திருமண அழைப்பிதழ்

எனதன்பு நண்பர்களுக்கு,

வரும் 30.11.2008 ஞாயிற்று கிழமை எனது தம்பிக்கு மதுரையில் திருமணம்.
விடாது பெய்த மழையினால் நிரைய நண்பர்களுக்கு நேரில் அழைப்பிதழ் தர முடியவில்லை, மன்னிக்கவும்.

நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று வந்து வாழ்த்துமாறு கேட்டு கொள்கிறேன்.

மதுரை வில்லாபுரத்தில் மீனாட்சி நகரில் சங்கரநாராயணன், சரோஜினி அம்மாள் திருமண மண்டபத்தில் கல்யாணம். நீங்கள் வில்லாபுரம் பழைய மது தியேட்டர் அதுவே இப்போ புது வெற்றி தியேட்டர் என்று கேட்டு வந்தால் போதும், உங்களை அழைக்க நானே வந்து விடுவேன்.

எனது அலைபேசி எண் 9994500540

நேரமிருப்பின் வந்து வாழ்த்துமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

நன்றி



மெளனமும் ஒரு மொழி தான்!!

சிறகில்லாமல் பறந்தோம்!
உலகு மொத்தமும் துறந்தோம்!

நாம் காதலின் இலக்கணம் என்றோம்!
நம் காதலில் தலைக்கணம் கொண்டோம்!

நீ இல்லாமல் செத்து போவேன் என்றோம்!
தடைகள் கடந்து திருமணம் செய்தோம்!

இன்று
என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை!

இப்பொது தோன்றுகிறது,
முதன்முறை பார்த்த போது

பேசாமலே இருந்திருக்கலாமென்று!



இது சும்மா லுலுலாயி

சும்மா ஒருநாள் சண்டை வந்தா இப்படி தான் கிறுக்குவேன்

ஈரோட்டில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பு

கடந்த வாரம் சென்னை பதிவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே! அதை நமது பரிசலும் பதிவு மேல் பதிவாக போட்டு கலக்குவதும், மொத்த பதிவுலகமும் அறியும். அதை போலவே ஈரோட்டில் ஒரு சந்திப்பு நடத்துவது என்று ஈரோட்டு இலக்கியசிங்கம் நந்து அவர்கள் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

அங்கிருந்து ஒரு ரிப்போர்ட்
கலந்து கொண்டவர்கள்:
நந்து f/o நிலா
கார்த்திக்(வால்பையன் பாஸ்)
வால்பையன்
கூடுதுறை
ஆர்.கே.சதீஸ்குமார்

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கூட்டம் ஆரம்பிக்கிறது

கார்த்திக்: அண்ணா நீங்க உக்காந்து பேசுங்க நான் போட்டோ எடுத்துகிறேன்

நந்து: நீயும் உட்காரு கார்த்திக் அப்புறம் எடுத்துக்கலாம்

கார்த்திக்: இல்லணா, போட்டோ எடுக்குறது எனக்கு பிடிக்கும் ஆனா போட்டோ எடுக்குறது நானா இருக்கனும்.

வாலு: இந்த இடம் சரியில்லை, எதாவது நல்ல ஒயின்ஷாப்பா உட்காந்து பேசுவோமா

கூடுதுறை: ஆரம்பிச்சிடியா, கொஞ்சம் நேரம் சும்மா இரேன்யா!

சதீஷ்: உங்க ராசிக்கு நீங்க புஷ்பராக கல்லு போட்டா குடிக்காம இருப்பிங்க வால்.

வாலு: மத்த குடிகாரங்களையும் நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்துறேன்.

வாலின் போன் அடிக்கிறது(போனில் சஞ்சய்)
சஞ்சய்: கூட்டம் எப்படி போகுது

வாலு: எங்கே போகுது, பஜனை மாதிரி இருக்குது, ஒரு சரக்கில்ல, சைடிஷ் இல்ல

சஞ்சய்: ஆரம்பிச்சிடியா, சரி நான் சொல்றது கேளு, நந்து என்ன பேசுராரோ, அதை அப்படியே எனக்கு அனுப்பீறு

வாலு: ஏன்?

சஞ்சய்: அப்போ தான்யா, அவர காலாய்ச்சி பதிவு போட முடியும்

வாலு: அது சரி, உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா!

புது பொண்ணு காயத்திரி ஆஜர்.

