பரிணாமம் - ஆரம்பம்

டிஸ்கி 1:இவையனைத்தும் எனது சுய புரிதல்களே! சாத்தியகூறுகளின் அதிகபட்ச தன்மையை அறிந்து கொள்ள விவாத பொருளாக உங்கள் முன் வைக்கிறேன்!, தினந்தோறும் பரிணாமத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருக்க முடியாததால் குறிப்புகள் எடுத்து வைத்து அவ்வபோது தொடர்கிறேன்!

டிஸ்கி 2:பட்டாபட்டி, மங்குணி அமைச்சர், கரிசல்காரன் பின்னூட்டம் இடும் முன் எனக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்! arunero@gmail.com

*************************

தினந்தோறும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! அறிவியல் கூட தேவையில்லை, நம் சுற்றுசூழலை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனித்தால் போதும், ஒவ்வொரு உயிரனத்திற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்! ஆனால் நம் மதவாதிகளுக்கு “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” என்ற கேள்வியை தவிர வேறு தெரியாது!, டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம், சமகாலத்தில் கண் முன் இருக்கும் உயிரினங்களை வைத்தே விவாதிப்போம்!


பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!, தன் தேவைகேற்ப ஒரு உயிரினம் சிறப்பாக இருப்பது போல் தோன்றினால் அவைகளுக்கு உருவ மாற்றம் தேவையில்லை, பல லட்சம் ஆண்டுகளாக கரப்பான்பூச்சி ”ஹிமோகுளோபின்” இல்லாமல் வாழ்வது, சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது இதற்கு சாட்சி! வளர்ச்சி மாற்றத்தில் அனைத்தும் அந்த உயிரினத்திற்கு சாதகமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சில நேரங்களில் புலன்கள் செயலற்று போகலாம், அதற்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பு தகுதி பெறலாம்! கண்பார்வை குறைவான விலங்குகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பது இதற்குச் சான்று!


ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம், ஆம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் அல்லது மரபணு குறைபாடு! வம்சாவழியாக பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் ஜீன்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அப்படியே மாறாமல் இருப்பதால் இந்த மாற்றமும் இல்லாமல் உயிரினங்கள் உள்ளன! தற்பொழுது இருக்கும் சுற்றுசூழல் கூட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருந்தாலும் அவை நடைபெறும் காலம் மிக மிக மெதுவானது! ஒரு செல் ஒருநாளைக்கு ஆறிலிருந்து எட்டு முறை பிரிந்து அழியலாம், ஆனால் அதில் மாற்றம் ஏற்பட லட்சம் வருடங்கள் கூட ஆகும்!


குரங்குகளுக்கும், மனிதனுக்கும் முந்தய வம்சாவழியில் வந்த மனிதன் பூமியில் எல்லா இடங்களிலும் கால்வைத்து விட்டான், அவனது தோற்ற வேறுபாட்டிற்ற்கு காரணமே அது தான்! ஒன்றினைத்த கண்டமாக பூமியில் நிலபரப்பு இருந்த போது தோன்றிய உயிரினங்கள் இடபெயர்ச்சி செய்தவை கண்டங்கள் பிரியும் போது ஆங்காங்கே தங்கியது! ஆப்பிரிக்காவில் தங்கிய இனம் மரபுவழியாக மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் முந்தய தோற்றத்திலிருந்து சிறிதே மாறியது, குறிப்பாக உடல் முழுவது இருந்த ரோமத்தை இழந்ததை கூறிப்பிடலாம்! கிழக்கு ஆசிய பகுதிகளில் பனியுக காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் மங்கோலிய இனமக்கள் வேர்த்திருக்க அதிக வாய்ப்பு இல்லாததால், ”புருவமேட்டு கண் பாதுகாப்பு” அமைப்பு பெரிதாக தேவைப்படவில்லை!, ஒரு ஆப்பிரிக்க இனமும், ஐரோப்பிய இனமும் இணையும் போது புதிய தோற்றத்துடன் சந்தததி உருவாகுவது மரபணு மாற்றத்திற்கான ஆதாரம், அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் எனலாம்!

கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை பெற்றிருப்பது அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு ஆதாரம், சித்திர எழுத்து வழக்கம் கொண்டவர்கள், சூரியன் என்பதை சூ ரி ய ன் என்று பிரித்து எழுத வேண்டியதில்லை, அவர்களது ஒரே ஒரு எழுத்து சூரியன் என்ற அர்த்தத்தை தரும்! உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மான்ட்ரின் என்ற சீனமொழியை போலயே ஜப்பனிஷ், கொரியன் இருந்தாலும் அவைகளுக்குள் மலையளவு வித்தியாசம் இருப்பது நமக்கு தெரியாது!, அவர்களது மொழியின் உருவ ஒற்றுமை அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம்!

இயற்கை சுற்றுசூழல் மாற்றத்தின் மூலமே பரிணாம மாற்றம் கண்டுகொண்டிருந்த உயிரினங்கள் தற்போதைய நாகரிக உலகின் மூலமும் மாறி கொண்டிருப்பது கண்டறியபட்டுள்ளது!, அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும், சிலவற்றிற்கு நான்குக்கும் மேற்பட்ட கால்கள் இருப்பதும் கண்டறியபட்டுள்ளது!, பயிர்களுக்கு உபயோகிக்கும் பூச்சிகொல்லிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கண்டறிந்தாலும் மாற்றம் எங்கே ஆரம்பிக்கிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகில் கண்டறிவது பெரிய கடினமல்ல, உயிரினத்தில் பரிணாம வளர்ச்சியின் பாதி கட்டத்தில் இருக்கும் தவளை மீன் போன்று தலைபிரட்டை வாழ்க்கை சிறிது நாட்கள் வாழ்ந்து பின் கால்கள் முளைத்து தவளையாகிறது, அப்பொழுது தான் அவற்றிக்கு வெளிப்புற ஆக்சிசனை சுவாசிக்கும் நுரையீரலும் வளருகிறது என்பதும் முக்கியமானது!, பூச்சிகொல்லிகளால் தலைபிரட்டைகள் முழுமையான தவளையாக முடியாமல் கால்கள் வளருவது தடைபட்டு மாற்று திறனுடன் உருவாகிறது!


மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது! பரிணாம வளர்ச்சியை நம்பமறுக்கும் மதவாதிகள் கண்முன் மாற்றத்தை பார்ப்பார், கை, கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம், மீண்டும் ஊர்ந்து பழகி, வால் முளைத்து நாக்கை நீட்டி மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்! மரபணு விதைகளை தடை செய்யவில்லை என்றால் எந்த கடவுளும் உயிரின அழிவை தடுக்க முடியாது என்பதே உண்மை!

முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு!

தொடரும்!

250 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   201 – 250 of 250   Newer›   Newest»
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//எனவே புது அறிவியல் கருத்துக்களையும் தமிழ் படுத்த முனைவோம்.

