட்டதட்ட ஒரு வருடம் என்மைக்குண்டான தனித்துவ பதிவுகள் எதுவும் எழுதாததால் நிறைய பதிவுகள் பாதி எழுதி எனக்கே பிடிக்காமல் கிடப்பில் கிடக்கிறது. இன்று எழுதியே தீருவது என முடிவு செய்து விட்டேன்.

நான் ஏற்கனவே பலமுறை சொன்னது தான், எனது பதிவுகள் அனைத்தும் எனது புரிதல்கள் மட்டுமே, இறுதி தீர்ப்பு அல்ல, விவாதம் தெளிவுறவே அன்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல!

பேஸ்புக்கில் நடந்த தத்துவம் பற்றிய விவாதம் குறித்து தான் இந்த பதிவே!

அதில் கணேஷன்னு ஒருத்தர் இருக்கார், போட்டோ இணைத்திருக்கிறேன். முதல் சந்தேகம் சாமியார்னா ஷேவிங் பண்ணக்கூடாதுன்னு எதாவது விதி இருக்கா? எனக்கு தெரிந்து பல சாமியார்கள் தாடியோயத்தான் இருக்காங்க. நித்தியானந்தா மாதிரி சில சாமியார்கள் தாடி, மீசை வச்சிகிறதில்ல ஒருவேளை கிஸ் அடிக்கும் போது குத்துதுன்னு கம்ப்ளைண்ட் வந்திருக்கலாம். அதை கிடப்பில் போடுவோம் இப்ப நம்ம மேட்டர் தத்துவம் பற்றி!


உயிரினம் என்பது கடவுளால் ஓவனில் வேகவைத்து அப்போதே எடுத்தாற்போல் இன்ஸ்டண்ட் படைப்பு என்பது சிலரது வாதம், பரிணாமம் பற்றி சில ஆதாரங்களை காட்டியவுடன் கடவுள் தானய்யா அதையும் செய்தார் என சிலரது வாதம். ஆனா பரிணாமத்துக்கும் பன்னி அவதாரத்துக்கும் இதுவரைக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு இன்னும் புரியல.

தத்துவம் என்பது என்ன?

தீர்வா?

கேட்டவுடன் ஏற்படும் கிளர்ச்சியா?

இல்ல, எனக்கு தோணுச்சு சொன்னேன்னு எடுத்துக்கலாமா?

முதலில் தத்துவம் என்றால் என்னான்னு பார்க்கலாம்.

//மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா, எது அழகு என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.//

இப்படி சொல்லியிருக்கு இந்த விக்கிபீடியா லிங்கில்

தத்துவம் நமக்கா தோணுதா அல்லது நமக்கு யாராவது சொல்றாங்களா?

கணேஷ் என்பவர் தத்துவம் பற்றிய வகுப்பு எடுப்பது பற்றி ஒரு ஸ்டேட்டஸ் போட, நான் தத்துவம் மனிதனுக்கு தேவையா என ஒரு கேள்வியை கேட்க பாண்டிசேரியில் இருக்கும் மோகன் என்பவர் ரெண்டு நாட்களாக என்னுடம் விவாதித்து கொண்டிருந்தார்.

என்னுடய கேள்வி, படிப்பறிவில்லாத எத்தனையோ பாமரர்கள் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள், அவர்களது அன்றாட வாழ்விற்கு எந்தவித தத்துவ ஞானமும் தேவைப்படவில்லை அப்படியிருப்பின் தத்துவம் என்பது மனிதகுலத்துக்கு மிக முக்கியமானது என சொல்வதற்கு என்ன காரணம் என்றேன்.

மேலும் தத்துவம் என்பது வேறொருவர் அனுபவம், அதை உங்களிடம் பகிர்கிறார். அப்படியாயின் அவர் கண்களால் நீங்கள் உலகை பார்ப்பது போலே தானே ஆகும், நீங்கள் உங்கள் உலகை எப்பொழுது பார்க்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு, எனக்கு ஏறிக்க ஒரு முதுகு வேணும் நானா நடக்க முடியாதுன்னுட்டார்!

இவ்விடத்தில் மிகமுக்கியமான ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். கருத்து பகிர்தலுக்கும், தத்துவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆகையால் ஒருத்தர் வாய் திறந்து சொன்னாலே அது தத்துமாகிவிடாது!

விக்கிபீடியா சொல்ற மாதிரி எங்கேயாவது தத்துவம் தர்க்கத்திற்குள்ளாக்கபடுதா?

சாமியார் காவி உடை உடுத்தி கொண்டு வலபக்கமும், இடபக்கமும் இரண்டு பிகர்களை நிறுத்தி கொண்டு காலையிலில் மனனம் செய்த ஜென் கதைகளை சொல்லி நம்மை வெறுப்பேற்றி கொண்டிருப்பார்(இடையில் புன்னகை வேறு, அந்த வாயை பார்த்தா வேற ஒண்ணு தான் நியாபகத்துக்கு வரும்).

ரொம்ப வேண்டாம்ய்யா, பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுதே சொன்னேங்களே, ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுன்னு, நியாபகம் இருக்கா இல்லையா?. அப்ப தத்துவம் உன்னிடம் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறாய்!.