நந்து: வாம்மா காயத்திரி, என்ன விஷேசம்,

காயத்திரி: வணக்கம், வரும் டிசம்பர் நான்காம் தேதி

நந்து: நிறுத்து நிறுத்து என்ன இங்கே வந்து செய்தி வாசிக்கிற

காயத்திரி: இல்லைனா, பழக்க தோஷம் அப்படியே வந்துருச்சு

நந்து: சரி எல்லாத்துக்கும் பத்திரிக்கை கொடுத்துரு, நாங்க வந்துருர்ரோம்

பத்திரிக்கை கொடுத்துவிட்டு காயத்திரி கிளம்புகிறார்.

கார்த்திக்கின் போன் அடிக்கிறது(போனில் பரிசல்)

பரிசல்:என்ன கார்த்திக் சந்திப்பு நல்லா போகுதா?

கார்த்திக்: நடக்குது நடக்குது

பரிசல்: நந்து எதாவது பொன்மொழி சொல்லியிருப்பாரே!

கார்த்திக்: போன தடவை என்ன சொன்னாருன்னு ஞாபகம் இருக்கா?

பரிசல்: தினம் வரும் போன் அழைப்புகளில் முப்பது சதவிகத்திற்க்கு மேல் பதிவுலக அழைப்புகள் இருந்தால் தொழிலை விட்டு விலகுகிறோம் என்று அர்த்தம்னு சொன்னாரு

கார்த்திக்: தினம் வரும் அழைப்புகளில் ஒரு அழைப்பு கூட பதிவுலகதிலிருந்து வரலைனா நாம பதிவுலகத்த விட்டு விலகி போகிறோம்னு அர்த்தம்ன்னு இப்போ சொன்னாரு!

பரிசல்: ஐயய்யோ இன்னைக்கு ஒரு போனும் வரலையே! சரி வையுங்க, முதல்ல இந்த மேட்டர பதிவா போடனும்.

போனை வைக்கிறார்.

நந்து: என்ன கார்த்தி என்ன வச்சிக்கிட்டே கலாய்கிற.

கார்த்திக்: அத விடுங்கண்ணா, என்ன போட்டோ எடுத்திங்க

நந்து: சொல்ல மறந்துட்டேன், ஆஸ்திரேலியாவுலருந்து பறவைகள் வெள்ளோடு சரனாலயம் வந்துருக்காமாம்.

வாலு: பறவைகள், ஆஸ்திரேலியாவுல கிளம்பும் போதே உங்களுக்கு தந்தி அடிச்சிருமா,

நந்து: இந்த ஆளுக்கு ஊத்தி விட்டு மட்டையாக்குங்கய்யா!

கார்த்திக்: சரிண்ணா நாம நாளைக்கே வெள்ளோடு கொளம்புவோம்,

கூடுதுறை: அப்போ ஆபிஸு

கார்த்திக்: அதல்லாம் வாலு பாத்துகுவாரு

கூடுதுறை:(மெதுவாக) பாத்துகோ சதிஷு, ஓனரு போட்டொ எடுக்க போயிடுராரு, வாலு ஒரு ப்ளாக் விடாம கும்மி அடிக்கிறாரு.

வாலு:சரிங்க வெயிலு அதிகமா இருக்கு, ஒரு பீராவது அடிச்சிகிட்டே பேசலாமே

எல்லாரும்: உங்கூட சேர்த்தா எங்களையும் வீட்டுகுள்ள விடமாட்டாங்க, நீ வேணா கிளம்பு

வாலு கிளம்ப, அதன் பிறகு கூட்டத்தில் என்ன நடந்ததுன்னு வேற யாராவது எழுதுவாங்க!






செக்ஸ் மட்டும் தான் காரணமா?

பரிசல்காரரின் செக்ஸ் தான் காரணமா? என்ற பதிவுக்கு பல்வேறான காரணங்கள் சுட்டிகாட்டி பின்னூட்டம் வந்த்தது. ஆனால் எனக்குள் இது பற்றிய கேள்வி பல வருடங்களாக ஒளித்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் கடைசியில்,இங்கே அது பற்றி என்னுடைய புரிதல்கள்.
குறையிருந்தால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்.

விலங்கியல்.

