சென்ற பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ் என்ற நண்பர், தி.மு.க ஒரு தப்பும் பண்ணல, அவர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கி கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்துள்ளார், அவரது வாதத்தின் படியும் மற்றும் பல்வேறு கழக சொம்புதூக்கிகளின் வாதத்தின் படியும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 7000 கோடி லாபம் தான், அதனால் நட்டம் ஒன்றுமில்லை, ஆகவே தி.மு.க நிரபராதி மட்டுமல்ல மக்களுக்காக உழைத்த மகான்களை கொண்ட கழகம் அது.
காசுக்கு கூட்டத்தில் கத்துபவன் கூட இந்த அளவு குரல் கொடுக்க மாட்டான் என்றால் இவர்கள் எந்த அளவு மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பதை நண்பர்கள் அறிக!, 2ஜி ஊழல் ராசாவிலிருந்து ஆரம்பிக்கபட்டதல்ல, அது தயாநிதி மாறனில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும் என்பது பலரது வாதம், ஆனால் தயாநிதி மாறன் இந்தியாவின் தொலைதொடர்பு துறையை தூக்கி நிறுத்தியவர் போல் பேசி கொண்டிருக்கிறார்கள் நமது சொம்புதூக்கிகள்!
இந்தியா முழுவதும் பேச ஒரு ருபாய் என்ற திட்டத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தயாநிதிமாறன், ஆனால் உண்மையென்ன?
அந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் மாதம் 450 வாடகை கட்ட வேண்டும், இழப்பீட்டை விட அதிக அளவு லாபம் பார்த்து மக்களை ஏமாற்றியர் தான் இந்த ஹைடெக் ஏமாற்றுக்காரர், இந்தியாவை போன்ற பல நாடுகள் S.T.D முறையை ஒழித்து விட்டது, அதாவது வாசிங்டன்னில் இருந்து ஃப்லோரிடாவுக்கு பேசினாலும், கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் பேசினாலும் அது உள்ளூர் அழைப்பு தான், இந்தியாவில் தான் பக்கத்துக்கு ஊருக்கு பேசினாலும் S.T.D. இதில் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக்(unplug) பண்ணினார் என தெரியவில்லை!?
அதிக பட்ச உச்சவரப்பு கட்டணம் பற்றி மட்டுமே TRAI பேசியிருக்கிறதே தவிர குறைந்த பட்ச கட்டணம் என்று எதையும் நிர்நயிக்கவில்லை!, அவர்கள் பத்து பைசாவுக்கும் கொடுக்கலாம், ஐந்து பைசாவுக்கும் கொடுக்கலாம், இரண்டு பைசாவுக்கும் கொடுக்கலாம், ஒரு பைசாவுக்கும் கொடுக்கலாம் ஏன், சும்மா கூட பேச அனுமதிக்கலாம், அது அவர்கள் லாபத்தை குறைத்து கொண்டு சந்தையை தன்வசம் ஆக்க செய்யும் யுக்தியே தவிர இதிலும் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக் பண்ணினார் என தெரியவில்லை.
சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நிறுவனத்திடம் விற்க மிரட்டினார் என சிவசங்கரனே வாக்குமூலம் கொடுத்த பிறகும், சி.பி.ஜ தயாநிதிமாறனை சும்மா ஒப்புக்கு விசாரித்து கொண்டிருப்பது அதிகாரவர்க்கத்தின் பணம் எது வரை பாய்ந்துள்ளது என்பதை காட்டுகிறது, இங்கணம் இருக்க திரும்ப திரும்ப கழக கண்மணிகளால் தி.மு.க விற்கு எவ்வாறு சொம்பு தூக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை, ஊழலின் மொத்த உருவமான தி.மு.க மற்றும் காங்கிரஸை இன்னும் ஒரு கட்சியாக இந்தியாவில் வைத்து கொண்டிருப்பது இந்திய மக்களின் பொறுமைக்கு ஒரு சாட்சி என்பேன்!
இன்னும் முடியல!
என்னிடம் பத்து ருபாய் அடக்கமுள்ள பொருள் நாலைந்து இருக்கிறது, நான் ராசா என்ற படித்த அன்ப்ளக்கிடம் அதை விற்பதற்கான உரிமையை தருகிறேன், அது சந்தையில் பல நூறு மடங்கு அதிக விலைக்கு விற்கக்கூடியது, சான்று உலக சந்தையிலும் அந்த பொருள் விற்பனைக்கு உள்ளது, அப்பேற்பட்ட பொருளை அந்த ராசா பதினோறு ருபாய்க்கு விற்று, ஹைய்ய்ய்ய்ய்ய்யா உங்களுக்கு ஒரு ருபாய் லாபம் பெற்று தந்து விட்டேன் என தவ்வுகிறான்.