முடியுமானால் பிக் பேங் தியரி பற்றி தமிழாக்கம் செய்ய முய்ற்சிக்கிறேன்.’’

நல்லகருத்து..பெருவெடிப்பு பற்றிய தாங்கள் தமிழாக்கம் விரைவில் வெளிவர வாழ்த்துகள்

கண்ணுக்கு தெரியும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை அய்யா மிக சாதாரணமான கிராமத்தான்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/பிரபஞ்சம் என்பது பொருளா, சக்தியா, அங்கே தான் சிக்கல் நிற்கிறது!/

சிக்கல் பொருளா சக்தியா என்பதில் அல்ல! குதிரைக்குக் கண்ணைக் கட்டி விட்டாற்போல ஒரே பக்கத்தில் மட்டும் பார்க்கிற சிந்தனையின் குறைபாடு அது.

சர்வம் சக்திமயம்!

சக்திதான் பொருளை உண்டாக்குவதாகவும், நிலைக்கச் செய்வதாகவும், ஒரு கட்டத்தில் சிதைந்து மூலக் கூறுகளாகப் பிரிந்துபோகவும் செய்கிறது.

கேட்டிருக்க வேண்டிய கேள்வி, இந்த சக்தி எதில் இருந்து உருவாகிறது?

நிச்சயமாக,நாம் சாதாரணமாகப் புரிந்துகொண்டிருக்கும் அர்த்தப் படியான ஒரு வெற்றிடத்தில் இருந்து அல்ல!

சக்தியைத் தாங்கி நிற்கும் அந்த வெளி எது?

இந்தியத் தத்துவ மரபு இதையும் தாண்டிச் சிந்தித்திருக்கிறது! புரிந்துகொள்ளக் கூடிய விளக்கத்தையும் கண்டிருக்கிறது!

நவீன அறிவியல் இன்னும் இந்தக் கட்டத்தை எட்டவில்லை!

Sabarinathan Arthanari said...

கருத்துக்களை தமிழ் படுத்துதல் என்றால் தமிழில் கருத்துக்களை வெளியிடுவது. தமிழ் சொற்கள் கண்டு பிடிப்பது அல்ல :)

தமிழன் ஒன்றும் கண்டு பிடிக்கலையா ? ரைட்டு. அப்பப்ப வரலாறும் படிங்க ஐயா.

கேள்வி தான் கேட்போம் யோசிக்க மாட்டோம்னா எப்படி?

//இம்புட்டு சூட்லயும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுதா! //
இது கிளுகிளுப்பு இல்லை. குறுநகை.

என்ன பண்றது வால், எவ்வளவு சீரியஸா நீங்க ஆரம்பிச்சாலும் காமெடியில போய் பதிவு நின்னுறுது.

வால்பையன் said...

//சிக்கல் பொருளா சக்தியா என்பதில் அல்ல! குதிரைக்குக் கண்ணைக் கட்டி விட்டாற்போல ஒரே பக்கத்தில் மட்டும் பார்க்கிற சிந்தனையின் குறைபாடு அது.//


யார் குதிரை!


//சர்வம் சக்திமயம்!//


மூல ஆதரம் சக்தி என்றால் அந்த சக்தியின் மூலம் என்ன!?


//சக்திதான் பொருளை உண்டாக்குவதாகவும், நிலைக்கச் செய்வதாகவும், ஒரு கட்டத்தில் சிதைந்து மூலக் கூறுகளாகப் பிரிந்துபோகவும் செய்கிறது.//


அப்படியானால் ”செயல்” என்பது தான் சக்தியா!?


//கேட்டிருக்க வேண்டிய கேள்வி, இந்த சக்தி எதில் இருந்து உருவாகிறது?//


இப்போ கேட்டதா வச்சுகோங்க!?


//இந்தியத் தத்துவ மரபு இதையும் தாண்டிச் சிந்தித்திருக்கிறது! புரிந்துகொள்ளக் கூடிய விளக்கத்தையும் கண்டிருக்கிறது!

நவீன அறிவியல் இன்னும் இந்தக் கட்டத்தை எட்டவில்லை! //


வந்துடிங்க, ஜெயமோகன் சொன்ன இந்திய ஞானமரபு தானே! ரைட்டு இந்தியா கண்டுபிடிச்சி அறிவியல் முன்னேற்றத்தில் எங்கேயோ போயிருச்சு, மத்த நாட்டுகாரன் தெரியாமல் ஹுப்பிள் விட்டு தேடிகிட்டு இருக்கான்!, அவன் கஷ்டபட்டு கரண்டுல சக்தியை தேடினா நாம கற்பூரத்தில் சக்தியை தேடுவோம்!, விளங்கீரும்!

வால்பையன் said...

//தமிழன் ஒன்றும் கண்டு பிடிக்கலையா ? ரைட்டு. அப்பப்ப வரலாறும் படிங்க ஐயா.//


யார் சொன்னா இட்லி கண்டுபிச்சது தமிழன் தான், எந்த மதம் வந்தாலும் குல்லா போட, சிலுவை போட, குண்டம் இறங்க கண்டுபிடிச்சிருக்கான்! அறிவியலை வானில் தேட சொன்னால் பாட்டில் தேட கண்டுபிடிச்சிருக்கான்! வரலாறு வேற படைச்சிருக்கானா!?


இம்சை அரசன் படம் பார்க்கலையா நீங்க, நாம தான் மெச்சிகனும் வரலாறை!

வால்பையன் said...

இன்றைய மனிதனின் உருவம்...
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான மனித உருவிலிருந்து வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
தொல்பொருள் ஆய்வாலர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய எலும்புக்கூடுகளை பார்க்கு போது... வாய் பகுதி நீண்டதாகவும்... கீழ்த்தாடை தடித்ததாகவும்... கைகள் நீண்டதாகவும்... காணப்பட்டுள்ளது. காரணம், அன்றைய சூழ்னிலையில் அவ் மனிதன் வேட்டையாட மட்டுமே தெரிந்து இருந்தான். எனவே, வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு நீண்டகைகளும்... உணவை ( பச்சை) சிரமமின்றி உண்பதற்கு ஏற்றவாறு நீண்ட தாடையும் இருந்து இருக்கின்றன.

பின்னர், காலம் செல்ல செல்ல மனிதன் அறிவை பயன் படுத்தி உணவை பதப்படுத்தி உண்ண தொடங்கியதும்... அந்த நீண்ட வலுவான தாடைகளின் அவசியம் அற்றுப்போனது.
அதேபோல், வேட்டையாடுவதிலிருந்து பயிச்செய்கைக்கு மாறிய போது... கையின் பாவணையும் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தமையால்... அதனது நீளமும் சற்று குறைந்தது.