மனிதன் ஹோமோஎரக்டஸாக இருந்த காலத்திலிருந்தே அவனது உண்மையான தேவை, உணவும்,உறவும் மட்டுமே. அதாவது உயிர் வாழ உணவு, இனத்தை விருத்தி செய்ய உறவு.
இன்றய மனிதனின் மற்ற தேவைகள் எல்லாம் சுயசொறிதலே!.அன்றைய காலத்தில் உணவுக்கு எவ்வளவு கடினப்படனுமோ அதே அளவு அவனது துணையையும் பாதுகாக்க வேண்டும்.இல்லையென்றால் வேறு எவனாவது தூக்கி போய்விடுவான். குரங்கின் மீதுசெய்த ஆராய்ச்சியில் இது தெரிய வந்திருக்கிறது. மற்றொன்று பெண் விலங்குகளின் குணம், பாதுகாப்பு மற்றும் சிறப்புமிக்க சந்ததியினர். அதற்க்காக ஒரு கூட்டத்தில் யார் பலம் வாய்ந்த தலைவனோ அவனையே துணையாக அடைய நினைக்கிறது.


அறிவியல்

”மனித உடற்கூறுகள்” பாடத்திட்டதில் விலங்கியல் பிரிவிலே தான் வருகிறது. பாடத்தில் இனபெருக்க உறுப்புகளை பற்றி மட்டும் சொல்லி கொடுத்தால் போது என்று இந்த சமூகம் நினைக்கிறது. செக்ஸ் பற்றிய அறியாமையும், மூடநம்பிக்கையும் இங்கேயே ஆரம்பித்து விடுகிறது. இது பற்றி நிறைய விசயங்களை விவாதிக்கலாம், ஆனால் பதிவு திசைமாறி போகும் என்பதால் வேண்டாம்.


உடலியல்

மற்ற விளையாட்டுகளில் ஒருவர் வெற்றி பெற ஒருவர் தோல்வி அடைய வேண்டும் என்பது தான் விதி,ஆனால் செக்ஸில் மட்டுமே இருவரும் விளையாண்டு இருவரும் வெற்றி பெறுவது என்று ஒரு சொலவடை உண்டு, இங்கே எத்தனை ஆண்கள் பெண்களுக்கும் உணர்வின் எல்லை உண்டு என்று அறிகின்றனர். ”பிரிமெச்சூர் இஜாக்குலேஷன்” என்பது ஒரு குறைபாடு,அதற்கு சிகிச்சை உண்டு என்று எத்தனை ஆண்களுக்கு தெரியும்.
அதை கூட பொறுத்து கொள்வாள் பெண், ஆனால் அவளை ஒரு இயந்திரம் போல பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்.கட்டிய மனையிவாக இருந்தாலும் அவளின் விருப்பமில்லாமல் தொடுவது வன்முறைக்கு சமமென்று எத்தனை ஆண்கள் ஒத்துகொள்கிறார்கள்.

என் துணையை தேர்ந்தெடுத்து கொள்வது அவரவர் உரிமை என்று ஓரினசேர்க்கையாளர்கள் உரிமை கோருகிறார்கள், ஆனால் தன் கணவன் ஒரு bi-sexual என்பதை ஒரு பெண் எவ்வாறு ஏற்று கொள்ளமுடியும்.
நான் ஆண்,அதனால் எத்தனை பெண்களிடம் வேண்டுமானாலும் தொடர்பு வைத்து கொள்வேன் என்று சொல்லும் ஆண்களை நீங்கள் பார்த்ததில்லையா?
பெண்களின் உடல் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு ஆணை அவள் எப்படி ஆணாக ஏற்றுகொள்வாள்.


உளவியல்

பேசினால் தீராத விசயமில்லை என்பதால் தான் உளவியலில் கவுன்சிலிங் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பத்தை பொறுத்தவரை சராசரியாக பார்த்தால் வாரத்துக்கு ஒரு மணீநேரம் மனையிடம் கணவன் பேசுவது அரிது. அதே நண்பனுடன் போனில் மணிக்கணக்காக அரட்டையடிக்க தயாராக இருப்பான். நாம் பேச தெரிந்த விலங்கு ஒரு ஆணுக்கு இருக்கும் பொதுவான எதிர்பார்புகள் பெண்னுக்கும் இருக்கும். ஒரு காதலியுடன் மணிக்கணக்காக பேசும் காதலன் அதே காதலி மனைவியாக வரும் பொழுது பழய காதலுடன் பேசுவது சிப்பிக்குள் முத்து.


சமூகம்

ஒரு பெண்ணை இயல்பு மீறி நடக்க வைப்பதும் இந்த சமூகமே! அதே பெண்னை குற்ற உணர்வால் தினம் தினம் சாகடிப்பதும் இந்த சமூகமே!. சமூகத்தின் மேல் எனக்கு பயங்கரமான கோபமிருக்கிறது. அது மட்டும் திட வடிவில் கிடைத்தால் சுக்கல் சுக்கலாக உடைத்து விடுவேன்.