நீங்களே சொல்லுங்கள் ஐயா, இந்த வேலையை செய்ய எனக்கு எதற்கு அந்த படித்த அன்ப்ளக், என் கடைக்கு, அதை சார்ந்தவர்களுக்கு எவ்வளவு லாபம் பெற்று தர முடியுமோ அதை விட்டு விட்டு, நானும் லாபத்தில் விற்றேன் பார் என்று ஒரு விளக்கம், அதற்கு ஆமாம் சாமி போட்டு கொண்டு ஒரு கூட்டம்.
வெக்கமாயில்லை, ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் வியர்வையும் தான் இந்தியா, நீ வெளிநாட்டு வங்கியில் கோடி கோடியாய் சேர்க்க இப்படி ஊழலால் ஏமாற்றி கொண்டிருக்கிறாயே!, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................
34 வாங்கிகட்டி கொண்டது:
தமிழிஷில், இந்த தல்த்திற்கு சென்றே இணைத்து விடுகிறேன் ஆனால் தமில்மணத்தில் இணைக்கும் பொழுது புதிய இடுக்கைகள் எதுவும் காணப்படவில்லை என வருகிறது!
சென்ற முறை ஒரு நண்பர் தமிழ்மணத்தில் என் பதிவை இணைத்திருந்தார், இம்முறையும் யாரேனும் ஒருவர் இணைத்து விடுங்கள், அப்படியே என் பிரச்சனைக்கான தீர்வையும் கூறினால் உபயோகமாக இருக்கும்!
நன்றி!
வணக்க்ம நண்பரே!!!!!!
இதுக்கு மேல் தெளிவாக கூறவே ம்டியாது.
/என்னிடம் பத்து ருபாய் அடக்கமுள்ள பொருள் நாலைந்து இருக்கிறது, நான் ராசா என்ற படித்த அன்ப்ளக்கிடம் அதை விற்பதற்கான உரிமையை தருகிறேன், அது சந்தையில் பல நூறு மடங்கு அதிக விலைக்கு விற்கக்கூடியது, சான்று உலக சந்தையிலும் அந்த பொருள் விற்பனைக்கு உள்ளது, அப்பேற்பட்ட பொருளை அந்த ராசா பதினோறு ருபாய்க்கு விற்று, ஹைய்ய்ய்ய்ய்ய்யா உங்களுக்கு ஒரு ருபாய் லாபம் பெற்று தந்து விட்டேன் என தவ்வுகிறான். /
இதில் இதற்கு வெளி சந்தையில் அதிக விலை இருக்கிறது என்பதையே மறுப்பதும்,சென்ற முறை செய்தபடியே அதே விலைக்கு கொடுத்தேன் என்பதே குற்றம் சாட்டப் பட்டவ்ர்களின் வாதம்.
இதில் இவர்கள் விடுவிக்கப் பட்டால் ,பல் விஞ்ஞான ரீதியான ஊழல்களுக்கு வழிவகும்ம் என்பதே உண்மை
நன்றி தலை!!!!!!!!
அருண் ஷோரியிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்! FCFS முறை சினிமா,பஸ்,கிரிக்கெட் டிக்கெட் போன்றவை விற்க மட்டுமே! பெரும் லைசென்ஸ்களை விற்கும்போது தனி அமைச்சகம்,முடிவெடுப்பதை தவிர்த்து, அமைச்சர்கள் குழு விவாதித்து முடிவெடுப்பதே சிறந்த முறை!