நன்றி வளாகம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

சக்திதான் சிவத்தை ஈன்றும் சிவன்தான் சக்தி ஈன்றும் என ஒன்றே இரண்டாகத் தோற்றும் என்பது, மிகப் பழமையான காலம் தொட்டே இங்கே உள்ள முனிவர்களும்,ரிஷிகளும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

இந்த ஞான மரபு என்பது பொதுவானது. புரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு உரியது. ஜெயமோகன் மீது உங்களுக்குக் காண்டு இருக்கலாம், அதனால் அவர் சொல்வது முழுக்கத் தவறு என்றோ, முழுக்க சரியென்றோ முடிவு செய்து பேசிக் கொண்டிருப்பது, உங்களுடைய விருப்பம்!

ஜெயமோகன் தான் படித்துப் புரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்கிறார், அவ்வளவு தான்!

இங்கே ஒரு கேள்வி வந்தது, பரிணாமம் என்றால் பாமரனும் புரிந்து கொள்கிறமாதிரி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் என்று!

இரண்டு காதுகளையும், மனது, மூளையைத் திறந்து வைத்திருங்கள்!விதண்டாவாதம் பேசும் வாயை மூடிக் கொள்ளுங்கள்!

இந்த இரண்டு வரிகளைப் பின்பற்றினாலேயே, பரிணாமம் மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும்!

வால்பையன் said...

//சக்திதான் சிவத்தை ஈன்றும் சிவன்தான் சக்தி ஈன்றும் என ஒன்றே இரண்டாகத் தோற்றும் என்பது, மிகப் பழமையான காலம் தொட்டே இங்கே உள்ள முனிவர்களும்,ரிஷிகளும் சொல்லி வந்திருக்கிறார்கள்.//


சக்தி, சிவன்

அப்படியே பிரம்மா, விஷ்ணு ந்னு இந்து மதத்தை உள்ளிளுத்து பரிணாமத்துக்கு கடுக்கா கொடுத்துரலாம் விடுங்க! சக்தி சிவனுக்கு இப்போ என்ன வேலை, நாம பண்றதையெல்லாம் வேடிக்கை பார்க்குறதா? சக்தியை வணக்க சொல்லி யார் சொன்னது?


//ஞான மரபு என்பது பொதுவானது. புரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு உரியது.//

அனைத்திற்கும் மூலம், சக்தி என்று அறிவியலை மூட்டை கட்டி வைக்க புரிதல் தேவையில்லை, சோம்பேறிதனம் இருந்தால் போதுமானது!


//இரண்டு காதுகளையும், மனது, மூளையைத் திறந்து வைத்திருங்கள்!விதண்டாவாதம் பேசும் வாயை மூடிக் கொள்ளுங்கள்!

இந்த இரண்டு வரிகளைப் பின்பற்றினாலேயே, பரிணாமம் மட்டுமல்ல,//


வாதம், பிரதிவாதம் ஒன்றையொன்று விளக்க கடமைபட்டுள்ளது, எங்கள் அகராதியில் பதில் தெரியாத கேள்விகளுக்கு விதண்டாவாதம்!, நாங்க பண்றது விதண்டாவாதம்னா கேள்விக்கு பதில் தெரியாதுன்னு அர்த்தம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

சக்தி, சிவம் என்பதெல்லாம் வெறும் குறியீடு தான்! உங்களுக்கு வேண்டுமென்றால் ஈரோட்டு ராஜா, திருச்செங்கோடு சரோஜா என்று வைத்துக் கொள்ளுங்கள்!

பெயரில் ஒன்றுமில்லை!

ஞானம், மரபு என்பதெல்லாம் ஒரு விஷயத்தைக் கேட்டுத் தெளிந்து, சிந்தித்து முழுமையாக உலாங்கிக் கொள்ளுதல்!

கும்மியடிக்க வரும் வெற்றுப் பின்னூட்டங்கள் அல்ல!

வாதம், பிரதிவாதம்!

முதலில் உங்கள் வாதத்தில் அப்படி என்ன பெரிதாகச் சொல்லி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அது தெளிவாக இருந்தால் அல்லவா, பிரதிவாதம் வரும்!

அறிவியலையோ, உண்மையையோ பட்டிமன்றம் மாதிரி நடத்தி நடுவர் தீர்ப்பிலோ, அல்லது பதிவு எழுதி, அதில் வரும் பின்னூட்டக் கும்மிகளிலோ புரிந்து கொண்டுவிட முடியும் என்று நினைத்தால், நிச்சயமாக என்னுடைய பதில் மௌனம் தான்!

எனக்குக் கேக்க மட்டும் தான் தெரியும்னு சரவெடி கொளுத்திவிட்டுப் போறவங்களுக்கு பதிலைப் பற்றிக் கூட அக்கறை இருக்கிறதா?

உங்களுக்காவது, பதில் தெரியுமா?

VISA said...

Good informations. Keep writing like this....:)

வால்பையன் said...

//சக்தி, சிவம் என்பதெல்லாம் வெறும் குறியீடு தான்! //

அவைகள் பொருளா, அல்லது வேறு வடிவமா, இதை வெகு நேரமாக கேட்டு கொண்டிருக்கிறேன், அதை நாம் நான் வாதம் என்று நம்பி கொண்டிருக்கிறேன்! அதற்கு பதில் ஞானமரபு சொன்னால் புரியாது அனுபவித்தால் தான் புரியுமென்றால் அது எவ்வாறு அறியலாகும் என்று கேட்கிறேன்!, சக்திக்கும் மூலம் தேவையில்லையென்றால் ஏன் இந்த பிரபஞ்சத்தின் ஆதார அணுவுக்கு மூலம் தேவைபடாது என்று ஒரு கேள்வியும் வைத்தேன்!, எங்கே இப்போ அந்த சக்தி என்று கேட்டு விட்டேன்!

ஞானமரபு என்ற பதில் எனக்கு உடன்பாடில்லை! சும்மா எழுதிட்டு போயிடாங்கன்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா அதை ஏன் வணங்கனும், அது வணங்க சொல்லுச்சான்னு கேக்குறேன், பொறுமையா மெதுவா கூட பதில் சொல்லுங்க!, உங்கள் பதில்களுக்கு தான் நான் விளக்கம் கேட்கிறேன்!

smart said...

//அறிவிலும் அனைவரும் சமம் தான்! சிந்திக்காமல் இருப்பது உங்கள் விருப்பம் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்!, சிந்திக்கவும் தனிதனியா அவரவர்க்கு உரிமையுண்டு//

வால் அண்ணே, அறிவில் எல்லாரும் சமம் என்றால் பரிணாம வளர்ச்சி உடலிலுக்கு மட்டும்தான் என்கிறீர்களா?
1000 ஆண்டுகள் கழித்தும் அறிவு சமமாகத் தான் மனித இனத்திற்கு இருக்குமா?
10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த அறிவுதான் இன்று இருக்கிறதா?