சமூகம் என்பது என்ன? ந்ம்மை தவிர சுற்றி உள்ள அனைத்தும் சமூகம்.
அது எப்பொது உருப்படும்? பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பழக்கம் உள்ள வரை அது உருப்படாது.

ஒருவன் தவறு செய்கிறான் என்று சுட்டி காட்ட ஆயிரம் காரணம் சொல்லலாம்,ஆனால் எனக்கு தெரிந்த ஒரே காரணம், நான் ஒழுக்கமானவன் என்று சுய போஸ்டரே!இது அனைத்திற்க்கும் பொருந்தும்.

இங்கே நல்லவர்களாக வாழ்பவர்களை விட நல்லவர்கள் போல் நடிப்பதே அதிகம்.
இச்சமூகத்தில் பெண்ணுக்கு ஏது மதிப்பு, உரிமை,சுதந்திரம்.


ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம், இன்றிலிருந்து இருபது ஆண்டுகளூக்கு பெண் குழந்தைகளே பிறக்காது என்றால் என்ன ஆகும். ஒரு பெண்ணுக்கு மூண்று ஆண் துணை இருப்பார்கள். மறுக்கமுடியுமா உங்களால்.

*************************

இவ்விசயத்தில் குழந்தைகள் பாதிக்கபடுவது உண்மை தான், அதற்கும் இந்த சமூகம் தான் காரணம். இதை ஒரு பெரிய விசயமாக சொல்லி அந்த குழந்தையை வளர்க்க வேண்டியதில்லை என்பதே என் வாதம். ஆனாலும் எல்லா குழந்தைகளும் சமூக விரோதிகளாக வளருவதில்லை அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

26 வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண் தனது கணவரை விட்டு வேறொரு ஆணுடன் தன் குழந்தைகளுடன் இடம்பெயர்ந்தார். அந்த ஆண் அதற்கு பின் அந்த குழந்தைகளை தன் குழந்தைகளாக வளர்த்தார், படிக்க வைத்தார்,கல்யாணம் செய்து வைத்தார். இன்றும் அது தான் அவர்களது குடும்பம்.

அந்த பெண் என் அம்மா, அந்த ஆண் இருபத்திஆறு வருடமாக எனது தந்தை

பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்கள் வீட்டில் நான் தான் முத்தவன்,எனக்கு பிறகு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிக்காக தான் இந்த பதிவு.

வீட்டில் கடைசி என்று முடிவு செய்து விட்டதால்,செல்வ செழிப்போடு இருக்கட்டும் என்று செல்வம் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் குடும்ப பெயர் ராஜ், அதனால் அதுவும் கூடவே.
ரொம்பவே செல்லம். அதனால் ஒன்பதாவது பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு குடுத்தார்கள். ஆனால் என்ன சாபமோ தெரியவில்லை.யாருமே எங்கள் வீட்டில் ஒன்பதாவது தாண்டவில்லை.

கவனித்தலை விட புரிதலே பெரிது என்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் புரிந்து வைத்திருந்தனர். அதனால் படிப்பு இல்லை என்பது எங்களுக்கு ஒரு குறைவாகவே தெரியவில்லை. வாழ்வதற்க்கு எதாவது செய்ய வேண்டும்.அதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் படித்தவர்களுக்கே சவால் விடும் வகையில் சிறந்த வெல்டராக இருக்கிறார் கோவையில். புத்தகங்களில் அவரது ஆர்வம் எனக்கே ஆச்சரியம் தரும். ஒஷோவின் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். தத்துவங்களை பற்றிய தர்க்கம் எனக்கும் அவருக்கும் விடிய விடிய நடக்கும்.

இதெல்லாம் இப்போ ஆறு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.

சகோதர்களாக இருந்தாலும் நாங்கள் பழகுவது நண்பர்கள் போல தான். கரும்பிலிருந்து காமம் வரை விவாதிக்காத விசயங்கள் இல்லை.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல்லுகேற்ப நான் எவ்வளவு தான் ஓவராக மட்டையானாலும் சரியாக என்னை வீட்டில் சேர்ப்பதில் பெரும்பங்கு இவருக்கு தான்.

அந்த தம்பிக்கு தான் இன்று(7-11-2008) பிறந்த நாள். ஈரோட்டில் இருந்தால் பார்ட்டி தர்றேன்னு தான் சொன்னார். ஆனால் என்னுடய இன்னொரு தம்பியின் திருமணதிற்க்கு அழைப்பிதல் கொடுக்க மதுரை செல்வதால் முடியவில்லை.

இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.

போட்டோ இல்லாததால் போட முடியவில்லை

எல்லாம் முடிவுக்கு வந்தது!!

வெறும் கருத்து வேறுபாடுகளாக ஆரம்பித்தது.
எதோ இரு நாட்டுக்கு நடக்கும் போர் போல ம்ற்றவர்களால் ஆக்கபட்டது அறிந்ததே.
இந்த விவாதங்கள் எதாவது தெளிவை கொடுக்கும் என்று காத்திருந்தால், அது திசை மாறி எங்களுக்குள் பெரும் பகையை மூட்ட தெரிந்தது. நல்லவேளை கணத்தில் சுதாரித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

சில நண்பர்கள் அவர்களுடய கருத்துரிமைக்காகவும் தனியாக அவர்களது ப்ளாக்கில் இதே கருத்து வேற்றுமைகளை பற்றி எழுதிவந்தனர். அவர்களும் இது தேவையில்லாதது என்று புரிந்து நிறுத்தி கொண்டனர். ஆனாலும் பொழுது போகாத சில புல்லுருவிகள். இதை விடுவதாக இல்லை. சிறிது அணைவது போல் தோன்றினாலும். அதை ஊதி பெருசாக்குவதிலேயே பெரும் நேரத்தை செலவிட்டனர்.

எனது பதிவுகளில் ஆபாசமாக பின்னூட்டம் இடுவது, பின்னாலேயே அது அவன் தான் என்றும் பின்னூட்டம் இட்டு சண்டை முட்டி விடுவது. அதே போல் அங்கேயும் என் பெயரில் அதர்ஆப்சனில் ஆபாச பின்னூட்டம் இடுவது போன்ற இழி செயல்களை செய்து வந்தனர். ஒரே நாளில் பேசி தீர்த்திருக்க வேண்டிய பிரச்சனையை மற்றும் என்னை, அவர்களின் பிரச்சனைக்காக பலிகடாவாக ஆக்கி கொண்டார்கள்,அல்லது அவர்களின் பொழுது போக்குக்காக.

இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டி நான் லக்கியிடம் பேச விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன். மறுப்பேதும் கூறாமல் உடனே பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். எங்கள் சம்பாஷனையில் எனக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.

இப்பிரச்சனைக்கு முகம் தெரியாத அனானிகள் மட்டுமில்லாமல் கூடவே இருக்கும் சில நண்பகளும் அவர்கள் பங்க்குக்கு பெட்ரோல் ஊற்றி இருக்கிறார்கள், அது அவராகத்தான் இருக்கும் என்றும், இது இவராகாத்தான் இருக்கும் என்றும் அவர்கள் யூகத்தால் பூகம்பம் வரவழைத்திருக்கிறார்கள்.

இனி அது தேவைப்படாது நண்பர்களே இனி ஏதும் பிரச்சனை என்றால் நானே பேசி தீர்த்து கொள்கிறேன். உங்கள் போதைக்கு ஊறுகாயாக எங்களை ஆக்காதீ்ர்கள்.

இதுவரை என் மேல் நம்பிக்கை கொண்டு கடைசி வரை ஆறுதல் தந்த நண்பர்களுகும், கூடவே பழகியிருந்தாலும் நீ தானா அது என்று காயப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி.

போதைக்காரன்களின் ஆசை

சிக்கன்
மட்டன்
ஊறுகாய்
எதை கண்டாலும்
ஆசைப்படும்
குடிகாரனின் மனது

குடிகாரனின்
நண்பனுக்கும்
ஆசை வருவதுண்டு
”சம்பளம் வந்ததும்
நண்பனுக்கு குவாட்டர்
வாங்கி கொடுக்கனும்”

இந்த எதிர்கவிதையின் மூலம் எங்கே இருக்கு என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு, பத்து பின்னூட்டங்கள் பரிசு

நண்பர் புகழனுக்கு எதிர் கவிதை எழுதுவது தான் மிகவும் சுலபம்.
அவர்கள் பலவாறு யோசித்து எழுதுவார்கள், நமக்கு ஒரே கான்செப்ட் ”சரக்கு”

எந்த கவிதையாக இருந்தாலும் அதில் சரக்கை மைய படுத்தி யோசித்தால் வார்த்தை அப்படியே கொட்டுகிறது

போதையில் நான் .....

நீண்ட நெடிய பாட்டில்

சரக்கு இருக்கிறது

க்ளாசும் இருக்கிறது

தனி ஒருவனாக குடிக்கபோவதை நினைத்து

யாருமில்லா அறையில்

யாரை நான் கூப்பிடுவேன்!