தத்துவம் என்பது பொதுவானது, அது ஒரு சொல் மட்டுமே. அப்படியானால் மனித வாழ்க்கை பொது விதிகளுக்குள் கட்டமைக்கபட்டதா? உனக்கான வாழ்வை நீ வாழ வேண்டுமா? அல்லது தத்துவம் வாழுமா?

எனக்கு சரியென்று பட்டது உங்களுக்கு தவறென்றால் நான் தவறானவனா?
அப்படி பார்த்தால் நீங்களும் நிறைய மனிதர்கள் பார்வையில் தவறானவர்கள் தானே?

சொல்லுங்கள் தத்துவம் சொல்லும் கார்பரேட் சாமியார் தேவையா? அல்லது உங்கள் வாழ்கையை நீங்களே வாழ்ந்து பார்க்க ஆசையா?

**************

பேஸ்புக்கில் இருக்கும் கணேஷ் என்பவருக்கு இது எதிர் பதிவல்ல, தத்துவம் என்ற பதத்துக்கு என்னுடய கருத்து, விவாதம் அங்கே நடந்ததால் அவர் பெயரும் இடம் பெற்றுவிட்டது, இதற்காக அவர் வருந்தினால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், அந்த மன்னிப்பு அவர் வயசுக்கு தான் அவரது பிரம்மஸ்ரீ பட்டத்துக்கு அல்ல!

இம்மாதிரியான மக்களை முட்டாளாக்கும் பட்டங்களை நான் முழுமையாக எதிர்கிறேன்!

38 வாங்கிகட்டி கொண்டது:

கோவி.கண்ணன் said...

Well Said

மதுரை சரவணன் said...

தத்துவம் என்பது உண்மை தான் .. ஆனால் அது அவரவர் மனதை பொறுத்து அமைவது.. ஒருவருக்கு உண்மையாக இருப்பது மற்றொருவருக்கு மாறுபட்டதாக தோன்றலாம். அது அவரின் மனதின் தெளிவை பொறுத்து . ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நம் சிந்தனையின் முதிர்ச்சியை அல்லது அனுபவத்தின் தெளிவை பொறுத்தது என்பது என் கருத்து.

கல்வெட்டு said...

வால்,

தத்துவம் என்றால் என்ன என்பதை மட்டும் சொல்லிச் செல்கிறேன்.


தத்துவம் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் Philosophy . இதற்கு பல அர்த்தங்கள் Attitude ,Viewpoint
Idea,Thinking,Way of life,Value
Beliefs...

Philosophy- விக்கிபீடியா தகவல்....
Philosophy is the study of general and fundamental problems, such as those connected with existence, knowledge, values, reason, mind, and language.Philosophy is distinguished from other ways of addressing such problems by its critical, generally systematic approach and its reliance on rational argument.The word "philosophy" comes from the Greek φιλοσοφία (philosophia), which literally means "love of wisdom".


தத்துவம் என்ற‌ தமிழில் புழங்கப்படும் வார்த்தை குறித்தான எனது விளக்கம்:

வார்த்தைகளில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள அர்த்தங்களும், தற்போது வார்த்தைகளை உபயோகிப்பவர்களின் புரிதல்களும் கலந்துகட்டி பலவகையான குழப்பத்தைக் கொடுக்கும்.

தத்துவம் என்பது ஒரு செயல்/கருத்து/விமர்சனம்/நிகழ்வு அல்லது எதோ ஒன்றைக்குறித்தான ஒரு தனிப்பட்ட ஒருவரின் புரிதல் அல்லது புரிந்து கொண்டது.

தத்துவம் என்பதே தனித்துவம்.

அதாவது "ஒன்றின்" மீதான "தனி ஒருவரின்" "தனியான" பார்வை/கருத்து/விமர்சனம்/நிலைப்பாடு...etc



உதாரணம்...வாழ்க்கை என்பது குறித்தான எனது தத்துவங்களும் பிறரின் தத்துவங்களும் வேறுவேறாக இருக்கும்.

.

பொன் மாலை பொழுது said...

//சொல்லுங்கள் தத்துவம் சொல்லும் கார்பரேட் சாமியார் தேவையா? //

வால், இதுபோன்ற நடைமுறைகள் எல்லாம் சமீப நாட்களில் வந்த கிறுக்கு தனங்களே அன்றி இவையெல்லாம் அதிகம் படித்துவிட்டதாக ,அதிகம் பணம் சம்பாதிப்பதாக நினைத்துக்கொண்டு மனம் தடுமாறி நிற்கும் கூட்டங்கள் நிறைய உண்டு. இந்த கூட்டங்களின் அறிவின்மையை புரிந்து கொண்ட ஒருவன் அவர்களை ரட்சிக்க கிளம்பிவிடுவான்.

மற்றபடி தத்துவம்..... புண்ணாக்கு ஒரு மண்ணும்மில்லை. இதெல்லாம் இருபதாக நிறைய பேர் ஒரு உதார்விட்டுக்கொண்டு ...... காசு தான் எல்லாம் இவர்களுக்கு. தாடி எல்லாம் ஒரு அடையாளம்தான். நம்ம ஊரில் நரிகுறவர்கள் என்றால் கழுத்தில் பாசி மணிகள் இருக்குமில்லையா? அதுபோல தான் இதுவும்.

