கொஞ்சம் உளவியல் பேசலாம் வாங்க!

ஹோட்டல் லாஸாகி, கடனாளி ஆகி சென்னைக்கு வேலைக்கு போனேன். அங்க கொடுத்த டார்கெட் பிரஸ்ஸரால் மன உளைச்சலாகி திரும்ப ஈரோட்டுக்கே வந்துட்டேன். சரியான வேலை எதுவும் அமையல, கிடைச்சதை பார்த்து வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தேன்.

அந்த நேரத்தில் தான் அப்பா சீரியஸா இருந்தாரு, நொறுக்கிட்டேன். நண்பர்கள் உதவியுடன் உயிரை காப்பாத்துன பிறகு வந்துச்சு அடுத்த அடி, என் தோளில் அமர்ந்திருந்த சுமை ஒன்று என்னை கூர்வாளால் குத்திக்கொண்டிருந்தது.

மன உளைச்சல் மனச்சிதைவு நிலைக்கு போனது, வார்த்தையால் எப்படி விவரிக்கிறதுன்னு தெரியல. முதல்ல தூக்கம் போச்சு, அப்புறம் என் மனசுக்குள்ள இன்னொரு பர்சனாலிடி உருவான மாதிரி ஆச்சு. லேசா கண்ணை மூடுனா உள்ளுங்கள்ள ரெண்டு பேர் பேசிகிட்டே இருப்பாங்க.

நீ தோத்துட்ட, நீ வாழ்றதே வேஸ்ட், எல்லாரும் உன்னை வெறுக்குறாங்கன்னு. ஆளவந்தான் படத்துல கமலை பல உருவங்கள் வந்து தொல்லை கொடுத்துகிட்டே இருக்குமே அது மாதிரி பலர் வருவாங்க. என்னை அறியாமல் என் மனசு அதை நம்ப ஆரம்பிச்சு. என்னை சுத்தி இருந்த எல்லாத்தையும் சந்தேகப்பட்டேன். யார்கிட்டயும் எதையும் பகிர்வதில்லை, எல்லாரும் என்னை வாழவிடாம அவமான படுத்தி தற்கொலை செய்துக்கனும்னு நினைக்கிறாங்கன்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும்

அடுத்த கட்டத்துக்கு போச்சு மனச்சிதைவு. பைப்ல இருந்து வர்ற தண்ணி, வண்டி ஓடுற சத்தம், ஃபேன் சுத்துற சத்தத்துல எல்லாம் குரல் கேக்க ஆரம்பிச்சது, இசையமைப்பாளர் போடும் டியூனுக்கு பாடலாசிரியர் எழுதும் வசனம் போல மனம் மாயை பண்ணுச்சு. ஆனா நான் அதை நம்பும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தேன்.

அந்த மாதிரி நேரத்துல நம்மை நம்பும், நமக்கு நம்பிக்கை தரும் நண்பர்களால் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும். அந்த நேரத்தில் என்னை சுழலில் இருந்து கரை சேர்த்தது
Surya Prakash கூத்தன் Rakshasan Ganesamoorthy Lives-in Flux Karthik Ero ஈரோடு சசி வா.மு. கோமு இவுங்க தான்.

ஒரு கட்டத்தில் என் தோளில் இருந்த சுமையை இறக்கி வைக்கும் சந்தர்ப்பம் அமைந்தாலும் காயமான மனசு சட்டென்று ஆறவில்லை. எனது பிரச்சனைகள் தொடர்ந்தது. அந்த நேரத்தில் உள்ளுங்கள் நடப்பதை வெளியிருந்து கவனி என்ற ஆன்மிக பாணியில் போயிருந்தால் சிதைவு முத்தி எனக்கு கற்பனை உருவங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கும், அப்புறம் சிகிச்சை இல்லாமல் சமூகத்தில் நடமாட முடியாத நிலை தான் ஏற்படும். மனசிதைவு உள்ளவர்கள் இறந்தவர்களை பார்த்ததாக சொன்ன ரிக்கார்ட்ஸ் இருக்கு. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தால் கடவுளை பார்த்ததாக சொல்லியிருப்பேன், இல்லைனா நான் தான் கடவுள்னே சொல்லியிருப்பேன். நல்லவேளை ராமகிருஷ்ண பரமஹம்சர் தொட்ட சிதைவுக்கு நான் போகல :)

 ஒருகட்டத்தில் கவுன்சிலிங் போயே ஆகனும்னு ஃபேஸ்புக்கில் புலம்பினேன், அதிலிருந்து வெளிவர நான் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன்.

பழசை மறக்க புதுசா எதாவது பண்ணுன்னு ரிசல்ட் சொல்லுச்சு, சோக/புலம்பல் கவிதைகள் எழுதுறதை விட்டுட்டு பொது அறிவு விசயங்கள் தேடுனேன். #சில_தகவல்கள் பிறந்தது.

அதை பார்த்த சிபிசெல்வன் மலைகள் இணைய இதழில் அறிவியல் கட்டுரைகள் எழுதச்சொன்னார். ஏற்கனவே உளவியல் பற்றி நிறைய ஆராய்ச்சி பண்ணி வச்சிருந்ததால் எளிமையாக புரியிற மாதிரி அதையே மாதம் இரண்டு கட்டுரை எழுதலாம்னு இருக்கேன்.(ப்ளாக்கில் என்னுடய அறிவியல் கட்டுரைகள் படிச்சிருப்பிங்கன்னு நம்புறேன், இல்லைனா சொல்லுங்க லிங்க் தர்றேன்)

கூடவே ஒரு வேண்டுகோள். உளவியல் பிரச்சனைகளை பேசிடனும். அதும் அதை பற்றி புரிஞ்சிவங்க கிட்ட. மத்தவங்கன்னா குரு குப்புற படுத்ததுருக்கான், ராகு நட்டுகிட்டதும் சரியாகிடும்னு முத்த விட்ருவாங்க. உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கோ நடவடிக்கையில் எதாவது வித்தியாசம் உணர்ந்தா/தெரிஞ்ச எனக்கு உள்டப்பியில் சொல்லலாம் அல்லது மெயில் பண்ணுங்க. arunero@gmail.com போன் நம்பர் 9003063176

பேசலாம் நிறைய

!

Blog Widget by LinkWithin