எதை நான் கடிப்பேன்!

எங்கள் ஊர் குடிகாரர்கள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

காசில்லாத நேரத்தில் வாங்கி தந்த சரக்காக

நான் எத்தனை முறை வாங்கி தந்திருப்பேன்..!

நன்றியில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

துரோகங்கள் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

குடிக்கும் சரக்கில் போதை குறைவென்று;

சரக்கின் வாசம் என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் கொல்வேன் என்று..!

சியர்ஸ் சொல்ல யாருமில்லாவிட்டாலும்,

இதோ குடிக்க தொடங்கிவிட்டேன்!

போதையே அதிகமாக வேண்டாம்!

போதையில் வரும் கனவுகளாவது,

நல்லவர்களை எனக்கு காட்டுமா
..?

இந்த கவிதைக்கும் இவரின் கவிதைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ன

நடிகர்கள் உண்ணாவிரதம்!! 4




தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்ற ஆசையில் காலையில் எழுத ஆரம்பித்தேன்.
சரியாக சத்தியராஜ் பேசிகொண்டிருக்கும் நேரம் கரண்ட் போய் விட்டது. மடிக்கணிணியில் சக்தியும் குறைவாக இருந்ததால் மேலே எந்த கருத்தையும் என்னால் சொல்ல முடியவில்லை.

பின் நண்பர் பரிசலிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு எதாவது முக்கிய நிகழ்வுகள் நடந்ததா என்று வினவிய போது அவர் சொன்ன செய்து பெரும் மகிழ்சியை தந்தது.சத்தியராஜ் பேசி முடித்த பிறகு ரஜினி கட்டிபிடித்து பாராட்டினாராம். 

ஒகேனக்கல் பிரச்சனையில் மோதி கொண்ட இருவர் கண்டம் தாண்டிய பிரச்சனையில் ஒன்று கூடியிரிப்பது மகிழ்ச்சி தருகிறது. இன பிரச்சனையில் மொழி சார்ந்த விசயங்களை கடந்து கர்நாடகன், தமிழன் என்றில்லாமல் இந்தியன் என்று ஏற்பட்ட உணர்வை மதிக்கிறேன்.

மனிதன் என்ற உணர்வில் நம் சுயம் அறிந்து நடக்கும் உரிமை மீறல்கள் கண்டும் காணாமலும் போய்விடுகின்றன. சில நாடுகளில் உலகை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா செய்த அட்டூழியங்கள் இன்றளவும் உலக மனித நேய சங்கங்களினால் கண்டிக்கபட்டு வருகின்றன.

நம் இந்தியாவை பொறுத்தவை சமீபகாலமாக நடக்கும் நிகழ்வுகள், என்னை போன்று மனித நேயத்தை மட்டும் விரும்பி இறைமறுப்பு கொள்கையுடன் வாழ்பவர்களுக்கு பேரதர்ச்சியை தருகிறது. உதாரணம் மும்மையில் ந்டக்கும் இன வெறி.

அதையும் மீறி தமிழகத்தில் இன,மொழி பேதங்களை மறந்து இந்தியன் என்று ஒன்று கூடியிருப்பது, இனி இந்தியா எதை கடை பிடிக்க வேண்டும் என்று தமிழகம் சுட்டி காட்டியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

என் அன்பு நண்பர்களுக்கு ரஜினி அதை செய்தார்,இவர் இதை செய்யவில்லை என்று சொல்வதை விட ரசிப்பு தன்மை அவர்களது தொழிலோடு நிறுத்தி கொள்வது நல்லது.

சத்தியராஜ் பேசியது தமிழனாக வரிகட்டுவதால்
ரஜினி பேசியது தமிழனால் வரிகட்டுவதால்

நடிகர்கள் உண்ணாவிரதம்!! 3



அழைக்கும் முன்னரே ராதாரவிக்கு பதட்டம். அவர் மன்சூர் அலிகான்.
மன்சூரின் நக்கலுக்கு தான் சரியான கைத்தட்டல். பெரிதாக உணர்சிவசப்படுவார் என ராதாரவி முன்னரே எச்சரிக்கை விடுத்ததும்,மைக்கின் முன் வந்தவுடன் பேச முடியாத ஊமை போல் நடித்து அசத்தினார். பின்னர் என் சகோதரனின் துயரத்தை பேசகூடமுடியவில்லை என்று சூடாக பேசினார். ஆவேசமாக பேச கூடாது என்ங்கிரீர்களே,பின் ஏன் சினிமாவில் கதாநாயகன், வில்லனை அடிக்க வேண்டும். ஐயா ஐயா நீங்க ரொம்ப நல்லவரு தயவுசெய்து ஹீரோயின விட்ருங்க என்று கெஞ்ச வேண்டியது தானே என்றார். பாயிண்ட் எனக்கு சரியா தான் படுது. ஒரு வில்லன் நடிகருக்கு இருக்கும் மனிதநேயம் கதாநாயகர்களுக்கு இல்லை. 