யோவ்..... ரொம்ப நாள் கழித்து வந்தீரே ஏதாவது சொல்லி சிண்டு முடியிறது உட்டுபுட்டு......................

சீனிவாசன் said...

என்னை கேட்டால் எந்த ஒரு தத்துவத்தையும் பற்றி கொள்ளாமல் இருப்பது சிறந்தது. எதையாவது பற்றிகொண்டு பின்னர் பற்றிகொண்டதை சரியென நிரூபிக்க போராடுவதை காட்டிலும்,தத்துவ துணையின்றி வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நினைப்பது சிறந்தது(இதுவும் கருத்து பகிர்வே!).

வருண் said...

***என்னுடய கேள்வி, படிப்பறிவில்லாத எத்தனையோ பாமரர்கள் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள், அவர்களது அன்றாட வாழ்விற்கு எந்தவித தத்துவ ஞானமும் தேவைப்படவில்லை ***

படிப்பறிவில்லாத பாமரர்கள்??? படித்தால்தான் அறிவு வருமா என்ன? உங்களுக்கு அவர்கள் படிப்பறிவில்லாத பாமரர்கள், உங்களை விட அதிகம் படித்தவருக்கு நீங்கள் அதே படிப்பறிவில்லாத பாமரர்தான்!

இதுதான் தத்துவம்.

தத்துவம் என்பது மனிதன் கற்றதிலிருந்து சொல்வது. கற்பனை உலகில் வாழ்வதல்ல! வாழ்ந்து தவறு செய்து உண்மையைக் கற்றுக்கொண்டு உலகுக்கு சொல்வது (இதுவரை அந்தத் தவறு செய்யாதவர்களுக்கு, செய்யப்போபவர்களுக்கு)

தத்துவம் எல்லோருக்குமே தேவை! படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும்தான்!

உங்க பிரச்சினை எனக்கு விளங்கவில்லைங்க, வால்! :)

கல்வெட்டு said...

//
வால்....
முதல் சந்தேகம் சாமியார்னா ஷேவிங் பண்ணக்கூடாதுன்னு எதாவது விதி இருக்கா? எனக்கு தெரிந்து பல சாமியார்கள் தாடியோயத்தான் இருக்காங்க. நித்தியானந்தா மாதிரி சில சாமியார்கள் தாடி, மீசை வச்சிகிறதில்ல ஒருவேளை கிஸ் அடிக்கும் போது குத்துதுன்னு கம்ப்ளைண்ட் வந்திருக்கலாம். //


கொளுத்திப்போடு வகையரா கமெண்ட்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (குறள் எண்: 280)

(மழித்தல் = மொட்டையடித்தல்; நீட்டல் = முடியை நீளமாக வளர்ப்பது)

என்று சொன்ன வள்ளுவரையே நாம் நீட்டலுன்தான் அடையாளப்படுத்துகிறோம். அவர் உண்மையில் எப்படி இருந்தர் என்று யாருக்குத் தெரியும். மேலும் அவர் துறவியல்ல சம்சாரி (வாசுகி) என்று நினைக்கிறேன்.

-----------------------


நம் தமிழ்நாட்டில் எல்லா டிசைன் சாமியார்களும் உண்டு. :-))

1. மழித்தலும் நீட்டலும் இல்லாத ஃச்மார்ட் கட்டிங்/சேவிங் சாமியார்: -> பங்காரு அடிகளார்

2. மழித்த சாமியார்: -> ஃச்வாமி ஓம்கார் அவர்கள்

3. நீட்டிய சாமியார்: -> சிரி சிரி ரவிசங்கர் மற்றும் நீங்கள் படமாகப் போட்டுள்ள பிரம்மசிரி கணேச்ஃ அவர்கள்.

4. முகம் மழித்து ஆனால் தலைமுடி மட்டும் நீட்டிய சாமியார்: -> நித்தியானந்தா அவர்கள்
------------------

உங்களுக்கு என்ன வெரைட்டி சாமியார் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

வருண் said...

சாமியாருக்கும் தத்துவத்துக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லைங்க! இவங்க ரெண்டு பேரையும் மிக்ஸ் பண்ணாதீங்க!

திருக்குளைக்கூட நீங்க தத்துவம்னு சொல்லலாம்.

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு னு சொல்றது பலருடைய அனுபவத்தில்தான். அது பொதுவாக உண்மைதான்.

வாய் பேச முடியாதவனுக்கு இந்த தத்துவம் எப்படி பொருந்தும்னு நம்ம விதண்டாவாதமும் பண்ணலாம்தான்!

ப.கந்தசாமி said...

தத்துவம் என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டிருப்பார்கள். நான் நினைப்பது - தத்துவம் என்பது ஒரு எண்ணங்களின் கோர்வை அல்லது நிலைப்பாடு.

மனிதன் பல தத்துவங்களை பலர் வாயிலாகக் கேட்டும் தன் சொந்த அனுபவங்களின் வாயிலாகவும் அறிந்திருந்தாலும் அவனுக்கென்று ஒரு கொள்கை கொண்டிருப்பான்.

அது அவன் பிறக்கும்போது அவனிடம் இருப்பதில்லை. மற்றவர்கள் கூறுவதைக் கேட்டுத்தான் அவன் இந்த நிலைப்பாட்டுக்கு வருகிறான்.