//அதிக பட்ச உச்சவரப்பு கட்டணம் பற்றி மட்டுமே TRAI பேசியிருக்கிறதே தவிர குறைந்த பட்ச கட்டணம் என்று எதையும் நிர்நயிக்கவில்லை!, அவர்கள் பத்து பைசாவுக்கும் கொடுக்கலாம், ஐந்து பைசாவுக்கும் கொடுக்கலாம், இரண்டு பைசாவுக்கும் கொடுக்கலாம், ஒரு பைசாவுக்கும் கொடுக்கலாம் ஏன், சும்மா கூட பேச அனுமதிக்கலாம், அது அவர்கள் லாபத்தை குறைத்து கொண்டு சந்தையை தன்வசம் ஆக்க செய்யும் யுக்தியே தவிர இதிலும் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக் பண்ணினார் என தெரியவில்லை.//
ஏன்யா உளருற?? TRAIனா என்ன அதோட பணிகள் என்னான்னு கூட உனக்கு தெரியாதுன்னு இதிலிருந்தே தெரியுது!! முட்டாள்தனமா பேசக்கூடாது! அலைவரிசையை விற்றதின் மூலமா நட்டமில்ல, லாபம் மட்டுந்தான்னு TRAI சொன்ன பிறகும் மளிகை கணக்கு பாக்குற CAG கருமாந்திரங்க சொன்ன முட்டாள்தனமான புள்ளிவிவரத்தை தொங்கிகிட்டு இருக்க? சரி 1,76000 கோடி நட்டம்னே வெச்சுப்போம்! சிபிஐ ஏன் முப்பதாயிரம் கோடிதான் நட்டம்னு தன்னோட ரெண்டாவது குற்றப்பத்திரிகைல சொல்லியிருக்கு?
//அந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் மாதம் 450 வாடகை கட்ட வேண்டும், //
பின்ன என்ன ஓசில தர்ரதுக்கு BSNL என்ன உங்கதாத்தாவோட நிறுவனமா?
//அதாவது வாசிங்டன்னில் இருந்து ஃப்லோரிடாவுக்கு பேசினாலும், கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் பேசினாலும் அது உள்ளூர் அழைப்பு தான், //
அமெரிக்காவுல 4Gயே வந்துடுச்சி! அமெரிக்காவோட தகவல் தொழிநுட்பத்துறையோட இந்தியாவை ஒப்பிடுறியே! அறிவுப்பா நீ!!அங்க ஃபோன் கூடத்த்தான் ஃப்ரீயா குடுத்து ரெண்டு வருஷம் கான்ட்ராக்ட் போடுறான்! அந்த ஃபெசிலிட்டி அங்க வந்து அஞ்சாறு வருஷம் ஆகுது! இந்தியாவுக்கு இப்போ தான் வருது! இதிலிருந்தே தெரியலியா வெண்ணை??
//தி.மு.க விற்கு எவ்வாறு சொம்பு தூக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை,//
நீங்க யாருக்கு சொம்பு தூக்குறதுக்காக இத எழுதியிருக்கீங்க அய்யா
//, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................//
இத நீங்க கேக்குறீங்களா அய்யா??
இணைத்து விட்டென்.சில சமயம் தமிழ் மணம் குழம்ப்பம் தரும் பிறகு சரியாகி விடும்.
கலக்குங்க.
நன்றி
//ஏன்யா உளருற?? TRAIனா என்ன அதோட பணிகள் என்னான்னு கூட உனக்கு தெரியாதுன்னு இதிலிருந்தே தெரியுது!! முட்டாள்தனமா பேசக்கூடாது! அலைவரிசையை விற்றதின் மூலமா நட்டமில்ல, லாபம் மட்டுந்தான்னு TRAI சொன்ன பிறகும் மளிகை கணக்கு பாக்குற CAG கருமாந்திரங்க சொன்ன முட்டாள்தனமான புள்ளிவிவரத்தை தொங்கிகிட்டு இருக்க? சரி 1,76000 கோடி நட்டம்னே வெச்சுப்போம்! சிபிஐ ஏன் முப்பதாயிரம் கோடிதான் நட்டம்னு தன்னோட ரெண்டாவது குற்றப்பத்திரிகைல சொல்லியிருக்கு?
//
TRAI யின் வேலை என்னான்னு கொஞ்சம் சொல்றிங்களா?
//அமெரிக்காவுல 4Gயே வந்துடுச்சி! அமெரிக்காவோட தகவல் தொழிநுட்பத்துறையோட இந்தியாவை ஒப்பிடுறியே! அறிவுப்பா நீ!!அங்க ஃபோன் கூடத்த்தான் ஃப்ரீயா குடுத்து ரெண்டு வருஷம் கான்ட்ராக்ட் போடுறான்! அந்த ஃபெசிலிட்டி அங்க வந்து அஞ்சாறு வருஷம் ஆகுது! இந்தியாவுக்கு இப்போ தான் வருது! இதிலிருந்தே தெரியலியா வெண்ணை??//
அமெரிக்கா காரன் சாட்டிலைட் தங்கத்துலயா செஞ்சிருக்கு, அதே தானே நாமும் பயன்படுத்துறோம்!
இன்றைய சூழலில் ஒரு பயன், உலக மயமாவதற்கு எத்தனை வருடங்களய்யா எடுத்துக்கொள்வீர்கள்!?