நடிகரல்லாது ஆனாலும் நடிகர்களை பாராட்ட வந்த வெள்ளையனை எல்லா நடிகர்களும் பாராட்டினர்.

அஜித் உண்மையிலேயே சாப்பிடால் வந்திருப்பார் போல,அவரால் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை.

மற்றவர்கள் பேவதை காட்டிலும் ரஜினி,கமல் தங்களுக்குள் பேசி கொண்டிருப்பதே அடிக்கடி காட்டி கொண்டிருந்தார்கள்.

ரஜினி எந்திரனுக்கு தயாராகி விட்டார் போல மழுமழு என்று வளித்து கொஞ்சம் வயதை குறைத்திருந்தார்.

மனோரமா ஆச்சி காலை ஏழு மணிக்கே வந்திருந்து தன் இனத்தின் மீதுள்ள பாசத்தை காட்டியுள்ளார்.

ராதாரவி யாரையும் சூடாக பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு பயங்கர சூடாக பேசினார்.  அரிதாரம் பூசியர்கள் கூட்டத்திற்க்கு வர வேண்டாம் என்று சொன்னவர்களை சாடினார். அது யாரென்று தெரியவில்லை.  இயக்குனர்கிங்க்கே வெளிச்சம்.

பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி விளம்பரம் போட்டு உயிரை வாங்கிய சன் நிறுவனத்துக்கு திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமையை தரக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

மீண்டும் ராதாரவி
 இலங்கை வாழ் தமிழர்களுக்கு இன ரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக ஒருவன் தூக்குமேடையிடம் சண்டையிட்டு கொண்டிருக்கிறான். அவனுக்காக இந்தியாவே குரல் கொடுக்கிறது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் சகோதரனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே குரல் கொடுக்கப்படுகிறது. அதனால் இனி அவனை ஈழதமிழன் என்று அழைக்கவேண்டாம். அவனை இலங்கை வாழ் இந்தியன் என்று அழைப்போம் என்றார்.

திருமாவளவன்
ராதாரவி சொன்னது போல் இலங்கை வாழ் தமிழர்கள் வந்தேறிகள் அல்ல!
அவர்களது பூர்வீகமே இலங்கை தான். சிங்களர் தான் வந்தேறிகள் என்றார். 

திருமா சொல்வது உண்மையென்றாலும் நமது பக்கத்து நாட்டில் கண்முன்னே நடக்கும் இன படுகொலைகளை பார்த்து கொண்டிருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு அழகல்ல

நடிகர்கள் உண்ணவிரதம் 2


சுந்தர் சி
இலங்கையில் ஒரு கதையுண்டு.  அது ஒரு காதல் கதை, ஒருநாள் ஒரு காதலர்கள் ஒரு நல்ல செய்தியோடு சந்திக்கிறார்கள், யார் முதலில் சொல்வது என்பதில் காதலன் முந்துகிறான். அவனது செய்தி சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிட அழைப்பு வந்திருக்கிறது, கேட்டவுடன் காதலியின் கண்ணில் நீர், உனது செய்தி என்னவென்று கேட்கிறான். அவள் சொல்கிறாள்,அடிமை ஈழத்தில் காதலர்களாக இருப்பதை விட சுதந்திர ஈழத்தில் கல்லறைகளாக இருப்பேன் என்று


அடிக்கடி விளம்பர இடைவேளை கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருக்கிறது.
அதிலும் வரவிருக்கும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தின் விளம்பரத்தை ஐம்பது தடவை பார்த்துவிட்டேன்.

