கேள்வி, பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது எனது தேடலை அதிகபடுத்தவேயன்றி நான் எல்லாம் அறிந்தவன் என பறைச்சாற்றி கொள்ள அல்ல என்பது அனைத்து நண்பர்களுக்கும் தெரியும். நான் எதிர்பார்த்த, எனது பழைய சிந்தனைகளை தூண்டிவிடக்கூடிய கேள்விகள் தம்மை வெளிபடுத்திக்கொள்ளா விரும்பாத ஒரு நண்பரிடம் இருந்து வந்திருக்கிறது, கேள்விகள் குறைவு தான் என்றாலும் அதன் தாக்கம் மிகப்பெரிது. எனது புரிதலை நான் எங்கே பதிவாக இடுகிறேன், உங்கள் புரிதல்களை பின்னூட்டமாகவே தேவைப்பட்டால் பதிவாகவோ இட உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
விவாதம் தெளிவுறவேயன்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல!
**********
கேள்வி 1)
படைப்புவாத கொள்கை - அடிப்படையில் அனைவரும் சமமே என்று கம்யூனிசம் பேசுகிறது
பரிணாமக் கொள்கை - "survival of the fittest" என்று படிநிலையை ஆதரிக்கிறது.
ஆனால் -- நிஜத்தில் மதவாதிகள் படிநிலையை ஆதரிப்பவர்களாகவும், பரிணாமவாதிகள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களாகவும் இருக்கும் முரணின் மர்மம் என்ன ?? - இது விவாதத்துக்கு
அருமையான கேள்வி!, என்னை பலமுறை தூண்டிய கேள்வியும் கூட!
உயிரினங்கள் அனைத்தும் ஒரே கடவுளால் படைக்கபட்டதென்றால் அங்கே ஏற்ற தாழ்வே இல்லை.
பரிணாமத்தின் படி உள்ளது சிறத்தல் என்றால், நான் உன்னை விட சிறந்தவன் என காட்ட பரிணாமம் பயன்படுகிறது என்பது பொது புத்தியில் விழைந்த விதியாகவே எனக்குப்படுகிறது!
பரிணாம கோட்பாட்டின் படி மனிதனும் ஒரு விலங்கே, டார்வீனிஷ கோட்பாடு தம்மை உயிர்புடன் காத்துக்கொள்ளவும் மேலும் தம் சந்ததியினரை காப்பாற்ற அது செய்யும் வேலைகளையும் வைத்து சிறந்தது(நீண்ட காலம்) வாழும் என வகுத்தார்.
அவர் அதைசொல்லும் பொழுது உலகில் நிலபிரபுத்துவ ஏகாதிபத்தியம் நிலவிகொண்டிருந்தது. நாடு பிடித்தல் அல்லது புதிய தளங்களை கண்டுபிடித்தல் என எல்லா நாட்டினரும் முயற்சித்து கொண்டிருந்தனர். ஆம் நாம் சிறந்தவர்கள் என காட்டாவே அந்த சிரத்தை. நாகரீக உலகில் நாகரிக மற்ற மக்களை பழங்குடியினர் என பட்டம் கட்டி அவர்களை அடிமைகளாக வைத்திருந்தது நிலபிரபுத்துவத்தின் பார்பனீய கோட்பாடே தவிர பரிணாமத்தின் தவறல்ல.
அன்று கறுப்பினத்தவன் மற்றும் போரில் தோற்றவர்கள் அடிமைகளாக கருதப்பட்டார்கள். ஒன்று நிலபிரபுத்துவம் மன்றொன்று அதிகாரமையம், இரண்டும் பார்பனீயத்தின் கிளைகள் தான். அனைவரும் சமம் என்ற வார்த்தை அவர்களை அடிமைகளோடு சேர்ந்து அமரச்சொன்னது போல இருந்தது, உண்மையில் அடிமைகளாக யாரையும் நடத்தாதே எனத்தான் உண்மையான கம்யூனிசம் சொன்னது.
ஆபிரஹாம மதஅடிப்படையில் மனிதர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாள் மூலம் பிறந்தவர்கள் என்றே வைத்து கொள்வோம், இன்று ஏன் பிரிவினை. நெற்றியில் இருந்து பிறந்தவன் பிராமணம், சூத்திரன் காலில் இருந்து வந்தவன் என்றால் எங்கே அனைவரும் சமம் என்ற கோட்பாடு.
அதுவல்ல நான் சொன்னது, அடிப்படை இந்துஞானமரபு பற்றி நீங்கள் பேசூவீர்களேயானால் அது பற்றி படுத்த பதிவில் விவாதிப்போம்!
*****
கேள்வி 2)
கடவுள் இல்லை என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்பும், இன்னும் அறிய விரும்புகிறேன், விவாதிக்கலாம் என்று ஒவ்வொரு பதிவின் முடிவிலும் போடும் டிஸ்கி யின் அர்த்தம் என்ன? இல்லாத கடவுளுக்கு நீட்சி ஏதும் உண்டா என இன்னும் தேடுகிறீர்களா ?
தேடல் முடியுறா இன்பம், அதன் பொருட்டே அறிய விரும்புகிறேன் என விவாதத்திற்கு அழைப்பது, என்று நீ கற்பதை என்று நிறுத்துகிறாயோ அன்று பிணத்திற்கு சமமாவாய் என என் தந்தை(அய்யம்பேட்டை அறிவுடை நம்பி இல்லங்க) அடிக்கடி சொல்லுவார், சாவிற்கு முதன் நாள் சாக்ரடீஸ் அவரது நண்பர்களுடன் புதிதாய் ஒரு விசயத்தை எடுத்து விவாதித்தாராம்.
கடவுள் என்ற பதம் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உருவம் உண்டு, உருவம் இல்லை, இயற்கையே கடவுள், உலகம் உருவாக கடவுள் என்ற பதம் தேவையில்லை, அப்படியே கடவுள் இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை என்று ஒரு கூட்டம் என பல பிரிவுகள்.
கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?
ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!
நீங்கள் கேட்ட கடவுளின் நீட்சி எதை வைத்து என எனக்கு புரிகிறது, அன்பே சிவம் படத்தில் கமலால், மாதவன் கடவுள் என்று அழைக்கப்படுவார் அதுப்போலத்தானே :), சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை!
**********
கேள்வி 3)
பரிணாம தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்லருக்கு, யூதர்களை கொன்றது மிகவும் நியாயமாக பட்டதாம். --- ஏனென்றால் பரிணாமக் கொள்கையின்படி ஹிட்லர் தன்னையும் தன் கும்பலையும் மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டதால். அது உண்மையெனில்........பரிணாம தத்துவம் மனிதர்களின் எண்ணங்களில் .....மனிதத்தை வளர்க்குமா ???? ---இதுவும் விவாதத்துக்கு.
ஹிட்லர் பற்றிய வரலாற்று குறிப்புகள் அறிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள், ஹிட்லர் சிறுவயதில் தன் தந்தையால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டவர், இவரது தந்தை ஒரு யூதர் என்ற செய்தியும் உண்டு, ஹிட்லர் ஜெர்மனியை சேர்ந்தவர் அல்ல, ஆஸ்டிரியாவில் பிறந்தவர், சிறு வயதில் Protestantism வகையை சேர்ந்த கிறிஸ்தவர்களின் போதனைகளால் யூதர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என உருமாற்றப்பட்டவர். முக்கியமாக புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.(பின்னாளில் அவரே கிறிஸ்துவத்தையும் எதிர்த்தார்)
ப்ழைய ஏற்பாடு என்னும் கிறிஸ்துவ புத்தகம் இன்று கிறிஸ்தவர்கள் கையில் இருந்தாலும் அதிலிருப்பவற்றை பின்பற்றிவதில் அவர்களுக்கு பல குழப்பங்கள் உண்டு, விருத்தசேதனம் என்னும் ஆண்குறி முன்தோல் நீக்குதல் அதில் தான் உண்டு,(குரானில் இல்லை) பின்னாளில் இயேசிவின் மறைவுக்கு பின் தொகுக்கபட்ட புதிய ஏற்பாடு கிறிஸ்துவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தது, இயேசு யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டதால் யூதர்கள் அன்று கிறிஸ்தவர்களுக்கும் பின்னாளில் இஸ்லாமியர்களுக்கும் எதிரிகள் ஆனார்கள்.
ஹிட்லர் முதலாம் உலகப்போரில் தாமாகவே முன் வந்து பணியாற்றினார், அப்போது கிடைத்த புகழினால் at wolf என ஜெர்மனியில் குறிக்கும் அடால்ஃப் என்று தம்மை அறிவித்து கொண்டார் அதாவது தம்மை ஒரு ஓநாய் என்று, இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஹிட்லர் என்றால் மேய்ப்பாளர் அல்லது காப்பாளர் என்றூ பொருள், ஒரே பெயரில் முரண்பட்ட இரு கருத்துகளை கொண்டவர் தான் ஹிட்லர்!
