அச்சம்பவத்தின் நிகழ்வு, சூழல் ஆகியவற்றை பார்க்கும் பொழுது அது நிச்சயமாக சாதிக்கலவரம் இல்லை, காரணம் தாழ்த்தபட்ட சாதி என அழைக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. அது காவல்துறைக்கும், ஊர்வலம் வந்த மக்களுக்கும் நடந்த மறியல், மோதலாகி பின் கலவரமாகி கடைசியில் படுகொலையில் முடிந்திருக்கிறது, ஆனாலும் ஒரு சில ஆவணங்களை பார்க்கும்பொழுது இது காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தபட்ட படுகொலையோ என சந்தேகிக்க வைக்கிறது!
சாமி என்ற படத்தில் சாதி ஊர்வலத்தை தடுக்க படத்தின் நாயகன் பொறுக்கி(அப்படி தான் அவரே சொல்லிக் கொள்வார்) விக்ரம். கல், கப்படாக்களை வைத்திருப்பது போல் இங்கே காவல் துறை கற்களை சேமித்து வைத்திருக்கிறது, எதற்காக இருக்கும்? ஊர்வலத்தின் போது ரோடு பழுதுபட்டால் அதை சீரமைக்கவா?. அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும், பிற சாதியினர் வன்முறையை தூண்டிவிடக்கூடாது என்பதற்காக தான் காவல்துறை அங்கே அழைக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வன்முறையை தூண்டியதே காவல்துறையை போலத்தானே தெரிகிறது!.
இவ்விசயத்தில் சரியாக ஆராயப்பட்டு, படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையை சார்த்த உயர் அதிகாரி வரைக்கும் விசாரிக்கபட்டு, தக்க தண்டனை பெற வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க!
இறந்து போன மனிதர்களுக்காக வருத்தப்படாமல் அதை கொண்டாடியிருக்கும் சாதி வெறி பிடித்த இழிபிறவிகளின் செயலை தான் இந்த பதிவில் உள்ள படத்தில் காண்கிறீர்கள், அத்தோடு நிற்காமல் அந்த பதிவின் பின்னூட்டத்திலும் தனது சாதி வெறியை காட்டிக்கொண்டிருக்கிறார்கள், தம்மை தேவர் சாதி என அழைத்து கொள்ளும் கொட்டையெடுத்த புலிகள்!
இந்த கொட்டையெடுத்த புலிகள் தலைவராக கொண்டாடும் முத்துராமலிங்கம் இவர்களுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால், நிறைய பொய் சொல்லி தம்மை பெரிய அப்பாடக்கராக காட்டி கொண்டிருந்தார் என்பது மட்டுமே தெரிகிறது.
முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர்,
சுதத்திரத்திற்கு முன் கள்ளர்கள் என அழைக்கபட்டவர்கள் எங்கே குற்றம் நடந்தாலும் கைது செய்யபட்டார்கள், பின் குற்றபரம்பரை என அழைக்கப்பட்டு தினம் காவல்நிலையத்தில் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கபட்டது, அதை எதிர்த்து உடைத்தவர் இந்த அப்பாடக்கர் முத்துராமலிங்கம் அல்ல. ஒரு ஆங்கிலேயர், அச்சூழ்நிலையில் சாதியை மறந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் பலர், அம்மாதிரி மாறிய முன்னோர்கள் வம்சம் வந்தவர்களில் ஒருவர் தான் இன்று புதுகை அப்துல்லா என்ற பெயரில் பதிவெழுதி கொண்டிருக்கும் அப்துல்லா!
இம்மானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத்திற்குடனான பகை இப்போது ஏற்பட்டதல்ல, அவர்கள் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் தாம், இம்மானுவேல் தாழ்த்தபட்டவர்களின் தலைவன் ஆவதை ஆரம்பத்திலிருந்தே முத்துராமலிங்கம் விரும்பவில்லை என்பது அப்போதைய ஆவணங்கள் நமக்கு சொல்கின்றன. தலித்துகளையும் நாமே பார்த்து கொள்கிறேன், இம்மானுவேலை தலைவனாக ஏற்று கொள்ளமுடியாது என்றும், அவன் எப்படி எனக்கு சமமாக உட்காரலாம் என்றும் தமது சாதி திமிரை காட்டி பேசியவர் தான் முத்துராமலிங்கம்!