முதலில் ஒன்றை ஒத்துக்கொள்ளுங்கள் அறிவும் பரிணாமம் பெரும் அதனால் குறிப்பிட்ட இனம் அந்த தொழில் ரீதியாக அறிவுவளர்ச்சிப் பெரும் .

வால்பையன் said...

//வால் அண்ணே, அறிவில் எல்லாரும் சமம் என்றால் பரிணாம வளர்ச்சி உடலிலுக்கு மட்டும்தான் என்கிறீர்களா?
1000 ஆண்டுகள் கழித்தும் அறிவு சமமாகத் தான் மனித இனத்திற்கு இருக்குமா?
10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த அறிவுதான் இன்று இருக்கிறதா?//


ஜீன்கள் வழியாக அதே உடலை பெறுகிறோம், ஏற்கனவே இருந்த கண்டுபிடிப்புகள் வாயிலாக அறிவை பெறுகிறோம்! ஒரு குறிப்பிட்ட இனம் மட்டும் அறிவாளி என்பது அவர்களது சூழ்நிலை தகவமைப்பு ஏற்படுட்த்ஹிய கூட்டுமுயற்சி, சிறிது நாளில் அது மற்றவர்களுக்கும் தெரிந்து விடும்! ரஷ்யாவின் கிரையோஜெனிக் டெக்னாலஜியை பார்த்தே புதிதாக செய்தவன் இந்தியன்! அறிவு உங்களுக்கும் இருக்கு, எனக்கும் இருக்கு! ஆனால் நமது சிந்தனையில் கருத்து வேறுபாடு உண்டு! நான் நம்புவதை நீங்கள் நம்பாமலும் இருக்கலாம், நீங்கள் நம்ப்புவதை நான் நம்பாமலும் இருக்கலாம், அதற்காக ஒருவர் புத்திசாலி, ஒருவர் முட்டாள் என ஆகிவிடாது!

எல்லாவற்றிலும் அறிவாளியாக இருக்கும் ஒருவனை காட்டுங்கள், நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்!

smart said...

//எல்லாவற்றிலும் அறிவாளியாக இருக்கும் ஒருவனை காட்டுங்கள், நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்!//
val paiyan.

//ஒரு குறிப்பிட்ட இனம் மட்டும் அறிவாளி என்பது அவர்களது சூழ்நிலை தகவமைப்பு ஏற்படுட்த்ஹிய கூட்டுமுயற்சி,//
இதன் படி அந்தக் கூட்டுமுயற்சியை மற்ற இனம் எடுக்காதவரை ,
நீங்க வர்ணாஸ்ரம சாதீய முறைகள் சாத்தியம் என்கிறீர்களா?
பல ஆண்டுகள் போர் புரிந்து உடல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பரினாமித்த இனத்தை சத்ரியன் எனச்சொல்லச் சொல்கிறீர்களா?

ஐயையோ இந்துக்களுக்கு சொம்பு தூக்குறேங்களா?

வால்பையன் said...

//எல்லாவற்றிலும் அறிவாளியாக இருக்கும் ஒருவனை காட்டுங்கள், நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்!//
val paiyan.

ஏன் இந்த கொலைவெறி!


//இதன் படி அந்தக் கூட்டுமுயற்சியை மற்ற இனம் எடுக்காதவரை ,
நீங்க வர்ணாஸ்ரம சாதீய முறைகள் சாத்தியம் என்கிறீர்களா?
பல ஆண்டுகள் போர் புரிந்து உடல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பரினாமித்த இனத்தை சத்ரியன் எனச்சொல்லச் சொல்கிறீர்களா?//


ஆதியில் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றிய மனித இனம் தான் பிரிந்து சென்றது!, அவனுக்குள் ஏன் போர், ஏன் சண்டை சச்சரவு!?, ஒருவரை ஒருவர் தாழ்த்தியும் உயர்த்தியும் சொல்வதற்க்கு தான் மனித இனம் பகுத்தறிவு பெற்றதா!?, இந்தியாவில் மட்டும் தான் மனித இனம் இருக்கிறதா? மற்ற நாடுகளில் இருப்பவர்களெல்லாம் மனிதர்கள் தானே, நான் அனைவரும் மனிதர்கள் என்கிறேன், நீங்கள் சத்திரியனை ஆதிரிக்கிறீர்களா என்கிறீர்கள்!, ஆரம்பத்திலே அதை இந்தியாவிற்கு கொண்டு வந்த பார்பனர்களை குனிய வைத்து நைய புடைத்திருந்தால் இப்படியெல்லாம் பிரிவினை வந்திருக்குமா!? சிந்தியுங்கள் ச்சுமார்டு!, என் சகோதரன் என்னை விட மார்க் கம்மியாக எடுத்தான் என்பதற்காக நான் அவனை வெறுப்பேனா? அப்படி செய்வது பார்பனீயம், நான் அதை பற்றி பதிவு எழுதலையே! நான் என்ன எழுதினாலும் உங்க பார்பனீய புத்தி ஏன் அங்கேயே இழுத்து செல்கிறது!

*******

இந்து பெண் கடவுள்கள் அனைவரும் செம ஆண்ட்டிகளாக இருப்பதால் அவரசத்துக்கு சொம்பு தூக்கிகலாம்!,

smart said...

// என் சகோதரன் என்னை விட மார்க் கம்மியாக எடுத்தான் என்பதற்காக நான் அவனை வெறுப்பேனா? அப்படி செய்வது பார்பனீயம்,//

வெறுப்பேனா? என்பது மனிதாபிமானம். அதைவிடுங்கள் அறிவியல் ரீதியாக அந்த இனம் உயர்ந்தது என்று தான் பரிணாமக் கொள்கை சொல்கிறது. ஒப்புக் கொள்வீர்களா?
(இதற்கிடையில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன் நான் சாதிய முறையை ஆதரிக்காததால் தான் இந்த குழப்பம் எனக்கு வருகிறது. மேலே கூறியது போல)

smart said...

//இந்து பெண் கடவுள்கள் அனைவரும் செம ஆண்ட்டிகளாக இருப்பதால் அவரசத்துக்கு சொம்பு தூக்கிகலாம்!//

எனங்க நம்மள மாதிரி நாத்திகருக்கேல்லாம் அவுங்க கற்பனைப் பாத்திரம் தானே! அப்ப கற்பனைப் பாத்திரத்துக்கெல்லாம் சொம்பு தூக்கனுமா?

வால்பையன் said...

//அறிவியல் ரீதியாக அந்த இனம் உயர்ந்தது என்று தான் பரிணாமக் கொள்கை சொல்கிறது. ஒப்புக் கொள்வீர்களா?//


அறிவியல் ரீதியாக ”மனித” இனம் மற்ற உயிரினங்களை விட சிறந்தது என பரிணாம கொள்கை சொல்கிறது. ஒப்பு கொள்கிறேன்!

