கூடுதுறை மற்றும் உண்மைத்தமிழன் பதிவுகளுக்கு பதில்!

கூடுதுறையின் பதிவு

நம்புவர்கள் நம்பட்டும் நீங்கள் தள்ளியே இருங்கள் என்பது என்ன மாதிரியான பதில் என்று எனக்கு தெரியவில்லை.

//ஜோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால் உண்மைதான்...நீ எனப்பா ஏமாற்றும் ஜோதிடரிடம் போகிறாய்? நல்ல ஜோதிடர் அறிந்து அவரிடம் செல்...//

இது அதுக்கு மேலே பெரிய காமெடி. எனது பதிவில் ஜோசியக்காரர்கள் பொய் என்று சொல்லவில்லை, ஜோதிடமே பொய் என்று தான் சொல்கிறேன். தனிப்பட்ட முறையில் சுப்பையா வாத்தியார் ஒரு நல்ல மனிதராக இருப்பார். அவர் கொள்கை வேறு என்பதற்காக அவர் நல்ல மனிதர் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது .

//எந்த தொழிலாவது ஏமாற்றுக்காரர்கள் இல்லாதது என உள்ளது என்று கூறுங்கள்//

ஜோதிடத்தை ஒரு தொழிலாக நான் குறிப்பிட வில்லை, என்னுடையது மாற்றி ஆராச்சி கண்ணோட்டம், அதாவது உங்களின் நம்பிக்கையின் மேல் எனக்கேர்ப்பட்ட சந்தேகத்திற்கு நான் எதிர்ப்பார்ப்பது விளக்கவுரை, நம்ம உண்மைத்தமிழன் போல

//நீங்கள் போலி ஜோதிடரை அடையாளம் காட்டுங்கள்...அது நியாயம்... ஜோதிடமே தவறு எனச் சொல்லுவதில் என்ன நியாயம் உள்ளது...//

சந்தேகம் ஜோதிடரின் மீது அல்ல,
ஜோதிடம் என்ற கருத்தின் மீது,

அத்யாவிசய பொருள்களின் விலையேற்றத்தின் போது அனைவரும் யூகவநிகம் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்கள், அது மட்டும் காரணமல்ல என்று யூகவநிகத்தின் மூலம் பயனடைகிறேன் என்ற முறையில் என் பக்க விளக்கத்தை அளித்திருந்தேன்

இரண்டு பாகமாக

பாகம் 1

பாகம் 2

காரணம் நம் நம்பிக்கையின் மீதோ அல்லது கொள்கையின் மீது கேள்விகள் வைக்கப்படும் போது அதை விளக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது. நம்பினால் நம்பு நம்பாவிட்டால் போ என்பது சரியான பதில் அல்ல,

ஏனென்றால் நான் வைத்திருக்கும் கேள்விகள் பொதுவான அடிப்படை ஜோதிடத்தின் மீது சாதாரண மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், படி தெரியும் என்றால் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் படிக்கிறேன்.

//ஊருக்கு இரண்டு போலி மருந்துவர் பிடிபட்டால் இனி மருத்துவமே தவறு.. இனி யாரும் மருத்துவம் பார்க்கவேண்டாம் எனச் சொல்வீர்களா....//

இம்மாதிரியான உதாரணங்கள் சரியான பொருளை தராது.
பொருள் சம்பந்த பட்டவைகளில் போலிகள் கண்டுபிடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே, நீங்களே சொல்லி விட்டீர்கள் ஜோதிடம் நம்பிக்கை சார்ந்தது, அதை வாதத்தின் மூலம் தான் நிரூபிக்க வேண்டும்

//ராமர், கிருஷ்ணர்,காந்தி,யேசு, நபிகள்,புத்தர்,ஆதிசங்கரன்,ராமனுஜர் இந்த பூமியில்தான் ராவணனன்,கம்சன்,கோட்சே,துரியோதனன்,ஹிட்லர்,கோயபல்ஸ்,எனக்கெட்டவர்களும் பிறக்கிறார்கள்//

நீங்களும் நானும் கூட இங்கே தான் பிறந்தோம்.
அவன் செய்தது சரி இல்லை தவறு என்று நீங்களும் நானும் முடிவு செய்ய முடியாது.
அனைத்து வில்லன்களின் வில்லத்தனத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.
ராவணன் ஒரு மிகசிறந்த சிவா பக்தன் என்று உங்களுக்கு தெரியும். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து வெறியன் என்று நாடே அறியும். (உங்கள் பதிவில் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்கிறீர்கள்)

//உங்களுக்கு விருப்பம் இல்லையா.. விட்டுவிடுங்கள்....மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்//

இந்த சமுதாயத்தில் அனைத்தையும் கேள்வி கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு விஷயத்தை காரணம் இல்லாமல் நீங்களும் நம்ப மாட்டீர்கள். அந்த காரணம் என்னவென்றாவது சொல்லுங்கள், இல்லையென்றால் காரணம் தெரியவில்லை என்று சொல்லுங்கள்.