தலித்துகள் என்று மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் காமராஜரையும் சாணாப்பயல் என்றும், சோத்துக்கு இல்லாதவன் என்றும் பேசி தமது சாதி திமிரை காட்டியவர் தான் இந்த முத்துராமலிங்கம்.
அசுரனின் இந்த பதிவில் உங்களுக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கும்!
அச்சம்பவத்திற்கு பிறகு பத்ரி எழுதிய பதிவு ஒன்றில் மற்றொரு சாதி வெறியர் தமது பதிவை இணைத்திருந்தார், அதில் இம்மானுவேல் ஒரு பொம்பளபொறுக்கி என்ற ரேஞ்சுக்கு குற்றசாட்டுகள் இருந்தன மேலும் ஒரு இடத்தில்
//காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். //
காமராஜ் நாடாரம்! அவர் தான் இந்த சண்டைக்கே மூல காரணமாம், எப்படி திரிக்கிறார்கள் பாருங்கள், தமது ஆதர்ஷ நாயகன் கடவுளாக்கப்பட வேண்டும் என்றால் தன் மனைவி வேசி என சொல்லவும் தயங்க மாட்டார்கள் போல.
//ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிளிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர்//
வரிசையா சொல்லிட்டு இன்னொனு சொல்றார் பாருங்க, தேவர் ஐயாவின் அடைமொழிகளாம், என்னமோ அந்த வார்த்தைகளோ அந்த முத்துராமலிங்கத்திற்காக தான் உருவாக்கபட்டது போல!
புத்தகம் வெளியிட்டார்கள், என்ன இருந்தது அதில், தேவர் சாதி அழிய வேண்டுமென்றா எழுதியிருந்தது, தாழ்த்தபட்டோர் எழ வேண்டுமென்று தானே இருந்தது, சமுதாய விடிவெள்ளி என்றழைத்தால் உன் வீட்டு சூரியன் காணாமல் போய் விடுமா என்ன?, என்ன ஒரு சாதி வெறி, தாம் ஒரு ஆதிக்க சாதி என்பதை மறைக்கக்கூட தெரியாத வெள்ளந்தி போல இந்த நண்பர், அநேகமாக பலமுறை மாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும், அதனால் தான் எதோ நடுநிலைவாதி போல் தம்மை அடையாளபடுத்தி கொள்ள அவர் முயச்சித்திருப்பது தெரிகிறது, ஆனாலும் பார்ப்பனியம் மறைய முடியா விசமாச்சே அய்யா!
இங்கே ஏன் பார்பனீயம் வந்தது!?
சாதிய கட்டமைப்பு, வர்ணாசிரம அடுக்கு எல்லாம் பார்பனீயத்தின் கொள்கைகள் தான். நிறவெறியை நாம் ரேஷிசம் என அழைப்பது போல் உயர்சாதி திமிரை பார்பனீயம் என்று அழைக்கிறோம். அதை முதன் முதல் பிராமணர்கள் கொண்டு வந்ததால் அவர்கள் பாப்பான் ஆனார்கள், உயர்சாதிய எண்ணம் இல்லாதவர்கள் பார்பனீயம் என்ற வார்த்தையை கேட்டு தம்மை தான் சொல்வது போல் நினைப்பதில்லை, மனதில் கொஞ்சமேனும் உயர்சாதிய திமிர் இருந்தாலும் உங்களால் தாங்கி கொள்ள முடியாது. தாம் விஷ்ணுவின் நெற்றியில் இருந்தவர்கள், பிறகு நெஞ்சிலுருந்து என வகைப்படுத்தி தம்மை மேல் சாதியாகவும் பின் வருபவனற்றை தமது அடிமை சாதியாகவும் கட்டமைத்து தமது வர்ணாசிரம சுவற்றை எழுப்பினான் பார்ப்ப்பனன்!
கீழே ஒரு தாழ்த்தபட்டவன் நிற்கிறான். அவன் தோளின் மேல், ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவன், அவன் தோளின் மேல் ஒரு பிற்படுத்தப்பட்டவன் இப்படி ஒவ்வொரு அடுக்காக அமைத்து உச்சாணி கொம்பில் தம்மை அமர்த்தி கொண்டதை தான் பார்பனீயம் என்கிறோம்!, இந்த சாதிய அடுக்கை உடைத்து விட்டால் அங்கே எப்படி இருக்கும் பார்பனீயம், தம்மை உயர்சாதியாக நினைத்து கொள்ளும் மூட,முட்டா தேவர் சாதியினர், அவர்கள் தோளில் அமர்ந்து ஒருவன் காதில் செய்து கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்!
தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, தேவர்மகன் படத்தில் இன்னொரு சாதிவெறியர் சிவாஜி பேசுவது போல் ஒரு காட்சி.
”என்னய்யா பண்ணசொல்ற
போருக்கு கூப்பிட்டப்ப, வேல்கம்பையும், வீச்சருவாளையும் எடுத்துகிட்டு வெற்றிவேல், வீரவேல்னு போருக்கு போனவியக நம்ம பயலுக, இப்ப அதை கீழ போடச்சொன்னா எப்படி போடுவானுங்க?”
எப்படி தெரியுமா இருக்கு, எல்லையில் நிற்கும் ராணுவத்தினர் அதே துப்பாக்கியை கொண்டு வந்து ஊருக்குள் அனைவரும் போட்டு தள்ளிவிட்டு, பழகிடுச்சுங்க இப்ப கீழ போடச்சொன்னா எப்படின்னு கேக்க சொல்ற மாதிரி இருக்கு!
அடமுட்டாப்பதருகளா, இந்த சாதி உங்களுக்கு என்ன செய்தது, தமிழகம் விட்டு வேறு நாட்டிற்கு போய் நான் இந்த சாதி எனச்சொல், உன்னை மலத்திற்கு சமமாக தான் பார்ப்பான். அப்படிபட்ட சாதியை வைத்து எதை புடுங்கப்போகிறாய், உன்னையும் மற்றவர்கள் போல் தானே உன் அம்மா பெற்றாள். வாயில உன்னை வாந்தி எடுக்கலையே, என் எப்படி வந்தது இந்த உயர்சாதி திமிர்?
பகத்தறிவு ஒன்று தான் விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது, உண்மையில் நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?, உன் சாதி திமிர் இன்னும் எத்தனை உயிர்களை கொன்றுவிட்டு அடங்கும். இன்னும் நீ திருந்தவில்லை என்றால் உன்னையும் மனிதனாக நினைத்து இந்த பதிவிட்டதற்காக நான் வெட்கப்பட்டு கொள்கிறேன்!
227 வாங்கிகட்டி கொண்டது:
«Oldest ‹Older 201 – 227 of 227 Newer› Newest»அப்படி எழுது நாதாரிகளை கண்டிக்கும் நீங்கள் தேவரை குறை சொல்லும் நோக்கம் என்ன? தன் சாதி மக்களுக்காகவே வெள்ளையனுடனும் காந்தியுடனும் பேரம்பேசிய தலைவரை என்ன சொல்வீர்கள்?
நீங்கள் சாதி வெறி பிடித்தவர்களை கண்டிக்கும் பொறுப்பான எழுத்தாளர் என்றால் நீங்கள் எந்த சாதியையும் சேராதவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
//அப்படி எழுது நாதாரிகளை கண்டிக்கும் நீங்கள் தேவரை குறை சொல்லும் நோக்கம் என்ன? தன் சாதி மக்களுக்காகவே வெள்ளையனுடனும் காந்தியுடனும் பேரம்பேசிய தலைவரை என்ன சொல்வீர்கள்?//
நீங்களே சொல்லிடிங்க, தன்சாதி மக்களுக்காக என்று, இம்மாதிரியான சுயநலம் மிக்கவர்கள் சமூகத்தின் கேன்சர். உங்களுக்கு உயர்சாதி என்ற திமிர். அதே தான் முத்துரமலிங்கத்திற்கும்.
இவ்வுலகில் விமர்சதனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் ய்வருமில்லை, கடவுளையே கேள்வி கேட்டு விமர்சிக்கிறேன். முத்துராமலிங்கம் வாழ்ந்து செத்த மனிதன் தானே
//நீங்கள் சாதி வெறி பிடித்தவர்களை கண்டிக்கும் பொறுப்பான எழுத்தாளர் என்றால் நீங்கள் எந்த சாதியையும் சேராதவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.//
ஆம் நான் எந்த சாதியையும் சாராதவன். என் குழந்தையின் பள்ளிசான்றிதழில் சாதி என்ற இடத்தில் வெறும் கோடு மட்டும் தான் இருக்கும்.
வேற எப்படி நிரூபிக்கனும் உங்களுக்கு
உங்கள் குழந்தையின் சான்றிதழை விடுங்கள் உங்கள் சான்றிதழில் என்ன சாதி என்று எழுதப்பட்டிருக்கு? உங்கள் தந்தை - தாத்தா எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்? தமிழ் சமுதாயத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால் மட்டும் நீங்கள் பதில் சொல்லலாம்.
முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்து செத்த மனிதர், அவர் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் சொல்லவில்லை. அவர் பேசியவற்றை, செய்தவற்றை வரிவரியாக எடுத்துப் போட்டு குறை சொல்லுங்கள் உங்களைப் பாராட்டுகிறேன். அவர் உயர்ந்த சாதித் திமிர் பிடித்தவர் என்றால் மற்றவர்களை தாழ்ந்த சாதித் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லலாமா? அந்த வரிசையில் நீங்களும் வரமாட்டீர்களா? இல்லை நீங்கள் சமநிலையான சாதியைச் சேர்ந்தவர், அதாவது உயர்ந்த சாதியும் சேராதவர் தாழ்ந்த சாதியையும் சேராதவர் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அதற்கான அளவுகோல் என்ன?
குறிப்பிட்ட சாதி, மதத்தினர் சலுகைகளுக்காக தங்கள் அடையாளங்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பும்போது, மற்றவர்கள் வேறு காரணங்களுக்காக தங்கள் அடையாளங்களை தக்க வைத்துக்கொள்வது எவ்வாறு சாதி/ மத வெறியாகும்? நடுநிலமைவாதி நீங்க சரியா பதில் சொல்வீங்கனு எதிர்பார்க்கிறேன்.
// தன் சாதி மக்களுக்காகவே வெள்ளையனுடனும் காந்தியுடனும் பேரம்பேசிய தலைவரை என்ன சொல்வீர்கள்?//
இதுக்கு நீங்க பதிலே சொல்ல வில்லையே? அவரும் சாதித் தலைவர்தானே?
தமிழகத்தில் உள்ள பல்வேறு சாதிகளும் மதங்களும் தங்கள் அடையாளத்தை துறக்க வேண்டும் என்கிறீர்களா? அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?
//உங்கள் தந்தை - தாத்தா எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்? தமிழ் சமுதாயத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால் மட்டும் நீங்கள் பதில் சொல்லலாம்.//
தமிழ் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவன் அப்பா, தாத்தா முட்டாளாக இருந்தார்கள் என்பதற்காக தனக்கும் ஒரு சாதி இருக்கிறது என சொல்ல மாட்டான்.
எனக்கு சாதிய பிரிவு இல்லை. நான் மனிதன்
// நீங்கள் சமநிலையான சாதியைச் சேர்ந்தவர், அதாவது உயர்ந்த சாதியும் சேராதவர் தாழ்ந்த சாதியையும் சேராதவர் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அதற்கான அளவுகோல் என்ன?//
இங்கே உயர்ந்த சாதியும் இல்லை, தாழ்ந்த சாதியும் இல்லை. அவைரும் மனிதர்கள் தான். ஆனால் சில முட்டாள்கள் தங்களை உயர்சாதிகளாக எண்ணிக்கொண்டு பலரை துன்புறுத்தி வருகிறார்கள், நீங்க முன்னாடி சொன்னிங்களே அதே மனித நேய ஆர்வத்தில் தான் அதை விமர்சிக்கிறேன்.
//குறிப்பிட்ட சாதி, மதத்தினர் சலுகைகளுக்காக தங்கள் அடையாளங்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பும்போது, மற்றவர்கள் வேறு காரணங்களுக்காக தங்கள் அடையாளங்களை தக்க வைத்துக்கொள்வது எவ்வாறு சாதி/ மத வெறியாகும்? //
பல நூற்றாண்டுகளாக தம்மை உயர்சாதி என எண்ணி கொள்பவர்களால் பலர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். அவர்களுன் சமநிலை அடைந்து விட்டால் எந்த முட்டாளும் தன்னை உயர்சாதியாக எண்ண மாட்டான். அதற்காக தான் சில பிரிவினருக்கு அரசு சலுகை அளித்து வருகிறது
// தன் சாதி மக்களுக்காகவே வெள்ளையனுடனும் காந்தியுடனும் பேரம்பேசிய தலைவரை என்ன சொல்வீர்கள்?//
இதுக்கு நீங்க பதிலே சொல்ல வில்லையே? அவரும் சாதித் தலைவர்தானே?//
பக்கா சுயநலவாதி என்று சொல்லிவிட்டேன்.