சூழ்ச்சிகள் செய்வது, சுயநலத்துடன் குழிகள் பறிப்பது அறிவாகாது, சோம்பேறிதனமும், பேராசையும் அறிவாகாது! உழைப்பையும் சகோதரத்துவமும் மனித இனத்தின் சொத்து! அவைகளே ஆதார அறிவு மனித இனம் வளர!

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் பரிணாமம் பத்தி பேச ஆரம்பிக்கும்போதெல்லாம், பார்ப்பனீயமும், சொம்பு தூக்குவதும் வந்து விடுவது கூடப் பரிணாமத்தின் ஒரு பகுதிதானோ?

வால்பையன் said...

//எனங்க நம்மள மாதிரி நாத்திகருக்கேல்லாம் அவுங்க கற்பனைப் பாத்திரம் தானே! அப்ப கற்பனைப் பாத்திரத்துக்கெல்லாம் சொம்பு தூக்கனுமா? //


சொம்பும் பாத்திரம் தானே தூக்கலாம்!
கனவில் சில சமயங்களில் கற்பனை கலை கட்டும்!

வால்பையன் said...

//வால்பையன் பரிணாமம் பத்தி பேச ஆரம்பிக்கும்போதெல்லாம், பார்ப்பனீயமும், சொம்பு தூக்குவதும் வந்து விடுவது கூடப் பரிணாமத்தின் ஒரு பகுதிதானோ?//


நானா ஆரம்பிச்சேன்!, ஒரு இனத்தை அறிவாளியாக காட்ட அவர் தான் வெகு சிரத்தை எடுத்து கொள்கிறார்! நான் அதை பற்றியும் பதிவு எழுதலையே!

smart said...

//சூழ்ச்சிகள் செய்வது, சுயநலத்துடன் குழிகள் பறிப்பது அறிவாகாது, சோம்பேறிதனமும், பேராசையும் அறிவாகாது! உழைப்பையும் சகோதரத்துவமும் மனித இனத்தின் சொத்து! அவைகளே ஆதார அறிவு மனித இனம் வளர!//
nanum ஒப்பு கொள்கிறேன்!

//அறிவியல் ரீதியாக ”மனித” இனம் மற்ற உயிரினங்களை விட சிறந்தது என பரிணாம கொள்கை சொல்கிறது. ஒப்பு கொள்கிறேன்!//
இங்க நீங்க திரும்ப மழுப்புறேங்களா? குறிப்பிட்ட இனம் தானே எல்லா மனித இனமும் இல்லையே! (நான் சொல்வது அவர்களின் தொழில் ரீதியாக)

smart said...

//நானா ஆரம்பிச்சேன்!, ஒரு இனத்தை அறிவாளியாக காட்ட அவர் தான் வெகு சிரத்தை எடுத்து கொள்கிறார்! நான் அதை பற்றியும் பதிவு எழுதலையே//
நண்பரே,
பரினாமப்படி தான் கேட்கிறேன். உண்மையில் இதுதான் அந்த எதிர்குரல் தளம் எழுப்பிய கேள்வி அதான் என்னால் பதில் கூற முடியாமல் உங்கள் உதவியை நாடினேன்.

Sanjai Gandhi said...

//இடபெயர்ச்சி செய்தவை கண்டங்கள் பிரியும் போது ஆங்காங்கே தங்கியது!//

கரெக்ட்.. மனிதர்களும் தான் தோன்றியாக ஆங்காங்கே தோன்றி இருக்க வாய்ப்பில்லை.. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு மனிதர்களாக மாறி இடம் பெயறத் துவங்கி இருப்பார்கள். பின் ஆங்காங்கே தங்கி இருப்பார்கள். அப்படியானால் நாம் அனைவருமே வந்தேறிகள் தான். பின் ஏன் பிராமணர்கள் அல்லது ஆரியர்களை மட்டும் வந்தேறிகள் என அழைக்கிறார்கள் தான் தோன்றி?! திராவிடர்கள்?

வால்பையன் said...

//இதுதான் அந்த எதிர்குரல் தளம் எழுப்பிய கேள்வி அதான் என்னால் பதில் கூற முடியாமல் உங்கள் உதவியை நாடினேன். //

ஒருவன் தன்னை அறிவாளியாக நினைத்து கொள்ளுதல் அவனுடய பிரச்சனை, அதை பற்றி மனநல மருத்துவர்களிடம் தான் கேட்கனும்! காரணம் எவனொருவன் தன்னை அறிவாளி என்று நினைக்கிறானோ அவன் மறைமுகமாக மற்றவர்களை முட்டாள் என்று நினைக்கிறான்!

அதெல்லாம் சிகிச்சைக்கு போக வேண்டிய கேஸ், நான் கேட்ட கேள்விக்கு ஒன்னுக்கும் பதில் சொல்லல!

வால்பையன் said...

//குறிப்பிட்ட இனம் தானே எல்லா மனித இனமும் இல்லையே! (நான் சொல்வது அவர்களின் தொழில் ரீதியாக) //


தொழில்னு எதை சொல்றிங்க, பாலியல் கூட தொழில் இருக்கு? ஏமாத்துறதும் தொழிலா வச்சிருகுறவன் இருக்கான்! எதாவது ஒரு இனத்தை சொல்லு சொல்லுன்னு எப்படி, குறிப்பிட்டு சொல்லுங்க, பேசி முடிவு பண்ணலாம்!

Rajan said...
This comment has been removed by the author.
Rajan said...

பரிணாமமாவது பருத்திக் கொட்டயாவது ! இங்க வாங்கப்பா
டவுசர் அவுந்து தொங்குது

வால்பையன் said...

//ஏன் பிராமணர்கள் அல்லது ஆரியர்களை மட்டும் வந்தேறிகள் என அழைக்கிறார்கள் தான் தோன்றி?! திராவிடர்கள்?//


ஆதியில் பிரியும் போது இருந்த முக்கிய காரணம் இயற்கையாக கிடைத்த உணவு, தன்னிச்சையாக உணவு தயாரித்தல், உரு இடத்தை விசிக்க தகுதியாக உருவாக்குதல் என்பது சாதாரண காரியமல்ல, அதில் ஒரு குழுமத்தின் கலாச்சாரமும், பண்பாடும் கலந்துள்ளது, படையெடுப்பின் முக்கிய காரணமே வளமையை சுரண்டல் தான், வந்தேறிகளின் கொள்கை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்!?


இதெல்லாம் நடந்தது 4000 வருசத்துக்கு முன்னாடி, ஆனா இன்னும் அவர்களது கலாச்சாரமான இந்து மதம், சோதிடம் என்று கல்லா கட்டுவது நிச்சயமாக மனித வள சுரண்டல் தான்!

Ashok D said...

யாருப்பா இங்க இந்துமதத பத்தி தப்பா பேசறது

Ashok D said...

பிந்தொடரும் நிழலின் குரல் :)

Ashok D said...

