மொத்த நிலத்தையும் சுத்திபார்க்க முடியலன்னு சொன்னதுக்கு சின்ன தாத்தா சின்னையாவுக்கு பெரிய தாத்தா மாயன் வெள்ளகுதுர வாங்கி கொடுத்தாராம்.
மதுரையில் திருபரங்குன்றம் போற வழியில் ரெண்டாவது பாலத்துக்கு கீழே மீனாட்சி மில் இருந்தது. அதுக்கு நேர் எதிரே ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார்கள். எங்க தாத்தா தான் மூத்தவரு. அவரு கல்லாவை பார்த்துக்க அடுத்த தாத்தா கட்டகருப்பன் வெளிய போய் சாமான் வாங்கிட்டு வர்ற வேலையை பார்த்திருக்கார்.
ஒருநாள் உசலம்பட்டில் கிணறு வெட்டும் வேலையா பெரிய தாத்தா போயிருந்த போது பீரோவில் இருந்த 35,000 பணத்தை காணவில்லை. அங்க காலத்தில் ஒரு பவுன் தங்கமே 150 ரூபாய்க்கும் குறைவு தானாம்.
மனசு வெறுத்த தாத்தா எனக்கு ஹோட்டலே வேணாம், உசிலம்பட்டிக்கே போறேன்னு போயிட்டார். இப்ப சுந்தராஜபுரம் மார்க்கெட் இருக்கு தெரியுமா, அதிலிருந்து ஆண்டாள்புரம் வரை இன்னொரு தாத்தாவும் அவர்கள் பங்காளியும் விவசாயம் பார்த்துருக்காங்க.
அந்த இடம் எங்களோடதுன்னு நான் பட்டா கேட்ட போது தாத்தாவோட பங்காளி வாரிசுகளும் போட்டிக்கு வந்தாங்க. நியாயமா உட்காந்து பேசி தீர்க்க வேண்டியது பிரச்சனை. அருவா, வேல்கம்புன்னு தூக்கிட்டு மல்லுக்கு நிற்க(நானும் முதுகில் அருவா சொருக்கிட்டு சுத்தியிருக்கேன்)
அப்போ துணை மேயரா இருந்த மிசா பாண்டியன் குட்டைய குழப்பி யாருக்கும் இல்லாமல் பண்ணிட்டார். இத்தனைக்கும் மிசா பாண்டியன் எங்களுக்கு சொந்தகாரர் தான். எனக்கு சித்தப்பா முறை. அந்த இடம் இப்போ யாருக்கும் இல்லாம அரசு எடுத்துகிச்சு.
உசிலம்பட்டி இடத்தை இப்போ தான் தாத்தா பேர்களில் பதிந்து இப்போ உயிரோட இருக்கும் தாத்தாவின் ஒரே வாரிசான ஜெயபால் பெரியப்பாட்ட கொடுத்திருக்காங்க. எங்களுக்கு அதிக பங்கு வரணும்னு யாரோ ஏத்திவிட்டு எங்கண்ணன், பெரியப்பாவை அடிச்சுபோட்டார். இது வழக்கமா எங்க குடும்பங்களில் நடக்குறது தான். எங்க தாத்தாவே பெரியப்பா அடித்து தான் செத்துபோனாராம்.
எங்கண்ணன் எங்களை பேச அழைத்த போது எங்களுக்கு எந்த விபரமும் தெரியாது. பெண் வாரிசுகளும் பங்கு கேக்குறாங்க. தலைக்கு 15 ஏக்கர் பக்கம் எதிர்பார்த்தோம். இப்ப கம்மியா தான் வரும் போல.
முன்ன ஒருக்கா உங்க வாழ்க்கை லட்சியம் என்னான்னு கேட்டாங்க. இப்ப கேட்டா இயற்கை விவசாயம் பாக்குறதும், சாவறதுகுள்ள கடன் எல்லாத்தையும் அடைக்கிறது தான் என்பேன்.
நான் சாதி மறுப்பாளன், எனக்கு வேற போட்டோ கிடைக்கல. இவரு தான் என்னோட தாத்தா