//தி.மு.க விற்கு எவ்வாறு சொம்பு தூக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை,//
நீங்க யாருக்கு சொம்பு தூக்குறதுக்காக இத எழுதியிருக்கீங்க அய்யா//
என்னை விட உயர்ந்தவன் என்று இங்கே யாருமில்லை
என்னை விட தாழ்ந்தவன் என்றும் இங்கே யாருமில்லை!
நானும் யாருக்கும் சொம்பு தூக்க மாட்டேன், எனக்கும் யாரையும் சொம்பு தூக்க அனுமதிக்க மாட்டேன்!
//, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................//
இத நீங்க கேக்குறீங்களா அய்யா?? //
இதை கேட்க ஜார்ஜ் புஷ்ஷா வருவான்?
என் வரிப்பணமய்யா நான் தான் கேட்பேன்!
இதில் யார் யார் எல்லாம் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்ற கொஞ்சம் வெளி வந்த அதிகம் விவாதிக்கப் படாத பதிவு
http://reverienreality.blogspot.com/2011/05/2-g-spectrum-where-does-buck-stop.html
///அவரது வாதத்தின் படியும் மற்றும் பல்வேறு கழக சொம்புதூக்கிகளின்
வாதத்தின் படியும் ///
:))
பிரகாஷ் என்கிற அல்லக்கைக்கு ஒரு பதிவு.
அது திருந்தாத ஜென்மம். இதேபோல் லக்கி நக்கி - ன்னு இன்னொரு அல்லக்கை.
வால்பையனின் பதிவுகள் இடையில் கொஞ்சம் காணாமல் போயிருந்தது.. பின் விளம்பரத்திற்கு மட்டும் உபயோகப்படுத்தப்பட்டது.
இப்ப இந்த மாதிரி காரசாரமா அரசியல் பதிவுகள் எழுதி உங்க அட்டெண்டன்சை நிரூபிக்கிறீங்க போலயே????
எப்படியோ.. பதிவுகள் தொடர்ந்தா சந்தோசம் தான்.
கலைஞரின் அக்கா பாசம் இந்த காலத்தில் யாருக்கு வரும்? அக்கா பேரன்களுக்கு இப்படி வசதி யார் செய்து தருவார்கள்.பாசக்கார கலைஞர்.
உயர் ஜாதி மீடியாக்கள் ஊதிய மகுடியில் மயகியவர்களுக்கு புரியவைக்க முடியாது..
ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். CAG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.
ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?
1994 தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை
இக்கொள்கையின் அடிப்படையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு, ஒவ்வொரு நகருக்கும் தலா இரண்டு நிறுவனங்களுக்கு ஏலமின்றி மிகக் குறைந்த உரிமக் கட்டணத்தில் (உ.ம் - சென்னை RPG/Skycell: முதலாண்டுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.2 கோடி, 3 ஆம் ஆண்டுக்கு ரூ.4 கோடி) உரிமம் வழங்கப் பட்டது. M4.4 MHzஅலைக் கற்றையும் கட்டணமின்றி வழங்கப்பட்டது.
1995 - ஏலமுறை அறிமுகம்
மேலே குறிப்பிட்ட பெருநகரங்கள் தவிர, பிற 18 நகரங்களுக்கு ஏலமுறை அடிப்படையில் இரண்டு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வருவாயை எதிர்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களால் போதிய வருவாய் இல்லாததால் அரசிற்கு செலுத்த ஒப்புக் கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்தனர். சேவை விரிவாக்கமும் முடங்கியது. 1994 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்க நிலையை கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.50,000 கோடியை 1999ஆம் ஆண்டில் ரத்து செய்தது. புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்கியது.
1999 - புதிய தொலைத்தொடர்புக் கொள்கை
இந்தக் கொள்கையின்படி 2000-த்தில் BSNL/MTNL மூன்றாவது நிறுவனமாக செயல்பட அனுமதி வழங்கப் பட்டது. 2001 இல் 17 நிறுவனங்கள் ஒரு சேவைப் பகுதியில் 4 ஆவது நிறுவனமாக செயல்பட ஏலமுறை யில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இந்த ஏலக் கட்டணம் தான் ரூ.1658 கோடியாகும்.
2003- ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமம்
டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல. இந்த செயல்களை மறைத்து விட்டு, மறந்துவிட்டு பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தற்போது இராசா மீது பழிபோட முயற்சிக்கிறார்கள்.