இது எங்க ஏரியா உள்ள வாராதே போன்ற பதில்கள் உங்கள் பக்க நம்பகத்தன்மையை குறைக்கும்
*****************************************************

அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவுகள் கொஞ்சம் சுயபட்ச்சாதாபத்தோடு இருக்கும், ஆனால் இந்த பதிவு அநியாத்துக்கு, அவர் வாழ்வில் அவருக்கு ஏற்ப்பட்ட அனைத்து தோல்விகளையும் கடைசியாக அவரது வலைப்பூ திறக்காததற்கும் அவரது கெட்ட நேரமே காரணம் என்று முடித்திருக்கிறார்.

அதற்கு ஒரு பின்னூட்டம் அதைவிட காமெடி அண்ணன் கூடுதுறையுடது

உலகிலேயே நான் மட்டும் தான் கஷ்டப்படுகிறேன், என் கஷ்டம் வேறு யாருக்கும் வரக்கூடாது. போன்ற வார்த்தைகள் மிக காமெடியானவை, நீங்க எந்த அளவுக்கு உங்களையே சுற்றி சுற்றி பார்க்கிறீர்கள் என்பதற்கு அதுவே சான்று. மேலும் உங்களின் தன்னம்பிக்கை குறைவு இதில் அப்பட்டமாக தெரிகிறது.

இந்த இடத்தில் நான் வாத்தியாரை பாராட்டுகிறேன்.
அவருடைய பதிவில் தன்னுடையது கடவுள் நம்பிக்கையை வளர்த்து தன்னம்பிக்கையை குறைக்கும் என்று சுயவிமர்சனம் செய்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

ஜாதகம் என்பது உளவியல் ரீதியாக சில பயன்களை தருகிறது.
உண்மைத்தமிழன் போன்று தன்னம்பிக்கை குறைவான மனிதர்கள் தான் கஷ்டமான நேரங்களில் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கிறார்கள், அம்மாதிரியான நேரங்களில் ஜோதிடரின் நம்பிக்கையான வார்த்தைகள் அந்த உயிரை காப்பாற்றினால் அந்த ஜோதிடரை ஒரு நல்ல உளவியல் மருத்துவராக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நல்ல கருத்தாடல்களுக்கு ஜோதிடம் பயன்படாமல் நான் லண்டனில் பட்டினி கிடந்தேன். பக்கத்து வீட்டில் பிட்சை எடுத்தேன் போன்ற எழுத்துக்கள் நான் பாவம் என்னை கவனி அதாவது attention seeking personalty என்னும் குழந்தைக்கு இருக்கும் ஒரு மனநிலையை காட்டுகிறது.

ஆக்கபூர்வமான செயல்களுக்கு ஜோதிடம் பயன்தராது என்றால் இத்துடன் எனது கேள்விகளை நிறுத்தி கொள்கிறேன். தயவுசெய்து யாரும் சுயபச்சாதாப பதிவுகளை இடாதீர்கள், இவ்வாறெல்லாம் கச்ட்பட்டேன் என்று ஆரம்பித்து ஆனால் இப்போது நல்லாஇருக்கேன் என்று படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவதை போல் எழுதுங்கள்

27 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

வால்பையன்,

லக்கி கிளி ஜோசியம்-னு ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க.

http://madippakkam.blogspot.com/2007/11/blog-post.html

thenkasi said...

//வால்பையன் said...
//அறிவியல் சம்பந்தத்துடன் நமது யோகிகளும்,ரிஷிகளும்,முனிவர்களும்,அவதார புருஷர்களாய் தனது ஞானத்தால் வானையும் வானில் உலாவும் கோள்களின் இயக்கத்தையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு உள்ளதை எப்படி மறுக்கிறிர்கள் ?//

மிகச்ச்சரியாக!??

