சர்தார்ஜி ஜோக்ஸ்!..

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல!
திட்டவதாக இருந்தால் இதை மெயிலில் எனக்கு அனுப்பிய மாதேஷ் அவர்களை திட்டுங்கள்



ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!

******************************

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி....

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!

*****************************************

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

************************************

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

*********************************

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

********************************

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!



***************************************

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

***********************************

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்...!


நன்றி மாதேஷ் த கிரேட்

54 வாங்கிகட்டி கொண்டது:

குசும்பன் said...

//திட்டவதாக இருந்தால் இதை மெயிலில் எனக்கு அனுப்பிய மாதேஷ் அவர்களை திட்டுங்கள்//

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இன்னொரு ஆள் சைக்கிளில் இருந்து கீழ விழுந்தா சிரிக்கிறது மனித இயல்பு.

சர்தார்ஜி விழுந்தா நமக்கா வலிக்கப் போவுது.

கவலைய விடுங்க வாலு...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிரித்தேன். குசும்பனின் குசும்புக்குமாக

Raju said...

ஏற்கனவே படிச்சதுனாலும், திருப படிக்கவும் நல்லாத்தான்யா இருக்கு.
:)

நேசமித்ரன் said...

நல்லா சிரிப்பு மூட்டுறீங்க வால்

ஈரோடு கதிர் said...

அந்த எரும சாணி ஜோக்தான் பெஸ்ட்....

குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்

Beski said...

எல்லாமே டாப்பு...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு சில ஜோக்ஸ் புதுசு.. அசத்தல் தல.. ஞாயிறு அன்னைக்கு சிங்கத்த அதோட கோட்டைல சந்திக்கிறேன்..:-))))

Anonymous said...

சர்தார் வால் அவர்களே !

கலக்கிட்டீங்க இது மாதரி ஏதாவது நகைசுவைகலை எங்கலுக்கு அவ்வப்போது தாங்கன்னே ! கருத்து சொல்ரதுக்கு காப்பிரைட்டோட நெறைய ஆலுக இருக்காக இள்ள

சொள் அலகன்

Raju said...

\\ஞாயிறு அன்னைக்கு சிங்கத்த அதோட கோட்டைல சந்திக்கிறேன்..:-))))\\

போற போக்குல இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...!

சகாதேவன் said...

"மாமனாரின் அன்புப் பரிசு",
"என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு"
இந்த ரெண்டு ஜோக்கும் அருமை.

வேந்தன் said...

ஜோக்ஸ் சுப்பர்.

அப்பாவி முரு said...

மாதேஸ் த கிரேட்

:))))

ஜெட்லி... said...

இன்னைக்கு குமுதத்தில் சொன்னது போல் தான்,,,
நான் அவர்களை கேலி பேசி கொண்டு இருக்கிறோம்
ஆனால் அவர்கள் பிரதமர் நாற்காலி வரை போய் விட்டார்கள்.
நாம்???

கார்த்திக் said...

சிரித்து மகிழ்ந்தேன்.. மதிய தூக்கம் கலைந்தது.

கோபிநாத் said...

;)) கலக்கல் தல ;)

Thamira said...

ஏற்கனவே படித்திருந்தாலும் சிரிக்காமல் நகர்ந்துவிடமுடியாத ஜோக்குகள். ரசித்தேன்.

சர்தார் என்பதை ஒரு அடையாளமாக கருதாமல் ஒரு காரெக்டர் என்று கருதலாம். அவ்வகையில் சர்தார் என்ற்ற சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும் பதிலாக வால்பையன் என்று போட்டிருந்தாலும் இன்னும் ரசித்துச்சிரித்திருக்கலாம். இரண்டு சர்தார் வரும் இடங்களில் உங்கள் நண்பன் நான் இருக்கவே இருக்கிறேன்.. ஹிஹி.!

தேவன் மாயம் said...

நல்ல ஜோக்குகள்..

போலி டாக்டர் ஜோக் அருமை!!!

மணிஜி said...

ஒரு சர்தார்ஜியாவது பிச்சை எடுப்பதை பார்க்கமுடியாது என்று சமீபத்தில் ஒரு திரைபடத்தில் வசனம் கேட்டேன்(பூட்டாசிங் மவன் ஒரு கோடி லஞ்சம் வாங்கி மாட்டிகிட்டான்ல)

ஒரு வரி சர்தார் ஜோக்..

இரண்டு சர்தார்ஜிகள் செஸ் விளையாட ஆரம்பித்தார்கள்..

வெட்டிப்பயல் said...

Kalakal comedies :)

பீர் | Peer said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
ஏற்கனவே படித்திருந்தாலும் சிரிக்காமல் நகர்ந்துவிடமுடியாத ஜோக்குகள். ரசித்தேன்.