முதலாவதாக, 2001-க்குப் பின்பு ராசா பதவி ஏற்கும் மே 2007 வரை, ஏலமுறை எந்த அமைச்சராலும் பின் பற்றப் படவில்லை. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமைக் கட்டணமாக ரூ.1658 கோடி என்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.8.2007இல் கூட டிராயின் வழிகாட்டுதலிலும் 2ஜி-க்கு ஏலமுறை தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (In the 2G bands (800 MHz, 900MHz, 1800MHz, allocation through auction may not be possible.)
இந்த அடிப்படையில்தான் 2008-லும் 122 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இது பற்றிய சர்ச்சை மற்றும் விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிறகும் இந்தக் கொள்கைகளில் வழிக்காட்டக் கூடிய TRAI அமைப்பும் 11.5.2010இல் 2ஜி அலைக்கற்றைக்கு ஏலமுறைதேவை யில்லை என்று குறிப்பிட்டுள்ளது. (Spectrum in 800, 900 and 1800 MHz bands should not subject to Auction).
தவிரவும், 3ழு சேவைக்கான 800, 900, 1800 MHz. MHz ஏலக்கற்றைகளுக்கு, ஏல முறையை பரிந்துரைத்து உள்ளது. இப்போதைய அமைச்சர் கபில்சிபல் அவர்களும் ஏலமுறை சிறந்த வழியல்ல (Auctions may not be the best way to award spoectrum) என்றும்,இது கட்டண உயர்விற்கே வழி வகுக்கும் என்றும், மீண்டும் 1995 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த ஏலமுறையை சுட்டிக் காட்டிக் கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே முந்தைய அமைச்சர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இராசா அவர்களும் உரிமங்கள் வழங்கியுள்ளார். எந்த புதிய நடை முறையையும் அவர் கையாளவில்லை.
For More Pls Read : http://naathigam.blogspot.com/2010/12/blog-post_24.html
//ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். CAG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது.//
அய்யா பிரகாஷ் புரிஞ்சு தான் பேசுறீங்களா? இல்ல எங்களை பார்த்தா உங்களுக்கு சொம்பைங்க மாதிரி தெரியுதா?
குறைந்த விலைக்கு வாங்கிய அலைகற்றையை மிக குறைந்த காலத்தில் வேறு நிறுவனத்திற்கு அதிக விலைக்கு அந்த நிறுவனங்கள் விற்று விட்டது, அந்த அளவுக்கு டிமாண்ட் இருக்கும் ஒரு விசயத்தை ஊழல் செய்து குறைந்த விலைக்கு விற்றுவிட்டு எப்படியய்யா இன்னும் உம்மால் ஜால்ரா அடிக்க முடிகிறது!
சோத்துக்கு உப்பு போடுறதே கிடையாதா?
//ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது. //
அதுக்கு ராசா தேவையில்லை, யார் இருந்தாலும் வளர்ச்சி அது தன் வேகத்தில் சென்று கொண்டு தான் இருக்கிறது!
ராசா எதையும் அன்ப்ளக் பண்ணவில்லை என்பதே உண்மை!
//ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?//
தி.மு.கவையும், காங்கிரஸையும் எதிர்க்கிறேன் என்பதற்காக ப.ஜ.க வை ஆதரிக்கிறேன் என்று நினைத்தீர்களா?
அதுக்கு தூக்கு மாட்டிகிட்டு சாவலாம்!
மதவாதம் என்றுமே ஏற்றுகொள்ள முடியாத ஒன்று!
To follow :)
//முந்தைய அமைச்சர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இராசா அவர்களும் உரிமங்கள் வழங்கியுள்ளார். எந்த புதிய நடை முறையையும் அவர் கையாளவில்லை.//
முன்னாடி இருந்தவன் திருடினான், அதனால் நானும் திருடினேன் என சொல்வது போல் இருக்கிறது!
ஏலம் எடுத்தவன் நட்டப்பட்டான் என்றால், ஏலம் எடுக்காமல் வாங்கியவன் எப்படி அதிக விலைக்கு விற்க முடியும்?
முதல் முறை ஏலம் இல்லாமல் கொடுத்திருக்கலாம், அதன் பிறகு அதன் லாபநஷ்டங்கள் தெரிந்திருக்குமே, தன் லாபத்திற்கு மேலாக யாரும் ஏலம் எடுக்க மாட்டார்களே, பின் எவ்வாறு சொல்ல முடிகிறது, ஏலம் சரியான வழியில்லை என்று!