ஆகவே தத்துவம் எல்லோருக்கும் பொதுவான ஒன்று அல்ல. அவரவர்கள் நிலைக்கேற்ப உருவாகும் எண்ணத் தொகுப்பேயாகும்.

சார்வாகன் said...

நண்பரே நலமா!!!!
நல்ல பதிவு . தத்துவம் என்பதன் விள்க்கம் என்பது பல் பொருள் கொண்டது.பொதுவாக சொன்னால் பிறரின் அனுபவம்,சோதனைகளில் இருந்து பெற்ற கருத்து என கூறலாம்.

யார் அந்த பிறர் என்பதை சார்ந்தே அந்த தத்துவம் குறிப்பிட்ட சூழலில் பயன்படுமா என கொள்க!!!!!!!!!!.

ஆனால் எக்கால‌த்துக்கும்,எவ‌ருக்கும் பொருந்தும் ச‌ர்வ‌ ரோஹ‌ நிவார‌ணி த‌த்துவ‌ங்க‌ள் இருக்க‌வே முடியாது(இதில் உள் குத்து எதுவும் இல்லை).

இதுவும் த‌த்து(பித்து)வ‌மா?
ந‌ன்றி

rajamelaiyur said...

சரியா சொன்னிங்க

rajamelaiyur said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்... சரிதான் சொல்லுரீங்க

நெல்லை கபே said...

உங்கள் பதிவு பல எழுப்பிவிட்டது. அதை ஒரு பதிவாக இட்டிருக்கிறேன்.

வால்பையனின் 'தத்துவம்' - தொடர்புடைய எண்ணங்கள்!

நெல்லை கபே said...

உங்கள் பதிவு பல எண்ணங்களை எழுப்பிவிட்டது. அதை ஒரு பதிவாக இட்டிருக்கிறேன்.

வால்பையனின் 'தத்துவம்' - தொடர்புடைய எண்ணங்கள்!

கோவி.கண்ணன் said...

எனக்கு தெரிந்து தத்துவம் என்றால்

நடக்கக் கூடிய ஒன்று நடக்காது என்று தெரிந்து ஒரு முயற்சி என்ற அளவில் பரிந்துரைத்து சொல்லப்படுபவை தத்துவங்கள். அதாவது நடப்பு வாழ்க்கைக்கு முறைக்கு அறிவுரை என்ற பெயரில் இப்படி வாழ்ந்தால் நல்லா இருக்கும் என்கிற பரிந்துரைகள்

நான் சொல்வது ஆன்மிக தத்துவம் பற்றி.

இந்திரா said...

//ரொம்ப வேண்டாம்ய்யா, பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுதே சொன்னேங்களே, ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுன்னு, நியாபகம் இருக்கா இல்லையா?. அப்ப தத்துவம் உன்னிடம் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறாய்!.//


அப்டினா “ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது“ங்குறது தத்துவமில்லையா??? அடப்போங்கப்பா..

இந்திரா said...

//தத்துவம் சொல்லும் கார்பரேட் சாமியார் தேவையா? அல்லது உங்கள் வாழ்கையை நீங்களே வாழ்ந்து பார்க்க ஆசையா?//


இந்தப் பதிவு தத்துவத்திற்கு எதிரானதா? இல்லை தத்துவம் சொல்லும் சாமியார்களுக்கு எதிரானதா???

இந்திரா said...

தத்துவங்கள், சாமியார்கள் மட்டும் சொல்றதில்ல.. சராசரியான மனிதர்களும் சில சமயங்களில் பொழிகிறார்களே..
கருத்துக்களோ தத்துவங்களோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். பின்பற்றவேண்டுமென கட்டாயப்படுத்தாமல், அடுத்தவரை பாதிக்காதவரையிலும், அது அவரவர் சுதந்திரம். நமக்குப் பிடிக்கலேனா கேக்காம இருந்துக்கலாம்.

நா சரியா தான் பேசுறேனா??

நெல்லை கபே said...

அப்ப தத்துவம் உன்னிடம் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறாய்!//
பக்தியை தவிர்த்தவர்கள் உண்டு. தத்துவத்தை தவிர்த்தவர்கள் கிடையவே கிடையாது! தத்துவத்தின் காட்டத்தை தாங்க இயலாமல் பக்திக்கு மாறுவது பக்தர்கள்!

வருண் said...

***நா சரியா தான் பேசுறேனா??***

சரியாவா? நீங்கதான்க்கா பெஸ்ட்டு! :)
சாமியாரோட பிரச்சினைனா இவரு தத்துவத்தை கிண்டலைட்க்கிறாரு

"All generalizations are false including this one!" also a philosophical quote. it never goes wrong!

ராவணன் said...

நல்லா இருந்திச்சி........ஆனா நல்லாயில்ல...

இந்தப் பதிவில் நீங்கள் கூறுவதும் ஒரு தத்துவமே.

ஆமா.....தத்துவம் என்பது என்ன மொழி?

மொட்ட போட்ட ஆளா, தாடி வச்ச ஆளா, சடை போட்ட ஆளா, வேட்டி கட்டிய ஆளா,சிங்கப்பூரில் இருக்கும் ஆளா, இல்லை பங்குவணிகம் செய்யும் ஆளா என்று பார்ப்பதை விட நமக்குப் பிடித்தால் எடுத்துக்கொள்ளலாம்.

