கோடீஸ்வரர் ஆக ரெடியா!?

ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று!
அது பற்றியான விளக்கம் தான் இன்று!

ஏற்கனவே போட்ட பதிவின் லிங்க்

ஆகையால் உங்கள் முதலீடு 10000 இருந்தாலே பத்து வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்!
ஏற்கனவே சொன்ன லிங்க் போக ஒரு சின்ன கணக்கு!

10000 இரடிப்பாகனும்னா மாசம் இவ்ளோ வரனும்?

833.33 பைசா

834 ன்னு வச்சுச்குவோமே!

மாசம் 834 ன்னுன்னா வாரம் எவ்ளோ வரனும்?

208.50 இது வார டார்கெட்!

வாரத்தில் ஐந்து நாள் ட்ரேடிங் நடக்கும், அப்படினா தினம் என்ன தேவை?

41.7, அதாவது 42 ரூபாய் லாபம் வந்தால் உங்கள் பணம் 10 வருடத்தில் ஒரு கோடி!

இதை உங்களால் பண்ண முடியாதா?

அதுக்கு தான் நான் இருக்கேனே!

அழையுங்கள் 9994500540

அல்லது

arunero@!gmail.com




சும்மா சும்மா நான் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன்!
சேமிப்பையும், லாபத்தையும் இன்றே ஆரம்பியுங்கள்!

16 வாங்கிகட்டி கொண்டது:

bandhu said...

நூறு வருடமாக இருக்கும் ஸ்டாக் மார்கெட்டில் ஒருவர் கூட இதை சாதித்தது கிடையாது! வாரன் பப்பெட் கூட.. கொஞ்சமும் சாத்தியம் இல்லாத ஒன்று!

அமைதி அப்பா said...

உங்களுடைய முந்தையப் பதிவும் இப்பொழுதான் படித்தேன். மிக நல்ல பதிவு. பங்கு சந்தைக் குறித்து விழிப்புணர்வு இன்னும் படித்தவர்களிடம் கூட இல்லை. தங்களைப் போன்றவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் எளிதில் பலரை சென்றடையும். மிக்க நன்றி.

Riyas said...

பங்குச்சந்தையில் லாபம் பெற முடியும் என்பது உண்மை.. நீங்கள் சொல்வதுபோல் முன்னாடியே திட்டமிட்டு கோடீஸ்வரர் ஆக முடியுமா..?

ஏன் என்றால் அதன் நிச்சயமற்ற,தளம்பல் நிலை..

நீச்சல்காரன் said...

///10000 இரடிப்பாகனும்னா மாசம் இவ்ளோ வரனும்?

833.33 பைசா///

எனது கணிப்பின் படி சுமார் 450ரூபாய் நீங்கள் போட்ட கணக்கை விளக்கமுடியுமா?

மேலும் உங்கள் கணக்குப் படி ஒவ்வொரு வருடமும் இருமடங்கு லாபம் பார்க்க வேண்டும். அப்படிஎன்றால் கடைசி ஆண்டில் ஒரு நாளைக்கு 21000 ஆயிரம் சம்பாரித்தால் மட்டுமே முடியும்.

இது எல்லாம் நடைமுறை சாத்தியாமா?

Selvakumar said...

//
வாரத்தில் ஐந்து நாள் ட்ரேடிங் நடக்கும், அப்படினா தினம் என்ன தேவை?

41.7, அதாவது 42 ரூபாய் லாபம் வந்தால் உங்கள் பணம் 10 வருடத்தில் ஒரு கோடி!

இதை உங்களால் பண்ண முடியாதா?
// கடவுள் மற்றும் மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் நீங்கள் இப்படி ஒரு ஏமாற்று வித்தைக்கு விளம்பரம் செய்யலாமா?
தொடர்ந்து பத்து வருடங்கள் எப்படி தினசரி லாபத்தை உறுதிசெய்ய முடியும்.? இது எல்லா அறிவியல் விதிகளுக்கும், வணிக நடைமுறைகளுக்கும் முரணானது. முற்றிலும் யூக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வளவு பெரிய வாக்குறுதியை கொடுப்பதும் இல்லாத கடவுளை வைத்து பணம் சுரண்டுவதும் வேறல்ல.

இந்திரா said...

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை எந்த அளவிற்கு லாபம் இருக்கிறதோ அதே அளவிற்கு நட்டத்திற்கான ரிஸ்கும் இருக்கிறது..
அதனாலேயே இதில் இறங்குவதற்குப் பெரும்பாலானவர்கள் யோசிக்கின்றன்.

Astrologer sathishkumar Erode said...

இது போன்ற பதிவுகளை நேரம் இருக்கும் போதெல்லாம் எழுதுங்கள்...உங்கள் பதிவும் அப்டேட் ஆகும்...உங்கள் பங்கு வர்த்தகம் தொழிலுக்கும் உபயோகமாக இருக்கும்.

Vadakkupatti Raamsami said...

யோவ் நான் அஞ்சு வருஷமா ஷேர் ற்றேடிங் (ஒன்லி டெலிவரி) செய்துகினு இருக்கேன்!நீ சொல்வது trading ஆ இல்ல delivery ஆ?

bala said...