நமக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு வால்,

சிகப்பா இருக்கும் ஆண்களுக்கு கருப்பா இருக்கும் பெண்களும், செவப்பா இருக்கும் பெண்களுக்கு கருப்பா இருக்கும் ஆண்களை ஏன் புடிக்குது?

எட்வின் said...

ஆஹா... பரிணாமமா!!! ம்ம்ம் மண்டய பிச்சிக்க வேண்டியதா இருக்குது. ஒண்ணும் புரியல(நமக்கு என்னைக்கு தான் புரிஞ்சிருக்குது) உங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள்.

Nathanjagk said...

அன்பு வால்,
நயமிகு முயற்சி. அறிவியல் என்பது ​தேடலின், முயற்சிகளின் ஒருமித்த வடிவம். கற்றதில் பெற்றது, ​தேடியதில் தெரிந்தது, புரிதலின் ஞானம் என இவையனைத்தும் அடுத்த ​தேடலை / கல்வியை ​நோக்கி நகர்த்தும் செயல்களே. பரிணாமம் பற்றிய உங்களின்​தேடல், புரிதல் இவைகள் பகிரப்படுவது பதிவிலக்கியத்தின் தாக்கம் எல்லைகளற்றது என்பதை நிறுவுவதாக உணர்கிறேன். இந்த முயற்சி பாராட்டப்பட​வேண்டியது.
தர்க்கரீதியான கருத்துக்கள், மாற்றுக்கருத்துகள் அல்லது எதிர்கருத்துக்கள் வருதல் சாத்தியம். அனைவரும் புரிந்து கொள்ள​வேண்டிய ஒன்று. மானுடம் என்று ​பேராழியில் பரிணாம வளர்ச்சி என்று ஒரு சிறு துணுக்கைப் பற்றிக் கொண்டு கரை​சேரும் நம்பிக்கையுடன் தத்தளிக்கும ஒரு சாமானியனின் முயற்சி என்ற கற்பிதத்தில் இதை எடுத்துக்​கொள்ள வேண்டும். ஒருவகையில் நாம் அனைவருமே ஏதோவொரு துணுக்கைப் பற்றிக்​கொண்டு கடைத்தேற முயல்கிறவர்கள்தான்.
முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்! மென்மேலும் இது ​தொடர சரியான பாதையில் நகர அனைவரின் கவனத்தையும் பெற வாழத்துகிறேன்!
பின்னூட்டங்கள் உங்கள் முயற்சிக்கு ​தோள் கொடுப்பதாக அமையும், முன்னகரலை​மேம்படுத்தும் என்றும் நம்புகிறேன்.

Nathanjagk said...

தகவல்கள் பெற்ற இடங்கள் அல்லது ​மேற்கொண்டு விரிவாக அறிய விரும்புவோர்களைக் கருத்திற்​கொண்டு, புத்தகங்கள் மற்றும் வலைத்தளங்கள் பற்றி (reference / bibliography)பரிந்துரை செய்யலாம்.

Victor Suresh said...
This comment has been removed by the author.
Victor Suresh said...

நண்பரே:

"மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது!" என்கிறீர்கள். ஆதாரம் இல்லாமல் ஒன்றை நிச்சயமாக சொல்ல முடிந்தால் அது நம்பிக்கையின்பால்பட்டது. அதாவது ஒரு வகை மதம் போல. அறிவியல் அல்ல.

"மரபணு விதைகளை தடை செய்யவில்லை என்றால் எந்த கடவுளும் உயிரின அழிவை தடுக்க முடியாது என்பதே உண்மை!" என்கிறீர்கள். இந்த உண்மையை எப்படிக் கண்டறிந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

இறுதியாக "முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு!" என்கிறீர்கள். மரபணு மாற்றத்தின் விளைவுகள் குறித்த எந்த ஆதாரங்களும் கொடுக்கவில்லை. அதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரங்களும் ரொம்பவும் மேம்போக்காக உள்ளன. விபரமாக, தெளிவாக எழுதினால் சிறப்பாக அமையும். வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

@ ஏவிஎஸ்

மரபணு விதைகளின் அதிகாரபூர்வ விளைவுகள் வாரதற்கு காரனம், அதன் தயாரிப்பு இருக்கும் கைகள், மீண்டும் காலணியவாதம் பேசி கொண்டிருப்போருக்கும் அது தெரியும், பெரும் பணம் படைத்த முதலைகளே இதை செய்து வருகிறார்கள்!, அவர்கள் நாட்டில் தயாரிக்கும் மருத்துகளுக்கு ஏழை நாட்டு மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்துவது உலகறியும்!

பதிவிலேயே தவளையின் உருவமாற்றத்தை குறிப்பிட்டுள்ளேன், அதற்கு காரணம் நீரில் கலந்த விசம், உணவு விசயங்கள் மிக வேகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன, கங்கையில் இருக்கும் ஒரு மீனுக்கு கண்பார்வை இல்லை, காரணம் அழுக்கு படிந்த நீரில் கண் இருந்தாலும் பயனில்லை, அது நடக்க பல நூற்றாண்டுகள் ஆகியது, அவ்வாறு மாறிய மீனின் குஞ்சுகளும் ஏன் கண் பார்வையற்று பிறக்கின்றன, மரபணு மாற்றம் தான் காரணம், பெற்றோரின் ஜீனில் எழுத பட்டவைகளே குழந்தைக்கும்!

நான் பரிணாவியல் படித்த டாக்டர் இல்லை, என் புரிதலை தான் எழுதியிருக்கேன், உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லலாம், வரவேற்கிறேன்!

Victor Suresh said...

நண்பரே, உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் எழுதும் விஷயம் தொடர்பாக சில தவறுதலான புரிதல்கள் உங்களுக்கு இருக்கின்றன.

"பெரும் பணம் படைத்த முதலைகளே இதை செய்து வருகிறார்கள்!, அவர்கள் நாட்டில் தயாரிக்கும் மருத்துகளுக்கு ஏழை நாட்டு மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்துவது உலகறியும்!" என்கிறீர்கள். மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் அவை கண்டு பிடிக்கப்பட்ட அமெரிக்காவிலேயே முதன்முதலாக சோதிக்கப்பட்டன. இன்றும் பெருமளவு மரபணு மாற்றப்பட்ட உணவுகள் அதிகம் உட்கொள்ளப்படுவதும் அந்த நாட்டில்தான். ஒரு உணவுப் பொருள் மரபணு மாற்றத்திற்கு உட்பட்டதா இல்லையா என்று தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லாததன் காரணத்தால் பில் கேட்ஸ் கூட அங்கு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளைத்தான் உட்கொள்கிறார்.