கருத்தைமட்டுமே எடுத்துக் கொள்ளலாம்,அப்படி கூறிய நபரை மறந்துவிடவேண்டும்.

இல்லாவிட்டால் நாம் யாருக்காவது அடிமைகளாகவே இருப்போம்.

இந்தத் தத்துவ மேட்டரே பல பதிவுகள் எழுதத் தூண்டும்.

நிகழ்காலத்தில்... said...

இத்தனை பேர் சொன்ன பின்னால நானும் கருத்து சொல்லிட வேண்டியதுதான்..:)


தத்துவம் என்பது பலர் அனுபவங்களின் வாயிலாக உணர்ந்த உண்மைகளை சூத்திரங்களாக சொல்லி வைத்ததுதான்.,

தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப தத்துவங்கள் பொருந்தாமல் போகும் வாய்ப்புகள் குறைந்த பட்சமே.,

ரொம்ப முக்கியமா தத்துவம் என்பது மனதை சமாதானப்படுத்த உதவும் சர்க்கரை மிட்டாய் அவ்வளவுதான். இந்த இனிப்பை கொடுத்து கொடுத்து அன்றாட வாழ்க்கையை தனக்குப்பிடித்த விதமாய் கொண்டு போக ஓரளவிற்கு உதவும்.,

தத்துவம் அவசியம் என்பவர்களுக்கு இது அவசியமே., ஆனால் இது இல்லாமல் வாழ முடியாதா என்றால் தத்துவங்களை தெரிக்ந்துகொண்டு அதை
புரிதலுடன் தாண்டி வாழ்வது சிறப்பே.,

ஆனால் எதுவுமே தெரியாமல் வாழ்வது தவறல்ல எனினும் இரண்டும் ஒன்றல்ல என்பதில் தெளிவாகுக...

நமது புரிதல் தத்துவங்களை புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, பின் உதறி வாழும் பக்குவத்தை மனம் பெறவேண்டும்.

புளியங்காய்க்கு மேல் ஓடு எதுவரை தேவை., புளியம்பழம் ஆகும்வரைதான்..

அதன் பின் அது தேவையற்றது. அதற்கு முன் அது தேவை., இங்கே என்ன சிக்கல் என்றால் நம்மாளுக புளியம்பழத்தை கடைசிவரை ஓட்டுடன் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பதுதான்...:)

தத்துவம் என்பது புளியம்பழஓடு..

நன்றி அருண்

வால்பையன் said...

தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஓஷோவிடம் ஒருமுறை ஒரு நண்பர் கேட்டாராம், உங்களுக்கு பிடித்தது மேலை நாட்டு தத்துவமா, கீழை நாட்டு தத்துவமா என்று,

அதற்கு ஓஷோ தத்துவமோ ஒரு டுபாக்கூர் அதில் மேலே என்ன கீழே என்ன என்றாராம்.

ஒஷோவிடம் பல விசயங்களில் நான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஒரு விசயத்தை நிறைய ரசிப்பேன், அது

ரோஜாவை ரோஜாவாகப்பார், அதை வேறொன்றிடம் ஒப்பிட்டாதே!

அது அவரது கருத்தாக தான் நான் எண்ணுகிறேன், இதுவும் தத்துவம்ன பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் சொல்ற மாதிரி வாயை திறந்தாலே அனைத்தும் தத்துவம் தான்.

விக்கிபீடியா, கல்வெட்டு என பல நண்பர்கள் தத்துவத்திற்கு மாறுபட்ட விளக்கங்கள் தருகிறார்கள். உங்கள் புரிதலில் தத்துவம் என்றால் என்னான்னு முதல்ல சொல்லுங்க விரிவாக அலசுவோம்!

naren said...

ஒன்றை புரிவதற்க்கு அதை முதலில் வரையறுக்க(define) வேண்டும். ஆனால் எதையும் முழுமையாக வரையறுக்க முடியாது என்பது “தத்துவம்”.

தத்துவம் என்றால் என்ன அதன் வரையறை என்ன என்று பதிவை படித்தால் பதிவும் ஒரு தத்துவம்தான்.

தத்துவத்தில் பயன்கள் உள்ளன. எந்த பொருளை பற்று தத்துவ ஆராய்ச்சி செய்கிறோமோ அந்த பொருளை மேமபடுத்த உதவும்.

பன்ச் டயலாக்காக..

தத்துவம் என்பது intellectual masturbation (அறிவுஜீவிகளின் செயற்கை தற்புணர்ச்சி).

அவ்வளவுதான்.

வால்பையன் said...

தத்துவம் என்பது intellectual masturbation (அறிவுஜீவிகளின் செயற்கை தற்புணர்ச்சி).//


அது தற்புணர்ச்சியா இருந்தா இந்த பதிவே இல்லை நண்பரே!

ஆனால் தத்துவம் சொல்றேன் என்ற பெயரில் நடக்கும் வியாபாரம், அனைவருக்கும் கைவேலை செய்து விடும் கேவலமாக தோன்றுகிறது அல்லவா!?

சூஃபி கதைகள் என்ன சொல்லதோ அதை தான் முல்லா கதை இன்னும் பிற கதைகள் என மாற்றி மாற்றி சொல்லி வருகிறார்கள்.

