அகிலா தலை வழியாக நைட்டியை மாட்டி கொண்டிருந்தாள், இந்த பாழாப்போன உடம்புக்கு ஆசைபட்டு மானம் போகப்போகுதேன்னு நெற்றியில் அடித்து கொண்டான் சுந்தர், ஆரஞ்சு உதட்டில் விரல் வைத்து உஷ்ஷ்ஷ்ஷ் என்றாள்!, சுற்றும் முற்றும் ஒழிய இடம் தேடியவள் சட்டென்று முகம் மாறினாள், பால்கனியை கைகாட்டினாள், அதை ஒட்டி செல்லும் வேஸ்ட் வாட்டர் பைப் மூலமாக கீழே போகலாம்! ஆனால் அது வழியாக திருடர்கள் வரலாம் என்பதால் இடையில் எங்கேயும் ஆணி அடிக்காமல் சுத்தமான வழுக்கு கம்பம் போல் இருந்தது!
ஊருக்கு போயிருக்குற என் பொண்டாட்டிக்கு தெரிந்தால் என்ன ஆகும்! தலையில் அடித்து கொண்டு ஒரேடியாக போய்விடுவாள், இருக்குற மானமும் சுத்தமாக போய்விடும், ஒருவேளை அவள் இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்தாள் என்ன பண்ணுவாள், சே சே அவ அந்த மாதிரியெல்லாம் பண்ண்மாட்டாள், இப்படி நம்பி தானே இந்த ஆம்பளைங்க தப்பு பண்றோம், விரக்தியில் செத்து போகலாம் போல் இருந்தது சுந்தருக்கு, அகிலாவோ அவன் தலை மறந்த பின்னர் தான் கதவை திறக்க முடியும், அடுத்த பெல் சத்தமும் கேட்டது!

சுந்தர் கம்பியில் கால் வைத்து வெளிபுறம் வந்தான், பைப்பை இறுக பற்றியதும், பால்கனி கம்பியியிலிருந்து கையை எடுத்தான், அடுத்த நொடி சர்ர்ர்ர்ரென்று அவனது உடல்எடை பூமிக்கு துரோகம் செய்யாமல் அவனை கீழே இழுத்து சென்றது, பொத்தென்ற சத்தம் சுத்தமாக என்ன நடந்திருக்கும் என்று அகிலாவுக்கு உணர்த்தியது, கண்களை துடைத்தவாறு கதவின் தாழ்பாளை நீக்கினாள், வெளியே இரண்டு இளைஞர்கள்!
யார் நீங்க? என்றாள் அகிலா, இங்க பிரதீப்னு சாஃப்ட்வேர் இஞ்சினியர் குடியிருந்தாரே!, அகிலா முகம் சிவந்தது, பிரதீப்பா, அறிவு கெட்ட முண்டங்களா!, இது என்ன குடியிருக்குற வீடா இல்ல லாட்ஜாடா, நடுராத்தியில வந்து கதவை தட்டிட்டு பிரதீப் எங்கேனு எங்கிட்ட கேக்குற, இல்லய்ங்க என்ற சொல்ல வாயெடுத்த இளைஞர்களை பேசவிடவேயில்ல அகிலா!, போங்கடா அந்த தறுதல வீடு மேலயிருக்கு, தினம் ராத்திரியான குடிச்சிட்டு கூட்டமா சேர்ந்து ஆடவேண்டியது, உங்களை சொல்லி குத்தமில்லடா, இந்த செக்கரட்டரிய சொல்லனும், வாடகை வருதுன்னு மொட்டபசங்களை குடிவைக்கிறான் பாரு, நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுக்குறேன்!
கோபத்தோடு படாரென்று கதவை சாத்தினாள் அகிலா!