தெளிவா தானே இருக்கிங்க
சரியாக என்பதே ஓவர் இதில் மிகச்சரியாக

வால்பையன்//

).

வாலிப வயதில் கழகங்கள் பின்னால் (1965-1975)சென்ற இளைஞர்களில் 90 % மேல் இப்போது வயது 50க்கு மேல்.

கழகத்தின் கொள்கையில் ஆழ்ந்திருந்த சமயம் நாத்திகம் பேசிய பலர் இன்று கோவிலே கதி என்றும்,பழைய ஆத்திக வாதிகளைவிட பூஜை புனஸ்காரங்களில் தங்களை மறந்து உள்ளதை " வால் பையன்" அவர்கள் அவரது 50 வது வயதில் அறிவார்
வால்பையன் பதிவுகளைப் படிக்கும் போது நாங்கள் கல்லுரிக் காலங்களில் மாணவர் தி.மு,க வில் இருந்த உறுப்பினர்கள் மிகத் தீவிரமாகக் கடைபிடித்த ( பிராமீன் உட்பட)பகுத்தறிவுக் கொள்கையைப் போலுள்ளது.

வால்பையன் அவர்கள் வயதில்( வாலிப) இப்படித்தான் சொல்வார்கள்.
அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்

இதைவிட வேகமாகப் பேசிய கவியரசு கண்ணதாசன்,புரட்சி எழுத்தாளர்கள்
இதே 50 வயதுக்கு பிறகு எப்படி இருந்தார்கள் என்பதை மட்டும் பார்க்கலாம்.

( இது தான் இன்றய நிலை.அதனால் தான் சிவன் கோவில்களில் பிரதோஷம்
அன்று கூடும் பெரும் கூட்டம் இதே 50 வயதை கடந்த பழைய நாத்திக வாதிகளால்தான்." )

உண்மையில் வயது ஐமம்பதை தாண்டும் போது
உடலின் குருதி ஓட்டம் குறையும் போது

கடவூளை நம்ப ஆரம்பிக்கிற போது
நல்ல நேரங்களின் மதிப்புகூடும் போது

கஷ்டங்கள் கழுத்தை நெருக்கும்போது
கட்டிவைத்திருந்த ஜாதகக் சுவடிகளை
பிரிக்கிறான்.

கவியரசு சொன்னது மாதிரி
இந்த உலகில்
எதுவும் உண்டு என்றால் உண்டு
எதுவும் இல்லையென்றால் இல்லை.

------------------------------
உங்கள் பதிவில் சொன்னபடி தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாம்
அவரவர் சாமர்த்தியம்.

உலகில் இரும்பு போன்ற வைரம் பாய்ந்த இதயத்துடன் இருப்பவர்களுக்கு தொடர் துன்பங்கள் வரும் போதுதான் அவன் உடைகிறான்.
அதுவரை கடவுளை நம்பாதவன். இறைவா ஏன் என்னை சோதிக்கிறாய் என்னை கடைத் தேற்றுவாய், என மெல்ல மெல்ல நாத்திக கட்சியிலிருந்து ஆத்திகச் கட்சிக்கு வருகிறான்.

பக்திமானக மாறும் போது சான்றோர்களால் வடிவமைக்கப்பட்ட சோதிடத்தை நம்ப ஆரம்பிக்க தலைப்படுகிறான். (உதராணமாக அகத்திய மாமுனிவர் அளித்திட்ட நாடி ஜோதிடம்).



இந்த உண்மையின் அனுபவத்தை( பக்தி மார்க்கம்) கவியரசின் " அர்த்தமுள்ள இந்துமதம்"
அழகாக் கட்டுகிறது.

rapp said...

நீங்க சொல்லிருக்கற அத்தனையையும் அப்படியே வழிமொழிகிறேன். நீங்க எடுத்து வைத்துள்ள இந்த கருத்துள்ள வாதங்கள் சூப்பர். எனக்கு இன்னொரு சந்தேகம், தன்னம்பிக்கை இல்லாதவங்கக் கிட்ட தன்னம்பிக்கைய ஏற்படுத்துகிற ஜோதிடர்கள் அவங்களை ஆறுதல் படுத்துகிறார்கள். சரி. இப்போ தன்னம்பிக்கை இல்லாத ஒருத்தன் கிட்ட சில பயங்கர உண்மையான ஜோதிடர்கள்(இவங்க எல்லாம் கன்னாமுன்னாவென கேட்டதை சொல்லும் ஜாதி, ஏனென்றால் இவங்க உண்மையை மறைப்பதில்லயாம், ஆனா அதிசயம் பாருங்க இவங்க கிட்டயும் கூட்டம் பம்முது) இஷ்டத்துக்கு நீ நாசமா போவே, அப்படி ஆகிடுவ, இதுக்கு குறிப்பிட்ட தேதிக்குள்ள பரிகாரம் செய்யலைனா உன் கதி அவ்வளவுதான்னெல்லாம் கெளப்பி விட்டா இந்த தன்னம்பிக்கை இல்லாதவர்களின் கதி என்னவாகும்?

rapp said...

போலி டாக்டர சர்டிபிகேட்டில்லைனா அல்லது போலி சர்டிபிகேட் வெச்சிருந்தா கண்டுபுடிச்சு தண்டிக்கலாம், ஜோசியர்களை, அவங்க பெண்களிடம் தப்பா நடந்தாலோ, இல்லை லட்சக் கணக்கில் ஏமாற்றினாலோ மட்டும்தானே பிடிக்க முடியுது, மத்தபடி அவங்க ஒருத்தன ஏமாத்தினா என்ன செய்ய முடியுது?

Anonymous said...

//கஷ்டங்கள் கழுத்தை நெருக்கும்போது
கட்டிவைத்திருந்த ஜாதகக் சுவடிகளை
பிரிக்கிறான்.//

கஷ்ட்டங்கள் வரும்போது கடவுளை நினைத்தால் போதாத? ஏன் ஜாதக சுவடிகளை பிரிக்கவேண்டும்?

g said...

/// rapp said...
போலி டாக்டர சர்டிபிகேட்டில்லைனா அல்லது போலி சர்டிபிகேட் வெச்சிருந்தா கண்டுபுடிச்சு தண்டிக்கலாம், ஜோசியர்களை, அவங்க பெண்களிடம் தப்பா நடந்தாலோ, இல்லை லட்சக் கணக்கில் ஏமாற்றினாலோ மட்டும்தானே பிடிக்க முடியுது, மத்தபடி அவங்க ஒருத்தன ஏமாத்தினா என்ன செய்ய முடியுது?///



ஹலோ ரேப்பு நீங்க பயங்கரமான ஆளுனு தெரிந்துகொண்டேன். எப்படி உங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடியது. டாக்டருக்கு படித்தால் எம்பிபிஎஸ்னு சொல்லுவாங்க. ஆனால் ஜோசியத்துக்குப்படித்தால்...

Tech Shankar said...

I am new to this area.
sorry.

No comments...

புகழன் said...

//அனைத்து வில்லன்களின் வில்லத்தனத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.
ராவணன் ஒரு மிகசிறந்த சிவா பக்தன் என்று உங்களுக்கு தெரியும். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து வெறியன் என்று நாடே அறியும். (உங்கள் பதிவில் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்கிறீர்கள்)
//

இது சூப்பர்

வால்பையன் said...

//வடகரை வேலன் said...
வால்பையன்,
லக்கி கிளி ஜோசியம்-னு ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க.
http://madippakkam.blogspot.com/2007/11/blog-post.html//

லக்கியின் பகுத்தறிவு கொள்கையில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.
தலைவர் கொள்கை பசியில் தொண்டர்களை ஒட்ட நினைக்கலாம்,
லக்கி கொள்ளகையிலேயே ஊறியவர்

வால்பையன்

வால்பையன் said...

//" வால் பையன்" அவர்கள் அவரது 50 வது வயதில் அறிவார்
வால்பையன் பதிவுகளைப் படிக்கும் போது நாங்கள் கல்லுரிக் காலங்களில் மாணவர் தி.மு,க வில் இருந்த உறுப்பினர்கள் மிகத் தீவிரமாகக் கடைபிடித்த ( பிராமீன் உட்பட)பகுத்தறிவுக் கொள்கையைப் போலுள்ளது.//

எதிலாவது தன்னை எனைத்து என் கொள்கைகளை நான் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
பகுத்தறிவு என்ன வெங்காயமா பெரியார் என்ன கடவுளா என்று பதிவு போட்டவன் நான்.

பகுத்தறிந்து தான் என் கொள்கைகளில் உறுதியாக உள்ளேன், உங்கள் அனுபவத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், எல்லோருக்கும் இது தான் நடக்கும் என்று எந்த நிச்சயம் இல்லை, அதிலும் எனக்கு வாய்ப்பே இல்லை

வால்பையன் said...

//வால்பையன் அவர்கள் வயதில்( வாலிப) இப்படித்தான் சொல்வார்கள்.
அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்//

வயது வேறு புரிதல் வேறு,
உதாரணத்திற்கு எனது அடுத்த பதிவு

வால்பையன் said...

//இதைவிட வேகமாகப் பேசிய கவியரசு கண்ணதாசன்,புரட்சி எழுத்தாளர்கள்
இதே 50 வயதுக்கு பிறகு எப்படி இருந்தார்கள் என்பதை மட்டும் பார்க்கலாம்.//

இதற்கும் அதே பதில் தான்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற வேலை என்னிடம் இல்லை.
இருக்கும் இடத்தை பச்சையாக மாற்றுவது தான் என் வேலை

வால்பையன் said...

//( இது தான் இன்றய நிலை.அதனால் தான் சிவன் கோவில்களில் பிரதோஷம்
அன்று கூடும் பெரும் கூட்டம் இதே 50 வயதை கடந்த பழைய நாத்திக வாதிகளால்தான்." ) //

இது கருத்துகணிப்பா இல்லை கணக்கெடுப்பா

வால்பையன் said...

//உண்மையில் வயது ஐமம்பதை தாண்டும் போது
உடலின் குருதி ஓட்டம் குறையும் போது
கடவூளை நம்ப ஆரம்பிக்கிற போது
நல்ல நேரங்களின் மதிப்புகூடும் போது
கஷ்டங்கள் கழுத்தை நெருக்கும்போது
கட்டிவைத்திருந்த ஜாதகக் சுவடிகளை
பிரிக்கிறான்.//

குருதி ஓட்டம் குறைய வயது ஐம்பது ஆக வேண்டியதில்லை
இன்று பலருக்கு முப்பது வயதிலேயே ரத்த அழுத்தம் வந்து விடுகிறது

கஷ்டம் வரும்போது கடவுளை நம்பவும், ஜோதிடத்தை நாடவுமாக இருக்கும் ஏமாற்றுகாரனகாவும், சோம்பேறியாகவும் இருப்பதை விட நாத்திகனாக இருப்பதே எனக்கு பெருமை.

வால்பையன் said...

//கவியரசு சொன்னது மாதிரி
இந்த உலகில்
எதுவும் உண்டு என்றால் உண்டு
எதுவும் இல்லையென்றால் இல்லை.//

அதைத்தான் நானும் சொல்கிறேன்,
அவைகள் வெறும் வார்த்தைகள் அவைகளில் உள்ள உண்மைத்தன்மையை ஆராயுங்கள்

வால்பையன் said...

//உலகில் இரும்பு போன்ற வைரம் பாய்ந்த இதயத்துடன் இருப்பவர்களுக்கு தொடர் துன்பங்கள் வரும் போதுதான் அவன் உடைகிறான்.
அதுவரை கடவுளை நம்பாதவன். இறைவா ஏன் என்னை சோதிக்கிறாய் என்னை கடைத் தேற்றுவாய், என மெல்ல மெல்ல நாத்திக கட்சியிலிருந்து ஆத்திகச் கட்சிக்கு வருகிறான்.//

இரும்பு போன்ற, வைரம் போன்ற நெஞ்சமெல்லாம் இதற்கு தேவையில்லை.
கொஞ்சம் யோசித்தாலே போதும்

வால்பையன் said...

//பக்திமானக மாறும் போது சான்றோர்களால் வடிவமைக்கப்பட்ட சோதிடத்தை நம்ப ஆரம்பிக்க தலைப்படுகிறான். (உதராணமாக அகத்திய மாமுனிவர் அளித்திட்ட நாடி ஜோதிடம்).//

புனைவால் புனையப்பட்ட புனைவு
அதாவது அகத்தியர் என்பதே ஒரு புனைவு
புரிகிறதா

வால்பையன் said...

//இந்த உண்மையின் அனுபவத்தை( பக்தி மார்க்கம்) கவியரசின் " அர்த்தமுள்ள இந்துமதம்"
அழகாக் கட்டுகிறது.//

நாத்திகன் கெட்டவன் என்று அதில் சொல்லியிருப்பதால்
நீங்கள் நல்லவர்களாக வேஷம் போட அல்லது நடிக்க ஆசைப்படுகிறீர்கள்

வால்பையன் said...

தென்காசி அவர்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நான் அதை பல கூறுகளாக பிரித்து போட்டதற்கு வேறு எந்த விளம்பர அரசியலும் கிடையாது. அவரின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க, அவருடைய ஒவ்வொரு கருத்தையும் எடுத்து வைத்து நான் பதிலளிக்கையில், அது ஒரு நீண்ட பதிவு போல ஆகிவிட்டது, அம்மாதிரியான பின்னூட்டங்களை படிக்கும் பொது எனக்கே சலிப்பு ஏற்படும், அதனாலேயே பிரித்து போட்டேன்

வால்பையன்

வால்பையன் said...

நண்பர் ராப் அவர்களுக்கு!
என்னை வழிமொழிகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னூட்டத்தில் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள்

//சில பயங்கர உண்மையான ஜோதிடர்கள்(இவங்க எல்லாம் கன்னாமுன்னாவென கேட்டதை சொல்லும் ஜாதி, ஏனென்றால் இவங்க உண்மையை மறைப்பதில்லயாம்,//

உண்மையான ஜோதிடம் என்று ஒன்று இல்லாத போது உண்மையான ஜோதிடன் எங்கிருந்து வருவான்
இது ஒரு விளம்பர யுக்தி,

உதாரணம்

"இந்த போன் நல்ல சார்ஜ் நிக்கும் சார், ஆனா நாலுமன்னேரம் மட்டும் சார்ஜ் போடனும்
இல்லைனா பேட்டரி போயிடும்" பொய் சொல்லி வித்துற கூடாது பாருங்க.

இம்மாதிரியான வசனங்களை நீங்கள் கேட்டால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம். ஏனென்றால் சாத்தியமில்லாதை தான் அவன் செய்ய சொல்லுவான்

வால்பையன்

வால்பையன் said...

// rapp said...
போலி டாக்டர சர்டிபிகேட்டில்லைனா அல்லது போலி சர்டிபிகேட் வெச்சிருந்தா கண்டுபுடிச்சு தண்டிக்கலாம், ஜோசியர்களை, அவங்க பெண்களிடம் தப்பா நடந்தாலோ, இல்லை லட்சக் கணக்கில் ஏமாற்றினாலோ மட்டும்தானே பிடிக்க முடியுது, மத்தபடி அவங்க ஒருத்தன ஏமாத்தினா என்ன செய்ய முடியுது?//

இது நல்ல கருத்து
ஏமாறுகிரவனுக்கு அவன் ஏமாந்து கொண்டிருக்கிறான் என்பதே உணராத போது, அவனை எங்கிருந்து காப்பாற்றுவது

வால்பையன்

வால்பையன் said...

//Robin said...
//கஷ்டங்கள் கழுத்தை நெருக்கும்போது
கட்டிவைத்திருந்த ஜாதகக் சுவடிகளை
பிரிக்கிறான்.//
கஷ்ட்டங்கள் வரும்போது கடவுளை நினைத்தால் போதாத? ஏன் ஜாதக சுவடிகளை பிரிக்கவேண்டும்? //

வருகைக்கும், கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி ராபின்,
கடவுளும், ஜோதிடமும் அண்ணன் தம்பிகள்

வால்பையன்

வால்பையன் said...

வாங்க ஜிம்ஷா!
ஜோதிடத்துக்கு படிச்சவங்க
பண்டிட்டுன்னு அவங்களே போட்டுக்குவாங்க

வால்பையன்

வால்பையன் said...

தமிழ்நெஞ்சம் said...
I am new to this area.
sorry.
No comments...//

எது புதுசு
என்னுடைய வலையா
இல்லை பதிவா
ஜகா வாங்காதிங்க தலைவா உங்க கருத்த சொல்லுங்க

வால்பையன்

வால்பையன் said...

நன்றி புகழன்
ஆனா அவ்வளவு தானா

வால்பையன்

nagai said...

அனுபவங்கள் சில உண்மைகள உணர வைக்கிறது.......அதை கூற முடியாது......தொழில்முறை திருடர்கள் உண்டு எங்கும்.....

minorwall said...