ஆனால் அதன் சாராம்சமே உன் வாழ்கையை நீ வாழ்ந்து பார் என்பது தானே!

உதராணத்திற்கு சொல்றேன், இங்கே போனால் இது கிடைக்கும்னு சொல்றாங்க, அது வாழ்க்கையா?

இந்த சுவிட்சை தட்டினால் இது நடக்கும் என்பதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம் நண்பரே!

வலியோ, சுகமோ அதை நாம் தான் உணரனும் என்பதே என் கருத்து!

Santhini said...

என்ன வால்? தத்துவமே வேண்டாம்னு சொல்றீங்களா? இல்ல மத்தவங்க சொல்ற தத்துவம் வேண்டாம், நானே கண்டு பிடிச்சுக்கிறேன்னு சொல்றீங்களா? நீங்களே கண்டுபிடிச்சு, ஒருநாள் உங்க மனசோடு பேசுவீங்க, ஒருவேளை அத நீங்க வெளில சொன்னா அதுக்கு மத்தவங்க கொடுக்கிற பேர் - தத்துவம். நீங்க சொல்லலேன்னாலும் அதுக்குப் பேர் தத்துவம்தான். :) ....இதிலேர்ந்து என்ன தெரியுது ???? யோசிச்சு வைங்க.

வருண் said...

Here are some 23-yr old kids discussing about philosophy. They need to wait and see what they think of what they said at the age of 60- by then they would have experienced more about life, lost lot of things they have today!

///Originally Posted by Germanic View Post
If the philosophy offers no practical utility, it is intellectual masturbation. Most of the topics you have started in the past month have absolutely no bearing on reality, no testability, and no utility, and are thereby meaningless, and serve only to give yourself a warm, fuzzy feeling inside. You're so proud of how enlightened you've become, aren't you?

No. In a number of threads regarding more philosophical concepts discussing our existence, I have read multiple posts saying philosophy is mere intellectual masturbation. No practical worth. It is useless.

These were threads I had no part of.


Read the OP. I believe all philosophy has essential practical purpose. Examining our lives and the way we live in, in the aim that we can improve them in ways that don't simply rely on external technologies, but internal ones. ///

Anyway, vaal, this is for the naren, the intellectual giant. Not for others! :)

வால்பையன் said...

@ வருண்

பலமுறை இந்த குழப்பமுண்டு, என்னை பற்றி நீங்கள் அறிவீர்கள், தொடர்ச்சியான ஆங்கில வார்த்தைகள் எனக்கு மயக்கம் தான் தரும்!

வேறு வழியில்லை என்றால் போன் பண்ணியாவது திட்டிடுங்க!

9994500540

வருண் said...

வால்,

ஆங்கில வார்த்தையை நரேன் தான் சொல்லி குழப்பத்தை ஆரம்பிச்சு இருக்காரு. என் பதில் ஆங்கிலத்தை ஆரம்பித்த அவருக்குத்தான். அவர் சொல்வதுபோல் அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே என் வாதம். உங்களை இங்கே நான் திட்டவில்லை! உங்க ஃபோன் # எனக்கு இப்போதைக்கு தேவையில்லை! Thanks, anyway! :-)

வால்பையன் said...

போன் பண்ணி உடனே விளக்கம் சொல்லனும்னு அவசியமிங்கண்ணா!

விசயம் என்னான்னு தெரிஞ்சா நாமலும் விவாவத்தில் கலந்துக்கலாம்னு ஒரு ஆர்வம் தான்!

வால்பையன் said...

அப்புறம் பாருங்க, அடுத்த போஸ்ட் போட்டு ரெண்டு மணி நேரம் ஆச்சு, அதை யாரு கண்டுகிட்டமாதிரி தெரியலையே!

வருண் said...

அந்தப் பதிவுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவங்க எல்லாம் வந்து உங்களூக்கு அறிவுரை வழங்குவாங்க. நமக்கு கடவுள் அவர் மேல் நம்பிக்கையை கொடுக்க மறந்துட்டாரு! அதனால கடவுளைப் பத்தி அவரோட தூதர்கள், அடியாட்கள் பத்தி எல்லாம் எதுவுமே புரியலை. எல்லாம் அவர் தப்புதான்.

நான் வரலைனாலும் உங்க கேள்விக்கு பதில் கெடைக்கப் போவதில்லை. அப்படியே பதில்னு ஏதாவது கெடச்சாலும் அதை உங்களால ஏற்றுக்க முடியாது. இது என் தத்துவம். உண்மையும்கூட!

வால்பையன் said...

நான் வரலைனாலும் உங்க கேள்விக்கு பதில் கெடைக்கப் போவதில்லை. அப்படியே பதில்னு ஏதாவது கெடச்சாலும் அதை உங்களால ஏற்றுக்க முடியாது. இது என் தத்துவம். உண்மையும்கூட! //

இது உங்கள் கருத்து உண்மையும் கூட, தத்துவத்திற்கு எதிர்கேள்வி கேட்க ஆன்மீகம் அனுமதிப்பதில்லை!

:)

வருண் said...

ஆன்மீகம்னா என்னனு எனக்கு இன்னும் புரியலையே. அப்படினா என்னனு சொல்லுங்க, வால். அனேகமா உங்களுக்கும் தெரியாதுனு நெனைக்கிறேன்.

எதிர் கேள்வி எல்லாத்துக்குமே கேட்கலாம். நிச்சயம் எந்தத் தத்துவத்துக்கும் எதிர் கேள்வி கேட்கலாம்.

வால்பையன் said...

ஆன்மீகம்னா என்னனு எனக்கு இன்னும் புரியலையே. அப்படினா என்னனு சொல்லுங்க, வால். அனேகமா உங்களுக்கும் தெரியாதுனு நெனைக்கிறேன்.

எதிர் கேள்வி எல்லாத்துக்குமே கேட்கலாம். நிச்சயம் எந்தத் தத்துவத்துக்கும் எதிர் கேள்வி கேட்கலாம். //

என்னை ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்கிங்க!

ஆன்மீகம்னா என்ன எழவுன்னு எனக்கும் புரியல!

ஆன்மீக கூட்டம்னு போய் சும்மா உட்கார்ந்துகிட்டு வர்றாங்க, அதுக்கு அதை விட கம்மியா காசு கொடுத்து சினிமாவுக்கு போகலாம்கிறது என் கருத்து!

வவ்வால் said...

//தத்துவம் என்ற‌ தமிழில் புழங்கப்படும் வார்த்தை குறித்தான எனது விளக்கம்:

வார்த்தைகளில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள அர்த்தங்களும், தற்போது வார்த்தைகளை உபயோகிப்பவர்களின் புரிதல்களும் கலந்துகட்டி பலவகையான குழப்பத்தைக் கொடுக்கும்.

தத்துவம் என்பது ஒரு செயல்/கருத்து/விமர்சனம்/நிகழ்வு அல்லது எதோ ஒன்றைக்குறித்தான ஒரு தனிப்பட்ட ஒருவரின் புரிதல் அல்லது புரிந்து கொண்டது.

தத்துவம் என்பதே தனித்துவம்.

அதாவது "ஒன்றின்" மீதான "தனி ஒருவரின்" "தனியான" பார்வை/கருத்து/விமர்சனம்/நிலைப்பாடு...etc//

வால் க்கு பதில் சொல்லலாம்னு பார்த்தேன் , கல்வெட்டு ஒரு பதில் சொல்லி இருக்கார் அதில இருந்தே தொடர்கிறேன்.

லவ் ஆஃப் விஸ்டம்னு கிரேக்க மூலத்தை தொட்டு இருக்கார் , ஆனா அதுக்கு மேல போகாம பேச்சு வழக்குல பொதுவா மக்கள் தத்துவம்னா என்ன சொல்றாங்களோ அதுக்குள்ள இறங்கிட்டார்.

வெளிப்பார்வைக்கு தெரிவதை நம்பாமல் அடிப்படையை பார் னு சொல்லலாம்.

சுருக்கமா சொன்னா இட்லி னா ஒரு உணவுனு சொல்லாம அதுக்குள்ள மாவு இருக்கு , அந்த மாவில அரிசி , உளுந்து கலந்து இருக்குனு புரிஞ்சுக்கிறது. ஒன்றின் அடிப்படையை புரிந்துக்கொள்வது.இது மேல் நாட்டு தத்துவ விளக்கம்.

தத்துவம் தமிழ் சொல் அல்ல சமஸ்கிருதம்.
தத் +த்வம் (Tat tvam asi) என்பதை தத்துவம்னு தமிழ் ஆக்கிட்டோம்.

பொருள் , "Thou are that," நீ தான் அது , கடவுள்

அத்வைத கோட்ப்பாட்டின் படி சாம வேதத்தில் சான்டோக்கிய உபநிஷத்தில் சொல்லப்படுவது.ஜீவாத்மா தான் பரமாத்மா.த்வைத்ம் என்றால் இரண்டு , அத்வைதம் என்றால் இரண்டல்ல ஒன்று.

அஹம் பிரம்மாஸ்மி போல.இது பிருஹ்யதரண்யாக உபநிஷத்தில் யஜுர் வேதம்ல வருது.
நான் கடவுள் னு சொல்லாமல் நீ கடவுள் சொல்வது :-)) தான் தத்துவம்.எம்மாம் பெரிய தத்துவம்!

பாரதியார் ஒரு பாடலில் கடைசியில் தத்வ மசி ..தத்வ மசினு சொல்வார்.பாட்டுத்தான் மறந்து போச்சு. ஒரு வேளை அக்கினி குஞ்சொன்று கண்டேன் பாட்டோ?

இது இல்லாம பிலாசபர் ஸ்டோன் னு ஒரு மந்திர கல் அல்லது ரசவாத கல் இருக்கு அதால தொட்டா தங்கம் ஆகுமாம்.அல்லது கரைச்சி இரும்புக்கூட சேர்த்தா தங்கம் ஆகும் என்பது போல ஒரு சூப்பர் கதை இருக்கு. அல்கெமிஸ்ட் ,Paulo Coelho கதைல வரும்.

|Eswar〉 said...

வணக்கம்! தத்துவத்தில் எந்த நிலையிலும் கோணத்திலும் நீங்கள் பார்க்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எல்லாம் சாமியார்களை அல்லது esotericists நோக்கியேக் கேள்விகள் அமைந்துள்ளது போல் அமைந்திருக்கிறது, அது சரியான அனுமானம் எனில், உங்களின் பாமரர்க்கு தத்துவம் தேவையா எனும் கேள்வியும் -சில நிலைகளில்- தேவையில்லை தான். ஏட்டுச் சுரைக் கறிக்குதவா என்பதும் சரி தான். ஆனால் தத்துவம் என்பது அதுமட்டுமில்லை. நீங்கள் பேசியது தத்துவத்தில் ஒரு பிரிவு மட்டுமே, ஆக பாமரர்- ஏட்டுச்சுரை போன்ற எடுத்துக்காட்டுகளுக்கு ஒரு எல்லையுண்டு! ஓஷோ சொன்னதைக் குறிப்பிட்டுள்ளீர்கள், இவரின் சிந்தனைகளைப் பற்றி அதிகப் பரிச்சயம் இல்லையெனினும், ஆன்மிகவியலாளர்கள் பெரும்பாலானோர் தத்துவங்களைப் பெரிதாகப் போற்றுவதில்லை. அவை எல்லாம் ஒருவரை ஒரு நிலை வரைக் கொண்டுவரச் செய்யும் ஒரு கருவியாகத் தான் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால், தத்துவம் பற்றிய ஓஷோவின் கருத்து, உங்கள் கட்டுரையின் சாரத்துக்கு முற்றிலும் எதிரானது! ஏனெனில் ஆன்மீகவாதிகள் அவர்கள் சொல்வதை எந்தவொருக் கேள்வி கேட்பதையும் ஒருநிலை-complete surrendering- வரை அனுமதிப்பதில்லை.

பிதாகரசின் தேற்றம் தத்துவங்களின் இடையேதான் பிறந்தது, அணுப்பற்றிய வடிவம் சிந்தனைகள் என யாவையும் தத்துவங்களில் இருந்து தான் பிறந்தது, இது பாமரர்களுக்கு எவ்விதத்தில் உதவாது இருக்கிறது? ஆனால் அவைத் தெரியவேண்டும் என்கிற அவசியமில்லை என ஆகிறபோது அதன் பயனை மட்டும் அனுபவிக்கலாம், அனுபவிப்பவர் ஒரு பொருளின் ஆக்கத்தைப் பற்றியும் அது உருவாகக் காரணமான தத்துவத்தைப் பற்றியும் அறியத் தேவையில்லை தான். அதே போல், ஆங்கிலம் lingua franca என்றான பிறகு, பிற மொழிகளைப் பற்றிய மொழியியல் ஆய்வுத் தேவையா எனக் கேட்பதுவும், ஒருவர் பொறியியலாளராய் இருக்கிற பட்சத்தில், நடப்புலகைப் பொறியியல் மட்டுமே ஆட்சி செய்கிறதென ஒரு மனப்பாங்கு வருங்கால், மற்ற விடயங்களை முக்கியமில்லா விடயங்களாகக் காண்பது போலவும் இருந்தால், ஏட்டுச்சுரை கறிக்குதவாது தான். ஆனால் ஏடுகளில் இருப்பது எல்லாம் வேலைக்காகாதவை அல்ல.

கொள்கைவிதிகள், தேற்றங்கள் இவைதான் இந்த நவீனயுகத்தை இயந்திரங்களாற் நிரப்பியிருக்கின்றன. அதே நேரத்தில் வெற்றிடம், சூனியம், காலம், இடம் போன்ற விவரிக்க இயலாக் கோட்பாடுகள் ஆன்மீக தர்க்கங்களிலும் இருந்து ஆரம்பித்துள்ளன, அவை இன்னும் புலப்படா விடயங்களாகவே உள்ளன, சிலவற்றை சிலர் அக்காலங்களில் உணர்ந்திருக்கலாம், அதை எல்லோரும் உணரும் வண்ணம் நவீன அறிவியல் முயல்கிறது. ஆக எல்லாவற்றிலும் இருக்கும் அறிவைப் பகுத்தாய வேண்டும், ஒட்டுமொத்தமாக தத்துவம் என்பதேத் தேவையில்லை என்பது நல்லதில்லை, ஆயினும் இருக்கும் கொள்கைகளைக் கொண்டு புதிய அம்சங்களைப் படைப்பது மிக முக்கியமானது. மேலும் எல்லாம் நல்லவிதமாக முன்னேற்றங்களைக் கண்டாலும், நவீன அறிவியலின் விதிகள் எல்லாவற்றையும் விளக்கவில்லை என்பதையும், எல்லா சமயங்களிலும் சீராக ஒத்துப்போவதில்லை என்பதையும் மனதிலிருத்துவது நல்லது. Even simple pendulum is not so simple!

நீங்களும் இதைத் தான் மனதில் வைத்து எழுதியிருப்பீர்கள் என எண்ணுகிறேன், அவ்வாறெனில் உங்கள் கட்டுரையில் அதை இன்னும் தெளிவுறுத்தவேண்டும் அவ்வளவே. மேலோட்டமான வாதமாக இதைக் கொண்டு சென்றால், கருத்துப்பகுதியில் நீங்கள் கூறியுள்ளது போல் மக்கள் அவரவர் நிலைகளில் இருந்துக் கருத்துக்களை ஒத்துக் கொள்வதும் எதிர்ப்பதும் தான் நடக்கும், முன்னேறுதலுக்குரிய விவாதங்கள் தடைபட்டு விடும்.

!

Blog Widget by LinkWithin