தாம் மேலானவர்கள் என்ற ஆரிய தத்துவம் அவரை ஈர்த்தது, ஹிட்லர் ஒரே சமயத்தில் முதலாளித்துவத்தையும், மார்க்சியத்தையும் எதிர்த்தார், யூதத்தலைவர்களால் சோசலிசம் பாதிக்கபடுவாதக கூறிய ஹிட்லர் யூதர்கள் வாழ தகுதியற்றவர்கள் அதாவது உடல் ஊனமுற்றவர்கள் போல் கடவுளின் சாபக்கேடுகள் என வர்ணித்தார், டார்வினசத்தை அவர் அறிந்திருக்கவில்லை ஆனால் உள்ளது சிறக்கும் என்ற தத்துவத்தை அறிந்திருந்தார் என வேண்டுமானால் சொல்லலாம்!, யூதர்களின் மேல் அவருக்கு திணிக்கபட்ட வெறுப்பால் தான் அவர் யூதர்களை கொடுமைபடுத்தினார், அங்கே டார்வீனிசம் வரவில்லை, மதமே காரணமாக இருந்தது.
பரிணாமம் கடவுள் என்ற கோட்பாட்டை மட்டும் எதிர்ப்பதில்லை, கடவுள் பெயரால் ஏற்படும் கலவரங்கள் மற்றும் சொர்க்கம், நரகம் போன்ற மூட நம்பிக்கைகளையும் எதிர்கிறது, எனது பரிணாம பதிவில் நான் ஏற்கனவே கூறியிருப்பதைப்போல் நிலநடுகோட்டுக்கு அருகில் வாழ்ந்த மக்கள் கறுப்பினத்தவர்களாகவும், மேற்கத்திய மக்கள் வெள்ளையர்களாகவும் மாற இயற்கை அமைப்பே காரணம், ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாற ஏற்படும் நிகழ்தகவை பரிணாமம் அழகாக விளக்குகிறது, அவை எங்கேயும் ஒன்றை விட ஒன்று சிறந்தது என சொல்லவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவம் உண்டு என்றே சொல்கிறது, பரிணாமம் நிச்சயம் மனிதத்தை வளர்க்கும்!
********
கேள்வி 4)
மனிதர்கள் ரகசியமாகவேனும் மனதுக்குள் தன்னை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்வதன் - மனோவியல் சார்ந்த _ காரணம் என்ன ??
தீர ஆராய்ந்தால் இச்சிந்தனை நமக்கு திணிக்கப்பட்டவை என்பது விளங்கும், சிறு வயதிலிருந்து நம்மை சுற்றியுள்ளோர் நம்மை உயர்ந்தவனாகவும், புகழ் உச்சாணியை அடைய வேண்டும் என்று திணித்தே நம்மை வளர்க்கிறார்கள், அசம்பாவிதமாக ஒரு சிலர், குழந்தைகளை சிறுமைபடுத்தி தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி தம்மை என்றும் மற்றவர்களை விட குறைவான திறன் உள்ளவர்கள் என்று நினைக்க வைக்கிறார்கள்!
நான் எப்போதும் சொல்வேன், நான் முடியாது என்று சொல்வது கிடையாது, தெரியாது என்று வேண்டுமானால் சொல்வேன், இவ்வுலகில் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவனால் செய்ய முடிந்த காரியத்தை எனக்கு செய்யத்தெரியாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக செய்ய முடியாமல் இருக்காது. முயற்சியின்றி முடியாது என்போர் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அவர்கள் தம் நம்பிக்கையையை வளர்த்து கொள்ள இனி முடியாது என வார்த்தையை பயன்படுத்தாமல் தெரியாது, ஆனால் சொல்லிக்கொடுத்தால் செய்வேன் என்றால்.............
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள்ளும் இருக்காது!
********
உங்களது கேள்விக்கான எனது புரிதல்களை பதில்களாக அளித்துள்ளேன், ஹிட்லர் பற்றிய தகவல்களில் சில வரலாற்று பிழை இருக்கலாம், தெரிந்தவர்கள் சொன்னால் திருத்தி விடுகிறேன். மேலும் இம்மாதிரியான கேள்விகள் எனக்கு புதிய அனுபவங்களை கொடுப்பதால் உங்களிடமிருந்து இம்மாதிரியான மற்றும் தர்க்கம் சார்த்த எந்த கேள்வியாகினும் என்னை செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்கிறேன்!