ஜப்பானில் இன்று மதியம் 2:46 மணிக்கு (JST) ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. அதனினும் கொடுமையாக 900 கிமீ வேகத்தில் சுனாமி அலைகள் ஜப்பான் நாட்டை சூறையாடியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பாரிய பேரிடர் ஏற்பட்டதில்லை என கருதப்படுகின்றது. உலகே ஒன்றிணைந்து ஜப்பானை கட்டியெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில அவசர கால உதவிகளை பல்வேறு அரசுகளும், நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றிய தகவல்களை பலருக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் இடர்ப்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை, காணாமல் போயிருப்பவர்களைக் கண்டறிவதில் உதவுவோம்.
----------------------------------
ஜப்பானில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் அறிய, டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஏறத்தாழ 25000 இந்தியர்கள் ஜப்பானில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
00813 32622391
00813 32622392
00813 32622393
00813 32622394
00813 32622395
00813 32622396
00813 32622397
----------------------------------------------------------
தொடர்பில் இல்லாமல் போனவர்களுக்கான தொடர்புகளை உறுதிபடுத்துவதற்கான சேவையை கூகிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. Japan Person Finder என பெயரிடப்பட்டுள்ள அத்தளம் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தகவல்களை அளிக்கின்றது. நீங்கள் அளிக்கும் தகவல்கள் உடனடியாக பதிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தவறான தகவல்களை அளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
----------------------------------------------------------
Japan Person Finder தளம் தவிர கூகிள் நிறுவனம் Crisis Management தளம் ஒன்றினையும் நிறுவியுள்ளது. அதன் மூலமும் பல தகவல்களை பெற முடியும்
----------------------------------------------
இப்பொழுது ஏற்பட்டுள்ள சுனாமி ஜப்பான் மட்டுமின்றி இன்னும் பல நாடுகளையும் தாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய அபாயங்களை விளக்கும் தளம் ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
---------------
இக்கட்டான தருணத்தில் நேரிட்டிருக்கும் இப்பேரிடர் பற்றிய உண்மையான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை பரவச் செய்து பாதிப்பில் இருந்து மக்களைக் காப்போம்.
நண்பர்கள் உங்கள் தளங்களில் இதை பகிர்ந்து கொள்ளலாம்!
முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகளாக எங்களின் மற்றொரு தளத்திலும், சேர்க்கப்படும்.
முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகளாக எங்களின் மற்றொரு தளத்திலும், சேர்க்கப்படும்.