பூச்சிக்கொல்லிகள் வாயிலாக நீரில் பரவும் விஷத்தைப் பற்றி எழுதுகிறீர்கள். மரபணு மாற்றம் மூலமாக பூச்சிக் கொல்லிகளின் உபயோகம் குறைவது பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? மரபணு மாற்றம் மூலமாக பயிர்களுக்கே பூச்சிகளை எதிர்க்கும் சக்தியைக் கொடுத்து ரசாயன கொல்லிகள் உபயோகத்தை மிதப்படுத்தலாம்.

அடுத்ததாக பரிணாமத் தத்துவத்திற்கு வருவோம். ஒளிக் கதிர்களில் சில வகைகளும் (சூரிய ஒளியில் இருக்கும் அல்ட்ரா வயலட் கதிர் உட்பட), அணு சக்தி அலைகளும், சில ரசாயனங்களும் மரபணுக்களை பாதிக்கக் கூடியவை. அப்படி ஏற்படும் மாற்றங்கள் புற்று நோயை உருவாக்கலாம். அந்த மாற்றங்கள் ஒரு தலைமுறையைத் தாண்டியும் பாதிப்புகளை உருவாக்கலாம். ஆனால், அதற்கு பரிணாமத் தத்துவத்தின் ஒரு முக்கியமான கொள்கை தேவைப்படுகிறது. என்னவென்றால், மரபணு பாதிக்கப்பட்ட உயிரினம் உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல், வெற்றிகரமாக இனப்பெருக்கமும் செய்திருக்க வேண்டும். மரபணு பிரச்சினை உள்ள உயிரினங்கள் எல்லாம் அநேகமாக இனப் பெருக்கம் செய்யுமளவுக்கு வளராது. உதாரணமாக, தவளைக்கெல்லாம் எக்ஸ்ட்ராவாக ஒரு கால் இருந்தாலும், அந்தக் கால் தவளை துள்ளிக் குதிப்பதை துரிதப்படுத்தாது; தாமதமாகத்தான் ஆக்கும். பாம்புக்கு சுலபமாக இரை கிடைக்கும்.

ஒரு பேச்சுக்கு மரபணு பாதிக்கப்பட்ட உயிரினத்திற்கு ஒரு அசாத்திய சக்தி வந்து விட்டதென்று வைத்துக் கொள்வோம். அந்த சக்தியினால் அது அதிகமாக இனப்பெருக்கம் செய்து, பெருகி, காலப் போக்கில் தவளைக்கு ஐந்து கால் வந்து விடலாம். இப்போது இந்த நடப்பில் தவறு என்ன? இயற்கையில் பரிணாம வளர்ச்சி இதையே செய்கிறது.

நான் இப்படி எழுதுவது, நீரில் ரசாயனத்தைக் கொட்டுவோம், எச்சரிக்கையில்லாமல், இஷ்டம் போல் மரபணுக்களை மாற்றி அமைப்போம், என்று சொல்வதற்கல்ல. மாறாக, let us not throw the baby with the bathwater என்ற ஆங்கிலப் பழமொழியில் சொல்லி இருப்பது போல் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் போது, அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பதையோ, நிராகரிப்பதையோ விட்டு விட்டு, அவற்றைப் பற்றி சரியான புரிதல் இல்லாமலே மானாவாரியாக நிராகரிப்பது சரியல்ல என்ற கருத்தைச் சொல்லவே.

வால்பையன் said...

//பில் கேட்ஸ் கூட அங்கு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளைத்தான் உட்கொள்கிறார்.//

மன்னிக்கனும், உங்க அளவுக்கு பர்சனலா பில்கேட்ஸ் பழக்கமில்லை!,

பல்லாயிரக்கான ஆண்டுகளாக இல்லாத புது புது நோய்கள் உயிரினங்களில் உருவாக காரணம் என்ன என்று ஒரு பக்கம் ஆராய்ச்சி நடக்கிறது, ஒரு பக்கம் மரபனு விதைகள் மற்றும் அதை ஆதரிக்கும் சில மக்கள்!


//மரபணு மாற்றம் மூலமாக பூச்சிக் கொல்லிகளின் உபயோகம் குறைவது பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? மரபணு மாற்றம் மூலமாக பயிர்களுக்கே பூச்சிகளை எதிர்க்கும் சக்தியைக் கொடுத்து ரசாயன கொல்லிகள் உபயோகத்தை மிதப்படுத்தலாம். //

உயிரின வாழ்க்கை ஒரு சைக்கிள்,
நுண்ணுயிரிகளை புழு திண்ணும், புழுவை பூச்சி திண்ணும், பூச்சியை குருவி திண்ணும், குருவியை பருந்து திண்ணும் இப்படி ஒவ்வொரு உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்க்கிறது, பூச்சி இல்லாத பயிரனத்தை விட அதிக பாதிப்புகள் ஏற்பட வண்ணம் செய்யும் விவசாயம் உலக உயிரினத்திற்கு அனைத்துக்குமாய் சிறந்தது, நாளைய பூமியில் மனிதன் மட்டுமே இருக்கனும், மற்ற எந்த உயிரினம் எதுவுமே இருக்க கூடாது என்பது தான் உங்கள் ஆசையா!?


தொடரும்!

வால்பையன் said...

உலகில் உயிரினங்கள் தோன்ற காரணமே பூமியில் புற ஊதா கதிர்கள் தாக்கா வண்ணம் ஏற்பட்ட தூசிப்படலம் தான்!, இன்று தோல் புற்றுநோய் ஏற்படக்காரணம் நாம் விட்ட புகை ஓசோனில் ஓட்டை போட்டது தான்!

ஒற்றைகால் தவளைகளால் பாம்புக்கு உணவு கிடைக்கும் என்ற உங்களது பாஸிட்டிவ் எண்ணத்தை மதிக்கிறேன், இதே போல் தான் மறுவிதை தர முடியாத மரபணு விதைகளால் ஒரு தலைமுறை தின்று கொழுத்து விட்டு, அடுத்த தலைமுறைக்கு கல்லையும், மண்னையும் மிச்சம் வைத்து விட்டு செல்வோம்!, மரபணு விதை, மறுஇனபெருக்க விதை தராது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா!?


மரபணு விதை தவளைக்கு பெருத்த இனபெருக்கம் தருகிறது, தரவில்லை என்பது பேச்சல்ல, உங்களால் இயற்கையாக வாழ முடியாதா, இல்லையா என்பது தான் கேள்வி! இல்லை இப்படி தான் இருப்போம் என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை, எங்களை ஆளை விடுங்கள்!


ஒரு விசயத்தை கண்மூடித்தனமாக ஆதரிபதற்கும், எதிர்ப்பதற்கும் முன் யோசனையில்லாத விலங்கினங்கள் இல்லை நாம்!, ஆயுத வளர்ச்சி, இரவு கலாச்சாரம் எல்லாம் ஆரம்பத்தில் சுகமாக தான் இருந்தது, இன்று உயிர்கள் சாவதற்கும், பலர் மனநோயாளிகளாக திரிவதற்கும் அதுவே காரணம்!