தன் பிரிவினருக்கு தானே பேசினார், எப்படி சுயநலமாகும்னு கேக்கலாம்.
அரசியலில் பதவி வாங்க சுயசாதி ஓட்டு வேணுமே. அது காமராஜராக இருந்தாலும் சுயநலம்.
மக்கள் நலன் பார்ப்பவனே தலைவன்
//தமிழகத்தில் உள்ள பல்வேறு சாதிகளும் மதங்களும் தங்கள் அடையாளத்தை துறக்க வேண்டும் என்கிறீர்களா? அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?//
தன்னை விட எவனும் உயர்ந்தவன் இல்லை
தன்னை விட எவனும் தாழ்ந்தவன் இல்லை என்ற மனித தன்மையோடு இருந்தாலே போதுமானது.
//தமிழ் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவன் அப்பா, தாத்தா முட்டாளாக இருந்தார்கள் என்பதற்காக தனக்கும் ஒரு சாதி இருக்கிறது என சொல்ல மாட்டான்.
எனக்கு சாதிய பிரிவு இல்லை. நான் மனிதன் //
அப்போ உங்கள் பாட்டன், முப்பாட்டன் முட்டாளாக இருந்தான் என்று ஒப்புக் கொள்கிறீர்கள், அப்படித்தானே? உங்கள் கருத்தின்படி சாதிச் சான்றிதழ் கொடுக்க வழி செய்த அரசியல் சட்டமும், அதனைச் செயல்படுத்தும் அரசாங்கங்களும் முட்டாள்கள்தானே?
//இங்கே உயர்ந்த சாதியும் இல்லை, தாழ்ந்த சாதியும் இல்லை. அவைரும் மனிதர்கள் தான். ஆனால் சில முட்டாள்கள் தங்களை உயர்சாதிகளாக எண்ணிக்கொண்டு பலரை துன்புறுத்தி வருகிறார்கள், நீங்க முன்னாடி சொன்னிங்களே அதே மனித நேய ஆர்வத்தில் தான் அதை விமர்சிக்கிறேன். //
முன்னேறிய, பின்னேறிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இப்படியெல்லாம் சான்றிதழ் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலையும் முட்டாள்த்தனமானதுதானா?
//பல நூற்றாண்டுகளாக தம்மை உயர்சாதி என எண்ணி கொள்பவர்களால் பலர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். அவர்களுன் சமநிலை அடைந்து விட்டால் எந்த முட்டாளும் தன்னை உயர்சாதியாக எண்ண மாட்டான். அதற்காக தான் சில பிரிவினருக்கு அரசு சலுகை அளித்து வருகிறது //
அந்தச் சமநிலை என்பது என்ன அதற்கான வரையறை உங்களிடமாவது, வேறு யாரிடமாவது இருக்கிறதா? அது எட்டப்படும் உத்தேசமான கால வரம்பு உள்ளதா? அது வரை சாதியை பயன்படுத்திக் கொள்வது முட்டாள்தனமாக ஆகாதா?
//பக்கா சுயநலவாதி என்று சொல்லிவிட்டேன்.//
அம்பேத்கர் எப்படியெல்லாம் சுயநலத்துடன் நடந்து தன் சாதி மக்களுக்கான தலைவராக விளங்குகிறார் என்று ஒரு விரிவான கட்டுரை எழுதி அதன் மூலம் உங்கள் வாசகர்களின் அறிவுக் கண்களை திறப்பீர்களா?
//
தன்னை விட எவனும் உயர்ந்தவன் இல்லை
தன்னை விட எவனும் தாழ்ந்தவன் இல்லை என்ற மனித தன்மையோடு இருந்தாலே போதுமானது. //
அந்த நிலையை மக்கள் எவ்வாறு அடைய முடியும் என்று விளக்கிச் சொல்ல முடியுமா?
சாதி எப்படி உருவாச்சுன்னு மட்டும் சொல்லிட்டிங்கன்னா, உங்கள் கேள்விகள் அனைத்தையும் முன் வைத்து ஒரு பதிவாவே எழுதிடுறேன்.
*****
தமிழகத்தில் சாதி அரசியல் செய்யும் திருமா, ராமதாஸ், சரத்குமார் அனைவருமே விசக்கிருமிகள் தான்.