சர்தார் என்பதை ஒரு அடையாளமாக கருதாமல் ஒரு காரெக்டர் என்று கருதலாம். அவ்வகையில் சர்தார் என்ற்ற சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும் பதிலாக வால்பையன் என்று போட்டிருந்தாலும் இன்னும் ரசித்துச்சிரித்திருக்கலாம். இரண்டு சர்தார் வரும் இடங்களில் உங்கள் நண்பன் நான் இருக்கவே இருக்கிறேன்.. ஹிஹி.!//


இதையே மறுபடியும் சொல்றதுன்னா அதுக்கு பேரு ரிப்பீட்டு தான?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வால்...முடிந்தால்..இனி இப்படிப்பட்ட ஜோக்கிற்கு சர்தார்ஜி என்பதை விடுங்கள்..வேறு பெயரில்(நான் அதிபுத்திசாலி அண்ணாசாமி என எழுதுகிறேன்) சொல்லுங்கள்.மற்றபடி அனைத்து ஜோக்குகளும் அருமை

Nathanjagk said...

நல்லாயிருக்கு மாதேஷ்! திட்டறதுக்கு மட்டும்தான் மாதேஷா?????

sriram said...

ஹாய் வாலு
இதில் வந்த எந்த ஜோக்கையும் நான் படித்ததில்லை, அனைத்தும் அருமை, creator (??) மாதேசுக்கும் Postman வாலுக்கும் நன்றி.
சர்தார்ஜி என்ற சொல்லை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களே இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை, மாறாக அவர்களும் சிரிக்கிறார்கள் (உதாரணம் குஷ்வந்த் சிங்), நான் அறிந்தவரை (அஞ்சு வருஷம் டில்லியில் குப்பை கொட்டி இருக்கிறேன்) சர்தார்ஜிகள் தன்மானம் மிக்கவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள், கடின உழைப்பாளிகள், எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப்பற்று மிக்கவர்கள், எதெல்லாம் வெறும் ஜோக், ஜோக்காக மற்றும் பாருங்கள்.

ஆதி : என்னே உங்கள் பெருந்தன்மை....

என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston USA

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சூப்பர்.
:-)))))))))))

சென்ஷி said...

செம்ம கலக்கல் தொகுப்பு :))

ரொம்ப ரசிச்சேன். நன்றிகள் இருவருக்கும்!

सुREஷ் कुMAர் said...

//
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்..
//
ஊர்ல இருக்கறவர் நாட்டுவைத்தியர்னா, அப்புறம் நாட்டுல இருக்கறவர் என்ன வைத்தியர்பா..

सुREஷ் कुMAர் said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்..
அதுவும் அந்த மழை ஜோக் அருமை..

Unknown said...

ஏண்டா .... ப்ளூ டூத் மண்டையா...... எட்ரகிட்ட காப்பி ரைட்ஸ் வாங்காமையே ரிலீஸ் பன்னீ ட்டியேடா..... உம்பட ரவுசு தாங்க முடீலடா.......!!


மாதேஷ் (எ) லவ்டேல் மேடி .........

நிஜாம் கான் said...

ஆஹா! ஆஹா அத்தனையும் சிரிப்புச் சரவெடி. அதிலும் அந்த எருமைச்சாணி பிரமாதம். தொடரட்டும் சர்தார்ஜி ஜோக்குகள்

Admin said...

கலக்கலோ... கலக்கல்.... அசத்தலோ அசத்தல்... சிரிப்போ சிரிப்பூ....

தினேஷ் said...

ஹி ஹி

Unknown said...

எத்தனை முறை படித்தாலென்ன, தமாசு எப்பவுமே தமாசுதான்..
:-)

Baski said...

Wonderful! Thanks to Maadesh & Val.

அ.மு.செய்யது said...

//லவ்டேல் மேடி said...
ஏண்டா .... ப்ளூ டூத் மண்டையா...... எட்ரகிட்ட காப்பி ரைட்ஸ் வாங்காமையே ரிலீஸ் பன்னீ ட்டியேடா..... உம்பட ரவுசு தாங்க முடீலடா.......!!


மாதேஷ் (எ) லவ்டேல் மேடி .........
//

டூ லேட்...அவர் இரண்டாவது முறையா ரிலீஸ் பண்ணிருக்காரு..இப்ப வந்து கேக்குறீங்க..

Anonymous said...

கலக்கலா இருந்தது.... நல்லாச்சிரிக்க வைச்ச மாதேஷ்க்கு நன்றி....ஹிஹிஹி திட்டுவதா இருந்தா அவரை திட்ட சொன்னீங்க ஆனால் பாராட்டுவதாக இருந்தால் உங்களைன்னு சொல்லலையே அதான் அருண் பாராட்டு அவர்க்கு....

கிருஷ்ண மூர்த்தி S said...

இதுல என்ன விசேஷம்னா..சர்தார்ஜி என்ற இடத்துல யார் பேர வேணுமானாலும் மாத்திப் பாத்தாலும், ஜோக் மாறவே மாறாது!

/இன்னொரு ஆள் சைக்கிளில் இருந்து கீழ விழுந்தா சிரிக்கிறது மனித இயல்பு./

தமிழனோட தனிப்பெரும் இயல்புன்னு சொல்லுங்க, அத்திவெட்டி ஜோதிபாரதிசார்!

இங்கே கவுண்டமணி-செந்தில், அப்புறம் வடிவேலு-ஏனைய நடிகர்கள் அடிவாங்குவது, பண்ணி, நாயே இன்னபிற கேவலாமான வார்த்தைகளால் திட்டுவதையும் காமெடின்னு ரசிக்கத் தமிழனை விட்டால் நாதி கிடையாது!

யோ வொய்ஸ் (யோகா) said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது வால்

biskothupayal said...

anne supero super

"Mamanarin anbu Parisu"

அப்துல்மாலிக் said...

ஹா ஹா நல்லா ரசிச்சேன் தல‌

இந்த சர்தாரிங்களுக்கு மட்டும் தமிழ் படிக்க தெரிந்தா ஆட்டோ நிச்சயம்.. ஹெ ஹெ

வழிப்போக்கன் said...

கலக்கல் ஜோக்ஸ்....

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே நல்லா இருந்தாலும், கடைசி, வழிகாட்டி சூப்பர் தல

butterfly Surya said...

அந்த 43 ம் நம்பர் ஜாடி..

சூப்பர்..


நன்றி மாதேஷ் த கிரேட்

நாடோடிப் பையன் said...

நல்ல பதிவு. நல்ல பின்னூட்டங்கள்.

Keep up the discussion.

Menaga Sathia said...

சூப்பர் ஜோக்ஸ்!!

வால்பையன் said...

நன்றி குசும்பன்
நன்றி ஜோதிபாரதி
நன்றி யோகன் பாரிஸ்
நன்றி டக்ளஸ்
நன்றி நேசமித்ரன்
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி எவனோ ஒருவன்
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி சொள் அலகன்
நன்றி சகாதேவன்
நன்றி வேந்தன்
நன்றி அப்பாவி முரு
நன்றி ஜெட்லி
நன்றி கார்த்திக்
நன்றி கோபிநாத்
நன்றி ஆதி
நன்றி தேவன்மாயம்
நன்றி தண்டோரா
நன்றி வெட்டிப்பயல்
நன்றி பீர்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி ஜெகநாதன்
நன்றி ஸ்ரீராம்
நன்றி ஸ்ரீ
நன்றி சென்ஷி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி மேடி
நன்றி நிஜாம்
நன்றி சந்ரு
நன்றி சூரியன்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி பாஸ்கி
நன்றி மங்களூர் சிவா
நன்றி செய்யது
நன்றி தமிழரசி
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி யோ
நன்றி நாஞ்சில்நாதம்
நன்றி biskothupayal
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி வழிப்போக்கன்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி வண்ணத்துபூச்சியார்
நன்றி நாடோடிப்பையன்
நன்றி Mrs.Menagasathia

thagavalkaran said...

இன்னைக்கு குமுதத்தில் சொன்னது போல் தான்,,,
நான் அவர்களை கேலி பேசி கொண்டு இருக்கிறோம்
ஆனால் அவர்கள் பிரதமர் நாற்காலி வரை போய் விட்டார்கள்.
நாம்???

nellai அண்ணாச்சி said...

romba thamasthan bonga

வால்பையன் said...

DR.KVM said...

romba thamasthan bonga//


மிக்க நன்றி தோழரே!

ttpian said...

அன்ஹ்த சர்தகி பெயர் மண் மோகன் சிங்குதனே

Suruliraj said...

Mr. Valu I am in first visit

ஜோக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு
ஆனா படிச்சா சிரிப்பு வருது.

Bharathshankar said...

ரொம்ப சூப்பர்

Bharathshankar said...

சூப்பர் டா

pazhani so.muthumanickam said...

நாம் அவர்களைக் கேலி செய்வது போலவே, மதராசிகள் எனப்பல நகைச்சுவைத் துணுக்குகளை நம்மைக் கேலிசெய்து அவர்கள் உலவ விட்டிருக்கலாம் அல்லவா?நல்லது
வெள்ளைத் தாளைப் பல நகல் (xerox)எடுத்த கதை உங்களுக்குத் தெரியும்தானே !.
பழனி.சோ.முத்துமாணிக்கம்

!

Blog Widget by LinkWithin