தமிழ் நாட்டில் பங்கு வணிகம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு , மக்களிடம் இடம் அதை பற்றிய பயம் மட்டுமே காரணம்.
இதுவே நீங்கள் நான் ஒரு சீட்டு கம்பெனி ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்லுங்கள் நூறு பேர் வருவார்கள் . செல்வத்தை பெறுகும் பங்கு வணிகம் இவர்களுக்கு சூதாட்டம் நடக்கும் எடம் ஆக தெரியும். வால் பையன் சொல்வது பற்றி எதனை பேருக்கு தெரியும் . நீங்கள் வாங்கும் தங்கம் போற்வர்ட் வணிகம் முறையில் வாங்கலாம் , அனால் அதை நமது சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் பதினெட்டு கார்டில் வாங்கினால் தான் இவர்களுக்கு நிம்மதி
தலைவா இவர்களுக்கு சொல்லி ப்ரோச்சன்மில்லை ... டேக் கேர் ஒப் யுவர் வணிகம்
Its getting pretty difficult to type in Tamil , would rather prefer English .sorry
I appreciate your effort to create awareness on trading and value investing . But the people you are taking to, are of different breed , who would prefer prefer to invest in gold and land where you pay loads of transaction cost, rather i would term them as conservative class. Who may in the end lose the money to jewelers , or lose to thief's who break in.
They don't know they can store the gold in the paper form and sell at the instant if you want to . They are ready to pay 10% as wastage to jewelers , rather paying 0.03% transaction cost to broker.I have personally know a middle class guy, Who invested from 1992 and has the portfolio worth 3.2 crores, whose monthly salary is just 25K now. Dividend yield of 6 lakhs /year that is tax free
I am into stock and futures trading of commodity , your take on trading is right . Some times it is better to be silent than to speak with the people

bala

வால்பையன் said...

@ செல்வகுமார்


உங்களுக்கான பதில் அடுத்த பதிவில்!

வால்பையன் said...

@ நீச்சல் காரன்

சாத்தியம் இல்லை என்று இங்கே ஏதும் உண்டா?

வால்பையன் said...

@ ரியாஸ்

அடிப்படை மற்றும் டெக்னிக்கல் தெரிந்தால் லாபம் மட்டுமே.

அடுத்த போஸ்ட பாருங்க தெரியும்!

பிம்டிக்கி பிளாப்பி said...

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா இருந்தா ... சரி விடு உன்னைய நோகடிக்க விரும்பல, அது உன்னோட பழக்கம்...

பிம்டிக்கி பிளாப்பி said...

@ நல்ல நேரம் சதீஷ்குமார் - இதுக்கு புலிப்பாணி சோசியதுல எதுனாச்சும் பரியாரம் இருக்கா?

rajan said...

It is Possible ! but All cannot MAKE MONEY HERE , need to work hard , preplan , need a good Trading staergy.atleast need to live with mkt for years.

ATOZ FOREX DETAILS said...

மார்க்கெட் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் நாம் ட்ரேடு செய்ய வேண்டுமே ஒலிய, நாம் நினைப்பது போல் மார்க்கெட் கட்டாயம் இருக்காது. ஒருவர் மேலே போக வேண்டும் என்றும், மற்றொருவர் கீழே போகவேண்டுமென்றும் கடவுளிடம் வேண்டினால் கடவுள் என்ன செய்வார்? இல்லை மார்க்கெட்டுதான் என்ன செய்யும்?

அதுபோல சிலர் தினமும் நூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க வேண்டும் என்பார்கள். அப்படி எல்லாம் மாட்டில் பால் கறக்கிற மாதிரி எல்லாம் இங்கு ஒன்னும் கறக்க முடியாது. ஒரு நாள் நூறு பிப்ஸ் கூட மூமென்ட் இருக்காது, ஆனால் மற்றொரு நாள் பார்த்தால் ஐநூறு பிப்ஸ் கூட மூமென்ட் இருக்கும். இந்த லெட்சணத்தில் நாங்கள் தினமும் அள்ளிக் கொட்டிருவோம்னு வேற சில நபர்கள்.

அதனால் தான் நீங்கள் பிக்ஸ்டு டெப்பாசிட் பண்ணும் போது பேங்க்கில் ஒரு வருடம் என்று கூறிவிட்டு, இடையில் கேட்டால் ஒரு பைன் போல ஒரு அமௌன்ட் கழிப்பார்கள். உங்கள் வாக்கை நம்பி அவர்கள் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து இருப்பார்கள், நாம் இடையில் கேட்டால்,அவர்கள் வைத்து இருக்கும் இலக்கை அடைய முடியாது.
தினமும் நாம் இவ்வளவு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கோடு, மார்கெட்டை அணுகும்போது, இனம் புரியாத ஒரு பதட்டம் வரும்..பின் என்ன? நேரம் ஆக ஆக ...மேலும் பதட்டம் மேலும் விரயம்.
ஆனால் தொலை நோக்கோடும், கட்டாயம் இவ்வளவு எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமலும் சந்தையை அணுகினால் நாம் நிறைய கற்று கொள்ள ஏதுவாக இருக்கும்.

!

Blog Widget by LinkWithin