//சாதி எப்படி உருவாச்சுன்னு மட்டும் சொல்லிட்டிங்கன்னா, உங்கள் கேள்விகள் அனைத்தையும் முன் வைத்து ஒரு பதிவாவே எழுதிடுறேன்.//
இவ்வளவு பெரிய எழுத்தாளரான உங்களுக்கு இது தெரியலயா? அது சரி, தமிழ்ச் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படுகிறீர்கள்? அதை எப்படி செயல்படுத்துவீர்கள்?
//
தமிழகத்தில் சாதி அரசியல் செய்யும் திருமா, ராமதாஸ், சரத்குமார் அனைவருமே விசக்கிருமிகள் தான்.//
ஜெயலலிதா, கருணாநிதி, காமராசர் ஆகியோர் சாதி அரசியல் செய்வதாக/ செய்ததாக குற்றச் சாட்டுக்கள் உள்ளதே? அவர்களும் விஷக்கிருமிகள்தானா? அல்லது அவர்கள் சாதி அரசியல் செய்தால் பரவாயில்லையா?
சட்ட ரீதியாக சாதி அரசியல் செய்வதை தடுக்க நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?
எல்லாரும் சாதியை விட்டு வெளியேறி விட வேண்டுமா? ஒரு சிலர் மட்டும் சாதியை விட்டு வெளியேறாமல் இருந்தால் என்ன விதமான விளைவுகள் ஏற்படும்?
சாதிகளை விட்டு வெளியேறிய பின்னால் மதங்களை விட்டு வெளியேற வேண்டுமா?
ஒப்பீட்டளவில் சாதியை விட மதங்கள் மிகக் கொடுமையானவையாக உள்ளன. உதாரணமாக இஸ்லாம் மதத்தின் காரணமாக இந்தியா மூன்றாக துண்டாடப்பட்டது. அப்போது கொல்லப்பட்டவர்கள் மட்டும் 10 லட்சம் பேர். (இதில் முகலாய மனனர்கள் நடத்திய கொலைகள் சேர்க்கப்படவில்லை) பௌத்த மதத்தின் பேரில் இலங்கையில் 4 லட்சம்பேர் கொல்லப்பட்டனர். பர்மாவிலும் நடைபெற்று வருகிறது. இந்து மதத்தினர் பாபர் மசூதியை இடித்தனர். குஜராத்தில் 2000 பேர் கொல்லப்பட்டனர். இவ்வளவு கொடூரமான மதத்தை முதலில் ஒழித்து விடுவோமா? இதற்கு இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதவாதிகள் ஒப்புக கொள்வார்களா? அவ்வளவு ஏன் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் ஒப்புக் கொள்வார்களா?
வால்பையன் நான் கேட்ட சில கேள்விகளை வெளியிடாமல் வைத்திருக்கிறீர்கள்.
பரவாயில்லை. உங்களால் எப்போதாவது பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். அப்போது உங்கள் நடுநிலை முகமுடி கழன்றுவிடும்.
அப்ப செப் 11 காவல் துறை தாக்குதலுக்கு மட்டும் கருப்பு சட்டை காரங்க வாய் திறகுரிகங்கா,ஒச்ட் 30 பெட்ரோல் குடுவீசுக்கு உங்க வால் பையன் வாலும் வாயும் சும்மா இருக்கு
உங்க எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். பசும்பொன் ஐயாவோட சொத்துக்களை அனுபவிப்பவர்கள் எந்த ஜாதியினர்? அன்பும்,தெய்வீகமும் நிறைந்த பெரியோர்களை மதித்தல் அவசியம். நண்பரே இறைப்பற்று மட்டுமே மனிதனை சிறப்படையச்செய்யும். நீங்க மதம் மாறியதாக போட்டிருக்கீங்க, குறிப்பிடும்படியாக மதுரை கோரிப்பாளையம்,தெற்குவாசல் ள்ளிவாசல்,பல தேவலாலயங்கள் யார் தானமாக கொடுத்தார்கள்? உங்க பெரியவங்ககிட்ட கேளுங்க. நீங்க மேல திட்டி,வாழ்த்திய எந்த. ஜாதியும் நான் இல்லை.ஜாதி,மதம் ஒழிய விரும்பினால் கவர்மென்ட் தான் முடிவு செய்யனும்,கவர்மென்ட் போட்ட சலுகைகளை மட்டும் வாங்கிறீங்க?.Sc,st,bc,mbc etc., ஜாதியவச்சு சலுகைமட்டும் வேணும்,பிரச்சனைனா அடுத்த ஜாதி,மதத்திற்காரன் தலை போட்டுறது?.
Post a Comment