விஜயகாந்த்
நடிகர் சங்கத்தில் மத்திய அரசையும்,மாநில அரசையும் கூடவே இலங்கை அரசையும் கண்டித்து பேசக்கூடாது என்று தடை விதித்து விட்டார்களாம். இருப்பினும் நான் எதிர்பார்த்ததை போலவே இந்த மேடையை பொதுகூட்ட மேடையாக பயன்படுத்தி விட்டார். பேச மட்டேன்,பேச மாட்டேன் என்று நிறையவே பேசினார்.
பேச்சின் முடிவில் மெழுகுவர்த்தி கொளுத்தும்போது கூடவே கார்த்திகும் கட்டிகொண்டது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

நடிகர் சங்கத்து பேச்சை முடித்து விட்டு விஜயகாந்த் வெளியே கிளம்பினார்(அப்போ உண்ணாவிரதம்) அங்கே தடை இருந்ததால் அரசியல் பேச முடியவில்லை என்று கூறிவிட்டு இன்றைக்கு நடக்கும் அரசாங்கம் ஈழ பிரச்சனையை சரியாக அணுகவில்லை, என்றும் ம்ற்ற விசயங்களை திசை திருப்பவே இதை பயன்படுத்துவதாகவும் கூறினார்.

எஸ்.ஜெ.சூர்யா
இவர் பேசியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
எதற்க்காக இலங்கை அரசை கொஞ்சவெண்டும். அவர்களுக்கு இங்கேயே ஈழமதுரை ஒன்றை தொடங்குவோம். ஈழசேலம் ஒன்றை ஆரம்பிப்போம் என்றார். குடும்பத்துக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும் போதும், நம் சகோதரர்கள் இங்கே நிம்மதியாக வாழ்வார்கள், இது எனக்கும் சரியாகத் தான் படுகிறது

நடிகர்கள் மேடையில் பேசிகொண்டிருக்கும் போதே உள்ளே வரும் நடிகர்களிடம் பேட்டி எடுத்து அலும்பு செய்தது சன் தொலைக்காட்சி, அதான் மேடையில் பேச போகிறார்களே அதற்க்குள் என்ன அவசரம் என்று தெரியவில்லை.

நடிகர்களின் நன்கொடை அல்லாது கூடவே அவர்களின் ரசிகர்களும் நன்கொடை வழங்கியது, அவர்கள் மேல் கொஞ்சம் மரியாதை வர வைத்துள்ளது.




நடிகர்கள் உண்ணாவிரதம்!!

லேட்டாக எழுந்ததால் நான் பார்த்ததிலிருந்து ஆரம்பம்
அதிலும் என்னை கவர்ந்தவை மட்டும்

பொன்வண்ணன்

இந்தியாவிர்க்கும்,இலங்கைக்கும் கருவறை உறவு,
ஆதாம்,ஏவாள் பிறந்தகாக கருதப்படும் லெமூரீயா கண்டத்தில் இந்தியாவும், இலங்கையும் ஒன்றாகதான் இருந்தது. 
கனடா,லண்டன் போன்ற நாடுகளில் இலங்கை தமிழர்கள் வாழ உரிமை அளிக்கப்படுகிறது.அங்கே அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு வாழ உரிமை இல்லை.இங்கே தான் அவர்கள் அகதிகள்.

ஷாம்
இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களே எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்

நடிகர்சிவக்குமார்
 தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் உடன் வந்திருந்தார்.
அவர்கள் சார்பாக ஐந்துலட்சம் நன்கொடையாக கொடுத்தார்.
 பிரதமர் அனுமதியுடன் கலைஞர் மற்றும் தமிழ் தலைவர்கள் இலங்கை சென்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவது அவரது நீண்ட நாள் கனவாக இருக்கிறது என்றார்.


மணிவண்ணன்
மற்றவர்கள் போல் அல்லாமல் இவர் சிறை சென்று திரும்பிய சீமானுக்கும், அமீருக்கும் வணக்கம் சொன்னார்.உலகில் பலநாடுகளில் மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படலாம். ஆனால் எங்கேயும் உயிர்வாழும் உரிமை மறுக்கப்படவில்லை, ஆனால் இலங்கையில் வாழும் நமது சகோதரர்களுக்கு மறுக்கபடுகிறது என்றார்.

விவேக்
தமிழன் எந்த ஊருக்கு சென்றாலும் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த இடம் முன்னேற உழைக்கிறான், ஆனால் கடைசியில் அவன் தான் ஏமாற்றபடுகிறான். அதை உணர்ந்த பின் தான் போராட்டம் என்றார்.

இளவரசு
நாடெங்கும் மிருகங்களின் உரிமையை பாதுகாக்க மிருக வதை சட்டம் இருக்கிறது. ஆனால் மனித வதை சட்டம் எங்கேயும் இல்லை. மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய சபைகளே அதை கண்டு கொள்வதில்லை என்றார்.


எழுத்து பிழைகளை பொறுத்தருள்க



!

Blog Widget by LinkWithin