ஹெலோ வாலு,எப்பிடி இருக்கீங்க?
இன்னிக்குத்தான் முதல் முறையா கூகிள் லே ஒரு சர்ச் போட்டு வால் பையன் என்கிற topicle தேடி உங்க pageku வந்தேன்.
நல்லா ப்ரெசென்ட் பண்ணிருக்கீங்கோ.
ஹாட் னாலே ஏதோ வேற சமாச்சாரம் அபிடின்னு பாக்யராஜ் பாணிலே போயிடுருக்குற நிலைமையிலே really so ஹாட்..
உங்கள் பதிவுகள். இந்த சூடு கொறையாமல் இருக்க வாழ்த்துக்கள்..
வீட்லே பெரியவுங்க, esp , என் அப்பா ரொம்ப டென்ஷன் பார்ட்டி.அவரு வெச்சதுதான் சட்டம்ன்னு பேசுவார்.ஜனநாயகம் என்பதை நினைச்சு பார்க்கும் பக்குவம் பல சமயங்களில் அவருக்கு இருந்ததில்லை.ஆனால் ஒரு hospital சீன் என்று வந்தால் உடனடி கண்கலங்கி காசை கண்மூடி இரைத்தும் காப்பாற்றத்துடிக்கும், இன்னபிற சமயங்களில் அவரது இதுபோன்ற மனிதநேய பண்புகளை வேறு ஒரு நல்ல ஜனநாயக, கூல் ஆசாமியிடம் இந்த அளவிலே நான் பார்த்ததில்லை.எப்படி இருந்தாலும் அவர்
என் அப்பா.அவர் எனக்கு ரொம்ப முக்கியம்.அவ்வளுதான்.
இதே போன்று பலர் தனக்கான வீடாக தன் ப்ளொக்குகளில் சொல்லும் கருத்துபதிவுக்கேல்லாம் தேடி கண்டுபிடித்து விளக்கம் கொடுக்கப்போனால் நமது முயற்சி வீண் முயற்சியாகிவிடுமோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.
பலர் என் ப்ளாகுக்கு வந்து விவாதத்தில் கலந்துகொள்ளுங்கள் என்று அழைத்தபின் அவர்களின் பக்கங்களில் வந்த வேறு சில பதிவுகளின் பதில் பின்னூட்டங்களில் அவர்களின் அடிப்படை வாதத்தையே புரட்டிப்போடும் கருத்துக்களை நான் இட்டிருந்த சமயங்களில் அவர்கள் அத்தகைய பின்னூட்டங்களை தங்கள் பக்கங்களில் இருந்து நீக்கியே இருக்கிறார்கள்.இவர்கள் மட்டும் ஜனநாயகவாதிகளா என்ன?
எப்படியிருந்தாலும் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மனிதனின் குணங்கள் மாறுவதில்லை.இதுவரையிலான எனது அனுபவத்தில்.எது சரியோ அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் பலருக்கு அமைவதில்லை.தன் கருத்துக்கு எதிர் கருத்தை ஏற்று,அல்லது சரியான எதிர்வாதம் செய்து சரியான கருத்தை பதிவு செய்யும் பாங்கும் சிலரிடம் இருப்பதில்லை.
எனவே தனிநபர் விமர்சனத்தை நான் தவிர்க்கிறேன்.விவாத்ப்போக்கை முடிந்த அளவு தவிர்க்கும் முகமாகத்தான் நான் எனது பக்கத்திலே கூட இதுவரை என் கருத்துக்களை பதிவிட்டதில்லை.பதிவிட்டால் தஸ்லிமா நஸ்ரின் நிலைமை கூட எனக்கு வரலாம்.எதுக்கு அந்தப் பொழப்பு.
சமுதாயத்த தூக்கி நிருத்துறேன்ன்னு என் வாழ்வை பலியிட நான் தயாரில்லை.மற்றபடி ஜாதகம் படிப்பது ஒரு இனிமையான பொழுதுபோக்கு.இதுதான் நம்மை இணைக்கும் பாலமாக அமைந்திருக்கிறது..அதனால் என் அப்பா போன்ற நல்லவர்,தன் நேரத்தை செலவழித்து பல அரிய பழைய விழயங்களை தொகுத்து இலவசமாக வழங்கிவரும் சுப்பையா வாத்தியாருக்கு என் நன்றி.வால் பையனை சந்திக்க வாய்ப்பளித்ததற்கு.

!

Blog Widget by LinkWithin