பி.எஸ்.என்.எல் அரசு நிறுவனமாக செயல் படுகிறது, அது தீர்மானிக்கும் கட்டணத்தை விட அதிக கட்டணம் பிற நிறுவனங்கள் அமைக்கும் பட்சத்தில் அது தோல்வியில் முடியும் என்பதால் கண்டிப்பாக விலை உயர்வும் இருக்காது.
தல சூப்பர்!!சில வெக்க மானமில்லாத திமுக அல்லகைங்க ஜல்லியடிச்சிகிட்டு திரியுது!!நாராயானா இந்த கொசுக்களோட தொல்லை தாங்கலடா!!உட்டா தயாநிதி பச்ச புல்லைன்னு கூட சொல்வானுங்க!!
அண்ணே இங்க ஒரு அல்லக்கை!!
http://www.luckylookonline.com/2011/09/2-7000.html
ஹே..சிங்கம் களம் இறங்கிடுச்சேய்..அடிக்கடி எழுது தல..
அண்ணே இங்க ஒரு அல்லக்கை!!//
இது பெருசுப்பா..அண்ணன் ரொம்ப நாளா போராடிகிட்டிருக்கார்
அதுக்கு தூக்கு மாட்டிகிட்டு சாவலாம்!
மதவாதம் என்றுமே ஏற்றுகொள்ள முடியாத ஒன்று!//
நிச்சயமாக...அதே சமயம் யாரை இந்திய அளவில் ஆதரிப்பது..?காங்கிரஸ் வெற்றிக்கு காரணமே பா.ஜ வின் மதவாதம் தான்
தொலைபேசி இலாக்கா சங்கத்தினரை கேட்டால் ராசா,தயாநிதியின் அனைத்து வண்டவாளங்களையும் புட்டு புட்டு வைப்பர்..முதலில் ஸ்பெக்ட்ரம் பிரச்சனை எழுப்பி போராடியவர்கள் அவர்களே
நீண்ட நாட்களுக்கு பின்னான வால் பையனின் வருகை சந்தோஷமாக உள்ளது!!
கட்சிகளை விட்டுவிட்டு நடு நிலையா யாருமே ஏன் யோசிப்பதில்லைன்னு தெரியல :-(
இது நம்மளோட வரி பணமுன்னு எப்போ தெரியுதோ இல்ல புரியுதோ அது வரை கஷ்டம்தான் :-(
அடின்னா அடி அப்படி ஒரு அடி..! சம்மட்டியடி வார்த்தைகள்!பகிர்வுக்கும், உணர்வுக்கும் மிக்க நன்றி..! தொடரட்டும் உங்கள் அதிர்வேட்டுகள்!!
just for information:
அமெரிக்காவில் இருக்கும் தொலை தொடர்பு வசதியை விட இந்தியாவில் மிகவும் நல்லாயிருக்கு. அமெரிக்காவில் எங்கு பேசினாலும் லோகல்தான் ஆனால் incoming and outgoing calls & SMS என அனத்துக்கும் காசு. ஒரு சாமானியன் அமெரிக்காவில் செல்போன் பயன்படுத்த முடியாது. வெறும் incoming மட்டும் பயன்படுத்த மாதம் குறைந்தது 30$ ஆகும்.
அமெரிக்க ஒரு பணக்காரர்களின் கொள்ளை கூட்டம்.
என்கிட்டே இவன உடுன்கையா கொமட்லியே குத்துனா என்னென்னா ஊழல பணம் என்கிருக்குன்னு தெரியும்!கொய்யால அப்படியே நடிப்பான்!!அப்புறம் அந்த ராசா கனி ஜோடி!!Bonnie and clyde போல!!என்னய்யா நடக்குது நாட்ல?
சூப்பர் பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
வெக்கமாயில்லை, ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் வியர்வையும் தான் இந்தியா, நீ வெளிநாட்டு வங்கியில் கோடி கோடியாய் சேர்க்க இப்படி ஊழலால் ஏமாற்றி கொண்டிருக்கிறாயே!, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................
ithu ithaithan nanga 1968 la irunthu kekkuram. aanalum sanagalukku puriyavillai.
appa ariyamaiyil aathariththarkal.
ippo aathayaththukka atharikkirarkal.
தம்பி உன்கிட்ட ஒரு நெருப்பு பொறி இருக்குப்பா
பெரிய ஆளா வருவ போல
சும்மா பின்ன்றப்பா
உன் எழுத்த பாத்து
நடுங்கி போயிட்டேன்
Post a Comment