மரபணு விதை முழுக்க முழுக்க முதலாளித்துவ சிந்தனை, இருக்கும் கொஞ்ச நஞ்ச இயற்கை விவசாயிகளை அழித்த பின் விதை தயாரிக்கும் நிறுவனம் வைத்தது தான் சட்டம், விலை! அப்போது கத்தி உபயோகமில்லை!

தயவுசெய்து எழுந்திருங்க, விழித்திருங்க!

Victor Suresh said...

நான் அறிவியல் பேசுகிறேன். நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள். உங்களது புரிதலில் உள்ள அறிவியல் ரீதியான தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதன் மேல் விவாதம் நடத்த நீங்கள் எந்த வித முனைப்பும் காட்டவில்லை. மாறாக உங்கள் அறிவிற்கு எட்டிய மட்டத்தில் உரையாடப் பார்க்கிறீர்கள். இந்த உரையாடல் தொடர்வதில் பயனில்லை. நன்றி.

வால்பையன் said...

நிச்சயம் நான் அரசியலும் பேசுகிறேம், அதே நேரம் என் அறிவிய எட்டிய வரை தான் பேசுகிறேன் என்பதையும் புரிந்து கொண்டமைக்கு நன்றி! தயவுசெய்து பேசுவது பயனில்லை என்று ஒதுங்காமல், என்னிடம் இருக்கும் குறைகளையும், உங்களை தெரிந்தவைகளையும் இந்த சிறுவனுக்கு சொல்லி தருமாறு கேட்டு கொள்கிறேன்!

Rajan said...

//சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பதையோ, நிராகரிப்பதையோ விட்டு விட்டு, அவற்றைப் பற்றி சரியான புரிதல் இல்லாமலே மானாவாரியாக நிராகரிப்பது சரியல்ல என்ற கருத்தைச் சொல்லவே.

//

ஆக, விவாதம் நோக்கியிருக்கும் மரபனு மாற்ற விதைகள் எவ்விதம் இயற்கை பரிணாம வளர்ச்சியில் ஆக்கப் பூர்வ விளைவை தருமென்பதற்கான சாத்தியக் கூறுகளை சீர்தூக்கி இங்கு பதிவு செய்யுங்களேன்

Rajan said...

//ரசாயன கொல்லிகள் உபயோகத்தை மிதப்படுத்தலாம். //

ரசாயனக் கொல்லிகளி்ட் உபயோகம் குறைக்கப் படவேண்டியது தொடர்பான வாதம் எழுந்ததே மண்ணை அது மலடாக்கும் என்பதால் தான். நீங்கள் ஆப்பை எடுத்து விட்டு கத்தியை சொருகச்சொல்வதாக இருக்கிறது

Rajan said...

//இந்த உரையாடல் தொடர்வதில் பயனில்லை. //

இந்த பதில் பின்னூட்டத்தைப் படிப்பவர்களுக்கு தங்கள் மீதான எதிர்மறை எண்ணத்தையே தோற்றுவிக்கும் ஆதலின் விவாதத்தினை தொடர முனையவும்

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்ஸ்!

திரு ஏவிஎஸ் சொல்வதில் நியாயம் இருக்கிறது. பரிணாமம் என்பது ஒன்றிரண்டு பதிவுக்குள்ளோ, அல்லது நாலைந்து புத்தகங்களுக்கு உள்ளேயோ அடக்கி விடக் கூடிய விஷயமில்லை என்றாலும், இந்தப் பதிவின் உள்ளடக்கத்தை மறுபடி நீங்களே வாசித்துப் பார்த்தால், இங்கே பரிணாமத்தைப் பற்றிய சிறு அறிமுகம் கூட முழுமையாக இல்லை என்பது புரியும். பின்னூட்டங்களோ பதிவின் உள்ளடக்கத்துக்குப் பொருந்தாமல் வேறு திசைகளுக்கு இழுத்துச் சென்றதும் புரியும்.

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் டார்வின் தொடங்கி வைத்த இந்தக் கோட்பாடு குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் குழந்தைப் பருவத்திலேயே தான் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

ஜெகநாதன் கேட்டிருந்தாரல்லவா,அதற்குப் பதில்:

இந்த விஷயங்களைக் குறித்து, விக்கிபீடியாவில் தேடினால் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவியாக நிறையக் கட்டுரைகள், படங்கள் கிடைக்கும்.

வால்பையன் said...

//இந்தப் பதிவின் உள்ளடக்கத்தை மறுபடி நீங்களே வாசித்துப் பார்த்தால், இங்கே பரிணாமத்தைப் பற்றிய சிறு அறிமுகம் கூட முழுமையாக இல்லை//


முழுமையாக அல்லது அறைகுறையாக எதுவுவாக இருந்தாலும் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன் இது என் புரிதல் மட்டுமே!

நான் பரிணாமத்தை பற்றி விளக்கும் நோக்கில் ஆரம்பிக்கவில்லை, அதை ஒரு விவாத பொருளாக கொண்டு பலரின் கருத்துகளுடன் அதிகபட்ச சாத்தியகூறுகளை தேடுகிறேன்!

பரிணாமத்தின் ஆரம்பத்தை தேடுவதை விட இப்போதிருக்கும் கட்டத்திலிருந்து பின்னோக்கி செல்வது எனக்கு உசிதமாக படுகிறது, எனது பார்வையில் நான் பரிணாமத்தை பின்னிருந்து ஆரம்பிக்கிறேன்!

அம்புட்டுதேன்!

வால்பையன் said...

//பின்னூட்டங்களோ பதிவின் உள்ளடக்கத்துக்குப் பொருந்தாமல் வேறு திசைகளுக்கு இழுத்துச் சென்றதும் புரியும்.//


பின்னூட்டங்களில் இதை பற்றி விவாதத்தை நான் தனியாக குறிப்பெடுத்துள்ளேன், அடுத்து பதிவிட்டு தனியாக அலசுவேன்!

Victor Suresh said...

நண்பரே, "மரபணு விதை, மறுஇனபெருக்க விதை தராது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா!?" என்று நீங்கள் கேட்கும் கேள்வியே உங்களுக்கு மரபணு விதையின் அடிப்படை அறிவியல் புரியவில்லை என்று சொல்கிறது. நான் எப்படி உங்களுடன் அறிவியல் ரீதியாக உரையாட முடியும்? நீங்கள் பேசும் விஷயத்தைப் பற்றிய அறிவியல் அடிப்படைகளை கொஞ்சம் வாசித்துத் தெரிந்த பிறகு சொல்லுங்கள். பிறகு விபரமாக விவாதிக்கலாம்.

இந்த உரையாடல் சம்பந்தமாக கருத்துக்களைப் பதிந்த மற்ற நண்பருக்கும் மேற்கண்ட கருத்து பொருந்தும். இருவருக்கும் நன்றி.

«Oldest ‹Older   201 – 250 of 250   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin